2011 ஆம் வருடம், பிப்ரவரி 17 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் இலவசத் திட்டங்களைப் பற்றித் தொடர் அலசலை இரண்டு பாகங்களாக, கீழ்கண்ட தலைப்புகளில் பதிவிட்டேன்.
1. இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகளும் இருப்பார்களா? [பாகம் 1], 2. இலவச திட்டங்கள் ஒரு பார்வை (பாகம் 2).
இதன் தொடர்ச்சியான மூன்றாம் பாகத்தை இப்பொழுது படிக்கும் முன், முனிரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள், அவற்றையும் படித்துவிட்டு வந்தால் வசதியாக இருக்கும்.முதல் பாகத்தில் சில சந்தேகங்கள்/கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காணும் நோக்கில் இந்த அலசலை கொண்டு செல்லலாம் என்று திட்டம். அதில் பாதி கேள்விகள் அல்லது சந்தேகங்களைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். மீதமிருப்பதை இங்கு விவாதிப்போம்.
இந்த இலவச/மக்கள் நலத்திட்டங்களால், அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன? - கொடுத்த விலை என்ன? இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இது தான் நமது அடுத்த கேள்வி.
இந்த கேள்விக்கு 2008 பாராளுமன்ற தேர்தலில் நமது அரசியல்வாதிகள் நிகழ்த்திக் காட்டிய ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதும், விடை தானாக கிடைத்துவிடும்! அந்த தேர்தல் பிரச்சாரங்களில், 'நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 80 ரூபாயாக இருக்கும் நூறு நாள் வேலை திட்ட சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்துவோம்' என்று ஆளுங்கட்சியினர் உறுதியளித்திருந்தனர்.
அதேப்போல் ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அத்திட்டத்தின் சம்பளத்தை 100 ரூபாயாக உயர்த்தியும் அறிவித்து விட்டார்கள். ஆனால் அதே நாளில் வந்த மற்றொரு அரசு அறிவிப்பு தான் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக அமைந்தது. அதாவது 'இனி பெட்ரோல், சமையல் எரிவாயு விலைகள் சர்வதேச கச்சா எண்ணை விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல மாதம் இருமுறை மாற்றி அமைக்கப்படும்' என்பது தான் அந்த அறிவிப்பு.
அதிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான விலையேற்றத்தை, தனது அன்றாட வாழ்வில தவறாமல் தினமும் பெட்ரோலை உபயோகப்படுத்தும் நடுத்தரப் பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தான் பெறுமளவில் சுமந்து கொண்டிருக்கிறான். "இவர்களின் 65 சதவிகித சுமை அவர்களின் 20 ரூபாய் ஊதிய உயர்வாக.. இந்த ஆட்சியாளர்களின் சாதனையாக பரைசாற்றிக் கொள்ளப்படுகிறது" இதையே நடுத்தர வர்கத்தினரின் வாய்ஸாக சொல்ல வேண்டுமானால் "We are tax payer, they are benefit enjoyers" என்று தான் கூறவேண்டும்!!!
இதுவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் தான் வருகிறது. அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிக்கூடங்கள், சாலைகள், மேம்பாலங்கள், மின்சார உற்பத்தி திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், ...இப்படியாக இன்னபிற அனைத்து அரசு சம்பந்தப்பட்ட, ஒரு அரசாங்கம் என்பது செய்யவேண்டிய அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் முழுவதுமே, இன்றைய நிலையில் துறுப்பிடித்து, அவலமான நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
பணக்காரர்களாகவும் இல்லாத, அதேசமயம் தகுதியற்றவைகளை சமாதானம் செய்து கொண்டு வாழ இயலாத..., அரசாங்கம் போடும் அனைத்து வரிகளையும் க்யூவில் நின்று கட்டும் அப்பாவி நடுத்தர மக்கள், அரசாங்கத்திடம் இலவசத் திட்டங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக மேற்கூறிய அவசியத் தேவைகள் அல்லது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, தாங்களும் நிறைவாக அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பதில் என்ன தவறிருக்கிறது?
