Thursday, September 26, 2013

மோடி விஜயமும் - கண்கள் பனித்து இதயம் இனித்ததும்!!


மோடி இங்க வந்துட்டு போனதுல பல கோணங்களில் எண்ணற்ற விமர்சனங்கள் அவருக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக இங்கே பகிரப்படுகின்றன......

ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு மோடியை தவிர்க்க எனக்கு இரண்டு முக்கிய காரணங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. 

ஒன்று: மோடி வருகையை ஒட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விடுமுறை கொடுக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டது - இது இதுவரையிலும் தமிழகத்தில் இல்லாத நடைமுறையை புகுத்துவதாக அமைந்திருக்கிறது. 

பாஜகவுக்கு மிக எதிரான எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் நிலையில், இந்த அபாயகரமான புது பிரிவினை வாத செயலை ஜெயலலிதாவின் தமிழக அரசின் ஆதரவில்லாமல் வேறு யார் செய்திருக்க முடியும்??!!

இது நாம் பெரிய அளவில் கவலைப்படவும், சிந்திக்கவும், கடுமையாக எதிர்க்கவும் வேண்டிய பிரச்சினையாக கருதுகின்றேன்!

இரண்டாவது: வடக்கத்திய தலைவர்கள் தமிழகம் வரும்போது நம் மனநிலையை அறிந்து ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள் கூட எழுதி வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவது தான் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த நடைமுறையை மாற்றி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு, நுணுக்கமாக கவனிக்கத்தக்க மனிதனாக மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் பேசிய அந்த கன்னிப்பேச்சில் மோடி ஹிந்தி மொழியில் பேசியிருப்பது.......!!!

.......தமிழுக்கான தமிழர்களுக்கான மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் கைகளில் ஆட்சிப்பொறுப்பு வருமாயின் தமிழ் உட்பட இந்தியாவின் தொன்மையான மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்து போகும் அபாயம் இருப்பதை, மோடியின் இந்த அப்பட்டமான சமிக்ஜை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இது சம்பந்தமான மிகப் பெரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டங்களை நம் இணையம் மூலமாகவாவது உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும். 

இதையெல்லாம் மீறி எனக்கு மூன்றாவதாக ஒரு சந்தோஷமான உணர்வு நீண்ட காலத்திற்குப் பிறகு ஊற்றெடுப்பதையும் நன்கு உணர்கிறேன்!

பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், தளங்களைச் சேர்ந்த நம் தமிழ் இளைய சகோதரர்கள், இவ்வளவு நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தவர்கள் மோடியின் பொருட்டு, பெரியார் கொள்கைகளை கைகளில் ஏந்தியபடி ஓரணியில் திரள்வதை இணையத்தில் ஆங்காங்கே காண்கிறேன்.....!!!

சமீப காலமாக தமிழுணர்வாளர்கள் என்ற போர்வையில் உலா வந்து குட்டையை குழப்பிக்கொண்டிருந்தவர்களின்  சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. தமிழருவி மணியன்களும், வைக்கோக்களும் ஆரியக்கரையில் ஒதுங்கி விடுங்கள். இனி திராவிடத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்!!!


இதைக் கண்டு தலைவர் கலைஞர் அவர்களின் வசனம் ஒன்றை கடன் பெற்றுக்கொள்கிறேன்...

”கண்கள் பனிக்கின்றன.... இதயம் இனிக்கின்றது”



Sunday, September 22, 2013

ஈழத்தில் அமைதி நிலவட்டும்!!!

இலங்கைத் தமிழர்களுக்கு அங்கிருக்கும் சிங்களர்களுக்கு சமமான உரிமைகள் கிடைத்திருக்கவில்லை....   இன்னும் எத்தனையோ மன சஞ்சலங்கள். ஓக்கே. இனி அரசியல் ரீதியிலான போராட்டம் அதற்கு சரிப்பட்டுவராது என்று நம்பி தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று நம்பி அதற்கான ஆயுதப்போராட்டங்களில் உணர்ச்சி மிக்க இளைஞர் கூட்டம் தனித்தனிக் குழுக்களாக களம் இறங்குகிறன.

ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனி ஈழத்தில் ஒரு வித ஈர்ப்பும் ஆசையும் இருந்தாலும், உள்ளதும் போய்விடக் கூடாதே என்ற பதைபதைப்பும் சிலரிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருமே அந்த போராட்டதில் இரண்டறக் கலந்து விடும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது....

இதனால் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே புலம்பெயரும் வாய்ப்பில்லாமல் அங்கேயே தங்கிவிட்ட மற்றும் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழ் மக்கள் ஆகியோரது புதிய தலைமுறையானது கல்வி, வேலை வாய்ப்பு உட்பட கௌரவமான அடிப்படை நடமாடும் சுதந்திரம் கூட இல்லாததொரு நாடோடித்தனமான வாழ்க்கைக்கு இந்த போராட்டங்களால் தள்ளிவிடப்பட்டுவிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் போராளிக்குழுக்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக்கட்டப்பட, அடுத்த கட்டமான இறுதிப் போரில் அந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் ஒழித்துக்கட்டியது. 

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அங்கே அரசியல் ரீதியிலான ஒரு முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாநிலத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படுகிறது. இலங்கையின் மத்திய அரசால் நடத்தப்படும் தேர்தல் என்று வந்துவிட்ட பொழுதே, அதில் வாக்களிக்க தமிழ் மக்கள் முன்வந்து தங்களுக்குப் பிடித்த அல்லது தாங்கள் நம்பும் ஒரு கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பை 80 சதவிகித மக்கள் ஆதரித்து வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள் என்னும் செய்தி வந்து விட்ட பொழுதே....

இந்த செயல் நமக்கெல்லாம் சொல்லுகின்ற அல்லது உணர்த்துகின்ற செய்தி என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும்!

இது எதைக் காட்டுகிறது என்றால்? அவர்கள் அதாவது ஈழத்தில் தற்பொழுது இருந்து கொண்டிருக்கின்ற, (வாழ்ந்துகொண்டிருக்கின்ற அல்ல) நம் தமிழ் மக்கள், அந்த நாட்டின் பிரஜையாகவே இருந்து கொண்டு அரசியல் முன்னெடுப்பின் மூலமாக தங்களுக்கான உரிமைகளை போராடிப் பெறலாம், அல்லது குறைந்தபட்சம் தற்பொழுது இருக்கின்ற முள்வேலி முகாம் சிறைவாச நிலையிலிருந்து மாறி மற்ற இலங்கைப் பிரஜைகள் மாதிரியான அல்லது முப்பதாண்டுகளுக்கு முன்பான தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்தது மாதிரியான, தங்களுக்கான ஒரு குடும்பம், வாழ்க்கை, கல்வி, தொழில் அல்லது வேலை வாய்ப்பு என்று ஒரு வாழ்க்கையை வாழ விரும்புவதைத்தான் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

ஏனெனில் அவர்களுக்கு ஆதரவாக அங்கிருக்கும் அவர்களில் ஒருவர் அல்லாது இந்தியா அல்லது வெளிநாடுகளில் இருந்து யார்? என்ன? எது பேசினாலும் அது அவர்கள் தலைகளிலேயே விடிகின்றது. இங்கிருந்து கொண்டு தங்கள் அரசியல் லாபத்திற்காகவும் சில பல கோடி பணத்துக்காகவும் அங்கிருக்கும் போராளிக்குழுக்களை உசுப்பிவிட்டு, போர் இல்லாத காலங்களில் எல்லாம் கள்ளத்தோணியில் சென்று படம்பிடித்து வந்து அரசியல் உட்பட அனைத்து லாபங்களையும் அடைந்தவர்கள் இறுதிக்கட்டப் போரில் இங்கேயே பதுங்கிப் பம்மிவிட்டு பழியை யார் மீது போடலாம் என்று பல்லிளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் போட்ட குலவைக்கெல்லாம் அங்கிருக்கும் அப்பாவி தமிழர்கள் தான் பொங்கல் அரிசியாக வெந்து தனிந்தார்கள். இப்பொழுது இந்த தேர்தலில் பங்கெடுத்து ஒரு ஆட்சிக்கு வழிவகை செய்திருப்பதன் மூலம் அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுட்டிக்காட்டுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.

இந்த சம உரிமை, புண்ணாக்கு கந்தாயமெல்லாம் எங்களுக்கு வேண்டாம் அல்லது பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இப்பொழுது உடனடித்தேவை அடிப்படை உரிமையான காலார எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்லுகின்ற அந்த சுதந்திரம்!!!

அப்படி நடந்து சென்று தான் விரும்பும் அல்லது தனக்கு சரிப்படும் வேலையைச் செய்யலாம். அதன் பொருட்டு சில காசுகள் சம்பாதித்து, தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து அதைக் காப்பாற்றலாம். மூன்று வேலை வயிறாரவோ அல்லது வாழ்வதற்கு போதுமான அளவிற்கோ சாப்பிடலாம், பயமின்றி படுத்து உறங்கலாம், தங்கள் பிள்ளைகளை கல்விச்சாலைக்கு அனுப்பலாம், நாளை அவர்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்புகளை அமைத்துத் தரலாம். அடுத்த தலைமுறையிலாவது தம்முடைய பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த அந்த பழைய பெருமைக்குறிய வாழ்க்கை நிலையை மீட்டெடுக்கலாம்.....!!

இது எல்லாமே சாத்தியமாகும் என்ற நம்பிக்கையோடு தான் அரசியல் பாதைக்கு திரும்பி, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் இந்த தேர்தலில் பங்கெடுத்து தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இனியாவது இங்கிருக்கும் நாம் அவர்களுக்கான முடிவை அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதிப்போம். நம்முடைய எந்த ஒரு செயல்பாடுகளும் அவர்களுக்கு அங்கே எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்திவிடாமல் நம் வேலையைப் பார்ப்போம். முதலில் அவர்கள் அங்கே சம நிலைக்கு வரட்டும். இந்தியாவில் அகதிகளாக இருக்கின்றவர்களும் அங்கு சம் உரிமையுடன் குடியேறும் அந்த பொன்னான நிலை உருவாகட்டும்.

முடிந்தால் நாம் அதற்காக நமக்கு தெரிந்த வழிகளில் பிரார்த்தனைகள் மட்டும் செய்வோம்!!!!

ஈழத்தில் அமைதி நிலவட்டும்!! அங்கிருக்கும் எம் தமிழ்ச் சொந்தங்கள் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை நிலையை மீண்டும் மீட்டெடுக்கட்டும்!!!!


Saturday, September 21, 2013

சினிமா 100 - கலைஞரிடம் திணறும் ஜெயலலிதா!!!!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடக்கிறது. தென் இந்தியாவின் நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள் (பாண்டிச்சேரி முதல்வரை எல்லாம் எதோ கல்லூரி முதல்வர்ன்னு நினைச்சிட்டாங்க போலருக்கு). அப்பறமா கடைசி நாள் நிகழ்ச்சியில நம்ம இந்திய ஜனாதிபதி கூட கலந்துக்கறார்...  லாப் லாப் லாப்.....

இதெல்லாம் மேட்டர் இல்லை. இந்த விழாவுக்கு ஒரு பழம்பெரும் சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் கூட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அழைப்பில்லை. இது கூட பெரிய மேட்டர் இல்லை. ஏன்னா? ஜெயலலிதாகிட்ட வேற என்னத்த பெரிசா நாம எதிர்ப்பார்த்துட முடியும்?!

வேற என்ன தான் முக்கிய விஷயம்ங்கறீங்களா?

நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?! என்பது தான் இங்கே அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். நாம் என்று இங்கே நான் குறிப்பிட்டது நம் தமிழக வாழ் தமிழர்களைத் தான். அரசியல் ரீதியாக ஒரு கட்சி தவறான ஆட்சியை தந்திருக்கிறது என்று வாக்களர்கள் நினைத்தாலோ அல்லது இன்னொரு கட்சி, தற்பொழுது இருப்பதை விட சிறப்பானதொரு ஆட்சியை நமக்கு தரும் என்று நம்பினாலோ, அந்த ஆட்சிக்காலம் முடிந்த பிறகு புதிய கட்சியின் ஆட்சி அரங்கேற்றப்படும்.

அப்படி ஏதோ ஒரு நினைப்பில் தான் கடந்த திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தற்பொழுதைய ஜெயா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்களால் அமர வைக்கப்பட்டிருக்கின்றது. அப்படி உருவாக்கப்பட்ட இந்த ஜெயா ஆட்சி வந்தவுடன் உடனடியாக செய்த செயல்கள் என்னென்ன?

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை நீக்க முற்பட்டது, பாடப்புத்தகங்களில் திருவள்ளுவர் படம் கூட அகற்றப்பட்டது அல்லது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது, அவர்கள் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை முடக்கிப் போட்டது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை செயலிழக்கச் செய்தது, இப்படியாக இன்னும் பல...!

அடுத்த கட்டமாக தமிழக சட்டசபை வைரவிழா கொண்டாட்டங்களில் 60 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வரலாறு படைத்துக்கொண்டிருக்கும், இன்றைக்கு இந்திய அளவில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களிலேயே மிக மூத்த, மிக அதிக காலம் அந்தப் பொறுப்பில் இருக்கின்ற பெருமைக்குறிய கலைஞர் அவர்களை தவிர்த்து அவரை அவமானப்படுத்தியதாக நினைத்துக் கொண்டது.....!

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சினிமா நூற்றாண்டு விழாவில், அந்தத் துறையில் எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து இன்றுவரை பணியாற்றிக்கொண்டிருக்கும் கலைஞர் அவர்களை புறக்கணித்து புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பாஸிஸத்தனமான கோரைப்பற்கள் முகம் காட்டும் ஜனநாயகத்திற்கு விரோதமான கொடுங்கோல் ஆட்சிதான் நம் முன்னே கடை விரிக்கப்பட்டிருக்கின்றது!!

