Tuesday, May 6, 2014

திமுக, மு.க.ஸ்டாலின், கலைஞர், விடுதலைப் புலிகள் - ஒரு அரசியல் கதம்பம்!

திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, நான் செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் அனைத்தையும் நீங்கள் செய்து கொண்டிருப்பதாக உங்கள் தொண்டர்கள் பீத்தலாத்தல் செய்து கொண்டிருக்கின்றார்களே.....?!

நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... ஸாரி சவால் விடுகிறேன்.....

செண்ட்ரல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றீர்கள்...

அதேப் போன்று காஷ்மீர் தீவிரவாதிகளுடனான போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் இல்லம் சென்று மரியாதை செய்துள்ளீர்கள்...

ஒத்துக்கறேன்... இதெல்லாமே நான் செய்ய வேண்டிய வேலை தான், ஆனால் நீங்கள் செய்துள்ளீர்கள்....

ஆனால், நான் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்குப் பதிலாக நீங்கள் ஆஜராக முடியுமா? ஆஜராக முடியுமா? ஆஜராக முடியுமா????

அம்மா அடிமைகள்: பேஷ் பேஷ், அம்மான்னா அம்மா தான்! இதுக்கு அவங்க எப்புடி பதில் சொல்லுவாங்கன்னு பார்ப்போம்.

பொது மக்கள்: ஙேஏஏஏஏ....!!


=================================================================

/////காஷ்மீர் விடுதலை போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய இராணுவ ஊழியர் முகுந்தனின் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த் இரங்கல்கள்! ///// - நாம் தமிழர் இயக்கத்தினர்

ஒரு இளைஞன் இப்படி எழுதுகின்ற அளவிற்கு அவனை மூளைச் சலவை செய்து வைத்து,.... விட்டால் தமிழகத்தில் இன்னும் ஒரு முள்ளி வாய்க்கால் கொடூரத்தையும், முள் வேலி முகாம்களையும் உருவாக்கிட முயன்று கொண்டிருக்கும் சீமான வகையறாக்களை உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தின் உண்மையான நடுநிலை மக்கள், இதை வெறுமனே கலைஞர் எதிர்ப்பு என்ற கோணத்தில் பார்க்காமல், நாளைய நம் நிம்மதியான வாழ்கைக்கு வேட்டு வைக்கும், இந்த மாதிரியான இளைஞர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, ஒன்றிணைய வேண்டும்.


=================================================================

சீறி சபாரத்தினம் தொடங்கி, பத்மநாபாவில் தொடர்ந்து..., மாத்தையா வரை துரோகின்னு இவிங்க போட்டுத்தள்ளுன ஆயிரக் கணக்கான ஆளுங்க பட்டியலில் இருக்குற அத்தனை பேருமே தமிழர்கள் தான்! அதிலும் அவங்க அனைவருமே தனி ஈழத்திற்காக ஆயுதமேந்தி சிங்களர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் தான்.....!

அதே மாதிரி தான் 2008 முதல் கலைஞரையும் துரோகின்னு முத்திரை குத்தி கடிச்சி குதறி எடுக்குறானுங்க!

எத்தனை காலத்துக்கு தாண்டா துரோகி துரோகின்னு சொல்லியே தமிழர்களை மட்டும் போட்டுத் தள்ளுவீங்க? ஒரு ஜெயவர்த்தனேவையோ, ஒரு சந்திரிகாவையோ, ஒரு ராஜபக்‌ஷேவையோ உங்களால போட முடிஞ்சுதா? அது போகட்டும், உங்க மூஞ்சில காறித் துப்பி, இந்திய எல்லையிலேயே கால் வைககக் கூடாதுன்னு துரத்தி அடிச்ச சுனா சாமியையோ, ஜெயலலிதாவையோ எதிர்த்து சின்ன அறிக்கை கூட உங்களால கொடுக்க முடிஞ்சுதா?

ஆனா அவங்க கூடயோ, அவங்க இருக்குற கட்சியிலோ கூட்டணி வச்சிக்கிட்டு, பேசற பேச்சைப் பாரு? வெளக்குமாத்து கட்டைங்க!!!


================================================================

விடுதலைப்புலிகளையோ, பிரபாகரனையோ விமர்சிப்பது, ஆபத்தானது, அபத்தமானது, தேவையற்றது, அவர்களை வெறுக்க வேண்டாம் என்று எழுதுகின்ற திமுக ஆதரவாளர்களுக்கான எனது பதில் அல்லது விளக்கம்...!
===========================

ஏன்? இந்த ஆட்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இல்லை பிரபாகரன் தான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அதுவும் கூட இல்லை, கலைஞர் என்ன விமர்சிக்கப்படுவதற்காக மட்டுமே அவதரித்தவரா???

