Friday, June 17, 2016

தினமணியும்... அதீத சுயசாதிப் பாசமும்..!



கடந்த ஒன்பதாம் தேதி மாலை மூன்று மணி நேரம் சென்னை தீவுத் திடல் புத்தக கண்காட்சியில் நானும் என் மனைவியும்... சஞ்சாரம் செய்தோம்..!

நிறைய பார்த்தோம், கேட்டோம், அறிந்தோம்... வாங்கினோம்.... அதையெல்லாம் பற்றி தனித்தனிப் பதிவாக எழுத வேண்டும். அதற்கு முன்னால் இந்த காண்ட்ரவர்ஷியல் அவதானிப்பை அவசரமாக பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற கோபத்தில் தான் இதை பதிவு செய்கின்றேன்...!

சுற்றி வந்த போது... தினமணி ஸ்டால் வந்தவுடன் சற்றே மிரண்டு தான் போனேன். முழு ஸ்டாலுக்குமான பேக் ட்ராப் என்று பார்த்தால்.... அவர்களுடைய ஒரு நாள் நாளிதழின் முதல் பக்கம்..... 

அந்த முதல் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கான விளம்பரம்....!!!!!! 

விளம்பரம் என்றால் அதிமுக கொடுத்தது இல்லை... இவர்களாகவே செய்தி வடிவில் மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக மடைமாற்ற பதிவு செய்யும் கொட்டை எழுத்துச் செய்திகள்...!

500 மதுக்கடைகள் மூடல்.... மற்றும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.... என்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வின் டுபாக்கூர் அறிவிப்பைத்தான் தங்களது விளம்பரமாகவும்....

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் முதன்மை விளம்பரமாகவும் வைத்திருந்தார்கள்...!

தமிழகத்தின் ஆகச்சிறந்த நடுநிலை அச்சு ஊடகம் என்று சொல்லிக்கொள்ளும் தினமணி.... அதிமுகவின்.... குறிப்பாக ஜெயலலிதா என்ற சுயசாதிப் பெண்ணுக்கான செய்தித் தொடர்பு செயலகமாக செயல்படுவதைப் பார்த்தவுடன்....

கலைஞரை இன்னமும் கருணாநிதி என்று சொல்லிக்கொண்டு நடுநிலை வேடமிடும் சன் ஊடகமும்...., முக்கியமான நேரங்களில் கூட லேகிய வியாபார விளம்பர ஸ்லாட்டும், கல்விச் சேவை, ஸ்டாக் மார்கெட் சேவை வியாபாரமும் செய்யும் கலைஞர் டீவியையும் நினைத்து......

மெர்சலாயிட்டேன்....!!!

எத்தனை தொண்டர்கள்....?! சில நாட்களில் மூன்றில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே அம்மா உணவத்தை தேடி ஓடும் தொண்டர்களும்..., ஐந்தாயிரம் சம்பளத்தில் ஐநூறு ரூபாய்க்கு டேட்டா கார்டு போட்டு திமுகவுக்கு ஆதரவாக தளமாடும் தொண்டர்களும் இருக்கின்ற கட்சியில்..... 

சன் மற்றும் கலைஞர் டீவி எங்கே???!!!! 

தன்னுடைய இத்தனை கால நற்பெயரையே தன் இனப்பெண்மனிகான அடமானம் வைத்து ஆதரவு திரட்டும் தினமணி எங்கேஏஏஏஏஏஏஏ???!!!

ஆரியத்தை ஏன் இன்னமும் திராவிடத்தால் வெற்றிகொள்ள இயலவில்லை என்று எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பிக்கிறது... சற்றே ஆழமான மன வேதனையுடன்...!


3 comments:

Anonymous said...

ஜனநாயகத்தின்
நான்காம் தூண்கள் - இன்று
அம்மா கால்களாக
மாறி விட்டன!

Anonymous said...

ஜனநாயகத்தின்
நான்காம் தூண்கள் - இன்று
அம்மா கால்களாக
மாறி விட்டன!

Anonymous said...

உங்கள மாதிரி அரைவேக்காடுக இருக்கிறவரை திராவிடத்தை வெல்வதும் சிரமம் தான்.