இது பற்றி கலைஞரிடம் கேட்டதற்கு, “நான் யார்? என்னை ஏன் அழைக்க வேண்டும்?” என்று திரும்ப ஒரு கேள்வியையே பதிலாக்கி விட்டு கடந்து போய் விட்டார்....!!!

அவர் கடந்து போய் விட்டார். ஆனால் அந்தக் கேள்வி அது கேட்கப்பட்டதற்குப் பிறகு பூதாகரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. 

யாருக்கு முன்னே அது நிற்கின்றது?

நம் முன்னே தான்! இந்த கொடுங்கோல் ஜெயலலிதா ஆட்சிக்கு வழியமைத்துக் கொடுத்த நம் தமிழக மக்களுக்கு முன்னே தான் இந்தக் கேள்வி பயமுறுத்துவது போல் நின்று கொண்டிருக்கிறது. இதற்கான பதிலை ஆட்சியாளரிடமிருந்து பெறுவதற்கு நாம் தொடர்ந்து தவறிக்கொண்டிருந்தால், நாளை பொதுமக்களாகிய நாமே அவமானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், நம்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரிடுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

கடந்த ஆட்சியில் தவறுகள் நடந்திருப்பதாக தற்பொழுதைய முதல்வர் நம்பினால், அந்த ஆட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மேல் வழக்குத்தொடர்ந்து நீதி மன்றத்தில் நிறுத்தியிருக்க வேண்டும்!!

ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன? தற்பொழுதைய முதல்வர் ஜெயலலிதாவின் மேல் திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து விடுதலை பெற அல்லாடிக் கொண்டிருக்கின்றார். தனக்கு எதிராக வாதாடுபவரை மாற்றக்கூடாது என்று அழாத குறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இந்திய நீதித்துறையே கேலியாகச் சிரிக்கும் அளவிற்கு தமிழக மானத்தைக் கப்பலேற்றிக்கொண்டிருக்கின்றார்....!!!

இந்த இடத்தில் தான் மக்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். திமுக செய்தது ஊழல் ஆட்சி என்று ஜெயலலிதாவைக் கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது என்ன? ஜெயலலிதா தான் தன் மீதான வழக்கிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கின்றார். அவர் நீதியை வளைப்பதை கலைஞர் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று சேர்த்துக்கொண்டிருக்கின்றார்...!!!

தான் ஆட்சிக்கு வந்தாலும் திமுக போட்ட வழக்கால் அல்லல்படுவதை தவிர்க்க முடியாத கோபம், கலைஞர், தளபதி மேல் நியாயமாக குற்றம் சொல்லி வழக்குத் தொடுக்க இயலாத இயலாமை, இதெல்லாம் சேர்ந்து எப்படியாவது கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்ற வெறி.....

அது தான் இப்படி சட்டமன்ற வைரவிழாவானாலும், சினிமா நூற்றாண்டு விழாவானாலும் இவ்விழாக்களில் கதாநாயகனாக உட்கார வைக்க வேண்டியவரை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்து, உள்ளுக்குள்ளே குரூர சந்தோஷத்தை அடைந்துகொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது!

ஆனால் ஜெயலலிதா அவர்களே, அந்த விழா மேடையில் உங்கள் முன்னே பேசுகின்ற ஒவ்வொருவரும் பேசாமல் மறைக்க எத்தனிக்கும் அந்த ஒரு வார்த்தை..., அந்த ஒரு பெயர்..., அங்கே எதிரே குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான திரைக்கலைஞர்களின் மனதில் பிரம்மாண்டமாக நிரம்பியிருக்கும் அந்த உருவம், ஒட்டுமொத்தமாக ஒரே எண்ண வடிவாக, ஒரே சக்தியாக உங்கள் தலைமேல் வந்து இறங்கும்.

இது ஒரு ஆரம்பப்புள்ளி, உங்கள் வீழ்ச்சிக்கு!!! இது இன்னுமொரு ஆரம்பப்புள்ளி எங்கள் தலைவனின் எழுச்சிக்கு!!!!

நீங்கள் நினைப்பது போல் இது கலைஞருக்கான அவமானமில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் உங்கள் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்ட எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு இது! இப்பொழுது தான் தங்களால் ஏற்படுத்தபட்ட பஸ் கட்டண உயர்வும், மின் கட்டண உயர்வும் மக்களை தாக்கத்தொடங்கியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியைப் போன்று மக்களிடம் பணப்புழக்கமில்லை, உட்கட்டமைப்பு வேலைகள் நின்று போனதால், அடித்தட்டு மக்களிடம் வேலையில்லாத்திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது..... ஊரெங்கும் கொலை, கொள்ளை, நகை பறிப்பு, ஜாதிக்கலவரங்கள்.....

என்று தமிழக மக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இப்பொழுது தான் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் நடைபெற்ற இலவச திட்டங்களை விமர்சித்துத்தான் ஆட்சிக்கட்டிலுக்கே வந்தீர்கள், ஆனால் அதற்கும் மேலாக இப்பொழுது நீங்கள் இலவசக்கடைகளை விரித்திருப்பதை மக்கள் கணக்கெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

எவ்வளவு காலத்திற்குத்தான் ஊடகங்களை நம்பியே நீங்கள் அரசியல் செய்ய முடியும்? மக்கள் அதையும் உணரத்தொடங்கிவிட்டார்கள். தி இந்து பத்திரிக்கை வந்தது தினமலருக்குத்தான் ஆப்பு என்று ஒரு ஆட்டோ ஓட்டுனர் அஸால்ட்டாக சொல்லும் அளவிற்கு ஊடகங்கள் பற்றிய மக்களின் கணிப்பு மிகத் தெளிவாக இருக்கிறது. அவர்கள் உங்கள் படம் போட்ட பலூனை ஊதினால் அதை சூரியன் என்று மக்கள் நம்பிவிடுவார்கள் என்று இனி எண்ண வேண்டாம்.

ஆகவே இன்னும் இரண்டு நாட்களுக்கு முடிந்த வரை இந்த சினிமா விழாவில் சந்தோஷமாக கழித்து விடுங்கள். ஏனெனில் அதன்பிறகு மக்கள் மன்றத்தில் நீங்கள் ஏற்ப்போகும் ஒவ்வொரு மேடையுமே எட்டிக்காயாகத்தான் உங்களுக்கு இருக்கப்போகிறது...!!!

கடைசியாக ஒட்டுமொத்த திமுகவினர் சார்பாகவும் உங்களுக்கு ஒரு நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் ஜெயலலிதா அவர்களே!!

ஒரு மேட்டிமை குணம் பொறுந்திய மனுஷியாக நீங்கள் தலைவர் கலைஞர் அவர்களை இந்த விழாவுக்கு முறைப்படி அழைத்து செய்ய வேண்டிய நியாயமான மரியாதையைச் செய்திருந்தால் அது ஒரு சம்பிரதாயமாண விழாவாகவே முடிந்திருக்கும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கையில் வழுவாது நீங்கள் ஆட்சிபுரிவதாக நாங்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்....!!!

ஆனால் உங்களின் இயல்பான குரூர புத்தியுடன் இவ்விழா சம்பந்தப்பட்ட செயல்பாடுகளிலும் நடந்து கொண்டு, எங்களுக்கான வேலைப்பளுவை குறைத்துக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் உடன்பிறப்புக்கள் அனைவரும் தலைவர் கலைஞர் அவர்களின் திரைத்துறை சாதனைகளை அவரவர் பாணியில் மிகத்தெளிவாக பட்டியலிட்டு இன்றைய இளைய தலைமுறை வரை ஒரே நாளில் கொண்டு சென்று சேர்த்த அந்த நல்ல நிகழ்வும் நடப்பதற்கு காரணமாக அமைந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை திமுக உடன்பிறப்பாக நன்றி சொல்லிக்கொள்கின்றேன்!!!



Wednesday, September 18, 2013

வைக்கோவுடன் ஒரு பேட்டி..! (கற்பனையே)

ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிலைப் படுத்தியே தன்னுடைய அரசியல் நகர்வுகளை எப்பவும் முன்னெடுப்பதாக கூறும் வைக்கோ அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு தெளிவுபெற வேண்டும் என்பது என் ஆசை. அவரிடம் நேரில் சென்று பேட்டி எடுக்கும் அளவிற்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. ஆனாலும் ஆசையை விட முடியவில்லை.

என்ன பண்ணலாம்?

ரொம்ப சிம்ப்பிள் கற்பனைக் குதிரையை தட்டி விட வேண்டியது தான்!! வைக்கோவின் செயல்பாடுகள், மேடைப்பேச்சுக்கள், பேட்டிகள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு அவரது பதில் என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து ஒரு மினி கற்பனை பேட்டியை கீழே தந்திருக்கின்றேன்.

ஆனால் கடைசி கேள்வி அல்லது என்னுடைய சந்தேகங்களுக்கு அல்லது கருத்துக்களுக்கு அவர் என்ன பதில் சொல்லுவார் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.  அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்!!!

இது முழுக்க முழுக்க கற்பனை பேட்டி மட்டுமே. உண்மை அல்ல!!!

வைக்கோ சார், பேட்டியை ஆரம்பிக்கலாமா?

ம்... கேளுங்க...!

நீங்க ஏன் சார் காங்கிரஸை கருவறுக்கனும்ன்னு சொல்றீங்க?

இலங்கையில தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்‌ஷேவுக்கு ராணுவ உதவி செஞ்சது காங்கிரஸ் அரசு தானே?! அதான் அவங்கள வெறுக்கறோம்.

அப்பறம் ஏன் சார் கலைஞரை எதிர்க்கிறீங்க?

அவர் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுல இருந்தும், அந்த இன அழிப்பை தடுக்காமல் வேடிக்கை தானே பார்த்தார்? அதான் அவரையும் எதிர்க்கிறோம்...!

இப்போ பாஜகவை ஆதரிக்கிறீங்களே...  அவங்க காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக்கூடாதுன்னு பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வச்சாங்களா வைக்கோ சார்???

அது... அது வந்து வாஜ்பாயி புலிகளுக்கு உதவி செஞ்சார்.....!!

அதே மாதிரி இந்திராகாந்தி கூடத்தான் புலிகளுக்கு உதவி செஞ்சிருக்கார். அப்பறம் ஏன் காங்கிரஸை மட்டும் எதிர்க்கிறீங்க??

அது வந்து....  ஹம்.. இப்போ இருக்குற காங்கிரஸ் தலைமை தானே இன அழிப்பின் போது இலங்கைக்கு உதவி செஞ்சுது!!!

ஓக்கே சார், ஆனா இப்போ இருக்குற பாஜக தலைமையும் காங்கிரஸின் இந்த இலங்கை ஆதரவை எதிர்க்கலையே?! அதோட மட்டுமல்லாம ராஜபக்‌ஷேவோட இந்திய தூதர் மாதிரி செயல்படுற சுனா சாமி இப்போ மோடியின் நெருக்கமான நண்பராவும் இருந்துக்கிட்டு பாஜகவுலயும் சேர்ந்துருக்காறே?!

நாங்க ஒன்னும் பாஜகவோட கூட்டணி வைக்கப்போறோம்ன்னு தீர்மானம் போடலியே?!

நீங்க தீர்மானம் போட்டு சொல்லல தான். ஆனா உங்க பேச்சு முழுவதும் பாஜகவை புகழ்ந்ததோடு நிக்காம, காங்கிரஸை கருவறுக்க வேண்டும் அதுக்கு தகுந்த மாதிரி தான் நாம முடிவெடுக்கனும்ன்னு பேசியிருக்கீங்க. அதுக்கு என்ன அர்த்தம்? காங்கிரசுக்கு மாற்றுன்னா அது பிஜேபிக்கு ஆதரவுன்னு தான அர்த்தம்?!

நீங்க சொல்ற மாதிரியே வச்சிக்குங்க. அதுல என்ன தப்பு இருக்கு? காங்கிரஸை கருவறுக்க நாங்க பிஜேபியோட கூட்டு சேர்ந்தா என்ன தப்புங்கறீங்க?

தப்பு எதுவும் இல்லை சார். அது உங்க தனிப்பட்ட விருப்பம். ஆனா இலங்கைப் பிரச்சினையை முன்னிலப்படுத்தி, அதற்காக காங்கிரஸை கருவறுக்க வேண்டி பிஜேபியோடு கூட்டணி சேர்கிறோம்ன்னு நீங்க சொல்றது தான் இங்கே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எதவச்சு அப்படி சொல்றீங்க?

ரொம்ப சிம்ப்பிள். இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை காங்கிரஸின் நிலைப்பாடு தான் எங்களுடையதும் என்று பிஜேபி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சுஷ்மா சுவராஜ், மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் இவ்விஷயத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு மிக வெளிப்படையான ஆதரவாகத்தான் இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், ராஜபக்‌ஷேவின் மனசாட்சியாக செயல்படும் சுனாசாமியை தன் நெருங்கிய நண்பர் பட்டியலில் இதுவரை வைத்திருந்த மோடி, தற்பொழுது அவரை பாஜகவின் உறுப்பினராகவே சேர்த்துக்கொண்டிருக்கின்றார். 

ஒரு வேளை அடுத்த ஆட்சியை பாஜக மத்தியில் அமைக்குமானால், தற்பொழுது இருக்கும் காங்கிரஸின் மறைமுகமான இலங்கை சிங்கள அரசின் ஆதரவை மிக வெளிப்படையாகவும், சட்ட ரீதியாகவும் தான் செய்வார்கள் என்பது இந்த செயல்பாடுகளிலிருந்தே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. எனவே இலங்கைப் பிரச்சினையின் காரணமாக காங்கிரஸுக்கு மாற்று என்ற வகையில் பிஜேபியை தேர்ந்தெடுப்பது என்பது எலி வளைக்கு பயந்து பாம்பு புற்றுக்குள் புகுந்த கதையாகத்தானே மாறும்?!