2008 இல் இருந்து அவர்களுக்கு விளக்கம் தந்தாயிற்று. 2009க்குப் பிறகு அவர்கள் கோபத்தின் உச்சத்தைப் பொறுத்துக்கொண்டு, பதில் சொல்லியாயிற்று,,,, 2011 தேர்தலில் அவர்கள் ஆடிய ஆபாச அர்ச்சனைகளுக்கு கொஞ்சமாக வைக்கோ, நெடுமாறன் வகையறாக்களை கையில் எடுத்துப் பேசி அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி பதில் கொடுத்தாயிற்று...

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் ஆயிரம் தவறுகளை செய்துவிட்டு, அநியாயமாக குற்றத்தை திமுக/கலைஞர் மேல் தூக்கிப் போடுவதும், அதை ஆரிய ஊடகங்களும், ஆரியர்களும் திமுகவை அழிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வதும், இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இணையம் பக்கம் வந்திருந்த பல லட்சம் இளைஞர்கள் திமுக/கலைஞருக்கு எதிராக மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதும்....

என்று மிகப் பெரிய பேரிழப்பை திமுக சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு மேல் வாளாவிருப்பதில் அர்த்தம் இல்லை. திமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுச்சியானது..... இனி கைக்கூலிகள் வைக்கோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களை சாடி பிரயோஜனம் இல்லை என்பதை உண்ர்ந்ததன் வெளிப்பாடே!!

மாறாக விடுதலைப்புலிகள்/பிரபாகரனின் முட்டாள்தனங்களையும், அயோக்கியத்தனங்களையும் தோலுரித்து தொங்கவிட்டால் தான் அவர்களும் அடங்குவார்கள், இப்பொழுது சம காலத்தில் இணையம் பக்கம் வந்து கொண்டிருக்கின்ற இளைஞர்களையும் அவர்கள் மூளைச்சலவை செய்வதில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலையையும் உருவாக்கியிருக்கின்றது.

ஆகவே இந்த எழுச்சியை அடக்கவோ, அணைக்கவோ முற்பட வேண்டாம். திமுகவை படுகுழியில் தள்ள வேண்டாம்...!!!!!



தமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....!!!


தமிழகத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறது. ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கிறார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். 12 பேர் படுகாயங்களுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்கள்.....

*** தமிழக முதல்வர் கொடநாட்டை விட்டு இறங்காமல், வெறும் அறிக்கை மட்டும் விடுகின்றார். 

*** எதிர்கட்சித் தலைவர் இப்படியொரு சம்பவம் நடந்ததா இல்லையா என்றே.. அவருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று, மக்களுக்குப் புரியாத நிலையில் இருக்கின்றார் (அவர் பேச்சு மாதிரியே குழப்பமா இருக்கா மக்கழே?)

*** நான்காம் தூணாக இருக்க வேண்டிய ஊடகங்களும், தான் தோன்றித்தனமாக எழுதுகின்றன. அதில் ஜூவி ஒரு படி மேலே போய், ஜெயலலிதா குண்டு வெடித்தவுடன் உடனடியாக சென்னை வர முடிவெடுத்துவிட்டார், அனேகமாக 11 ஆம் தேதி(!) சத்தியநாராயணா பூஜையை அவர் சென்னையில் தான் செய்வார்....! என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கின்றது.

தமிழக மக்கள், தங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காக தாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் லட்சணம் இது தான். அதே தமிழக மக்கள் நம்பி படிக்கின்ற ஊடகங்களின் நம்பகத்தன்மையும் இந்த அளவில் தான் ஆளுங்கட்சிக்கு சலாம் அடிக்கும் நிலையில் இருக்கின்றது. நீதித்துறை.... அது பற்றி விமர்சிக்க தேவையில்லை....

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருக்கின்ற தமிழக மக்களே....

குறைந்த பட்சம் அதிகாரப்பூர்வ எதிக்கட்சி தகுதியில் கூட நீங்கள் அமர வைக்காத திமுக..., அதன் தலைவர், மக்களின் சார்பாக தனது கண்டனத்தை ஆளுங்கட்சியின் மீது, அதன் மெத்தனப்போக்குடன் கூடிய கவனக் குறைவை விமர்சித்து அறிக்கை விடுகின்றார்.

