Sunday, March 1, 2015

தளபதி மு.க.ஸ்டாலின் ஏன் முதல்வராக வேண்டும்??!!

தமிழக அரசியலை..., ஆட்சி பீடத்தை... அடுத்த கால் நூற்றாண்டுக்கு ஆக்கிரமிக்கப் போகும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை இனம் காணும் ஒரு நேர்மையான அலசல் தான் இந்தப் பதிவு.  வேறு எந்த விதமான சார்பு நிலையோ, உள்குத்தோ. நுண்ணரசியலோ இதில் இல்லை என்று அடித்துக் கூவு(று)கிறேன்.


இந்தியா குடியரசு ஆன பிறகு, கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வெறும் ஐந்து பேர் மட்டுமே (இதில் ஜானகி, ஓ.பி.எஸ் இவர்களை சேர்க்கவில்லை)  'முதல்வர்' பதவியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். சொல்லப் போனால் அடுத்த ஐந்து ஆண்டுக்கான போட்டியில் கூட இந்தப் பட்டியலில் இருந்து தான் இருவர், முதல் இரண்டு ரேங்க்கில் இருக்கிறார்கள். 

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சூழ்நிலை, இன்னபிற எல்லாம் உயர்ந்திருக்கிறதா? அல்லது தாழ்ந்திருக்கிறதா? என்று பார்த்தால், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது உடனடியாக மோசம் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் அடித்துப் பிடித்து உடனடி நற்சான்றிதழும் அளித்து விட முடியாது என்பது தான் நிதர்சனம். 

ஆக தமிழக மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது....

கொஞ்சம் இளமையாக..., சுறுசுறுப்பாக..., நீண்ட ஆட்சி முறை அனுபவம் உள்ளவராக..., படிப்படியாக எல்லா நிலைகளையும் கடந்து அந்தந்த நிலைகளில் அனுபவம் பெற்றவராக...,  இதுவரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாகவும், திறமையாகவும், மக்கள் பாராட்டும் படியாகவும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இதுவரை எழாத வகையில் செயல்பட்டிருப்பவராகவும்..., மக்களோடு மக்களாக கீழிறங்கி.. திட்டங்களை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றும் சாதுர்யம் கொண்டவராகவும்..., மக்கள் பிரதிநிதிகள் சபையில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் உடனுக்குடன் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவும்..., எதிர்க்கட்சியினரை வார்த்தைகளால் நோகடிக்காமல் தனிநபர் தாக்குதலின்றி பேசும் தன்மை கொண்டவராகவும்.... இப்படியே இதே ரீதியிலான இன்னும் பல 'வும்' முக்கு சொந்தக்காரராக...

....தள்ளாட்டமின்றி..., சுறுசுறுப்புடன் நடக்ககூடிய, ஓடக்கூடிய ஒருவர் முதல்வரானால் எப்படியிருக்கும்?! என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவருக்குமே வந்திருப்பது உண்மை தான்.

இது தான் சரியான தருணம்! நடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, படிகளில் ஏற்றி மேலே கொண்டுவரும் சக்தி கொண்ட ஒருவரை முதல்வராக அடையாளம் காணவேண்டிய காலகட்டத்தில் தான் இப்பொழுது தமிழக தமிழர்களான நாம் நின்று கொண்டிருக்கிறோம். 

சரி இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் போட்டிக் களத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தோமானால்...

இன்றைய நிலையில் இந்தப் போட்டியில் சில முக்கியமான கட்டங்களை தாண்டி, ஆட்டத்தில் இருப்பதாக மக்களால் உணரப்படுகிறவர்கள் இருவர் மட்டுமே.... 

ஒருவர் தளபதி மு.க. ஸ்டாலின்....  மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். 

இந்த ஆட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய வைகோ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் தன்னைத்தானே புதை குழிக்குள் சிக்க வைத்துக் கொண்டு தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏன்? தான் அடைய விரும்பிய ஒரு லட்சியத்திற்கு கூட விடியலை பகல் கனவாகவே மாற்றி வைத்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும், தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் வைகோ, சுயநலமின்றியும் நிறைய நிதானத்துடனும் செயல்பட்டிருந்தால்...., இன்று வெற்றிக் கோட்டையின் நுழைவாயிலில் முதல் ஆளாக நின்றிருந்திருந்திருக்கக் கூடும்!

