முன்னெல்லாம் ஈபி லேருந்து ஒரு லைன் மேன் வந்தா கூட கம்பெனிகாரங்க ரொம்ப பதறுவாங்க. உடனே எல்லா கம்பெனிகளும் தப்பு பண்ணுறதால பயப்படறதா நினைக்க வேண்டாம். அதுக்கு காரணம் பலவாறா இருக்கும்.
முக்கியமான காரணம், மிஷினெல்லாம் பிஸியா ஓடிட்டிருக்கறப்ப மரத்துல (தந்தி கம்பம்) ஃப்யூஸ் போச்சுன்னா, உடனே வந்து சரி பண்ணி அரை மணி நேரத்தில் மிஷினை எல்லாம் ஓட வைக்கனுமே?!..... அதான்!!
லைன் மேனிடம் கொஞ்சம் அலட்சியமா நடந்துக்கிட்டாலும் சரி, ஒழுங்கா கேட்ட காசை தரலன்னாலும் சரி, ஃப்யூஸ் போச்சுன்னா அன்னிக்கு சாயங்காலமா கம்பெனிய கட்டுற நேரத்துல தான் வந்து சரி பண்ணுவான். ஒரு நாள் வேலையும் நின்று, தொழிலாளர் சம்பளமெல்லாம் தண்டமாய்ப் போகும்.
அடுத்ததா, புது மிஷின் வாங்கும் போது அடிஷனல் லோடு (HP) வாங்கனும்ன்னா லைன் மேன், ஜே ஈ, ஏ ஈ ன்னு எல்லாரோட தயவும் வேண்டியிருக்கும். ஏன்னா, ஈபி ல அவ்ளோ சட்ட திட்டம் வச்சிருப்பாங்க. என்ன காரணத்துக்காகவோ வெள்ளைக்காரன் போட்டு வச்ச சட்டத்தையெல்லாம் இன்னமும் கட்டி அழுகிறார்கள்.
இந்த கெடுபிடி சிக்கல் சட்டங்களால் யாருக்கு நன்மையோ இல்லையோ, அதிகாரிகளுக்கு கொள்ளை லாபம்!
இன்னும் பல சின்னச்சின்ன காரணங்களுக்காகத் தான் ஈபி ஆட்களை பகைத்துக் கொள்ள எந்த கம்பெனிக்காரனும் முன்வருவதில்லை. ஆனால் வாங்கிய லோடுக்கு அதிகமாக மோட்டார் வைத்து ஓட்டுபவர்கள் இந்த மாதிரியெல்லாம் பயப்படுவதில்லை. அவர்கள் சில விஷயங்களை சரிக்கட்டி விடுவதால் அவர்களுக்கு எந்த வேலை என்றாலும் ஜரூராக நடந்துவிடும்.
.....ஆனா இப்ப சொன்னதெல்லாம் பழைய கதை. இப்பல்லாம், ஈபி காரங்களுக்கான அந்த ராஜ மரியாதை எல்லாம் கொஞ்சமும் கிடையாது. சொல்லப்போனா மரியாதையே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் இந்த கம்பெனிக் காரர்கள்.
ஏன்னா? கொஞ்சம் கூட வரைமுறை இல்லாமல் கரண்ட் கட் ஆவது தான் எல்லாவற்றுக்கும் காரணம். கரண்ட் எப்ப வரும்? எப்ப போகும்? ன்னே தெரிய மாட்டேங்குது. ஈபி ஆஃபீஸ்ல கேட்டாலும் அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. இப்புடி இருந்தா எப்படி மதிப்பார்கள்?!
ஏற்கனவே வேலை நேரத்துல 5 மணி நேரம் கரண்ட்டை நிப்பாட்டிடுறாங்க, இதுல ஃப்யூஸ் போயி, அவிங்க லேட்டா வந்தா கம்பெனிக்காரங்க குதறி எடுத்துடுறாய்ங்க. அவ்ளோ மோசமா போச்சு இந்த ஈபி காரங்களோட பொழப்பு.
அதோட இப்பல்லாம், கம்பெனிக் காரங்க அதிகமா கரண்ட்டை பயன்படுத்தாம இருக்கறதுக்கு, புதுசு புதுசா ஐடியா செஞ்சி சேமிக்கிறாங்க. கரண்ட் போயி திரும்ப வந்துச்சின்னா, மூனுல ஒரு ஃபேஸ்ல கரண்ட் வராது இல்லன்னா ரொம்ப லோ வோல்ட்டேஜா வரும். லைட்டெல்லாம் எரியும். பொது மக்களுக்கு பாதிப்பு பெருசா தெரியாது. ஆனால் கம்பெனில மிஷின் எல்லாம் ஓட்ட முடியாது.
உடனே ஃபோன் பண்ணினா, கரண்ட்டு போய்ட்டு வந்ததுல ஒரு ஃபேஸ்ல ப்ராப்ளமா இருக்கு அதுக்கு தான் வேலை செஞ்சிட்டிருக்காங்க இன்னும் அரை மணி நேரத்துல சரியாயிடும்பாங்க. அது மாதிரியே அரை மணி நேரம் கழிச்சி ஒழுங்கா வரும்.
இந்த விளையாட்டு அலுத்துப் போச்சோ என்னவோ(?!) இப்பல்லாம் வேற மாதிரி விளையாடுறாங்க. கரண்ட் வந்து மிஷின போடப் போனா திடீர்னு நிக்கும். அஞ்சு நிமிஷத்துக்கெல்லாம் திரும்ப கரண்டு வந்தோடுன, மிஷின போடப் போகும் போது கரெக்ட்டா நின்னுடும். இதே மாதிரியே ஒரு பத்து தடவையாவது செய்வாங்க. இதுல ஒரு மணி நேரம் அவங்களுக்கு கரண்ட்டு மிச்சமாகும்!
ஃபோன் பண்ணி எந்த அதிகாரிக்கிட்ட கேட்டாலும், தனக்கு மேல உள்ளவர கை காட்டி விட்டு அமைதியாகிவிடுவார்...!!
என்னென்ன மாதிரியெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடிச்சி விளையாடுறாங்கய்யா இந்த் ஈபி காரங்க. இதெல்லாம் கவருமெண்ட்டு இவிங்களுக்கு சொல்லித்தருமா? இல்லன்னா இவிங்களே கவருமெண்ட்டுக்கு ஐடியா கொடுத்து நல்ல பேரு வாங்குறாங்களான்னே தெரிய மாட்டேங்குது.
ஆனா ஒன்னு... இவிங்க இப்படி பண்றதால் ஒரே ஒரு லாபம் தான் கம்பெனிகாரங்களுக்கு....... தீபாவளி, பொங்கல், பண்டிகைன்னு வந்தால் இந்த ஆளுங்க எவனும் தலைய சொறிஞ்சிக்கிட்டு வந்து நிக்கிறதே இல்ல!!!!! அப்படி நின்னா கண்டமேனிக்கு @##$$%%%^ தெரியாதா அவிங்களுக்கு !!!!!!!

No comments:
Post a Comment