நியாயமாக இந்த வேளையை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும், ஊடகங்களும் செய்திருக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் நிவாரணப் பணிகளுக்காகவும், அடுத்தடுத்து இது மாதிரி நடந்து விடாதபடிக்கு துப்புத்துலக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை முடுக்கி விடுவதற்கு முதல்வரே நேரடியாக களத்திற்கு வந்து நின்றிருக்க வேண்டும், தலைநகரில் தங்கி, அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, இனி இன்னுமொரு முயற்சியை தீவிரவாதிகள் எடுப்பதற்கு எண்ணாத வண்ணம் செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதை முதல்வரிடம் எடுத்துக்கூற அல்லது கேள்வி கேட்க தைரியமோ, திராணியோ அல்லது அக்கரையோ எதிர்க்கட்சித் தலைவருக்கும் இல்லை, ஊடகங்களுக்கும் இல்லை. ஆகையால் இப்பிரச்சினையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விக்கணைகள் மக்கள் சார்பான மிகச் சரியான நடவடிக்கையே!

இந்த நிலையில், இந்த பொறுபாளர்கள் காயமடைந்தவர்களைக் கூட சென்று சந்தித்திராத நிலையில், திமுகவின் வருங்காலத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், நான்கு நாட்கள் ஓய்விற்காக வெளிநாடு சென்று வந்த உடனேயே, அந்த காயம்பட்ட நபர்களை, மருத்துவமனைக்கு தேடிச் சென்று நலம் விசாரிக்கின்றார்.... ஆறுதல் சொல்கின்றார்... நாங்க இருக்கிறோம், கவலை வேண்டாம் என்று அவர்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகின்றார்...

இது அந்த காயம்பட்ட நபர்களுக்கு மட்டுமான திமுகவின் தலைவர் மற்றும் வருங்காலத் தலைவரின் சேவை என்ற அளவில் கடந்து போகக் கூடாது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் திமுக தந்திருக்கும் நம்பிக்கை என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!!!

தேர்தல் முடிந்த கையோடு ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டாகிவிட்டது, அடுத்தடுத்து, பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால விலை அனைத்தும் ஏறுவதற்கான முதல்கட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தண்ணீர்ப் பிரச்சினைக்கு எந்த தீர்வையும் எடுக்காமல், இதோ மிகக் கொடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கின்றது....

இவை அனைத்தையும் சரிசெய்வதற்கான கோரிக்கைப் போராட்டங்களை தமிழக மக்களின் சார்பாக திமுக மட்டுமே, தளபதி ஸ்டாலின் மட்டுமே முன்னெடுக்க முடியும். அவர் தான் செய்து கொண்டும் இருக்கின்றார். இப்போழுது தான் தேர்தல் முடிந்திருக்கின்றது, அதன் முடிவுகள் கூட இன்னும் வரவில்லை.

அது எப்படி இருக்கும் என்ற எண்ணமோ, கவலையோ கூட இல்லாமல், மக்கள் பிரச்சினைக்கு நேரடியாக தளபதி ஸ்டாலின் அவர்கள் களம் இறங்கி விட்டிருக்கின்றார்.

இதெல்லாம் என்னத்துக்கு? தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தால், அதை கவ்விக்கொண்டு வந்து வாக்களிக்க சிலர் தயாராய் இருக்கின்றார்கள். அதை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அதிமுக எண்ணியிருக்கலாம். அதேப்போன்று, தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் கடைசி இரண்டு மாதம் களமாடி பத்திரிக்கைகள் துணையுடன் வெற்றியை ஈட்டிடலாம் என்று சில திடீர், குபீர் உணர்வாளர்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எண்ணியிருக்கலாம்...

ஆனால் திமுக தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கட்சி அல்ல, இது எப்பவுமே மக்களுக்காக, மக்களோடு, மக்கள் மன்றத்தில் நின்று போராடக்கூடிய மக்கள் இயக்கம், என்பதை தளபதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நினைவுபடுத்தி விட்டு, தன் பணிகளை தொடர ஆரம்பித்து விட்டார். ஓட்டுக்கு நோட்டுக் கிடையாது என்பதையும் அவர் திட்டவட்டமாக அறிவித்து செயலாற்றுகின்றார்...

ஆகையால் இப்பொழுது உண்மையான திமுக தொண்டர்களும், நெஞ்சை நிமிர்த்தி மக்கள் மன்றத்தில் உலா வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அனைத்து தொகுதிகளிலும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, பதுங்கிப் பதுங்கி நோட்டுக்கொடுக்க களமாடிய அதிமுகவினர், இப்பொழுது குற்றவாளிகளைப் போன்று தலை கவிழ்ந்தே செல்கின்றனர்.

திமுகவை கம்பீரமாக வழி நடத்துகின்றார் தளபதி...

தமிழக மக்களே நீங்களும் வாருங்கள் எங்களோடு...

தமிழகமும், தமிழர்களும் கம்பீரமாக பீடு நடை போடலாம்....!!!