இந்த விஷயத்தில் நம்முடைய இன்னுமொரு கேள்வி, அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பதுதான்.
கண்டிப்பாக இது தவறான போக்குதான் என்பது என் அபிப்பிராயம். சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சாராரை கைதூக்கி விடுவதில் எந்த சிறு தவறும் இல்லை. அதற்காக தன் கையிலுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், குறிப்பிட்ட காலத்திற்கு அம்மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் கூட தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் ஓட்டரசியலுக்காக இதுவும் காலம் கடந்தும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட இன்னொரு சாரார் ஜீரணிக்கப் பழகிக் கொண்டுவிட்டனர்.
ஆனால் அதன் தொடர்ச்சியான, பரவாயில்லை, கொடுக்கலாமே என்று நினைத்த இலவசத் திட்டங்களில் ஆரம்பித்து, அதன் பரிணாம வளர்ச்சியாக இலவச டீ.வி, ஒரு ரூபாய் அரிசி வரை வந்துவிட்ட நிலையில்... இனி அடுத்தடுத்து அறிவிக்கப் படவிருக்கும் இலவசத் திட்டங்கள் அனைத்திற்குமே.. இன்னொரு சாரார் முட்டி தேய, முதுகு கூன்விழும் அளவிற்கு உழைக்கும் ஒரு நவீன அடிமைத்தனமான போராட்ட வாழ்வை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகிவிடும் ஆபத்திருக்கிறது.
ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், மிச்சமிருக்கும்(!) பணத்தில் வேண்டுமானால் அரசாங்கம் இந்த இலவச திட்டங்களை செயல்படுத்தலாம். அதை விடுத்து அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, இந்த மாதிரியான இலவசத் திட்டங்களுக்கு செலவிட்டால், ஒரு "சமச்சீரற்ற சமூக அமைப்பு" (Social imbalance) நாட்டில் உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது! இது மதத்தீவிரவாதம், வெளிநாட்டுத் தீவிரவாதம் இவற்றையெல்லாம் விட மிகவும் ஆபத்தானது. இதை உடனடியாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமது சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களுமே, சாலை வரிகளை கட்டிவிட்டுத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு சாலைகளில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் டாடா வின் 'சின்ன யானை' என்ற வாகனத்திற்காக, அதன் உரிமையாளர்கள் செலுத்திய ஆயுள் சாலைவரியை மட்டுமே வைத்துக் கொண்டு, சராசரியாக 4000 கி.மீ. சாலைகளை தமிழ் நாட்டில் பக்காவாக போட்டிருக்கலாம். சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மற்ற வகை வாகனங்கள் கட்டியிருக்கும் வரியினைக்கொண்டு, அந்த நாலாயிரம் கிலோ மீட்டருக்கும், மேலே கூறையே போட்டிருக்கலாம் போலிருக்கிறது!!!
இந்தப் பணமெல்லாம் எங்கே போனது என்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து மக்கள் கேட்க ஆரம்பித்தால்...?, மகாத்மா காந்தியைப் போல் வரிகொடா இயக்கம் ஆரம்பித்தால்...? அரசாங்கத்தின் நிலை என்ன???!!
இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?