இன்னும் கொஞ்சம் இதை தெளிவான உதாரணத்துடன் சொல்ல வேண்டுமானால், கடந்த திமுக ஆட்சியின் போது இலங்கைப் பிரச்சினைக்காக, கலைஞர் ஆட்சியையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து இங்கே பொதுக்கூட்டம் போட்டு கண்டபடி அவர்களை திட்ட முடிந்தது, ஊர்வலம், மாநாடு எல்லாம் கூட போட முடிந்தது, பத்திரிகைகளில் எழுத, பேட்டிக்கொடுக்கவெல்லாம் கூட முடிந்தது, பிரபாகரன் படங்களை மேடைகளில் மட்டுமல்லாமல் ஊரெங்கும் வைத்து, டீ ஷர்ட்டுகளில் கூட படம் போட்டுக்கொண்டு, இலங்கை சிங்கள அரசுக்கு ஆதரவான மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் வைத்து நியாயம் கேட்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

ஆனால் இன்றைக்கு பிஜேபியை ஆதரிப்பதற்காக நீங்கள் சொல்லும் காரணத்தைப் போன்று தான் அன்றைக்கும் சொல்லி ஆதரவு தந்து உங்களைப் போன்றவர்களால் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கப்பட்ட ஜெயலலிதா அரசு இப்பொழுது என்ன சாதித்துக் கிழித்தது? சரி, இவர்களால் எதையும் சாதிக்க இயலாது என்பதை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அந்த பிரபாகரன் படத்தைப் போட்டு ஒரு பொதுக்கூட்டம் நடத்தக் கூட உங்களைப் போன்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றதே...  இதற்கு நீங்கள் என்ன சமாதானம் சொல்லப்போகின்றீர்கள்? 

ஜெயலலிதா, மோடி, சுனா சாமி, சோ, இந்து ராம் போன்ற அனைவருமே இலங்கைப் பிரச்சினையிலும், விடுதலைப்புலிகள் விஷயத்திலும், தமிழகத்தில் இவற்றுக்கெல்லாம் ஆதரவாக செயல்படுபவர்கள் மேல் எடுக்கின்ற நடவடிக்கைகளிலும் ஒரே எண்ண அலைவரிசையுடன் கூடிய ஒத்த கருத்து கொண்டவர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா வைக்கோ அவர்களே?! மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இதை நீங்கள் மறுக்க இயலுமா?

ஒரு வேளை நாளை மத்தியில் ஜெயலலிதா ஆதரவுடன், மோடி தலைமையில், சோ ஆலோசனையுடன், சுனா சாமி லாபியுடன் கூடிய ஒரு அரசு அமையுமானால், அப்பொழுது இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை என்ன நடக்கும் என்பதை சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும். நிச்சயமாக தனி ஈழம் என்பது கனவில் கூட வரமுடியாத அளவிற்கு இங்கே சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படும். உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ஈழப்பிரச்சினையை தூக்கிப்போட்டுவிட்டு வேறு வியாபாரங்களுக்குத் தான் செல்ல வேண்டியிருக்கும். 

இதையெல்லாம் இங்கே சொல்வதால் நீங்கள் காங்கிரஸை ஆதரியுங்கள், கலைஞரை ஆதரியுங்கள் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். ஆனால் இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அல்லது எடுக்கப்போகும் அரசியல் கூட்டணிகளுக்கும், எதிர்ப்பு அரசியலுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

கொஞ்சம் மனசாட்சியோடு சிந்தித்துப்பாருங்கள். ஜெயலலிதா, மோடி, சோ, சுனா சாமி, இந்து ராம்... இவர்கள் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து அமையும் ஆட்சி ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாவு மணி அடிக்கும் அரசாகத்தான் இருக்கும். ஆகவே மீண்டும் சொல்கிறேன் எலி வலைக்கு பயந்து, பாம்பு புற்றுக்குள் புக நினைக்காதீர்கள் வைக்கோ அவர்களே!!!

மேலே உள்ள பத்தி முழுமைக்கும் வைக்கோ அவர்களின் அல்லது வைக்கோ போன்ற ஈழப்பிரச்சினையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைவரின் பதிலும் என்னவாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் தோழமைகளின் எண்ணத்திற்கே விட்டுவிடுகின்றேன்!!


Tuesday, September 17, 2013

சொத்துக்குவிப்பு வழக்கும், ஜெ. வை போட்டுத்தாக்கிய கலைஞரும்!!

நீதித்துறையை எந்த அளவிற்கு வளைக்கலாம், அதுவும் அதிகாரம் கையிலிருந்தால் ஒருவர் இவ்வளவு அசிங்கமாகக் கூட நடந்து கொள்ளலாம் என்பதை  கலைஞர் அவர்களின் இந்த அறிக்கைஅப்பட்டமாக தோலுரித்துக்காட்டுகிறது. உண்மையான நடுநிலையாளர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அறிக்கை இது. இந்த உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற அயோக்கியத்தனங்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள் பற்றியும் பொதுமக்கள் உணர வேண்டிய தருணம் இது!
=========================================
கலைஞர் அறிக்கை:

எந்தவித சிக்கல் வந்தாலும் அதை ஏற்பது என்ற ஒரே முடிவோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏனென்றால் நீதி நிலைக்க வேண்டும் என்பதில் எனக்குள்ள அசையா நம்பிக்கை தான்.


பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு சார்பில் வழக்கறிஞராக இருந்தவர் திரு. பவானி சிங். இவருக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர் திரு. ஆச்சார்யா.
ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருந்த போது, அவர் மீது ஜெயலலிதா தரப்பில் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், அங்கே பா.ஜ.க. ஆட்சி இருந்த போது, சென்னையிலிருந்து அதிகார பலமிக்க ஒரு குழு, பெங்களூர் சென்று, முகாமிட்டு பணியாற்றியதன் விளைவாக, கனத்த மனதுடன், வெளிப்படையாக தனது மன சங்கடத்தைத் தெரிவித்து விட்டு இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார். சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா பதவி விலகல் கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதிக்கு அனுப்பிய போது, தலைமை நீதிபதியாக இருந்த திரு. விக்ரமஜித் சென் அவர்கள் அந்தப் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த தலைமை நீதிபதி உச்ச நீதி மன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சென்ற பிறகு, பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் திரு. ஸ்ரீதர் ராவ். அவர் ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
ஆச்சார்யா அவர்கள் விலகிய பின், அவருடைய இடத்திற்கு கர்நாடக அரசால் அரசு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடு வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் பவானி சிங். ஆனால் அவரது நடை முறைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்தன. ஜெயலலிதாவின் சாட்சியங்கள் விசாரணை முடிவுற்றபின், அரசு வழக்கறிஞர் தான் தன் வாதங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்க, அரசு வழக்கறிஞர் அதை கண்டு கொள்ளவே இல்லை.


உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு வாகனவதி; திரு. பவானி சிங் அவர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று கர்நாடக அரசு பரிந்துரையே செய்யவில்லை என்றும், கர்நாடக அரசு வேறு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிலே ஒருவரை கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி நியமித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்த விவரத்தைக் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.


அப்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் தான் இந்த வழக்கில் ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் பொறுப்பு தலைமை நீதிபதி அரசு ஏற்கனவே பரிந்துரை செய்த நான்கு வழக்கறிஞர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், தன்னிச்சையாக இந்த பவானி சிங் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்தார்.
இந்த வழக்கின் விசாரண அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் சாட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்றால், நீதி மன்றம் தான் அவரை சம்மன் செய்து அழைக்க வேண்டும். அந்தக் குறைந்த பட்ச நடைமுறை கூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதி மன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டு, சாட்சி ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு விசாரணை அதிகாரி இப்படி சாட்சியம் அளித்ததற்கு தனது உயர் அதிகாரிகளின் அனுமதியைக் கூட முறையாகப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை. நீதிபதியும் அதை அனுமதித்திருக்கிறார்.
இதே பொறுப்பு விசாரணை அதிகாரி தான், அரசு வழக்கறிஞரை மீறி, நேரடியாக சிறப்பு நீதிபதிக்கு இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று முன்பு கடிதம் எழுதியவர். இதுகுறித்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நாம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, டி.எஸ்.பி.. சம்மந்தத்தின் கோரிக்கையைத் நிராகரித்ததுடன், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி செயல்படும் பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தத்தையும் கண்டித்தது.


பவானி சிங் பொறுப்பேற்றவுடன் அரசு தரப்பு சாட்சிகளான 259 பேர், மற்றும் ஆயிரக்கணக்கான ஆவணச் சாட்சியங்களைப் படித்து தெரிந்து கொள்ள இரண்டு மாதம் அவகாசம் வேண்டுமென்று கோரி 28-2-2013 அன்று மனு தாக்கல் செய்தார். இதுநாள் வரை இந்த மனு மீது சிறப்பு நீதி மன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் கேட்ட அவகாசமும் தரப்படவில்லை. அதற்காக அவர் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவே இல்லை.
இதையெல்லாம் கண்டபிறகு தான், இந்த வழக்கில் அரசு தரப்புடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட எங்களை அனுமதிக்க வேண்டு மென்று கோரி சிறப்பு நீதி மன்றத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப் பட்டது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா எழுத்துப் பூர்வமாக உங்கள் கருத்துகளை எழுதித் தாக்கல் செய்யலாமே தவிர, வாதாட அனுமதியில்லை என்று தெரிவித்து விட்டார். விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு வை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கும் இது நாள் வரை பதில் இல்லை.
இந்த முக்கியமான வழக்கின் சான்றாவணங்களாக உள்ள கைப்பற்றப் பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, அந்தச் சொத்துக்களான நகைகள் எல்லாம் நீதி மன்றத்தின் பொறுப்பிற்குக் கொண்டு வரப்படவேண்டும். அவ்வாறு இது வரை கொண்டு வரப்படவில்லை. இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதி மன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதி மன்றம் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி அவசரப்படுவது, அவர் தன் பதவி ஓய்வுக்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்று கருதினார் போலும்! நகைகளை நீதி மன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது.


அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டுமென்று கோரி கர்நாடக உயர் நீதி மன்றத்தில் 23-8-2013 அன்று பொது;ச செயலாளர் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார். 26-8-2013 அன்று கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி திரு. போபன்னா, கர்நாடக மாநில சட்டத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதி மன்றம், நியாயமான விசாரணை நடைபெறுவதை கர்நாடக உயர் நீதி மன்றம் உறுதி செய்ய வேண்டுமென்று தெரிவித்திருந்தது. அதனால் தான் கர்நாடக மாநில உயர் நீதி மன்றம் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்றையதினமே கர்நாடக மாநில அரசு, பவானிசிங் அவர்களை மாற்றி உத்தரவிட்டது.


கர்நாடாக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி 26ஆம் தேதியே ஆணை பிறப்பித்த போதும், 27ஆம் தேதியன்று சிறப்பு நீதி மன்றத்தில் பவானி சிங் ஆஜராகி வாதிடுவதில் முனைப்பு காட்டினார். அவர் அவ்வாறு வாதிட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவரை அந்தப் பதவியிலிருந்து கர்நாடக மாநில அரசு நீக்கிய ஆணை பற்றி நீதிபதிக்குத் தெரிய வந்து விட்டதால், நீதிபதி நீதி மன்ற நடவடிக்கைகளை அப்படியே நிறுத்தி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டார். அப்போது பவானி சிங் நீதி மன்றத்திலிருந்து வெளியேறி அ.தி.மு.க. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! புலியும் மானும் ஒரே இடத்தில் நீர் அருந்திய கதையைப் படித்தது இல்லையா? அதைப் போல, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களும், அவர்களை எதிர்த்து வாதிட வேண்டிய வழக்கறி ஞரும் கூடி ஆலோசனை நடத்திய வேடிக்கையும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்திலே நடைபெற்றிருக்கிறது.


கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி யிருக்கா விட்டால், 27ஆம் தேதியன்றே அரசு தரப்பின் வாதத்தை பவானி சிங் முடித்துவிட்டதாகத் தெரிவித்து, நீதிபதியும் தீர்ப்பிற்கான தேதியை அறிவித்திருப்பார்.


கர்நாடகாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிப்பு செய்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய சிறப்பு நீதிபதியாக திரு. பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அதற்காகவே அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டு மென்று கேட்டதைக் கூட அளிக்காமல், தன்னுடைய பதவி ஓய்வு நாளான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் அவசரத்துடன் செயல்பட்டதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பில் முதலில் 133 சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்தனர். ஆனால் 99 சாட்சிகளை மட்டும் விசாரித்து விட்டு, தங்களுடைய சாட்சிப் பட்டியலை திடீரென்று குறைத்துக் கொண்டனர். இந்த 99 சாட்சிகளிடமும் கூட, அரசு வழக்கறிஞரான பவானி சிங் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.


குற்றம் சாட்டப்பட்ட தரப்பு முக்கியமான ஆவணங்களை """"ஜெராக்ஸ்"" நகல் களாகக் கொடுத்த போதிலும், சிறப்பு நீதிபதி அதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்காமல் பெற்றுக் கொண்டார். இது """"ஒரிஜினல்"" ஆவணங்களையே சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை மீறியதாகும். """"ஜெராக்ஸ்"" நகல்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.


அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்ததும், தனது பதவி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்லப் போவதாக 28ஆம் தேதி பவானி சிங் அறிவித்த நிலையில், 29ஆம் தேதி யன்று அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது நியாயமற்ற செயல் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன வேடிக்கை? எதிர் தரப்பு வழக்கறிஞரை மாற்றியது தவறு என்று ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதி மன்றத்திற்கே சென்று விட்டார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டவரே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த விநோதத்தை டெல்லியிலே உள்ள மூத்த வழக்கறிஞர்கள் எல்லாம் பார்த்து தங்களுக்குத் தாங்களே சிரித்துக் கொண்டார்களாம்!


உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா தாக்கல் செய்த இந்த வழக்கினை 30ஆம் தேதியன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை கர்நாடக மாநில அரசு நீக்கியதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்ற ஜெய லலிதாவின் கோரிக்கையை ஏற்று, தடை விதிக்க மறுத்த உச்ச நீதி மன்றம், புதிய அரசு வழக்கறிஞரை அந்த இடத்திலே நியமிக்கவும் கூடாது என்று கூறியதுடன், அந்த மனு மீது கர்நாடக மாநில அரசின் கருத்தினை தெரிவிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியது.
6-9-2013 அன்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பவானி சிங்கின் நியமனமே சரியானது அல்ல என்பதால் அவரைத் திரும்பப் பெற முடிவு செய்வதாகவும், தலைமை நீதிபதியுடன் கலந்து புதிய வழக்கறிஞரை நியமனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அதையேற்ற நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


10-9-2013 அன்று பவானி சிங் அவர்களுக்கே கர்நாடக மாநில அரசின் சார்பாக அதன் சட்டத் துறை செயலாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் குறிப்பாக, """"ஹள வாந ழுடிஎநசnஅநவே டிக முயசயேவயமய றயள டிக வாந எநைற வாயவ லடிரச யயீயீடிiவேஅநவே றயள nடிவ அயனந in யஉஉடிசனயnஉந றiவா வாந னசைநஉவiடிளே ளைளரநன லெ வாந ளுரயீசநஅந ஊடிரசவ in வாயவ வாந சநளூரசைநஅநவே டிக உடிளேரடவயவiடிn hயள nடிவ நெநn உடிஅயீடநைன றiவா, வாந ழுடிஎநசnஅநவே றiவானசநற லடிரச யயீயீடிiவேஅநவே..... ஐn வாந உசைஉரஅளவயnஉநள வாந ழுடிஎநசnஅநவே ளை டிக வாந எநைற வாயவ வை றடிரடன நெ யயீயீசடியீசயைவந வாயவ யீநனேiபே உடிளேனைநசயவiடிn டிக வாந அயவவநச லெ ழடிn’டெந வாந ஊhநைக துரளவiஉந, லடிர னடி nடிவ iளேளைவ ரயீடிn யயீயீநயசiபே நெகடிசந வாந ஊடிரசவ in வாந யகடிசநளயனை உயளந யள ளுயீநஉயைட ஞரடெiஉ ஞசடிளநஉரவடிச"" என்று தெரிவித்து விட்டது. அதாவது தங்களின் நியமனம் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமையவில்லை என்று கர்நாடக அரசு கருதுவதால் தங்களின் நியமன உத்தரவை இந்த அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது; இப்போதுள்ள சூழ்நிலை யில் தலைமை நீதிபதியின் முன்னால் புதிய வழக்கறிஞர் குறித்த நடவடிக்கை நிலுவையில் இருப்பதை மனதிலே கொண்டு, சிறப்பு அரசு வழக்கறிஞராக நீங்கள் ஆஜராக வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடாது என்று அரசு கருதுகிறது என்று கர்நாடக அரசு கடிதமே எழுதியிருக்கின்றது.


10ஆம் தேதி கர்நாடக அரசு இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தவுடன், பவானி சிங் என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஜெயலலிதா தரப்பினர் முடிவெடுத்து விட்டார்கள். அதாவது இன்று (13-9-2013) மதியம் 1 மணி அளவில் உச்ச நீதி மன்றத்தில் பவானி சிங் இந்த வழக்கிலே ஆஜராகக் கூடாது என்று கர்நாடக மாநில அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இடைக்காலத் தடை வழங்கிட வேண்டுமென்று ஜெயலலிதா கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.
பவானி சிங் அரசு வழக்கறிஞர் - ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடு வதற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் - அவரே இந்த வழக்கில் நீடிக்க வேண்டு மென்று ஜெயலலிதா எதற்காகத் துடிக்கிறார்? உச்ச நீதி மன்றமும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா தரப்பிலே அதற்காக எடுத்து வைத்த வாதம் என்ன? அதைப் பற்றி யெல்லாம் பின்னர் எழுதுகிறேன்.


உச்ச நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக, இந்த வழக்கு சிறப்பு நீதி மன்றத்தில் 17ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே பவானி சிங் அவர்கள் வாதாடக் கூடாது என்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் கழகத்தின் சார்பில் தொடுத்த வழக்கின் விசாரணை 16ஆம் தேதி யன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
எப்படியோ கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா இந்த மாதம் 30ஆம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கிறார். அதற்குள் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதுகிறார்கள். நீதிபதி அவர்களும் தான் ஓய்வு பெறுவதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கருதினார். இதிலே இடையிலே ஒரு சிக்கல். சிறப்பு நீதி மன்ற நீதிபதியின் பிறந்த நாள்படி அவர் இந்த மாதம் 12ஆம் தேதியோடு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மாதத்தின் மத்தியில் யாராவது ஓய்வு பெற நேரிட்டால், அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏதுவாக, அந்த மாதக் கடைசி வரையிலே தொடர்ந்து பணியாற்றலாம் என்று அரசு அளித்த சலுகை காரணமாக, நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் 30ஆம் தேதி வரை பணியாற்றலாம். ஆனால் அவர் இயற்கையாக ஓய்வு பெற வேண்டிய 12ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மாதம் 30ஆம் தேதி வரை அவர் பணியாற்றினாலுங்கூட, முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கக் கூடாது என்பது நீதி மன்ற மரபு. அதன்படி அவர் 30ஆம் தேதிவரை நீதிபதியாக பணி நீடித்தாலும், இனிமேல் அவரால் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கிட இயலாது என்பது தான் உண்மை. இதையும் மீறி சிறப்பு நீதி மன்ற நீதிபதி வழக்கினை நடத்துவாரா என்பது கேள்விக் குறி!


பேரறிஞர் அண்ணா அவர்கள் """"நீதி தேவன் மயக்கம்"" என்று ஒரு புகழ் பெற்ற நாடகம் எழுதினார். அதில் அண்ணா அவர்களே நடிப்பார். அதைப் போல இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலும் நீதி தேவன் மயக்கம் அடையப் போகிறரா? நிமிர்ந்து நிற்கப் போகிறாரா? நீதி தேவன் மயக்கம் அடைந்தாலும், உண்மையான நீதிபதிகளாகிய தமிழ் நாட்டு மக்கள் முன்பாக இந்த வழக்கின் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலைமைகளை எடுத்து வைத்திருக்கிறேன்.

மு.க


Monday, September 16, 2013

தி இந்து - ஒரு பார்வை

இந்திய அளவில் ஒப்பிட்டால், தமிழகத்தில் தான் தினசரிகளை படிப்பவர்களின் சதவிகிதம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தினசரிகளை தவறாமல் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களிடம் அவர்கள் படிக்கும் பத்திரிகைகள் பற்றிய மதிப்பீட்டைக் கேட்டால்....

பெரும்பாலும் உதட்டைப் பிதுக்குவது தான் நாம் காணும் காட்சியாக இருக்கும். மொத்தமாக அத்தனை தினசரிகளையும் ஒரேயடியாக குறை சொல்லிவிட முடியாது என்றாலும், இருப்பதில் சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒருவர் படித்துக்கொண்டிருக்கும் ஒரு தினப் பத்திரிக்கை, நிச்சயமாக அந்த வாசகருக்கு தொண்டை நனைய தண்ணீர் குடித்தது போன்ற முழு திருப்தியை தரவில்லை என்பது தான் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிதர்சனம்.
பெரும்பாலானவர்கள் ஒரு சில சமாதானங்களுடன் தான் ஒவ்வொரு குறிப்பிட்ட தமிழ் தினசரிகளுக்கும் வாசகர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே ஒவ்வொரு தமிழ் வாசகரிடமும் நல்லதொரு முழுமையான தமிழ் தினசரியைப் பற்றிய தேடல் அல்லது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் தான் நூற்றாண்டைக் கடந்து தமிழகத்திலிருந்து வெளியாகும் ஆங்கில தினசரியான THE HINDU  பத்திரிக்கை தங்கள் நிறுவனத்திலிருந்து இன்னுமொரு புதிய வெளியீடாக “தி இந்து” என்ற பெயரோடு தமிழில் வெளி வருவதை தமிழ் தினசரிகளின் வாசகர்கள் அனைவருமே ஒருவித ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இன்றைக்கு அதாவது செப்டம்பர் 16, 2013 அந்த தினசரியும் சொன்னபடி வந்து விட்டது. நாலே ருபாய்க்கு நாற்பது பக்கங்கள். கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் ஒதுக்கி படித்து முடித்த போது......

.....இதை இதை..  இதைத்தான் இத்தனை நாளும் எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று என் மனம் சொல்ல முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. மீண்டும் எனது காத்திருப்பு தனது வேலையை தொடர ஆரம்பித்து விட்டது. 

ஏன்? என்னாச்சு?

வேறொன்றுமில்லை....   இதுவும் இன்னுமொரு தமிழ் தினசரி! அவ்வளவே!!

இருக்கின்ற மற்றெதையும் விட இது குறைவானது / தரம் தாழ்ந்தது என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன். ஆனால் நான் ஏற்கனவே படிக்கும் இன்னொரு தமிழ் தினசரியை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக இந்துவைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்ததம் எதையும் இந்த பத்திரிக்கை என் மனதிற்குள் ஏற்படுத்திவிடவில்லை.

ஹிண்டு ஆங்கில தினசரியை தமிழகத்தின் 90 சதவிகிதத்திற்கும் சற்று கூடுதலானவர்கள் படிப்பதில்லை. ஆனாலும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிக்கின்ற அந்த பத்து சதவிகிதத்தினருக்கான போட்டியில் ஹிண்டு முன்னனியில் இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இந்து தமிழ் தினசரி என்பது தமிழகத்தின் பெரும்பான்மையான 90 சதவிகித வாசகர்களுக்கான சந்தைப் போட்டியில் களமிறங்கியிருக்கிறது. அப்படியிருக்கும் போது அந்த சந்தைப் போட்டியில் தற்பொழுது மிகப் பலவான்களாக இருக்கும் தினத்தந்தி, தினமலர் மற்றும் தினகரன் போன்ற தினசரிகளுக்கு இணையான ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்துவது போன்றதான வடிவமைப்புடனும் செய்திகளுடனும் தான் தி இந்து வந்திருக வேண்டும்.

ஆனால் செய்திகளே கட்டுரைகள் மாதிரி வளவளவென்று சிறிய எழுத்துக்களில் இருப்பது தினமணி படிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. எண்ணிலடங்கா கட்டுரைகளும், இலகுவாக இல்லாத எழுத்து நடையும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வாசக வட்டங்களிலிருந்து வெகுதூரம் இந்த தினசரியை தள்ளி வைத்துவிடும் அபாயமும் இருக்கிறது! 

தமிழக மக்கள், குறிப்பாக தினசரிகளை தினமும் படிக்கின்ற வாசகர்கள் எப்பவுமே தமிழக அரசியலோடும் அதன் தலைவர்களோடும் நெருக்கமான உறவோடு இருப்பது போன்ற எண்ணத்துடனேயே வாழ்பவர்கள். அவர்களால் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ தவிர்த்துவிட்டு அரசியலை அணுக முடியாது.

குறிப்பாக கலைஞரை தவிர்த்து விட்டு படிக்கின்ற எந்த பத்திரிக்கையுமே அவர்களை கொஞ்சம் கூட திருப்திப்படுத்திவிட முடியாது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக, மூன்று தலைமுறைகளாக கலைஞர் பற்றிய செய்திகளை படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிச் சொல்வதால், தமிழக வாசகர்கள் அனைவரும் கலைஞர் ஆதரவாளர்கள் என்ற பொருள் கிடையாது. குறைந்தபட்சம் கலைஞர் பற்றிய எதிர்மறை விமர்சனம் கூட செய்யாமல் இங்கே எந்த பத்திரிக்கையும் தாக்குப்பிடிக்க முடியாது.

ஆனால் ஒரு வரலாற்று சிறப்புமிக்கதான வெளியீடாக சொல்லிக் கொண்டு, முதல் நாளிலேயே, நாற்பது பக்கத்தில்  ஒரு சின்ன கார்னரில் கூட கலைஞர் படம் போடாமல் தமிழகத்தின் பெரும்பான்மையான 90 சதவிகித வாசகர்களுக்கான சந்தையில் ஒரு புதிய பத்திரிக்கை வெளிவந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான். இது நிச்சயமாக அந்த பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு விஷயம் தான்.

இதனால் கலைஞருக்கு எந்த சிறு பாதிப்பும் கிடையாது. ஆனால் இதுவரையிலும் ஹிந்து ஆங்கில தினசரியைப் படித்திராத தமிழகத்தின் 90 சதவிகித மக்களிடம் அந்த நிறுவனம் பற்றி இருந்த மதிப்பானது, இன்றைக்கு இந்த தமிழ் பதிப்பை படித்தவுடன், ....ஓஹோ இது ஒரு அதி தீவிர அதிமுக ஆதரவு பத்திரிக்கை, என்ற எண்ணம் மிகப் பலமாக பதிய வைக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

இதைச் செய்வதற்குத் தான் ஏற்கனவே தினமலர், தினமணி எல்லாம் இருக்கின்றதே என்ற எண்ணம் அனைவருக்கும் வந்திருக்கின்றது. மேலும் நமது எம் ஜி ஆர் அல்லது ஜெயா தொலைக்காட்சிகளிலோ அல்லது அதிமுக அரசின் பத்திரிக்கை விளம்பரங்களிலோ எழுதுவது போன்றோ, சொல்வது போன்றோ, பதினாறு பக்கத்திற்கு அரசு பொருட்காட்சிகளில் வைக்கப்படும் விளம்பரம் மாதிரி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டுரைகள் வெளியிட்டு, தமிழகம் அமெரிக்கா அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கின்றது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது.....   பாஜக ஆட்சி கொடுத்திருந்த “இந்தியா ஒளிர்கிறது” விளம்பரம் மாதிரியான தாக்கத்தை இந்த அதிமுக ஆட்சிக்கு மட்டுமல்லாமல், இந்த பத்திரிக்கைக்கும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது!

