எது எப்படி இருந்தாலும் சரி,
திராவிடத்தால் வீழ்ந்தோம்...,
திராவிடத்தை விரட்ட வேண்டும்.....,
திராவிடக் கட்சிகளை அழித்தொழிக்க வேண்டும்......
என்று கூவியவர்களுக்கு எல்லாம் செறுப்பால் அடிப்பது போல தமிழக மக்கள் பதில் சொல்லி விட்டார்கள்.
திராவிடத்தால் வாழ்ந்தோம்,
திராவிடத்தால் வளர்ந்தோம்,
திராவிடத்தால் மானத்துடன் உலவுகிறோம், திராவிடத்தால் படித்தோம்,
திராவிடத்தால் ஆண் பெண் சம உரிமைப் பெற்றோம்,
திராவிடத்தால் தனி நபர் வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்தோம்,
திராவிடத்தால் மத்திய அரசு வரையிலும் கல்வி, வேலை வாய்ப்பைப் பெற்றோம்...,
என்று தமிழக மக்கள் சொல்லாமல் சொல்லி விட்டனர்.
பெரியார், அண்ணா பூமியான தமிழகத்தில் சாதி, மத கட்சிகளுக்கு இடமே இல்லை என்று தெள்ளத்தெளிவாக தமிழக மக்கள் சொல்லி விட்டார்கள். அந்த பெரியார் பூமியும், அண்ணா பூமியும் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு சாட்டையடியாக பதிலளித்து விட்டார்கள் தமிழக வாக்காள பெருமக்கள்..!
முழுக்க முழுக்க திராவிடக் கட்சி உறுப்பினர்களையும் கொஞ்சூண்டு திராவிட இயக்க கருத்துக்கு ஆதரவான காங்கிரஸ் உறுப்பினர்களையும் மட்டுமே தங்கள் பிரதிநிதிகளாக இந்த முறை தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்பியதன் மூலம்... தமிழ்தேசிய போர்வையில் உலவும் ஜாதி, மத வெறியர்களை தமிழக மக்கள் ஒதுக்கியிருக்கின்றார்கள்.
2 comments:
பணம் கொடுத்து வாக்கை பெற்றதை பெரியாருக்காக.. திராவிடத்திர்காக வாக்களித்ததாக நீங்கள் கூறுவது உலகமகா அயோக்கியத்தனம்..
அதிமுக தொடர்ந்து சட்டசபை நாடாளுமன்றம் என்று வெற்றிவாகை சூடூகிறது... அதிமுக திராவிடக்கட்சி இல்லை என்கிறார் சுப வீரபாண்டியன்..அவரை நீர் பெரிய தத்துவார்த்தவாதியா...?
Post a Comment