இந்த இலவச திட்டங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய அளவுக்கதிகமான விற்பனை வரி, (அதிலும் கடைசி உபயோகிப்பாளர் வரை), சேவை வரி, வருமான வரி, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, சுங்க வரி, கலால் வரி,.... இப்படி நடுத்தர வர்கத்தினரின் முதுகில் வரிவரியாக கோடு போட்டுக் கொண்டே சென்றால், "எங்கே சுற்றினாலும் ரங்கனைத் தான் சேவிக்க வேண்டும்" என்பது போல், கடைசியாக தாங்கமுடியாத அளவிற்கான விலைவாசி ஏற்றத்தில் தான் கொண்டுவிடும் என்பதை அனைத்து ஆட்சியாளர்களும், ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும். அடுத்து, மாவட்டவாரியாக நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய உற்பத்தி தொழில் திட்டங்களை உருவாக்கி, மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வேளாண்மை மற்றும் பண்ணைத் தொழிலுக்கு வாய்ப்பிருக்கும் பகுதிகளில், முற்றிலும் நவீன முறைகளை அரசாங்கம் பயிற்றுவித்து, அதற்கு தேவையான அனைத்தும், விதை முதற்கொண்டு, உபகரணங்கள் வரை அனைத்தையுமே ஒரு பொதுநல அமைப்பை ஏற்படுத்தி, முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து, விளை பொருட்களை அரசாங்கமே, விவசாயிகளுக்கான உடல் உழைப்பிற்கான சம்பளம், விளை நிலத்திற்கான வாடகை, அதற்கு மேல் ஒரு நல்ல லாபம் என்று சேர்த்து விலையாக நிர்ணயம் செய்து வாங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இலவசம் என்பது, விவசாயத்திற்கு மட்டுமே, அதுவும் இதேப் போன்று நெறிப்படுத்தப்பட்ட வகையில் மட்டுமே என்று இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது இலவசமாக இருக்காது. மாறாக அதுவே லாபமாகவும், இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய காரணியாகவும் கண்டிப்பாக அமையும்.
இதெல்லாம் நடக்குமா? சாத்தியமா? அரசியல் சாக்கடையாகி விட்டதே? என்றெல்லாம் 'என்னத்த கண்ணையா' போல அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல், இதையெல்லாம் செயலாக்க என்னென்ன செய்யலாம் என்பதை... இன்னும் பலர் கூடி விவாதிக்கலாமே?!
தி.மு.க. கரையேறுமா? என்று தலைப்பில் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் போனால் இது நிறைவடையாது. நான் இருக்கும் நாகை மாவட்டத்தில் சுமார் 27 கிராமங்களைச் சேர்ந்த 212 கூலி வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பேசிய பொழுது தெரிந்து கொண்டது இது தான். "இலவசங்கள் எல்லாம் சரிதான், இனிமே யார் வந்தாலும் அத கொடுத்துதான் ஆகணும், அதனால் அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் கலைஞர் விலைவாசியை கண்ணாபின்னான்னு ஏத்திட்டார், அம்மாதான் அதிகாரிகளை அடித்து உதைத்து விலையை குறைப்பார்" என்று ஒரு பகீர் கருத்தை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள்.
ஆகவே, அவர்களிடம் பேசிய வகையில் எனது புரிதலின் படி கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு தி.மு.க. கரையேறினால் தான் உண்டு!
Showing posts with label இலவசம். Show all posts

Friday, July 15, 2011
Thursday, July 14, 2011
இலவச திட்டங்கள் ஒரு ஆய்வு (பாகம் 2)
2011 ஆம் வருடம், பிப்ரவரி 15 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!
சென்ற வாரம் "இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் தான் இந்த பதிவு. அதை படிக்காதவர்கள் இங்கு சென்று அதைப் படித்து விட்டு இக் கட்டுரையை வாசிக்கத் தொடங்கவும்.
முதல் பாகத்தை பல சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியாக அடுத்தடுத்த பாகங்கள் அமையும் என்று முடித்திருந்தேன். அது ஒவ்வொன்றாக இப்பொழுது பார்க்கலாம்.
முதல் மற்றும் முக்கியமான கேள்வியே, இந்த இலவச திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா? இல்லையா?
கண்டிப்பாக தேவையில்லை என்பது தான் எனது வாதம். எனக்குத் தெரிந்து முதல் இலவசத் திட்டம் என்றால், காமராஜர் காலத்தில் அவரால் கொண்டுவரப்பட்ட இலவச மதிய உணவு திட்டம் தான். அது ஏழை சிறுவர்களுக்கு ஒரு வேளை பசிப் பிணியை களைவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமன்று. ஏழைச் சிறுவர்கள் கல்வியறிவு பெற்று முன்னேற, அவர்கள் கல்விச் சாலைகளுக்கு செல்வதற்கு தடையாக இருந்த பசி என்ற தடைக் கல்லை தகர்த்தெறிய கொண்டுவரப்பட்ட திட்டம் அது!
