Showing posts with label சமஸ்கிருதம். Show all posts
Showing posts with label சமஸ்கிருதம். Show all posts

Thursday, June 16, 2016

சம்ஸ்கிருதம் கத்துக்கிறோம்.. பட் இந்த டீலுக்கு ஓக்கேவா?!


சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்... கத்துக்கறோம்...!

பட் ஒன் கண்டிஷன்...

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா.... கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் ஒரு சர்டிஃபிகேட் வழங்கணும். 

அந்த சான்றிதழ் வச்சிருக்குற அனைவரையும் பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது நுழைவுத் தேர்வு வைத்தோ.... தமிழக கோவில்கள் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்கனும்...! 

ஓக்கேவா?!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா????

SC, MBC, BC, OC... இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் அர்ச்சகர் வேலை கொடுக்கனும்.

இதுல இன்னோரு முக்கிய விஷயம் என்னன்னா????

சமஸ்கிருதம் படிச்சவிங்களுக்கு எண்ட்ரன்ஸ் தேர்வு வச்சி.., அதுல அதிக மார்க் வாங்குறவனுக்கு..., ரேங்க் அடிப்படையில் அதிக வருமானம் உள்ள பெரிய பெரிய கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுக்கணும்...!!  ரேங்க் வாங்காதவங்களுக்கு எல்லாம் தெரு முக்குகளில் இருக்கும் சின்ன கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுத்தால் போதும். 

ஓக்கேவா???!!!

வாங்கடியோவ்.... எங்காளுங்க பத்து லட்சம் பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு இருக்கும் போது... நீங்க சொல்ற சம்ஸ்கிருதம் என்ன? ஜப்பான் மொழிய கூட கத்துக்க நாங்க தயாரா இருக்கோம்...!!

டீலா? நோ டீலா?!