ஒரு புதிய பத்திரிக்கையின் வெளியீட்டு தினத்தில் இப்படியொரு எதிர்மறை விமர்சனம் வைக்கலாமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்தப் பத்திரிக்கை தனது முதல் வெளியீட்டிலேயே தன்னுடைய நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைத்துவிட்ட பிறகு, இந்தக் கேள்வியே அவசியம் இல்லாதது பொதுவானவர்களுக்குப் புரியும்!

தமிழக வாசகர்களிடம் தாங்கள் படிக்கும் தினசரிகளில் ஒருவித திருப்தியின்மை இருப்பதை மேலே சொல்லியிருந்தேன். அது என்ன என்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு தெளிவான உண்மை விளங்கும்.

அதாவது ஒரு தினசரி என்பது காலையில் ஒரு வாசகர் கைகளில் கிடைக்கும் போது, அது அதற்கு முந்தைய நாள் அந்த வாசகரின் பகுதி / மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில் அதற்கு அடுத்தபடியாக உலக அளவில் நடைபெற்றிருக்கின்ற முக்கிய நிகழ்வுகளை இந்த வரிசைப்படி முக்கியத்துவம் தந்து, நடந்தது நடந்தபடியே, ஒரு பிரமாணப் பத்திரம் அளிப்பது மாதிரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். 

மாறாக அந்த செய்திகளில் ஒரு வித சாயமோ அல்லது ஆசிரியரின் கருத்துக்களோ ஏற்றப்பட்டு சொல்வதைத் தான் தினசரிகளைப் படிக்கும் வாசகர்கள் ஒரு குறைபாடாக கருதுகின்றார்கள். தமிழ் தினசரிகளில் இருக்கின்ற பெரிய குறைபாடே இந்த விடயம் தான்.

நடப்புகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிரத்தான் ஆசிரியருக்கு தலையங்கம், கட்டுரை மற்றும் வாசகர் கடிதம் போன்ற பகுதிகள் இருக்கின்றனவே?! அங்கே தங்கள் கருத்துக்களையோ அல்லது தாங்கள் விரும்பும் கருத்துக்களை எழுதும் கட்டுரையாளர்களின் கட்டுரைகளையோ, கடிதங்களையோ பிரசுரித்தால் போயிற்று! அதை விடுத்து ஏன் செய்திகளில் சாயம் பூச வேண்டும்? ஏற்கனவே மற்ற பத்திரிகைகள் செய்துகொண்டிருக்கும் இதே தவறைத்தான் இன்றைக்கு வெளிவந்திருக்கும் தி இந்துவும் செய்திருக்கின்றது.

அதனால் தான் இதை இன்னுமொரு தமிழ் தினசரி என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது!

பாராட்டுக்குறிய விடயங்களே இந்துவில் இல்லையா என்று கேட்டால், நிறைய இருக்கின்றது. ஆனால் அவை அனைத்தும் தமிழில் வரும் மற்ற தினசரிகளிலும் இருக்கின்றது!! இந்து தன் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்னும் எக்கச்சக்க விளம்பர யுக்திகளை மேற்கொள்ளும், மிகக் கடுமையான விலைக்குறைப்பு எல்லாம் செய்யும். மக்கள் இதை தொடர்ந்து வாங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

ஆனால் தன் வாசகனுக்காக தான் சிந்திப்பதை தவிர்த்து விட்டு, செய்திகளை மட்டும் அவன் கைகளில் கொடுத்து, நீயே சிந்தனை செய்துகொள் என்று விட்டு விட வேண்டும்! இதைத்தான் ஒவ்வொரு தமிழ் தினசரிகளின் வாசகனும் எதிர்பார்க்கிறான். அவனுக்கும் மூளை இருப்பதை நீங்கள் மூடி மறைக்கக் கூடாது என்று விரும்புகிறான். அதை அவனுக்கான அங்கீகாரமாக நினைக்கிறான்!!!

அப்படி ஒரு தினசரிக்காக மீண்டும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றான்.....!!!






 

Thursday, September 5, 2013

கலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...!

கலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது...!

தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்களிடம் சரக்கு இல்லை, அல்லது இருக்கின்ற சரக்கும் கெட்டுப்போய்க் கிடக்கிறது என்கிற போது...... தன் தலைமையின் எதிராளியை சில பொய்யான பரப்புரைகள் மூலம் கேரக்டர் அஸாஸினேஷன் எனப்படும், பிம்பத்தை சிதைத்தல் என்ற கேவலமான செயலைச் சிலர் செய்வது வழக்கம்.

இந்த மாதிரி மலிவான உத்திகளை உபயோகிக்கும் ஒருவரது தரமும் தாழ்ந்து கொண்டிருப்பதை துரதிருஷ்டவசமாக அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அல்லது தன்னை பலியிட்டாவது தன் குலத்தை உயர்த்திட நினைக்கும் செயலாகவும் கூட அது இருக்கலாம். தன் வாழ்வே நாசமாகும், மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே ஒரு அயோக்கியன் மஹாத்மா காந்தியை சுட்டுக்கொள்ளவில்லையா? அது போலத்தான் இதுவும்!

விகடன்களுக்கு ஒன்றே ஒன்றைத்தான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....

நீங்கள் எத்தனை முகம் கொண்டு வந்து கலைஞரையும் அவர் போர்ப்படையையும் அழிக்க நினைத்தாலும் அது உங்களுக்கு கைவரப்போவதில்லை. முப்பதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி அதற்கென்று சர்க்காரியா என்ற நீதி விசாரணை கமிஷன் அமைத்து பரப்புரை செய்தீர்கள்.... ஒரே ஒரு குற்றச்சாட்டில் கூட ஒரே ஒரு நாள் கூட அவருக்கு தண்டனை பெற்றுத்தர இயலவில்லை.

அது முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்த நேரத்தில் ஒரு பொய்ப்பரப்புரையை உருவாக்கி மக்கள் மனங்களை அதில் மயங்கியிருக்கச் செய்து, ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுகவை அகற்றிட வேண்டும் இது தான் உங்கள் ஒரே அஜெண்டா. அது வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆனால் திமுக என்ற பேரியக்கத்தில் ஒரு சிறு சேதாரத்தைக் கூட உங்களால் உருவாக்க முடியவில்லை. இது தான் நிதர்சணம்.

ஆனால் நீங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஒரு பிம்பம் இன்னமும் வாய்தாதான் வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவிருத்திக்கொள்ளுங்கள்!!!

முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது திமுக மிக வலுவுள்ளதாகவும், வீறு கொண்டதாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து விடுதலப்புலிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் பரப்புரை செய்து அழிக்கப்பார்த்தீர்கள்...

2ஜி என்று கதை அளந்து பார்த்தீர்கள்....

இந்த பொய்ப்பரப்புரைகள் உருவாக்கப்படும் ஒவ்வொரு முறையும் தேர்தலில் வேண்டுமானால் தோல்விகளை திமுக சந்தித்திருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் திமுக தன்னை மிகப்பலமாக உரமேற்றி வளர்ந்து கொண்டிருப்பது தான் வரலாறு.

விகடனாரே இப்பொழுது உங்கள் கட்டுரை எங்களுக்கு இரண்டு உண்மைகளைச் சொல்லியிருக்கிறது. ஆட்சிக்காலத்தின் மையப்பகுதியில் இருக்கும் உங்கள் ஆதரவு பெற்ற தலைமை, மக்கள் செல்வாக்கை இழந்திருக்கிறது என்பது அதில் ஒன்று!!!

இன்னொரு உண்மை, திராவிட முன்னேற்ற கழகம் அதன் வருங்கால தலைவர் எங்கள் தளபதியின் அயராத நேர்மைத்திறன் கொண்ட உழைப்பினால், ஒட்டுமொத்த தமிழகத்தின் எங்கள் கட்சித் தொண்டர்களையும் கடந்து, உண்மையான நடுநிலை எண்ணம் கொண்ட பொது மக்கள் மத்தியிலும் மதிப்பு கூட்டப்பட்ட இயக்கமாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் அது!!!!

ஆகவே தான் உங்கள் தலைவியின் பயனற்ற ஆட்சியைப் பற்றி மக்கள் பேசுவதற்கு இடம் தராமல், எங்கள் தலைவர்களின் பிம்பங்களை உடைத்தெரியும் தரமற்ற முயற்சிகளில் இறங்கியிருக்கின்றீர்கள்!!

ஆனால் இந்த முறை உங்களின் இந்த எண்ணம் ஈடேறாது. உங்கள் முகத்திரை உடனுக்குடன் இங்கே கிழித்து தொங்கவிடப்படும். உண்மையான நடுநிலையாளர்கள் உண்மையை உணர்ந்துகொள்ளும் வழிமுறைகளை இந்த முறை எங்கள் இயக்கம் மிகத்தெளிவாகச் செய்யும்.

இனி....

திமுக வெல்லும்..! திமுக மட்டுமே வெல்லும்..!!

 

Wednesday, September 4, 2013

பொங்குன சோத்துல மாங்காய் வச்சது யாரு? கதம்ப மாலை...!

எங்க ஊரு பக்கமெல்லாம் “பொங்குன சோத்துல மாங்காய் வக்கிற மாதிரி” ந்னு ஒரு சொலவடை உண்டு.

இதுக்கு என்ன அர்த்தம்ன்னா?????

வள்ளுவர் கோட்டம் கட்டுனது யாரு??? திறந்து வச்சது யாரு? யாரு?

கோயம்பேட்டில் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தை கட்டுனது யாரு??? அதை திறந்து வச்சது யாரு? யாரு?

தருமபுரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது யாரு??? திறந்து வச்சது யாரு? யாரு?

நெம்மேலி கடல் நீர், குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தியது யாரு?? அதை திறந்து வச்சது யாரு? யாரு?

பெரிய பெரிய பாலங்களை கட்டி வச்சது யாரு??? இப்ப அதையெல்லாம் வீடியோ கான்ஃபரன்ஸ்ல திறந்து வக்கிறது யாரு? யாரு?

உழவன் ரயில் கொண்டு வந்தது யாரு??? அதன் துவக்க விழாவில் உள்ளே புகுந்து தள்ளு முள்ளு நடக்க.... நம் கழக தொண்டன் உயிர் விட்டானே... அதுக்கு காரணம் யாரு? யாரு???????

===========================

இப்பச் சொல்லுங்க மக்கா....

சோற்றைப் பொங்கி வைத்தது யாரு???? அதில் கொண்டு வந்து மாங்காயை வைத்து படையல் போட்டு பரப்புரை செய்வது யாரு? யாரு????

=====================================================

தீர்க்கதரிசி...!

ச்சே... நான் கூட, அவாள்லாம் இவோ மேல இருக்குற அவா பாசத்துனால தான் ஆதரவா எழுதறாளோன்னு நம்பிட்டேனேய்யாஆஆஆஆ......!

நம்ம தலைவர் போட்டு உடைச்ச மாதிரி ஒரே வாரத்துல பன்னிரெண்டே முக்கால் கோடிக்கு விளம்பரமா வருவாய் கொடுக்கறதுனால தான் இந்தப் பாசம்ன்னு இப்பத்தான்யா புரியுது!!!

தலைவரோட பராசக்தி படத்துல பாடுனது மாதிரி.....

“ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே”

என்னாஆஆஆ ஒரு தீர்க்க தரிசனம்?!

==================================================

திராவிடம் சாதித்தது என்ன??????

பிராமணரல்லாதோர், இந்த இணையத்தின் உள்ளே நுழைந்து கலைஞரை திட்டுவதற்க்கு திராவிடத்தை திட்டுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்!!!!!

இன்றைக்கு டேய்.... விச்சு என்று கூப்பிடும் தோழனை... குழந்தே என்று கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும்!!!!

அக்கிரஹாரங்களில் செருப்பில்லாமல் இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு மட்டுமே நுழைய முடிந்திருக்கும்.... இங்கிருக்கும் பாதிப்பேருக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டியிருக்காது.....!!!

வெளிநாட்டு வேலை என்றாலே அடிமட்ட கூலித் தொழிலாளியாக குடும்பத்தை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து வா(டு)ழும் நிலை மட்டுமே தொடர்ந்திருக்கும்....!!!!

குடும்பத்தோடு சென்று வெளிநாட்டில் செட்டில் ஆகி, ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் கலைஞரை திட்டி ஸ்டேடஸ் போடும் வாய்ப்பே வாய்த்திருக்காது.....!!!!
 

===================================================

 

Tuesday, September 3, 2013

வலையில் வைத்த கால்கள்.... விடுபடுவாரா ஜெயலலிதா..!!

2011 மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்தில் அதீதம் மின் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை:

கொக்கரக்கோ
Date: 
Wednesday, June 29th, 2011

அறுபது மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட குத்தகையில் இன்னும் 58 மாதங்களே மீதியிருக்கின்றன! உண்மை தானே?! சென்ற சீசனுக்கான குத்தகைதாரர், செய்த சில அத்துமீறல்கள், கடைசிகட்டத்தில் பெருமளவிற்கு பரப்புரை செய்யப்பட்டு, இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக அரியணை ஏறி கிட்டத்தட்ட 40 நாட்கள் ஓடிவிட்டன. 100 நாட்களுக்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று சிலர் சொல்கின்றார்கள்.

சாதாரண சூழ்நிலையில், இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்காத வரையிலும் இந்தக் கருத்தில் தவறு ஏதுமில்லை. ஆனால் பதவி ஏற்ற 40 நாட்களிலேயே, புதிய அரசு செயல்படுத்திய சில திட்டங்கள் நீதி மன்றம் முதல் மக்கள் மன்றம் வரையிலும் கண்டனங்களையும், முணுமுணுப்புகளையும் ஏற்படுத்தியிருக்கின்ற போது, 100 நாட்களுக்குப் பிறகு தான் விமர்சிக்க வேண்டும் என்ற பொது விதி செல்லுபடியாகாது என்றே தோன்றுகிறது.
புது அரசு ஒரேயடியாக தவறான பாதையில் செல்கிறதா? அல்லது ஒருசில விஷயங்களில் மட்டும் தடம் மாறுகிறதா? என்பதை பார்க்கும் முன்பாக, இந்தப் புதிய அரசின் தலைமைக்கு என்ன காரணத்திற்காக மக்களால் மகுடாபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றது, என்பதை கொஞ்சம் தெளிவாகப் பார்த்துவிட்டாலே, தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியின் தரம் தானாக விளங்கிவிடும்.