அதாவது கல்வி அறிவில்லாத, சாதி, மதங்களைக் கடந்த ஒரு மிகப் பெரிய சமுதாயம் கரை சேருவதற்கு மிகப்பெரிய கப்பலோ, உல்லாசப் படகோ தேவையில்லை, ஒரு மரக்கட்டையே போதுமானது என்பதை உணர்ந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அது.
ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் ஓட்டரசியலுக்காக அந்த திட்டம் பல பரிமாணங்களைக் கடந்து இன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சத்துணவு அமைப்பாளர்கள் 'வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தவர்கள்' பட்டியலில் வழக்குத் தொடுக்க தகுதி வாய்ந்தவர்களாக மாறியிருப்பது தான் இந்த திட்டத்தின் பலன்!
இன்றைய தேதியில் இந்த சத்துணவு திட்டத்தை நிறுத்தினால், கல்விச் சாலைகளுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து விடுமா என்பதை ஒரு ஐந்து ஆண்டுகள் இத் திட்டத்தை நிறுத்தி வைத்து பரீட்சித்துப் பார்த்தால் என்ன? அதனால் மிச்சமாகும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு, அனைத்து அரசுப் பள்ளிகளையும் அல்ட்ரா மாடர்ன் (ஹை..! ரைமிங்கா வருதுல்ல?) பள்ளிகளாக தரம் உயர்த்தி விடலாமே?! நல்ல சூழலுடன் கூடிய அழகிய கல்விக் கூடங்கள் என்றால், எந்த குழந்தை தான் பள்ளிச் செல்ல தயங்கும்?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் முதல் பாகத்தில் பட்டியலிட்ட அனைத்து இலவச திட்டங்களையும் இதேப் போன்ற நிலைகளில் பொருத்திப் பார்த்து, நல்லதொரு தீர்வினைக் கண்டுவிடலாமே? இதை அப்படியே பிடித்துக் கொண்டு தொடர்ந்து சென்றால் கடைசியில் டாஸ்மாக் வருமானம் தமிழகத்துக்கு தேவையில்லை என்ற நிலைமை வந்துவிடும்!
நாம் நமது அடுத்த கேள்வியான, இந்த இலவச திட்டங்கள் மக்களை முழுமையாகவும், சரியாகவும், சரியானவர்களுக்கும் சென்றடைகிறதா? என்பதைப் பார்ப்போம்.
மத்திய அரசின் 'ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்" என்ற ஒரு திட்டம். 'நூறு நாள் வேலை' திட்டம்னு கிராமத்து மக்கள்ட்ட ரொம்ப பிரபலம். இந்தியாவில் வேலை வாய்ப்பிற்கே வழியின்றி, வருமானம் இல்லாமல், உணவுக்கே பிறரிடம் கையேந்தும் நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் அரசாங்கமே, வேலை வாய்ப்பினை (ஏரி, குளம் தூர் வாருதல், வாய்க்கால் வெட்டுதல்,... இப்படியாக) அம்மக்களுக்காக உருவாக்கி வருடத்திற்கு குறைந்த பட்சம் நூறு நாட்களாவது அம்மக்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்து, தினம் ரூ. 100/= கூலி தருகிறார்கள் (ரூ. 80/= என்றிருந்தது, நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் நூறு ரூபாயாக உயர்த்தப் பட்டுவிட்டது).
