புதுக்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் எல்லாம் முடிந்து தேர்தல் களம்
உண்மையான வெப்பநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கும்
தேமுதிகவுக்கும் நேரடிப் போட்டி என்பது உறுதியாகி விட்டது. வேட்புமனு
தாக்கலுக்கான கடைசி தேதி முடியும் வரையிலும் கூட திமுகவினருக்கும், மற்ற
அரசியல் பார்வையாளர்களுக்கும் கடைசி நிமிடத்தில் மனம் மாறி கலைஞர்
களமிறங்கி விடுவாரோ என்ற எண்ணம் இருந்து கொண்டு தான் இருந்தது.
மக்களைப் பொருத்தவரை திமுகவின் இந்த இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை தவறு என்று சட்டென நிராகரித்துவிட முடியவில்லை. ஏனெனில் அதிலுள்ள நியாயமான காரணத்தினையும் அவர்களால் இலகுவாக கடந்துவிட முடியாது என்ற நிலையிலிருக்கின்றார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திமுக களத்தில் இல்லாதது கூட அவர்களுக்கு ஒரு வித நிம்மதியைத் தந்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.
காரணம் ஆளும் அரசு தங்கள் தொகுதிக்கு இந்த குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கும் சில உட்கட்டமைப்பு வசதிகளும், செய்யவிருக்கின்ற சில மேற்படி விஷயங்களும், ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த முதல்வரிடமிருந்து அடுத்த மூன்றரை ஆண்டுகளும் எதாவது நல்லது கெட்டதுகளை செய்து கொள்ள இயலும் என்று புரிந்து வைத்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக இது ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வந்திடாது என்ற புரிதலும்.... ஆகிய காரணிகளால் திமுகவின் முகத்தில் கரி பூசும் தர்மசங்கடம் இல்லாமல் போனதே என்ற குற்ற உணர்வில்லாத மனநிலையோடு இருப்பதும் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் அரசியல் விமர்சகர்களும், திமுகவின் எதிராளிகளும் கலைஞரின் இந்த முடிவு, திமுக தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் மாதிரியானது என்று கேலி பேசுகின்றார்கள். தேமுதிகவின் வளர்ச்சிக்கு கலைஞரே பாதை அமைத்துத் தந்துவிட்டார் என்றும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், புதுக்கோட்டை தொகுதி திமுகவினர் எல்லாம் அதிமுகவுக்கு எதிரான தங்கள் மனநிலையை வெளிப்படுத்த தேமுதிகவுக்கு வாக்களிப்பதன் மூலம், அக்கட்சிக்கு கிடைக்கும் வளர்ச்சியை அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கான மாற்றுக் கட்சி என்ற அந்தஸ்த்திற்கு கொண்டுவந்துவிடும் உத்தியை, ஆரிய ஊடகங்கள் கச்சிதமாக செய்து முடிக்கும் என்றும் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள்!
மேலோட்டமாக பார்க்கும் பொழுது இந்த மாதிரியான பேச்சுக்கள் நடைமுறை சாத்தியக்கூறுகள் உள்ளவை தான் என்று நம்மை நம்ப வைத்தாலும், இவ்விஷயத்தில் கலைஞரின் கணக்கு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக 1967 இல் காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட பிறகு, 1991 தேர்தல் வரையிலும் அக்கட்சிக்கு சராசரியாக 15 சதவிகித வாக்குகள் இருந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. இந்த காலகட்டத்தில், தலா முப்பதிலிருந்து முப்பத்தைந்து சதவிகிதம் வரை வாக்கு வங்கியை வைத்திருக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய எந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும் அக்கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்பது தான் இங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது.
அதன் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் கணிசமான வாக்கு வங்கிகளைக் கொண்ட பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற ஜாதிக் கட்சிகளின் வளர்ச்சியும், ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் எடுத்த தவறான நிலைப்பாடும், வெற்றிக் கோட்டைத் தாண்டி தங்கள் கூட்டணிக் கட்சியை கொண்டு செல்லும் காங்கிரஸின் அந்த வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவிப் போக வைத்தது தான் மிச்சம்.
இந்த நிலையில், காங்கிரஸ் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தில் வாகாய் வந்து அமர்ந்து கொண்டது தான் தேமுதிகவின் தற்பொழுதைய பலம். தமிழகம் தழுவிய அளவில் சராசரியாக பத்திலிருந்து பன்னிரெண்டு சதவிகித வாக்கு வங்கியினை சேர்த்திருக்கும் அக்கட்சி, இனி யாருடன் கூட்டணி அமைக்குமோ அது தான் ஆளும் கட்சி என்ற நிலைமைக்கு வந்திருப்பதற்கு, கடந்த தேர்தலே ஒரு சிறந்த உதாரணம்.

