வழக்கம் போல பிரபல்யமான படங்களை தட்டாமல் பார்க்கின்ற அஜெண்டாவில் லிங்காவும் வருவதால், 13ஆம் தேதியே அதாவது சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு மனைவியுடன் ஆஜர் ஆகிவிட்டேன்.
மாயவரம் விஜயா தியேட்டர், பால்கனி, ஒரு டிக்கெட் 250 ரூபாய். ரஜினி படம் பொதுவாக திங்கள் கிழமை ரிலீஸ் என்றாலே அந்த வாரத்தில் எந்தக் கிழமை சென்றாலும் திருவிழாக்கூட்டம் தான் இருக்கும். ஆனால் இரவு 9.35க்கே எந்த சிரமமும் இன்றி காரை தியேட்டர் உள்ளே கொண்டு சென்று ஃப்ரீயாக நிறுத்த முடிந்தபோதே, கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போச்சு!
200 பேர் வரை கியூவில் அமைதியாக நின்று டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என் சீட்டுக்கு அடுத்து நான்கு இருக்கைகள் படம் முடியும் வரை காலியாகவே தான் இருந்தது.
இடைவேளை விட்ட பொழுது, சுற்றும் முற்றும் பார்த்ததில், எல்லோருமே பெரிதாக சோம்பல் முறித்தபடியே, தூக்கத்தை விரட்ட ஏதாவது கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாமா என்ற தோரணையில் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.
ரஜினி படம் என்றாலே இருக்கின்ற அந்த விறுவிறுப்பும், ஸ்டைலும், நகைச்சுவையும், இதிலே டோடலாக மிஸ் ஆகியிருந்தது. படம் துவங்கும் போதே, கர்நாடகாவின் சீஃப் மினிஸ்டரிலிருந்து பியூன் வரைக்கும் போட்ட நன்றி கார்டே, ஒரு கன்னட பட ஃபீலிங்கை உருவாக்கிவிட்டிருந்தது. அதே மாதிரியே படமும், அந்தக்காலத்தில் கிழவர்களான பின்பும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, ராஜ்குமார் படங்களைப் போன்றே இருந்தது. ஆனால் தெலுங்கர்கள், கன்னடர்கள் மாதிரி நம் தமிழர்கள் கிடையாது என்பதை இப்பொழுது ரஜினி வகையறாக்கள் புரிந்துகொண்டிருக்கும்.
அந்தக்காலத்தில் இங்கே ரஜினிக்கு எஸ்.பி. முத்துராமன் மாதிரி தெலுங்கில் சிரஞ்சீவிக்கு கோதண்டராம ரெட்டி என்ற இயக்குனர் இருந்தார். இந்தப்படமும் அவரது படம் மாதிரியே இருந்து ஒருவித டப்பிங் சினிமா பார்த்த எஃபக்ட்டை கொடுத்தது தான் கொடுமையின் உச்சம்.
இளமையாகக் காட்ட ரஜியை படுத்தியிருக்கும் பாடு.... முகம் எல்லாம் வீங்கி தொங்குகின்றது... தலைமுடி விக், கேவலத்தின் உச்சம்... ரஜினியின் மனசு அவர் குடும்பத்தினரைப் பார்த்து விடுங்கடா பாவிங்களான்னு கூவியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
படம் வந்து இன்னும் ஒருவாரம் கூட ஆகவில்லை, காலை காட்சி விஜயா தியேட்டர் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றது. ரஜினியின் தோல்விப்படங்கள் கூட பத்து நாட்கள் நான்கு காட்சியும் ஃபுல் ஆகும் என்பது தான் வரலாறு. குசேலனுக்குப் பிறகு அந்த வரலாறுகள் மாற ஆரம்பித்திருப்பது தான் யதார்த்தம்.
ஜஸ்டிஸ் கோபினாத், படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் சிவாஜி தன் வயதுக்கு ஏற்றவாறு கேரக்டர் எடுத்துக்கொண்டு, இன்னொரு வளரும் நடிகரோடு நடித்தது மாதிரியான படங்களை தேர்வு செய்வது தான் இனி ரஜினிக்கு வெற்றி ஃபார்முலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை... நான் தான் ஒன் அண்டு ஒன்லி ஹீரோவாக அதிலும் இளமை ததும்பிடும் ஹீரோவாக நடிப்பேன் என்று இன்னமும் அடம்பிடித்தால், ரஜினி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அவரே தரைமட்டமாக்கிவிட்டுச் செல்லும் நிலை தான் ஏற்படும்!!!

3 comments:
உண்மையான விமர்சனம்.இன்னமும் சிலர் படத்தை தூக்கி பேசி ரஜனிய ஏமாற்றி கொண்டு இருகிறர்கள்.வயதுக்கு ஏற்ற பத்திரமே நன்று.

I like rajini to act as Single mass hero.
Post a Comment