முதலில் இத்திட்டம் முழுமையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்றால், கண்டிப்பாக இல்லை என்பது தான் எனது பதில். இதில் நேரடியான கொள்ளை என்றால் பயனாளிகளுக்கு ரூபாய் அறுபது முதல் ரூபாய் 80 வரை தான் கொடுக்கப் படுகிறது. இதனால் இத் திட்டம் ஆரம்பித்து விட்டாலே எங்கு பார்த்தாலும் சாலை மறியல் தான்! இதில் மறைமுக கொள்ளை என்றால் ஒரு பஞ்சாயத்தில் 70 நபர்கள் இந்த வேளைக்கு வருகிறார்கள் என்றால், இருபது, முப்பது பேரை அதிகப்படுத்தி பில் பண்ணிவிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆக இத்திட்டம் முழுமையாக மக்களுக்குச் சென்று பலனளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் விதத்தில், இதன் பலன்கள் சரியானவர்களுக்கு, சரியாகச் சென்றடைகிறதா? என்றால் அதற்கும் 'நோ' தான் பதில். வேலை வாய்ப்பு அறவே இல்லாத பகுதிக்கான திட்டமாக அறிவிக்கப் பட்ட இத்திட்டத்தை, நடவு காலத்திலும், அறுவடை காலத்திலும் செயல் படுத்த வேண்டாம் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு இருக்கிறதென்றால், இத் திட்டம் சரியானவர்களுக்குப் போய்ச் சேருகிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். மற்ற இலவச/மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துமே, கிட்டத்தட்ட இதே நிலையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இதற்கு மேலும் விளக்கத் தேவையில்லை என்று தான் நினைக்கிறேன்.
அடுத்ததாக நாம் அலசப் போவது, இந்த இலவச திட்டங்களை தனதாக்கிக் கொள்வதில் மக்கள் எந்த அளவிற்கு, நேர்மையுடனும், மனசாட்சிப்படியும் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிலைப் பற்றித்தான்.
இதற்கும் மேற்கூறிய திட்டத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மக்கள் தங்கள் பகுதியிலேயே வேலை வாய்ப்பு இருக்கும் பொழுது, மேலும் இத்திட்டதில் கிடைக்கும் ஊதியத்தை விட கூடுதலாக ஊதியம் கிடைக்கும் வேலையை நிராகரித்து விட்டு இந்த நூறு நாள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? வெறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் 20 சதவிகித உடல் உழைப்பிலேயே ஒரு கூலி கிடைக்கும் போது, அதிக கூலி கிடைத்தாலும் முழுநேரமும் (8 மணி நேரம்) உழைக்கும் வேலைக்குச் செல்ல மக்கள் தயாராயில்லை என்பதையே காட்டுகிறது.
இலவச ஒத்தை லைட் திட்டத்தில், தன் வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு சிறு ஆட்டுக் கொட்டகை அமைத்து, அதற்கு இலவச மின்சாரம் பெற்று, தங்கள் வீட்டிற்கு கனெக்ஷன் (டீ.வி, லைட், ஃபேன், கிரைண்டர்...) எடுத்துக் கொள்ளும் பயனாளிகள் இல்லவே இல்லை என்று மின்வாரிய அதிகாரிகளையோ, பொதுமக்களையோ நெஞ்சில் கைவைத்துச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?!
இவை எல்லாமே சிறு உதாரணங்கள் தான். அனைத்து இலவசத் திட்டங்களுக்குமே, இவற்றை எல்லாம் பட்டியலிட்டு விளக்கினால்... மிகுந்த ஆயாசமாகிவிடும். ஒருவித விரக்தி நிலைக்கு இதைப் படிப்பவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள். அதனால் தான் ஒவ்வொரு கேள்விக்கான விளக்கத்திற்கும் ஓரிரு உதாரணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆகவே சென்ற பாகத்தில் எழுப்பப்பட்ட மீதமிருக்கும் சந்தேகங்கள் அல்லது கீழ்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் விரிவாக அலசி ஆராய்வேம்.
//இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?//
நண்பர்களே, நடுத்தர பிரிவைச் சார்ந்த ஒரு சராசரி இந்திய குடிமகனின் பார்வையிலிருந்து, அரசாங்கத்தின் இந்த இலவச திட்டங்கள் பற்றிய எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு தங்கள் பார்வையில் இருந்து எதிர்மறை கருத்துக்களோ, விளக்கங்களோ, சந்தேகங்களோ..., எதுவாயினும் என் அறிவு நிலையிலிருந்து பதில் கூற முயலுகிறேன். இயலாத பட்சத்தில், தங்கள் கருத்தை எற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

இலவசங்கள் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்களா?? [பாகம் 1]
2011 ஆம் வருடம், பிப்ரவரி 10 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!