1991 தேர்தலில் முதன் முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியைப் பிடித்ததற்கு, ராஜீவ் காந்தியின் மரணத்தால் வந்த அனுதாப அலை தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனாலும் அதை சட்டமன்றத்திலேயே மறுத்துப் பேசிய தற்பொழுதைய முதல்வர், விஜயகாந்த்தின் தேமுதிக தான் இந்த முறை தான் ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கான காரணம் என்பதை மனதார ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்க இயலுமா.....?
இயலாது தான். ஆனாலும் தேர்தல் என்று வருகின்ற போது, அதில் வெற்றியடைய வேண்டும் என்பது தலையாய பிரச்சினையாக உருவெடுக்கின்ற போது இந்தப் பக்கம் சிலரும், அந்தப்பக்கம் சிலருமாக கண்ணை மூடிக் கொண்டு கசப்பு மருந்தை உட்கொள்வது போல சகித்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவுடன் அந்த வலியெல்லாம் மறந்து போகும் என்று மகுடி ஊதி, மீண்டும் அந்தக் கூட்டணி அமைந்து விட்டால்?
அதிமுக - தேமுதிக என்ற அந்த வெற்றிக் கூட்டணி தானே வெல்லும்? 35 + 12 +சில உதிரிக் கட்சிகளைச் சேர்த்தால் போதும் 50+ வாக்குகள் வாங்கி எளிதில் வென்றுவிடலாமே?!
மீண்டும் 30+ சதவிகித வாக்கு வங்கியினைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக திமுக விளங்கினாலும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட வர இயலாமல் மண்ணைக் கவ்வும் சோகம் தானே திமுகவுக்கு ஏற்படும்?
இந்த மனக்கணக்கைத்தான் கலைஞர் நிதானமாக போட்டுப் பார்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்ற முடிவை அறிவித்திருக்க வேண்டும்.

சரி அந்த மனக்கணக்கு கூட ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் அதற்கும், புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கும் என்ன சம்பந்தம்? அதனால் திமுகவுக்கு என்ன லாபம்?
நல்ல கேள்வி. இப்பொழுது இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தேமுதிகவின் ஒரே குறி அதிமுக தான். இத்தேர்தலில் வென்றால் தமிழகத்தில் ஆட்சியையே பிடித்த மாதிரியான ஒரு நிலை உருவாகும். இப்படியொரு வாய்ப்பை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா? சுற்றிச்சுழல ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மிக அதிக பட்சமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.......
அதிமுகவினரோ, இவர்களை பத்து சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் வாங்க அனுமதித்தால் அது தங்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் ஊழியர் கூட்ட செய்திகளும் அவ்வாறே வெளிப்படையாக அறிவிக்கின்றன. சாதாரணமாகவே விஜயகாந்தின் டிமாண்ட் (தேர்தல் இடப்பங்கீட்டில்) அதிகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் 15 சதத்திற்கு மேல் வாக்குகளை அள்ள அவரை அனுமதித்தால் அடுத்த தேர்தல் இடப்பங்கீட்டில் அவரது டிமாண்ட் மிக அதிகமானதாக இருக்கும்.
அப்படியொரு நிலை உருவானால் அதற்கு அதிமுகவும் சம்மதித்தால் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து போய் விடும். அப்படியொரு நிலையை ஜெயலலிதாவால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆகையால் இந்த இடைத்தேர்தலோடு விஜயகாந்த்தின் தேமுதிகவை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற மன நிலையோடு தான் அதிமுக களப்பணிகளைச் செய்ய முற்படும். அப்படித்தான் அங்கு செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.
ஆகையால் இந்த இடைத்தேர்தல் முடியும் போது அதிமுகவும் தேமுதிகவும் இனி எப்பொழுதும் கூட்டணி அமைக்க இயலாத அளவிற்கு எதிரிக் கட்சிகளாக மாறிப் போயிருக்கும்! தேமுதிக ஒரு வேளை டெபாசிட் வாங்காவிட்டால், அதிமுகவினர் பேசிப் பேசியே அவர்களை குத்திக் குதறியெடுத்து விடுவார்கள்.
ஒருவேளை தேமுதிக 15 சதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால், அவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பொறுக்க இயலாமல், ஜெயலலிதா அக்கட்சியை சிதறடிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதோடு, எதிர்காலத்தில் அக்கட்சியோடு கூட்டணி என்ற சமரசத்திற்கு வரும் வாய்ப்பும் அடியோடு தகர்ந்து போகும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விரு கட்சிகளின் தொண்டர்களும் எதிர் காலத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். அப்படியே ஒரு சிலரின் சீரிய முயற்சியினால் அக்கூட்டணி அடுத்த தேர்தலில் அமைந்தாலும், "கூடா நட்பு கேடாய் விளையும்" என்று தான் விளைவுகள் இருக்கும்.
ஆக புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற கலைஞரின் முடிவு, ஆகச் சிறந்த ராஜ தந்திரத்தின் வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!!!