Thursday, June 16, 2016

சம்ஸ்கிருதம் கத்துக்கிறோம்.. பட் இந்த டீலுக்கு ஓக்கேவா?!


சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்... கத்துக்கறோம்...!

பட் ஒன் கண்டிஷன்...

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா.... கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் ஒரு சர்டிஃபிகேட் வழங்கணும். 

அந்த சான்றிதழ் வச்சிருக்குற அனைவரையும் பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது நுழைவுத் தேர்வு வைத்தோ.... தமிழக கோவில்கள் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்கனும்...! 

ஓக்கேவா?!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா????

SC, MBC, BC, OC... இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் அர்ச்சகர் வேலை கொடுக்கனும்.

இதுல இன்னோரு முக்கிய விஷயம் என்னன்னா????

சமஸ்கிருதம் படிச்சவிங்களுக்கு எண்ட்ரன்ஸ் தேர்வு வச்சி.., அதுல அதிக மார்க் வாங்குறவனுக்கு..., ரேங்க் அடிப்படையில் அதிக வருமானம் உள்ள பெரிய பெரிய கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுக்கணும்...!!  ரேங்க் வாங்காதவங்களுக்கு எல்லாம் தெரு முக்குகளில் இருக்கும் சின்ன கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுத்தால் போதும். 

ஓக்கேவா???!!!

வாங்கடியோவ்.... எங்காளுங்க பத்து லட்சம் பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு இருக்கும் போது... நீங்க சொல்ற சம்ஸ்கிருதம் என்ன? ஜப்பான் மொழிய கூட கத்துக்க நாங்க தயாரா இருக்கோம்...!!

டீலா? நோ டீலா?!

4 comments:

syedabthayar721 said...

இந்த டீலு நல்லாதானையா இருக்கு. என்ன அவிங்களக்கு தூக்கம் வராது.

M.செய்யது
துபை

Anonymous said...

Super Deal.. I do agree with you for the first time

M.Mani said...

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் பல தடைக்கற்கள் உள்ளன. ஐயர் இல்லாத கோவில்களை ஐயர் அல்லாதவர்களே ஆதரவளிப்பதில்லை. நான் இதனை பல மாரியம்மன் கோயில்களில் பார்த்துள்ளேன். தமிழையே சரியாக உச்சரிப்பதில்லை ஐயர் அல்லாதவர். முக்கியமாக 'ழ' வராது. ஐயர்களிடம் இந்தக் குறைபாடு இல்லை. சமஸ்கிரதத்தை கற்றாலும் நம்மவர்களால் சரியாக உச்சரிக்க முடியாது. தமிழைத்தவிர மற்ற மொழிகளில் உச்சரிப்பு மாறினால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்.

Anonymous said...

Who need usaarippu? Do u know what manthiram these guys telling? Go to Kanchi kamakchi temple u know who they treat bargains and others.. Bhrahamins can go inside (closure to mulavar) others as stay outside