சில தினங்களுக்கு முன் நமது தமிழக முதல்வர் கருணாநிதி பொதுமக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது சம்பந்தமாக, சமீப காலத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் அல்லது விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவு படுத்தியிருந்தார். அவர் சொன்னது இது தான், "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!".
மிகவும் ஆணித்தரமாக தனது கருத்தை கூறியிருந்தார் கருணாநிதி. நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்களில் அனேகம் பேர், இரண்டுக்கும் மேற்பட்டோர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலோ, அலுவலகங்களிலோ, பொது இடத்திலோ, ஏன் நம் இணைய தளங்களில் கூட கூடிப் பேச முற்பட்டால், தமிழக அரசு தரும் இலவச திட்டங்களுக்கு எதிரான தங்களது விமர்சனங்களை பதிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த இலவச திட்டங்கள் நல்லதுக்கா என்று கேள்விப் பொருளாக பேசப்பட்டு வந்த இந்த விவாதம், சமீப காலமாக இது முற்றிலும் தவறானது என்ற ரீதியில் தமிழக அரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான கடும் விமர்சனங்களை வைக்கும் அளவிற்கு வலுவடைந்திருக்கிறது.
இவர்கள் இப்படிப் பேசும் அளவிற்கு அந்த இலவச திட்டங்களால் ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? அதேசமயம் இவர்களின் இந்த விமர்சனங்களுக்கு முற்றிலும் எதிரான தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு, அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் கருணாநிதிக்கு எப்படி துணிச்சல் வந்தது? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியில் சர்க்கரை குறைவாக இருந்தால் கூட கருணாநிதியை கண்டித்து அறிக்கை விடும் ஜெயலலிதா உட்பட எந்த எதிர்க்கட்சி தலைவர்களும், கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' வந்தவர்கள் போல் செயல்படுவதற்கும் என்ன காரணங்கள் என்பது தான் புதிராக இருக்கிறது.
நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வ்ர்க்கம் என்பது (இனி நடுத்தர வர்க்கம் என்றே அழைக்கலாம்) இன்றுள்ள இந்திய சமூக அமைப்பில் தவிர்கப்பட முடியாத ஒரு பெறும் கூட்டம். இவர்களைத் தவிர்த்து விட்டு எந்த அரசாங்கமும் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் சாத்தியப்படுத்திவிட முடியாது. இவர்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர். இவர்கள் தான் தாங்கள் சம்பாதிக்கும் கடைசி ரூபாய் வரைக்கும் ஏமாற்றாமல் வரிகட்டுகிறவர்கள், மனிதவளம் மூலம் மிகப்பெறும் அன்னியச் செலாவணி வரத்திற்கு வழி செய்பவர்கள். இவர்கள் மூளையையும் உழைப்பையும் நம்பித்தான் பெறுவாரியான சர்வதேச நிறுவனங்கள் இங்கு கடை பரப்பி அரசாங்கத்திற்கு பெறும் வரிவசூல் வருவாயைக் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு கூட்டம் கடுமையாக எதிர்க்கும் ஒரு விஷயத்தை, ஜஸ்ட் லைக் தட் ஒரு முதல்வர் அழுத்தம் திருத்தமாக ஆதரிக்கிறார்... அதைத் தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க் கட்சிகளும் அமைதி காக்கின்றன!
இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்த நடுத்தர வர்க்கத்தினர் அரசின் இலவசங்களை விமர்சிப்பதின் காரணம் என்ன என்பதை அடுத்தடுத்து விரிவாக அலசி ஆரய்வோம். அதற்கு முன் அரசாங்கத்தால் தவிர்க்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத வகையில் ஆளும் கட்சியும், ஆளத்துடிக்கும் கட்சிகளும் நடந்து கொள்வதைப் பார்த்தால், நடப்பு அரசியலில் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நடுத்தர வர்க்கத்தினரின் தேவை என்பது அரசியல் வாதிகளைப் பொருத்தவரைக்கும் அவசியமில்லாததாக தோன்றுகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது!!
