Tuesday, December 2, 2014

மோடியின் பொருளாதாரமும்.... மு.க. ஸ்டாலின் விமர்சனமும்..!

ஸ்டாலினுக்கு பொருளாதாரம் தெரியுமா? - சுனா சாமி!!!

மோடி ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்ற நிலையில் பொருளாதாரம் சார்ந்த அவர் அரசின் செயல்பாடுகள் பணக்காரர்களுக்கு மட்டுமே பலனும் ஊக்கமும் அளிப்பதாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கின்றார்.



இதற்குத் தான் சுனா சாமி மேலே உள்ளது மாதிரியான அபத்தத்தை வாந்தியாக எடுத்திருக்கின்றார். ஒரு அரசின் செயல்பாடுகள், ஏழைபாழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பலனுள்ளதாக அமையவில்லை என்பதைச் சொல்ல ஒருவர் பெரிய பொருளாதாரப் புலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அவர் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அவர்களில் ஒருவராக இணைந்து நெருங்கி பழகினாலே..., வாழ்ந்தாலே போதும்!!

ஒரு கல்விக்கடன் வாங்கவே இங்கே அவனவன் சிங்கி அடித்துக்கொண்டிருக்கும் போது, ஸ்டேட் பேங்க்ல நம்ம பணத்தைக் கொடுத்து டிடி எடுக்கவே நாள் கணக்குல காத்து நிற்க வேண்டியிருக்கும் நிலையில், அந்த வங்கித் தலைவரையும், ஒரு ஃபெயிலியர் ப்ராஜெக்ட்டை கையில் வைத்திருக்கும் தன் தொழிலதிபர் நண்பரையும் கையோடு ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று 6000 கோடி கடன் கொடுக்க வைப்பது, அதிலும் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க கடன் கொடுக்கும் போதே.... தெரியவில்லையா? மோடி அரசின் பொருளாதார செயல்பாடுகள் யாருக்கு பலனளிக்கும் என்பதை..!!!??

அதேப் போன்று இந்தியாவின் மிகப் பெரிய அரசுத் துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவது என்று முடிவெடுத்திருப்பது கூட யாருக்கு பலன் அளிக்கும்?

டியூவுக்கு ஆட்டோ, வேன் வாங்கி ஓட்டுறவனும், முக்குக்கு முக்கு லேத்து பட்டறை வைத்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டுகின்றவர்களுக்குமா, அந்த வாய்ப்பு வரப்போகிறது???  அம்பானிகளுக்கும், டாட்டா பிர்லாக்களுக்கும், இந்துஜா, பஜாஜ் போன்ற குழுமங்களுக்கும் தானே அது பயன்படப்போகிறது?!

ஒரு தொழிலில் லாபம் இல்லை என்றால் எந்த தனியார் நிறுவன முதலாளியாவது அதில் முதலீடு செய்வானா?! இதோ சில குறிப்பிட்ட வழித்தடங்கள் மட்டும் முதலில் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமாம்.

முதலில் அவர்கள் அதில் பணத்தைப் போட்டு, நல்ல பல வசதிகளை இப்பொழுது இருக்கின்ற கட்டணத்திலேயே பயணிகளுக்கு வழங்குவார்கள். நல்ல வேகமான சேவையையும் வழங்குவார்கள். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதன் மூலம் மட்டுமே ஈடுகட்டி விடுவார்கள். இதை மக்களுக்கு காட்டி விளம்பரப்படுத்தியே, மொத்த ரயில்வேயும் ஐந்து ஆண்டுகளுக்குள் இவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுவிடும். மொத்தமாக தனியார் கைகளுக்கு ரயில்வே வரும் பொழுது அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணமாக இருக்கும்! மக்களுக்கும் அப்பொழுது தான் புரியும்..!!

இந்த இடத்தில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கேட்டிற்கு காரணமே மிக அதிக ஊதியம் பெறும் பொறுப்பற்ற ஊழியர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதற்கு மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்கள்!!

இந்த இரண்டு விஷயங்களையும் ஒரு நல்ல அரசானது இரும்புக்கரம் கொண்டு சரிசெய்தாலே, அரசுத் துறை நிறுவனங்கள் தனியாரை விட குறைந்த கட்டணத்தில் மிக அதிக சேவைகளை வழங்கிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் இவர் செய்வார் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக, நிர்வாகத்தை சீர் செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பேன் என்பது யாருக்கு லாபமான பொருளாதாரக் கொள்கை என்று சொல்வதற்கு பெரிய பொருளாதாரப் புலியாகவெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை புரோக்கர்களே....!!

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் நலனில் உண்மையான அக்கரை இருந்தாலே போதும்...!!

அன்றைக்கு தமிழக பேருந்துகளை ஓரிரவில் அரசுடைமை ஆக்கினாரே தலைவர் கலைஞர்.....  அதன் காரணமாகத்தான் இன்றைக்கும் இந்திய அளவில் தமிழகத்தின் பேருந்துக் கட்டணமானது மிகக் குறைவாக இருக்கின்றது. அது மட்டுமின்றி, மிகக் குறைந்த மக்கள் வசிக்கின்ற குக்கிராமங்களுக்கும், பயணிகள் அதிகம் வராத இரவு மற்றும் அதிகாலை வேளையிலும் கூட நட்டத்தைப் பொருட்படுத்தாமல் அது சேவை என்பதாக தமிழக அரசு போக்குவரத்துத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மோடியின் அடியாட்கள் போன்று செயல்படும் சில நபர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கருத்துக்கு நக்கலாக பதில் சொன்னாலும், நேற்றைய புதிய தலைமுறை வாசகர் வாக்கெடுப்பில் தமிழக மக்கள் நச் என்று தளபதியின் கருத்தை ஆதரித்திருக்கின்றார்கள்.

ஆகவே இனி....

தளபதியின் வழியே...   தமிழகத்தின் வழி...!

3 comments:

Syed Sulaiman said...

இனி தளபதியின் வழியே... தமிழகத்தின் வழி...!தளபதி 2016...

Avargal Unmaigal said...

பொருளாதாரம் படித்த ஆட்களுக்கு தெரியாத பொருளாதாரத்தை படிக்காத விவசாயி கூட சொல்லிவிடுவான் என்று இந்த சுப்புரமணிய சாமிக்கு தெரியவில்லை போலும்

Avargal Unmaigal said...

//மோடி ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்ற நிலையில் பொருளாதாரம் சார்ந்த அவர் அரசின் செயல்பாடுகள் பணக்காரர்களுக்கு மட்டுமே பலனும் ஊக்கமும் அளிப்பதாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கின்றார்.///
நேற்று இந்த செய்தியை டிவியில் பார்த்ததும் சந்தோஷப்பட்டேன் அதே நேரத்தில் ஆச்சிரியமும் அடைந்தேன். இப்படி தைரியமாக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தால் நிச்சயம் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்.. எலக்ஷன் வரும் வரை அதிமுக அரசை அதிகம் அட்டாக் செய்யாமல் மத்திய அரசை அட்டாக் செய்தாலே நல்ல வாய்ப்புகள் உண்டு அதிமுகவை அட்டாக் இப்பொது செய்தால் அது எதிர் மறையாக ஆகும் வாய்ப்புக்கள் உண்டு