1991 மற்றும் 2001 ஆகிய இரண்டுமுறைகளும் ஜெயலலிதா பதவியேற்று, பிறகு ஆட்சி பறிபோனதற்கு என்னென்ன காரணங்கள் மக்களிடம் இருந்ததோ, அதே காரணங்களின் அடிப்படையில் தான் கடந்த திமுக ஆட்சியும் பதவியிழந்திருக்கின்றது. இதை யாரும் மறுக்க இயலாது என்கின்ற பொழுது, வேறு மாற்று இல்லாத காரணத்திற்காகவே இந்த முறை அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கின்றது என்பதையும் யாரும் மறுக்க இயலாது.
ஆனாலும் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு முறை தண்டனை பெற்றவர்கள், திருந்தியிருக்கக் கூடும் என்பதுதான் அது.அதில் தவறு கூட இல்லை. திமுக ஆட்சி ஏன் தரையிறக்கப்பட்டது? அது ஒரு சின்ன பட்டியல்! அதை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

1. ஸ்பெக்ட்ரம், 2. மின் வெட்டு, 3. விலைவாசி உயர்வு, 4.கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், 5. இலங்கைப் பிரச்சினையில் தவறான அணுகுமுறை அடுத்ததாக மாவட்ட வாரியாக குறுநில மன்னர்களின் ஆதிக்கங்கள். இவ்வளவு தான்.

இவ்வளவு தான் என்று சொல்வதற்காக யாரும் உடனடியாக கோபம் கொள்ள வேண்டாம். திமுக மேல் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தை பட்டியலிட்டிருக்கிறோம். இதை அனைவரும் கடந்த ஒரு வருடமாகப் பேசிப்பேசித் தான், அதிமுக வந்திருக்கிறது. அதேசமயம் மக்களுக்கு திமுக மேல் இருந்த பிடிப்பு என்னென்ன என்பதையும் பட்டியலிட்டே ஆக வேண்டும். ஏனென்றால் செல்வி ஜெயலலிதா, மக்கள் மத்தியில் உண்மையான, நிரந்தரமான நற்பெயரெடுத்து தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இதைக் கொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

1. முதன் முதலாக 6 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அரிசியை ஒரு ரூபாய்க்கு மக்கள் வாங்க வழி செய்தது (மாதம் 100 ரூபாய் மிச்சம்), 2. ஸ்டாலின் தலைமையில் செம்மையாக முறைப்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக, கிராமப் பெண்களிடம் மிகப் பெரும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது, 3. 108 ஆம்புலன்ஸ் திட்டம் (முதல் அறிமுகம்) அதிமுக வினரும் பாராட்டும் வகையில் செயல்படுத்தப் பட்டது, 4. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் (முதல் அறிமுகம்) லட்சக்கணக்கானோர் உண்மையிலேயே உயர் சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றது, 5.கிராம மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நூறு நாள் வேலைத் திட்டம் (முதல் அறிமுகம்), 6. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி (முதல் அறிமுகம்), 7. முன் எப்பொழுதும் கண்டிராத சாலை வசதிகள், 8. கிட்டத்தட்ட அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலைகள், 9. எண்ணிலடங்கா மேம்பாலங்கள், 10. குக்கிராமங்களுக்கும் கான்க்ரீட் ரோடுகள் அதன்மீது முதன்முதலாய் பஸ் வசதிகள், 11. கிட்டத்தட்ட அனைத்து பஞ்சாயத்துகளுக்குமே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 12. தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆங்காங்கே பொது குடிநீர் குழாய் இணைப்பு, 13. நிறைய கூட்டு குடிநீர் திட்டங்கள், 14. கான்க்ரீட் வீடு திட்டம் (முதல் அறிமுகம்)....

இதற்கும் மேலாக, சென்னையில் இரண்டு பெரிய பூங்காக்கள், நுண்ணிய உயர்தர நூலகம், அமெரிக்க இயற்கை தர நிர்ணய சான்றிதழ் பெற்ற புதிய தலைமைச் செயலகம், கோவை செம்மொழி மாநாடு, அதன் பொருட்டு மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்ட கோவையின் சாலைகள், புது மேம்பாலங்கள்.. இத்யாதிகள், திருச்சி மாநகர் நினைத்துக் கூட பார்க்க இயலாத மேம்பாலங்கள், மதுரை மாநகரின் சுற்றுச் சாலைகளும், மேம்பாலங்களும், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் வெகுவாக கலந்து கொண்டு உற்சாகமடைந்த கலாச்சார விழாக்கள், சமச்சீர் கல்வி, சமத்துவபுரம் போன்ற கொள்கை ரீதியிலான திட்டங்கள்....

இப்படி நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் சிலவற்றை இது தப்பு, அது தவறு என்று சிலர் சுட்டிக்காட்ட முன்வரலாம். பரவாயில்லை.. நமது இந்தக் கட்டுரையின் நோக்கம் கருணாநிதி ஆட்சியின் மகாத்மியங்களைக் கட்டியம் கூறுவது அல்ல, மாறாக புதிய ஆட்சியின் முன்பாக உள்ள சவால்களையும், அதை ஜெ. எவ்வாறு கடந்து சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன் வர வேண்டும் என்பதையும் பற்றியது தான்.

அதனால் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே!

தெரிந்தோ தெரியாமலோ, திமுக மீது மக்களுக்கான வெறுப்புகள் பற்றிய மேலே உள்ள பட்டியலை நமது ஊடகங்கள் கொஞ்சம் அதிகமாகவே மக்களிடம் பரப்புரை செய்து விட்டன. அதனால் தான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத வகையில் திமுக தடுமாறிப் போனது. ஆனால் அது முடிந்து போன கதை. இந்த தவறுகளுக்கெல்லாம், கருணாநிதியின், மிகப்பெரிய அலட்சியப் போக்கே காரணம் என்பது போலவும், ஆட்சி மாறினால் விரைவில் அனைத்தும் சரிசெய்யப் பட்டுவிடும் என்ற எண்ணமும் ஊடகங்களால் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டு விட்டன.

அந்த எதிர்பார்ப்புடனேயே மக்களும் புதிய ஆட்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை எல்லாம் (அதாவது இலவசங்களை) ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றிவிடுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். மக்கள் அதையும் குறித்துக் கொண்டார்கள் (மனதில்). இலவசத்திற்கு இந்த அவகாசம் ஓக்கே. ஆனால் மின்சாரம், விலைவாசி உயர்வு, இலங்கைப் பிரச்சினை, குறுநில மன்னர்களின் ஆதிக்கம் இவற்றுக்கெல்லாம் யாரும் அவகாசம் தரத் தயாராயில்லை!

முழு பௌர்ணமி நாளுக்கு அடுத்த நிமிடமே அமாவாசையை நோக்கிய பயணம் துவங்கி விடுவதைப் போல, ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே குஜராத் மின்சாரம் குதித்து வருகிறது என்றார்கள், இன்று வரையிலும் அது வராதது மட்டுமில்லாமல், இதுவரையில் பாதிக்கப்படாத சென்னையிலும் கூட அதிக அளவில் மின்வெட்டு நடைமுறையில் இருப்பது மக்களிடையே ஒருவித ஏமாற்றத்தை வரவழைத்திருக்கின்றது. இதில் மட்டும் சமச்சீர் கொண்டுவரும் ஜெயலலிதா, ஏழை பணக்காரர்கள் படிப்பில் அதை நடைமுறைப்படுத்த விரும்பாதது கீழ் நடுத்தர வர்க்க மக்கள் மனதில் மிகப்பெரும் கோபக்கனலை ஊதிவிட்டிருக்கிறது.

இலங்கைப் பிரச்சினையிலும் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றி, அதற்காகப் பாராட்டுக் கூட்டம் எல்லாம் நடத்தி முடிவுற்ற சூட்டோடு, 23 மீன்வர்களும் 5 படகுகளும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப் பட்டுவிட்டனர். இவ்விஷயத்தில், எந்தச் செயலுக்காக கருணாநிதி கேலி செய்யப்பட்டாரோ, அதே செயலான பிரதமருக்கு கடிதம் எழுதுவதை அம்மாவும் ஆரம்பித்தவுடன், இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று நடுநிலைவாதிகள் குழம்பித் தான் போய்விட்டார்கள்!.

ஒரு சிலருக்கு இதுதான் நிதர்சனம் என்பது இப்பொழுது தான் புரிய ஆரம்பித்திருக்கிறது! தமிழகத் தமிழர்களின் தேவைக்கே டில்லிக்கு காவடி தூக்கி பிச்சை எடுக்கும் நிலையில் தான் தமிழக முதல்வர்களின் அதிகார வரம்பு இருக்கிறது என்னும் பொழுது, இலங்கைத் தமிழர்களுக்காக துறும்பைக்கூட இவர்களால் கிள்ளிப் போட இயலுமா? இயலாதா? என்ற விடுகதைக்கான விடை கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்திருக்கின்றது.

விலைவாசி உயர்வு விஷயத்திலும், எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை என்பதை விட..., விலையேற்றம் என்பது இன்னும் தடுத்துக்கூட நிறுத்தப்படவில்லை என்பதும் மக்களை வெகுவாக வேதனைப்பட வைத்திருக்கின்றது.

அடுத்ததாக திமுகவின் சாதனைப் பட்டியல்களாக மேலே உள்ளவற்றில் பல திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியைக் கொண்டே பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டு வந்தன. திமுகவின் ஆரம்ப காலத்தில், தனித் தமிழ் நாடு கோரிக்கையை அறிஞர் அண்ணா முன் வைத்தார். ஆனால் அதைத் தடுக்கும் முயற்சிகளை கொஞ்சம் நிதானத்துடன் உற்று நோக்கி (இலங்கையில் நடந்தது போலத்தான் ஆகும் என்பதை புரிந்து கொண்டு..,) தம் மக்கள் வாழும்வரை நிம்மதியுடன் வாழவேண்டுமா? அல்லது போராடிச்சாக வேண்டுமா? என்ற கேள்விகளை மனதிற்குள் எழுப்பி இறுதியாக "மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியிலே கூட்டாட்சி" என்ற சித்தாந்தத்தை முன் வைத்தார்.

1996 லிருந்து அந்த சித்தாந்தத்தை, திமுக சாதுரியமாகப் பின்பற்றி, இன்று வரையிலும்.. இனிமேலும் மத்திய அரசில் கூட்டாட்சி தான் என்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டாட்சி தத்துவத்தால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள்... இன்னபிறவும், தமிழகத்திற்கு சாத்தியமாகியிருக்கின்றன. எப்பவுமே முட்டி மோதிக் கொண்டிருந்தால் காரியம் ஆகாது, என்பதைச் சரியாக புரிந்து கொண்ட கருணாநிதி, "நானும் ரௌடி தான்" ஸ்டைலில் மத்திய அரசு ஜீப்பில் தொற்றிக் கொண்டு, இந்த திட்டங்களுக்கு எல்லாம் தேவையான நிதிகளைப் பெற்றார் என்பதை யாரும் மறுக்க இயலாது.

இன்றும் கூட ஜெயலலிதா என்ன செய்கிறார்? டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து யாசித்த நிதியில், எவ்வளவு அளப்பார்களோ, அதற்கு தகுந்தாற்போல் தான் தமிழக பட்ஜெட்டை போட வேண்டும் என்று, நிதிநிலை அறிக்கைக்கான தேதியை தள்ளி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்! ஆனால் இன்றைய செய்தி என்ன? மத்திய அரசு விடுவித்துக் கொண்டிருந்ததில் 8000 கிலோ லிட்டர் மண்ணென்ணெயைக் குறைத்து விட்டார்களாம். இது கீழ்த்தட்டு மக்களிடம் எவ்வளவு பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என்பது இன்னும் ஒரு மாதம் கழித்து தான் தெரியும்.

ஆக இன்று ஜெயலலிதாவிற்கு முன்பு உள்ள முக்கிய பிரச்சினைகள் என்றால் ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக இந்த வருடத்திற்கு மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.

மற்ற அனைத்து இலவச திட்டங்களும் சென்ற ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதை அப்படியே அமல்படுத்தியாக வேண்டும். அதனால் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவற்றில் சென்ற திமுக ஆட்சியில் செய்த அதிகப்படியான திட்டம் என்றால் அது இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தான். அதற்கு 5 ஆண்டுகளுக்கும் அவர்களுக்கு ஆன கூடுதல் செலவு 4500 கோடி ரூபாய்கள் மட்டுமே. ஆனால் அந்த டீவியை தூக்கி விட்டு அதற்கு ஈடாக அம்மா அறிவித்திருக்கும் அதிகப்படியான இலவச திட்டங்களுக்குத் தான் இந்த 17500 கோடி ரூபாய்கள். அதுவும் இந்த ஒரு வருடத்திற்குள்ளாக!.

இதற்கெல்லாம் மேலாக இலவச ஆடு, கறவை மாடு வழங்கும் திட்டமெல்லாம் வேறு இருக்கிறது! ஐந்து ஆண்டில் 4500 கோடி ரூபாய். ஒன்றரை ஆண்டில் ஆட்டுக் குட்டியையும் கறவை மாட்டையும் சேர்த்து 20000(இருபதாயிரம் கோடி) கோடி ரூபாய்க்கும் மேல்..!! எவ்வாறு சாத்தியமாகும்? அந்த 4500 க்கே அறிவு ஜீவிகள் கொதித்தெழுந்தார்கள். ஒருலட்சம் கோடி கடன் வந்துவிட்டது, வருடத்திற்கு பத்தாயிரம் கோடி வட்டி கட்ட வேண்டியிருக்கிறது என்றார்கள்!! இப்பொழுது அதைவிட 1000 சதவிகித அளவு அதிக இலவசங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன் தமிழர்கள் மேல் விழும்?, அதற்கு எத்தனை லட்சம் கோடி வட்டி கட்டவேண்டி வரும்? என்று அதே அறிவுஜீவிகள் கணக்குப் போட்டுச் சொல்வார்களா?