நாட்டின் ஒரு பிரிவினரையே எதிர்த்துக் கொண்டு அரசியல்வாதிகள், மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் இலவசங்களை அள்ளி விடுவது ஏன்? அதை நாம் சற்று விரிவாகவே அலசுவோம்.
நடைமுறையில் மாநில அரசு தனியாகவோ அல்லது மத்திய அரசின் நிதி உதவியோடோ செயல் படுத்திக் கொண்டிருக்கும் இலவசத் திட்டங்களின் பட்டியலை முதலில் பார்ப்போம்:
1. ஒரு கிலோ ஒரு ரூபாய் விலையில் ஒரு ரேஷன் கார்டுக்கு (கிராமப் பகுதிகளில் பல குடும்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருக்கின்றன!) மாதம் 20 கிலோ அரிசி.
2. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி. (இதில் 70 க்கும் அதிகமான சதவிகித கார்டுதாரர்கள் ஏற்கனவே டீ.வி வைத்திருந்தும் இதை வாங்கியிருக்கிறார்கள். அதில் பலர் ஒன்றுக்கு மேல் உள்ள டீ.வி யை ரூ. 500/= முதல் ரூ. 1000/= விலை வைத்து விற்றிருக்கிறார்கள்)
3. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப ரேஷன் கார்டுகள் அனைத்திற்கும் இலவச காஸ் அடுப்பு, இலவச காஸ் கனெக்ஷனுடன். ( இதில் 'வறுமைக் கோடு' என்பது முக்கியமான பதம். நம் நடுத்தர வர்க்கம் தங்கள் உண்மையான வருமானத்தை காட்டி விடுவதால், அரசு அறிவிப்புகளில் 'வறுமைக்கோடு' என்று வந்தாலே அவர்களுக்கு பட்டை நாமம் தான்!)
4. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களின் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு ரூபாய் 20,000/= முற்றிலும் இலவசம்.
5. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள கார்டுதாரர்களுக்கு இரண்டு பெண் குழந்தகள் பிறந்தால், அந்தப் பெண்களின் 20 வது வயதில் கல்யாண செலவுக்காக ரூபாய் ஒரு லட்சம் வருவது போல வைப்புத் தொகை பத்திரம் முற்றிலும் இலவசமாக அரசாங்கம் கொடுக்கிறது.
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஏழாம் மாதம் முதல் பிள்ளை பிறந்து மூன்றாம் மாதம் வரையிலும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6000/= முற்றிலும் இலவசம்.
7. அடுத்து "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்". இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வருடத்திற்கு குறைந்தது மூன்று லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது இந்த உதவித் தொகை. இதில் அந்த பயனாளிகலான பெண்களுக்கு மூன்று நாட்கள் அந்த ஊரில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து திட்டம் பற்றி மூன்று நாட்களும் நல் விருந்துடன் கூடிய பயிற்சி அளிக்கப் படுகிறது. சில சமயங்களில் வேன் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றுலா தலங்களுக்கும்(ஊட்டி, கொடைக்கானல் உட்பட) சென்று பயிற்சி பெறுகிறார்கள்! மீதமிருக்கும் தொகையில் அந்தந்த பஞ்சாயத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேற்படிப்பு செலவு, வேலைவாய்ப்பு பயிற்சிகள், இலவச தையல் மெஷின்கள்... இன்ன பிற இத்தியாதிகள் வழங்கப்படுகின்றன.
8. அடுத்ததாக "மகளிர் சுய உதவிக் குழுக்கள்". ஒவ்வொரு கிராமத்திலும் தலா இருபது உறுப்பினர்களைக் கொண்ட குறைந்த பட்சம் பத்து குழுக்களாவது இருக்கும். அதில் ஒவ்வொரு நபருக்கும் பத்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து அவர்கள் கட்டும் நேர்மைக்கேற்ப ஐம்பதாயிரம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் அவர்கள் சுய தொழில் தான் செய்ய வேண்டும். ஆனால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் சொந்த செலவுகளுக்கோ அல்லது வட்டிக்கு விட்டு சம்பாதிக்கவோ தான் பயன் படுத்துகிறார்கள்.
