ஜெயலலிதா அதிரடி... சரவெடின்னெல்லாம் சொம்படிக்கிற அல்லக்கை ஊடகங்களே... முன்னூறு வருஷமா திமுக உறுப்பினராக இருந்து விட்டு, முந்தாநாள்லேர்ந்து திமுகவை பிடிக்காமல் போயிருக்கும் நடுநிலை நக்கிகளே.... உலகிலேயே அதி புத்திசாலிகளான அதிமுகவை ஆதரித்த வாக்களப் பெருமக்களே....
ஒரு மனுஷன் ஊரு ஊரா சுத்தி வந்து உங்களை எல்லாம் உங்க இடத்துக்கே வந்து பார்த்து..., நீங்க சொன்ன கோரிக்கையை எல்லாம் ஏத்துக்கிட்டு... நீங்க கேட்ட மாதிரியே... ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை நீங்க கட்டுற மின் கட்டணத்தைகிட்டத்தட்ட முப்பது சதவிகிதம் குறைக்கிற மாதிரி ஒரு திட்டத்தை அறிவிச்சி... அதை தங்களோட தேர்தல் அறிக்கையில் பிரமாண பத்திரம் மாதிரி வாசிச்சி உங்க கிட்ட வாக்கு கேட்டா......
ஒருத்தன் வந்து இன்னிக்கு எங்கிட்ட சொல்றான்... சார் எங்கூட்டுல அஞ்சு ஓட்டு இருக்கு சார். 1500 ஓவா வந்து சொளையா குடுத்துட்டு போனாங்க சார்...! அத வாங்கிட்டு எப்புடி சார் மாத்தி ஓட்டு போட முடியும்ங்கறான்...
ஏண்டா இன்னிக்கு மின் கட்டணம் எவ்ளோன்னு தெரியுமான்னு கேட்டா???
அதான் அம்மா 100 யூனிட்டு ஃப்ரீன்னு சொல்லிட்டாங்களேங்கறான்....
அட லூஸு லூஸு...
ஏற்கனவே மொதோ 100 யூனிட்டுக்கு 1 ரூபாயும்...
அடுத்த 100 யூனிட்டுக்கு.. அதாவது 101 லேர்ந்து 200 வரைக்கும் உள்ளதுக்கு 2 ரூபாயும் இருந்துச்சி...!
இப்போ... இப்போ....?
அந்த மொதோ 100 யூனிட் ஃப்ரீ... அதாவது மொத்த பில்லுல 100 ஓவா மட்டும் ஃப்ரீ....!!!
ஆனா ஏற்கனவே ரெண்டாவது 100 யூனிட்டுக்கு 2 ரூவாயா இருந்த கட்டணம்.... இப்போ 3.25 ஆக ஏத்தி வச்சிட்டாங்கய்யா... ஆப்பு...!!
அதாவது ரெண்டாவது 100 யூனிட்டுக்கு ஏற்கனவே 200 ரூவாயா இருந்தது... இப்போ 350 ஓவாவா ஏத்திப்புட்டாங்க...!!!
அதாவது ஏற்கனவே மொத்தமா 200 யூனிட் பயன்படுத்தினா 100 + 200 = 300 ரூவாயா இருந்தது...
இனிமே...
ஃப்ரீ(0) + 350 = 350 ஓவா...!
அதாவது.... இனிமே வெறும் 200 யூனிட் பயன்படுத்தினாலே ஏற்கனவே இருந்தத விட 50 ஓவா அதிரடி சரவெடியா எக்ஸ்ட்ரா தெண்டம் அழுவனும்...!!
புரியுதாடா வென்று.....?!
புரியுதோ இல்லியோ.... நீங்க கணக்கு போட்டு சொன்னா கரைக்ட்டா தான் அண்ணே இருக்கும்... பால் விலைக்கு மாசத்துக்கு 60 ரூவா எக்ஸ்ட்ரா தண்டம் அழுவுனும்ன்னு வேற சொல்றீங்க.... இந்த கையில 1500 ரூவாய கொடுத்துட்டு.... அந்த கையில் தினம் தினம் கந்து வட்டி காரன் மாதிரி எக்ஸ்ட்ரா வட்டி போட்டு... வசூல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னு புரியுதுண்ணே...
விடுறா... விடுறா... இனிமேயாவது புத்தியோட நடந்துக்க... கவலை படாதேடா....
இல்லண்ணே தப்பு பண்ணிட்டோமேன்னு நெம்ப கவலையா இருக்குண்ணே... இவ்ளோ முட்டாள்தனமா செஞ்சிட்டோமேன்னு வெக்க வக்கமா வருதுண்ணே... இந்த கவலைலேர்ந்து மீளணும்ன்னா ஒரு குவாட்டர் அடிச்சத்தாண்ணே சரிப்பட்டு வரும்...
ஒரு வேளை உங்க கட்சி வந்திருந்தா.... இந்நேரம் அந்த கடையையும் மூடியிருப்பாங்க.....! என் கவலையை எல்லாம் நான் எப்படி போக்கியிருப்பேன்...?! அம்மா ஆட்சி வந்ததுனாலதாண்ணே... என் கவலையை எல்லாம் நிதம் நிதம் தீத்துக்கிட்டு நிம்மதியா தூங்க முடியுது.....!!!!!
நான்... ஙேஏஏஏஏஏஏஏஏஏ...
2 comments:
boss intha Thirumangalam formulannu onnun unga tholaivar sonnare..
ungalukkum vantha raththam mathavangalukkunnaa thakkali chutney yaa boss
ennathui 300 varushamaa DMK member aaa.. ayyo raama.. ungalukku history theriyaathaa
Post a Comment