ஒரு தவறை ஒருவர் செய்ததற்காக, குற்றம் சுமத்தி தண்டிக்கப்பட்டு, வேறொருவரை அந்த இடத்தில் கொண்டுவந்து அமர்த்தினால்..., அவர் முன்னவரை விடவும் பலமடங்கு அதிகமாக அதே தவறைச் செய்தால் என்ன அர்த்தம்? இதற்கெல்லாம் நிதி ஆதாரம் என்ன? மத்திய அரசு ரெகுலர் பட்ஜெட்டிற்கே போதுமான நிதி வழங்கும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. ஏனென்றால் இலங்கை உட்பட பல விஷயங்களில் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்து நிற்கின்றீர்கள்! உலக வங்கியில் கடன் வாங்கினால்... ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய், தமிழர்கள் தலையில் கடன்சுமை இருப்பதாகப் பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்துள்ளீர்கள்!?
என்ன செய்யலாம்? தெளிவாகப் பின்னப்பட்ட வலையில் காலை வைத்துவிட்டீர்கள் ஜெயலலிதா அவர்களே..!! வீழ்ந்துவிடாமல் விடுதலை ஆகவேண்டும். ஏனெனில் தற்பொழுது உங்களுடைய வீழ்ச்சி என்பது, உங்களுக்கான தனிப்பட்டது அல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களின், தமிழகத்தின் வீழ்ச்சியாகிவிடும்! இது தான் உண்மை!!

இலவச டீவி யை நிறுத்துவிட்டீர்கள். மிகவும் நல்லது. அத்தோடு நீங்கள் புதிதாக அறிவித்துள்ள அந்த வீண் ஓட்டரசியலுக்கான இலவசங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். மற்ற இலவசங்கள் மக்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றியிருப்பதால் அதை மட்டும் பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்தும் முடிவை அறிவிக்க வேண்டும். அரசின் நிதிநிலைமை பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன் வைத்து, இதற்கு மேல் இலவச திட்டங்கள் எதையும் புதிதாக நடைமுறைப்படுத்த இயலாது என்றும், அப்படிச் செய்தால், அவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் பெரும் துரோகமாக அமைந்துவிடும் என்பதையும் மக்களுக்கு தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அது உங்களால் முடியும். அதில் உள்ள நியாயத்தை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
அதன்பிறகு நீங்கள் சொன்ன அந்த ஒன்றரை வருடங்களில் ஒரு தூய்மையான் அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, வருமானத்தை பெறுக்கும் வழிமுறைகளை செய்து, சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்ட வேண்டும். சென்ற ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் எந்த சிறு தொய்வும் இல்லாமல் செயல்படும்படியாக, மத்திய அரசுடன் சுமுகமான உறவை பலப்படுத்திக் கொண்டு, நிதி ஆதாரங்களை தடையில்லாமல் பெற்றாலே போதும். அதை விடுத்து "சமச்சீர் கல்வி", புதிய தலைமைச் செயலகம், பாதி கடந்த மெட்ரோ ரயில்... போன்றவற்றில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, ரத்தம் வரும்படி நடந்து கொண்டால்.... முதல் கோணல் முற்றிலும் கோணலாகி தீராப்பழியாகிவிடும்!! அலட்சியம் வேண்டாம்.



பிறந்த நாள்..!

நினைவு தெளிந்த நாட்களிலிருந்து இது கொஞ்சம் அதிகமான புலகாங்கிதத்தைக் கொடுத்த பிறந்த நாள் என்றே சொல்லலாம்.

சின்ன வயசா இருக்கறச்ச எல்லாம், வகுப்பில் ஒரு சில மாணவர்கள் மட்டும் எதாவது ஒரு நாளில் புத்தாடை உடுத்தியும் கையில் ஒரு பிளாஸ்டிக் டப்பியில் சாக்லேட் குவியலோடும் வந்து சேருவார்கள். அவிங்கள எல்லாம் பார்த்தாலே லைட்டா கடுப்பு ஏறும்! வாத்தியார்ட்ட சொல்லிட்டு, ஒவ்வொருத்தன் மூஞ்சிக்கு நேராவும் அந்த டப்பிய நீட்டுவான்....

சாக்லேட் நெருங்கி வர வர, அவன் மேலிருந்த கடுப்பெல்லாம் நீங்கப்பெற்று, சாக்லேட்டின் சைஸ் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் மனம் லயித்திருக்கும். நாகரீகம் கருதி எல்லோருமே ஒன்றையாகத்தான் எடுத்துக்கொள்வோம். ஆனால் அவனுக்கு அணுக்கமான தோழர்களுக்கு அவனே இன்னொன்றையும் எடுத்துத் தருவான்....!!

அவன் அதை வாங்கிய வேகத்தில் ரஹ்மான் இரட்டை ஆஸ்கார் வாங்கியபோது கொடுத்த போஸ் மாதிரியே எங்களை ஸ்லோமோஷனில் பார்த்துச் சிரித்தவாறே திரும்புவான்...!!!

அதெல்லாம் ஒரு காலம். அஞ்சாவது ஆறாவது படிக்கும் போதெல்லாம் வாழ்க்கையில் லட்சியப் பட்டியலில் இதையும் ஒன்றாக சேர்த்துக்கொண்டேன். வாழ்க்கைல படிச்சி நல்ல பெரிய ஆளா வந்து, நல்ல வேலைல சேர்ந்து நிறைய சம்பாதிச்சி, கேக்கு வெட்டி பர்த்டே கொண்டாடனும். அன்னிக்கு நம்மளோட படிச்ச பசங்கள எல்லாம் தேடித்தேடிப் போய் சாக்லேட் கொடுத்துட்டு வரனும். குறிப்பா அந்த ப்ளாஸ்டிக் டப்பாவுல தான் கொண்டு போய் கொடுக்க வேண்டும்......!!!

இது தான் வளர்ந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் லட்சியமாக மாறிப்போய் விட்டிருந்தது. ஒரு கட்டத்தில் படித்து முடிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமான இடைப்பட்ட அந்த போராட்டச் சுனாமியில் மறக்கடிக்கப்பட்ட சிறு வயது லட்சியங்களோடு இதுவும் கரைந்து போயிருந்தது.

திருமணத்திற்குப் பிறகு, மனைவியால் அந்த லட்சியம் மீட்டெடுக்கப்பட்டாலும், சாக்லெட் கொண்டு போய் சக மாணவர்களிடம் கொடுப்பதாக எடுத்த சபதத்தை நினைத்து ஒவ்வொரு வருடமும் சிரித்துக்கொள்வேன்.  அந்த நாட்களில் பத்திருபது ஃபோன் கால்கள் வாழ்த்துச் செய்தியோடு வரும்.

எப்பவும் கம்பெனி ஊழியர்களுடன் நல்ல விருந்துச் சாப்பாட்டோடு இனிமையாய் கழியும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள். சமீபமாக இரண்டொரு வருடங்களாக இணையத்திலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் வாழ்த்துச் செய்திகள் வெளியிட அதை பலர் லைக் செய்து வாழ்த்துச் செய்தியும் பின்னூட்டமுமாக இடுவார்கள்.

பிரச்சினைகளை புறம் தள்ளிவிட்டு சந்தோஷமாக இருக்க எத்தனிக்கும் இத்தகைய தருணங்களில் முகம் தெரியாத அந்த தோழமைகளின் வாழ்த்துக்கள் ஒரு வித உற்சாகத்தை தரும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

அந்த வகையில் தான் இன்றைய எனது பிறந்த நாளும் வந்து சேர்ந்தது. நாற்பத்து நான்கை கடந்து நாற்பத்தி ஐந்தில் அடியெடுத்து வைக்கின்றேன். இன்றைக்கு வெளி வேலைகள் அல்லது கடமைகளையெல்லாம் முடித்து விட்டு மதியம் வாக்கில் இணையம் வந்து பார்த்தால், நூற்றுக்கணக்கான தோழமைகளின் வாழ்த்துக் குவியல்கள்.

நிச்சயமாக ஒரு சிறு பிள்ளையாய் மாறிப்போனதாக உணர்ந்தேன். இந்த இணையத்தில் உலவுவதால் அது கெட்டது, இது தீயது என்று எவ்வளவோ விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தாலும், இது மாதிரியான நமக்கே நமக்கான தனிப்பட்ட நாட்களை நமக்கு மென் மேலும் ஒரு மதிப்புக்கூட்டும் களமாக மாற்றுவதில் இணையத்தின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.

இனி நம் பள்ளித் தோழர்களை தேடிச் சென்று சல்லாபிக்க முடியுமா? அதற்கு தான் வாய்ப்பிருக்கா?....

ஒரு விடயம் முடிந்து போய்விட்டது என்று எண்ணி கடந்து கொண்டிருக்கும் போது, இல்லை இல்லை, இது இருக்கிறது என்று இந்த இணைய உலகம் தான் இன்று எனக்குக் காட்டியிருக்கின்றது....!!!

என் சிறு வயது லட்சியத்தை இது ஈடேற்றிக் கொடுத்திருக்கிறது. இது எனக்கு மட்டுமான அனுபவமாக இருக்க முடியாது, இங்கிருக்கும், நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்துணை தோழமைகளுக்குமான அனுபவமாகவும் தான் இருக்கும்....!!!

என் முகமறியாவிட்டாலும், நால் நல்லவனா? கெட்டவனா? அல்லது ஏழையா? பணக்காரனா? மேல் சாதியா? கீழ் சாதியா? என்று இப்படியான இன்னபிற கேள்விகள் எதையும் கேட்காமல் சிறு வயது பள்ளித் தோழர்களாய் வாழ்த்துச் சொன்ன இணைய தோழமைகள் அனைவருக்கும் இந்த இனிய நாளில் என் நெஞ்சார்ந்த நன்றியினை கூறிக்கொள்கிறேன்.

நன்றி

நாகை சேது ஆர்ப்பாட்டம்..!!

இன்னிக்கு ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமுமே நாகையில் தான் குவிந்து கிடந்தது. காலை ஏழு மணிக்கு நானும் அபிஅப்பாவும் மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றம் வந்த போது....   நாங்கள் காரை விட்டு இறங்கவும், அண்ணன் பொன்முடி அவர்களின் வாகனத்தை ஒரு நிமிடம் மன்றத்தின் வாசலில் நிறுத்தவும் ஒரு சேர நடந்தது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நகரம் குண்டாமணி அண்ணன், ஓடி வர, இவர் கார் கண்ணாடியை இறக்கி, கிளம்பியாச்சான்னு கேட்க....   ஓரிரு நிமிட உரையாடலோடு அவர் வாகனம் திருவாரூர் நோக்கி, சாமி தரிசனத்திற்கு செல்லும் வேகத்தோடு சீறிப் பாய்ந்தது.

பிறகு நகரம் எங்களைப் பார்த்து, நாம கடேசியாத்தான் போறோம், இன்னிக்கி மேடைல எல்லாம் ஏறப் போவதில்லை, நமக்கு மாவட்டம் நிறைய வேலை கொடுத்திருக்கு. 18 வண்டியும் அனுப்பிட்டு, கடேசியா நான் மட்டும் உன் வண்டில வரேன்னு சொன்னதை தட்டமுடியவில்லை.

அடுத்த ஒரு மணி நேரம் அத்தனை பரபரப்பு, ஆட்கள் எண்ணிக்கை கூடக்கூட, வண்டி எண்ணிக்கை 22 ஐ கடந்து போய்க்கொண்டிருந்தது. 9 மணிக்கு நாங்கள் கிளம்பும் போது, தொப்பரையாக நகரம் ஏறி என் காரில் அமர்ந்தார்.

அடுத்த ஒன்னேகால் மணி நேரத்தில் அதி விரைவில் எங்கள் வாகனம் நாகை எல்லையை மற்ற அனைத்து வாகனங்களையும் கடந்து முன்னே சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெரும் அவுரித்திடலுக்கும் ஒரு கிலோ மீட்டர் முன்னமே வாகனங்கள் நிறுத்தப்பட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், சாரை சாரையாக மக்கள் வெள்ளம், வந்து குவிந்துகொண்டே இருந்தது. அங்கே மாவட்டம் கொடுத்திருந்த வேலைகளை நகரத்துடன் இணைந்து கன கச்சிதமாக முடித்த போது.....

தலைவரின் கான்வாய் சீறிப்பாய்ந்து வந்தது!!!!

ச்சே.....   என்னா கூட்டம்யா அது?!  என்னா உணர்வுகள் அங்கே!!! அப்போ தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. மூன்று மாவட்ட தொண்டர்கள் மட்டும் அங்கே குவிந்திருக்கின்றனர் அவனவன் சொந்த காசைப் போட்டு வேலை வெட்டியை விட்டு வந்திருக்கான். அதுவும் பட்டப்பகலில், பொட்டை வெயிலில், வாரத்தின் முதல் நாள்.......

வந்திருந்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் கலைஞர் முகத்தைக் கூட முழுமையாக பார்க்க முடியவில்லை. அவ்ளோ கூட்டம். கிட்டத்தட்ட, ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும். போலீஸ் கெடுபிடி அதிகம் என்பதால், எல்லோரும் அலைக்கழிக்கப்பட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதெல்லாத்தையும் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் பிடிபட்டது. இனி இந்த இணைய பத்தாம்பசலிகள், அந்த மாபெரும் மனிதனைப் பற்றி நேர்மைக்கு மாறாக வைக்கும் விமர்சனத்தை எல்லாம் நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று!

சூரியனைப் பார்த்துத் தான்.........
ஃபோட்டோ உபயம் அபி அப்பா. நாங்கள் ஒரு குறுக்குச் சந்தில் எங்கள் கடமையை நிறைவேற்ற சென்று கொண்டிருந்த போது என்னையும் நகரத்தையும் சேர்த்து எடுத்த புகைப்படம் தான் இது!