9.கலைஞர் காப்பீட்டுத் திட்டம். இதைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
10. 108 ஆம்புலன்ஸ் திட்டம். குழாயடி சண்டையில் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம் பார்க்கக்கூட இத்திட்டம் பயனுள்ளதாய் இருக்கிறது.
11. அரசு, உள்ளாட்சி, அரசு மானிய்ம் பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும், 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்.
12. அதே தகுதியில் உள்ள அனைத்து வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ்.
13. வாரம் இரண்டு முட்டையுடன் கூடிய இலவச சத்துணவு.
14. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச்சத்து உருண்டைகள்.
15. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச வளைகாப்பு திட்டம்.
16. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் சீறுடைகள்.
17. அனைவருக்குமே நன்கு பரிச்சயமான "கலைஞர் காங்கிரீட் வீடு திட்டம்".
18. கூறை வீடுகளுக்கு இலவச மின்சாரத்துடன் கூடிய ஒத்தை லைட் திட்டம்.
19. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச மின் மோட்டார்.
20. இது எல்லாவற்றுக்கும் மேலாக "நூறு நாள் வேலை திட்டம்". (11.00 மணிக்குப் போய் 2.00 மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவார்கள்)
21. ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதம் ரூ. 500/- பென்ஷன்.
21. அவர்களுக்கு வாரம் 5 கிலோ இலவச அரிசி
22. விதவைப் பெண்கள் பென்ஷன் மாதம் ரூ. 400/- மற்றும் 5 கிலோ இலவச அரிசி.
23. திருமணமாகத பெண்களுக்கான "முதிர் கன்னி உதவித் திட்டம்.
24.வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் நிலமற்றவர்களுக்கு மாதம் 35 கிலோ ஒரு ரூபாய் அரிசி.
மன்னிக்கவும் வாசகர்களே, இந்தப் பட்டியல் இதனுடன் முடியவில்லை. இன்னும் நீண்டு கொண்டே செல்லும். இதைத் தவிர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மட்டுமேயான நலத்திட்டங்கள் தனி! இக் கட்டுரையின் வாசகர்களுக்கான, மேற்கொண்டு படிக்கும் பொழுது புரிதலுக்கான அவசியம் கருதியே இவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இதுவே முழுமை பெறாத பட்டியல் தான்!
ஒரு குவளை தண்ணீர் குடித்து விட்டு, மீண்டுமொருமுறை இக்கட்டுரையை ஆரம்பத்திலிருந்து படித்து வாருங்கள், நாம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும். இத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையா, இல்லையா? மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா, இல்லையா? இதன் பயனாளிகள் எந்த அளவிற்கு மனசாட்சியுனும், நேர்மையுடனும் இதை தனதாக்கிக் கொள்வதில் நடந்து கொள்கிறார்கள்?
இதனால் அப்பாவி நடுத்தர வர்க்கத்தினர் அடைந்த பயன் என்ன - கொடுத்த விலை என்ன? அரசியல்வாதிகள் இந்தப் போக்கை ஊக்கப் படுத்துவது நல்லதா, கெட்டதா?. இதில் ஒரு சாராருக்கு பலன்/லாபம் என்றால், இன்னொரு சாராருக்கு கண்டிப்பாக தீமை/நஷ்டம் தானே? நஷ்டம் என்றால் எந்தெந்த விதத்தில்? இதற்கான தீர்வு தான் என்ன?
இதையெல்லாம் விரிவாக அடுத்தடுத்த பாகங்களில் அலசுவோம்.
திஸ்கி: தேர்தல் நெருங்கும் சமயத்திலாவது, ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது இப்பிரச்சினையைப் பற்றி முழுமையான புரிதலுடன் நாம் விவாதம் நடத்தாவிட்டால், மற்ற நேரத்தில் பேசி என்ன பயன்?

Subscribe to:
Posts (Atom)