கதம்ப மாலை...!

வசனகர்த்தா கலைஞர் ....

பிரிந்திருந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணையும் போது........
ஒரு வசனம் வைத்திருக்கிறார் இருவர் உள்ளம் படத்தில்.....

கண்ணே உன்னிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்

குடும்பப் பண்பாடு

வாழ்க்கைப் பண்பாடு

அறிவுப் பண்பாடு
.........................
...........................

எங்கே கண்ணே??

ஒரு ஆனந்தப் பண்.... பாடு

ச்சே......    நீ ஒரு பிறவிக் கலைஞனய்யா....!!!!

அப்பொழுதே ரொம்ப க்யூட்டான குட்டிக் குட்டி வசனங்கள். அத்தனையும் அற்புதம்.
============================================

ஏ.ஆர். ரஹ்மான்...

இசை, இசை நுணுக்கங்கள், இசை ஞானம் இப்படி அனைத்து விதத்திலும் இன்றைக்கு இருப்பதில் தேர்ந்த இசையமைப்பாளர் யார் என்னும் பொழுது யோசிக்கவே செய்யாமல் ஏ.ஆர். ரஹ்மான் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் கிடையாது.....

அதேசமயம் அதிகமான படங்களுக்கு இசையமைத்த காரணத்தினாலும், ஆரம்ப காலங்களில் பற்பல கிராமிய பாடல்களின் மெட்டுக்களை திரையிசையில் லாவகமாக கையாண்ட அனுபவத்தினாலும், பல நல்ல மெட்டுக்களை (ட்யூன்) கொண்ட பாடல்களை இளையராஜா நமக்குத் தந்திருக்கின்றார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்த வகையில் விருமாண்டி படத்தில் வரும் உன்னை விட பாடலுக்கு நிகரான (அதே போன்ற சூழலுக்கான பாடலுக்கு) ஒரு மெட்டு இன்னும் ரஹ்மானிடமிருந்து வராமல் இருந்தது எனக்கு பெரும் குறையாகவே இருந்தது.

அந்த நேரத்தில் தான் கடல் படத்தில் வரும் மூங்கில் தோட்டம் பாடல் கேட்க நேர்ந்தது. இதுக்கு நேரம் ஒதுக்கி முழுசா அனுபவிக்கனும்ன்னு முடிவு பண்ணியிருந்தேன். நேற்று முன் தினம் தான் எனக்கு அந்த வாய்ப்பு அமைந்தது. இரண்டு பாடல்களையுமே அடுத்தடுத்து போட்டு, திரும்பத் திரும்பக் கேட்டேன்......

நிச்சயமாக சொல்கிறேன்....   மெட்டமைப்பதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை.  ஆனால் இசை நுணுக்கம், அதில் ஒரு மேட்டிமைத் தனமான அறிவு... ஞானம் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டால், ஏஆர் ஆர் தான்.....  ச்சான்ஸே இல்லை. ரெண்டு பாட்டையும் கேட்டுட்டு வந்து  கும்முங்க மக்கா!
=================================================


சர்வோ பிறந்த நாள் - 25.04.2013

அது வெள்ளிக்கிழமை இரவு. அபுதாபியில் விடுமுறை தினம். பகல் இரவு ஆட்டமாக ஷார்ஜாவில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச். அன்றைக்கு டெண்டூல்கரின் பிறந்த நாள். எல்லாரும் ஸ்டேடியத்துல இருக்கோம். மிகப் பெரிய எதிர்பார்ப்பு. இரண்டு பகுதிகளாக பிரித்து விட்டார்கள். ஒரு பக்கம் பாகிஸ்தானியர்கள், இன்னொரு பக்கம் இந்தியர்கள். யாரும் ஊடுறுவ முடியாது. ஊடுறுவவும் முயற்சிக்க மாட்டார்கள் ஏன்னா தனியா மாட்டிக்கிட்டாபெண்டு கழண்டுடும்.

மேட்ச் பயங்கர விறுவிறுப்பு. வெளியில் மணற் புயல் உள்ளே டெண்டூல்கள் ஃபோர், ஸிக்சர் என்று வானவேடிக்கை நிகழ்த்துகிறார்.....

எனக்குத் தான் முழுமையாக அதை ரசிக்க முடியவில்லை, இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறேன். மேட்ச் முடிந்து அதைப் பற்றி சிலாகித்துக் கொண்டே நண்பர் குடும்பத்தினரோடு அபுதாபி திரும்புகிறோம். வரும் வழியில் கவலைப் படாதீங்கண்ணே, எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு ஐரிஸ் சொல்லிக்கிட்டே வந்தது!

காலை எழுந்து கிளம்பி, வேண்டா வெறுப்பாக அலுவலகம் வந்தாச்சு. அப்பொழுது தான் அங்கே மொபைல் அறிமுகமாகியிருந்த நேரம். இதற்காகவே வாங்கி வைத்திருந்தேன். சரியாக 9.10 இருக்கும் ரிங் அடிக்கிறது. கையெல்லாம் நடுங்க எடுக்கிறேன். வாய் தட்டுத் தடுமாறி ஹலோ என்கிறது. பெரியக்கா தான் பேசுது. தம்பி குட்டி பய பொறந்துருக்காண்டா.....!!!!!

ஆச்சு... அது நடந்து 15 வருடம். எங்கள் வீட்டு செல்லம் இன்று ஸ்வீட் சிக்ஸ்டீனில் அடியெடுத்து வைக்கிறான்.....! உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் வேண்டி!
==========================================

மீன் வேட்டை:

கடந்த சித்திரை ஒன்னுலேர்ந்து மீன்பிடி தடைகாலம் ஆரம்பமாகிவிட்டது.....  இந்த வாரம் மீனுக்கு என்ன பண்றதுன்னு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி, நேத்து ராத்திரியிலேருந்தே.  காரைக்கால்ல இருக்குற குடும்ப நண்பரிடம் ஃபோன் பண்ணினால், பெரிய மீன் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது அண்ணா, பக்கத்துல எல்லா ஊர்லேர்ந்தும் வந்து குவிஞ்சிடுறாங்க, காலைல ஆறு ஏழு மணிக்கெல்லாமே வித்து தீத்துடுது. ஒன்னு ரெண்டு பெரிய மீன் ஆப்ட்டாலும் கிலோ ஆயிரம் ரெண்டாயிரம்ன்னு கொஞ்சம் கூட கூசாம சிலதுங்க வாங்கிட்டு போயிடுதுங்கன்னு சொல்றான்.......

ராத்திரி பூரா விசனம் புடிச்சி உட்கார்ந்து.... ஸாரி படுத்து புரண்டுட்டு, காலைல எழுந்து கர்ம சிரத்தையோடு சன் டீவில மஹாபாரதம் பார்த்துட்டு, அதுல வியாசர் சொல்ற அறிவுரை படி,  எல்லாமே விதிப்படி தான் நடக்கும், அதை மாற்ற யாராலும் முடியாதுங்கறத ஸ்டாராங்கா மனசுல ஏத்திக்கிட்டு, முயற்சியைக் கைவிடக்கூடாதுங்கற கடமை உணர்ச்சியோட, மீன் வாங்குறதுக்குன்னே வீட்டு கொல்லைல மாட்டி வச்சிருக்குற பிஞ்சு போன ஒயர் கூடையை மனைவி எடுத்துக் கொள்ள, கிளம்பிவிட்டோம் வேட்டைக்கு....!

மாயவரத்துல எந்தெந்த முக்குட்டுல எல்லாம் பட்டணத்திகள் வந்து மீன் கடை போடுவார்களோ அங்கெல்லாம் சென்று பார்த்துக் கொண்டே, பெரிய மீன் இல்லாததால், கடைசியில் மீன் மார்க்கெட்டுக்கே வண்டியை விட்டோம்.

ஏகப்பட்ட கூட்டம். அதான் மீன்பிடி தடைகாலம் வந்துடிச்சே, இவனுங்க எல்லாம் சிக்கன், மட்டன்னு வாங்கி சாப்பிட்டா என்ன? என்று மனசுலேயே கேள்விய கேட்டுக்கிட்டு, பதைபதைக்கும் மனதோடு உள்ளே நுழைந்தோம்....

எல்லா கடையிலேயுமே செம கூட்டம், எட்டி எட்டி பார்த்துட்டு வந்துட்டே இருந்தோம். ஒரே ஒரு அம்மையாரிடம் அவ்ளோ கூட்டம் இல்லை. நேராக அங்கே நின்றேன்.
 என்ன தம்பி?
வஞ்சிரம் இருக்காக்கா????? 
அக்காவாஆஆஆஆஆன்னு அந்த அம்மிணியின் பார்வையே கேட்பது அந்த மார்கெட் முழுவதும் லௌடு ஸ்பீக்கர் போட்ட மாதிரியே கேட்டுச்சி!

இரு தம்பின்னு சொல்லிட்டு, பக்கத்து கடைல இருக்குற ஐஸ் பொட்டிய திறந்து 2 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீனை எடுத்து வந்தது. கிலோ 700,  2 கிலோ 1400 ஆகும், நீ ஆயிரம் குடு தம்பின்னு சொல்லுச்சி. இல்லாக்க நான் 800 தான் எடுத்துட்டு வந்துருக்கேன்னு சொன்னோடுன, சரி குடுப்பான்ன்னு சொல்லி மீனை எடுத்து கூடைல வச்சிடுச்சி. 800 ரூபாயை குடுத்துட்டு, குழம்புக்கு எதுனாச்சும் பொடி பொட்டு ரெண்டு போடுக்கா என்றவுடன்.....

கை நிறைய அள்ளி செங்காலா குட்டிகளையும், கிழங்கான் குட்டிகளையும் போட்டது......

பெரிய மீன் 23 பீஸு தேறுனுச்சி. அதுலேர்ந்து நாலு பீஸை எடுத்து பொறிச்சி மேலே கொண்டு வந்து விட்டேன்......  90 எம் எல்ல ரெண்டு ஃப்ரெஞ்சு வேலியும்......

கடவுள் இருக்கான் கொமாரு!!!


ரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு

ஒரு வருடம் எப்படிப் போச்சுன்னே தெரியல. 52 வாரங்களும் வியாழக்கிழமைகளில் வாராந்திர கூட்டம். ஒரு சில வாரங்கள் மட்டும் மாற்றி அமைத்துக்கொள்வோம்.  எண்ணற்ற சேவைத்திட்டங்கள்.

முக்கியமாக 32 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து இருதய அறுவை சிக்கிச்சை. பத்து நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழா. சொந்தமாக நடத்திக்கொண்டிருக்கும் மேல் நிலைப்பள்ளிக்கு தேவைப்படும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான நிதி வழங்குதல், இரத்ததானம், இரத்தவகை கண்டறிதல், கண் அறுவை சிகிச்சைகள், விழிப்புணர்வு முகாம்கள், சேவைத் திட்டங்கள், இவைத்தவிர, தகுதியான மாணவச்செல்வங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கல்வி உதவித் தொகைகள், இன்னும் எத்தனையோ......

நிறைவாக முடிந்தது கடந்த ஒரு வருட ரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு. கடந்த ஞாயிறு அன்று புதிய தலைவருக்கு அந்த தலைமை பொறுப்பை மாற்றித் தந்து விட்டு, வீட்டுக்கு வந்தவுடன், ஒரு இனம் காண முடியாத மன நிம்மதி.

நிச்சயமாக என்னைப் போன்ற தனி மனிதனால் இதையெல்லாம் சாதிக்க முடியாது. ஆனால் ஒரு குழுவாக, ஒரு இயக்கமாக, அதிலும் உலகம் தழுவிய ஒரு பேரியக்கத்தின் அங்கத்தினராக இணைந்து, அதில் நம்ம ஊர் கிளையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செய்யும் போது பல அசாத்தியமான விஷயங்கள் கூட இலகுவாக சாத்தியமாகியிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள்.....   சென்னை அப்பல்லோவில் இருதய அறுவை சிகிச்சை, அதிலும் இலவசமாக.... ஒன்றா? இரண்டா? மொத்தம் 32 குழந்தைகளுக்கு! எத்தனை லட்சங்கள் செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அதை சாதித்தது ரோட்டரி தான்.

எதுவாக இருந்தாலும் அந்த 52 வாரங்களுக்குள் முடித்தாக வேண்டும். அதானால் பின்னங்கால்கள் பிடரியில் அடிபடுவது போன்ற வேகத்துடன் ஓட வேண்டும். நமக்கு முன்னாள் இருந்தவர்களை விட அதிகம் சாதிக்க வேண்டும். நமக்கு அடுத்து வருபவர்களுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்...   என்ற லட்சியத்தோடு ஓட வேண்டும்!!!

இதில் சாதிப்பது என்பது நம்முடைய சுயநலன் கருதி இருக்க முடியாது. அனைத்துமே, முற்றிலும் தகுதி வாய்ந்த தேவையிருக்கும் நபர்களுக்குத் தான், சமுதாயத்திற்குத் தான். எவ்வளவு சாதிக்க வேண்டும் என்று ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம்முடைய நேரம், உடலுழைப்பு, பொருளாதாரம் என்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், தனி நபராக இதைச் செய்ய முயன்றால் நாம் செலவழிப்பதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே பயனாளிகளைச் சென்றடைய முடியும். ஆனால் ரோட்டரியில் இணைந்து அதைச் செய்யும் போது, நாம் செலவிடுவதைப் போன்று குறைந்த பட்சம் பத்திலிருந்து அதிக பட்சம் நூறு மடங்கு வரையிலும் தேவையுள்ளோருக்கு பலன்களை பெற்றுத் தர இயலும்.

எது எப்படியோ? ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதை என் மனதிற்கு நிறைவை தரும் அளவில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்தியிருக்கிறேன். அந்த அளவில் எனக்கு பெரிய சந்தோஷம்.

அந்த வகையில் ரோட்டரிக்கும் அதன் நிறுவனர் திரு பால் ஹாரிஸ் அவர்களுக்கும் எங்கள் மாயூரம் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!