மேற்சொன்ன இருவரை தவிர்த்து வருங்கால இளம் தலைமுறை தமிழக முதல்வர் போட்டியில் 'நானும் ரௌடி தான்' ஸ்டைலில், சக போட்டியாளராக களத்தில் நிற்கின்றவர்கள் என்று பார்த்தோமானால்...,

தமிழருவி மணியன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான், கனிமொழி, உதயகுமார், நடிகர் விஜய், சரத்குமார், ஜி.கே. வாசன், கார்த்திக் சிதம்பரம்,  ... இப்படியாக சொல்லும் போதே வாயை மூடிக்கொண்டு சிரிக்கும்படியான பட்டியல் தான் நினைவுக்கு வருகிறது!

எனவே இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்த்தோமானால், ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இருவர் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பதவியை ஆக்கிரமிக்கப் போகும் போட்டிக் களத்தில் நிற்கிறார்கள். மேற்சொன்ன பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக முளைத்தோ ஓரிருவர் வருங்காலத்தில் (இன்னும் 1 வருடத்தில்) இந்தப் போட்டிக்கு தகுதியானவர்களாக வருவார்களேயானால், அது ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

சரி இப்பொழுது உள்ள போட்டியாளர்களில் முதலாவதாக விஜயகாந்த் ஐ பார்ப்போம்....

தமிழக வாக்காளர்களில் பெறும்பான்மையானவர்கள், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, வாராது வந்த மாமணி போல் வந்தவர் தான் விஜயகாந்த். 2006 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அவர் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

அது வரை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த அடிக்கு அவர் முன்னேறினாரா என்று கேட்டால் அவரே கூட இல்லை என்று தான் சொல்வார். ஒரு மாற்று சக்தியாக தமிழக மக்களால் இனம் காணப்பட்ட விஜயகாந்த், எப்பொழுது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ? அப்பொழுதே, “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று தமிழக மக்கள் சொல்லுகின்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்...

ஆனால் அது ஒரு இடைக்கால யுக்தி மட்டுமே, என்று எண்ணி மற்றுமொரு வாய்ப்பு அவருக்கு கொடுக்கலாம் என்று மக்கள் நினைத்திருந்தால் கூட அதற்கு சற்றும் இடம் தராமல், வரும் தேர்தலில் ருசி கண்ட பூனையாக கூட்டணி பேரத்தினை கூச்சநாச்சமின்றி எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த அனைத்து முக்கிய கட்சிகளுடனும் தற்பொழுது நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இப்பொழுது கூட சென்ற தேர்தலில் தான் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, வரும் தேர்தலில் தன் கட்சிக்கு கூடுதலாக இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பேசவில்லை. தன் கட்சி சார்பாக தனக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொஞ்சம் கூட மதிக்காமல் முதல் ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே சட்டசபைக்கு சென்றுள்ளார்.

கேட்டால் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இதே தவறை செய்யவில்லையா? என்று கேட்பார். உண்மை தான். அவர்கள் யாருமே முதல் முறை எம்.எல்.ஏ ஆன போது இந்த தவறை செய்யவில்லை. மேலும், குறைந்த பட்சம் அவர்கள் கட்சிக்காரர்களாவது ஒத்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒரு நியாயத்தை கற்பித்துச் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி என்ன சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சட்டசபை செல்வதை தவிர்த்தார்? சரி ஒரு ஒழுங்கான எதிர்க்கட்சி தலைவராகவாவது நடந்து கொண்டாரா? ஜெயலலிதா செய்வதைப் போல் ஒரு எதிரிக் கட்சி தலைவராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறார்!

இவர் செய்ததை எல்லாம் தான் ஏற்கனவே ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறாரே! அவருக்கு மாற்றாகத்தானே மக்கள் இவரைப் பார்த்தார்கள். அவர் செய்வதையே இவரும் செய்தால் மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கனம் மீண்டும் இவரை ஆதரிப்பார்கள்? சரி எம்.ஜி.ஆர். -ன் பிரதிபிம்பமாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவர், அவரைப் போன்ற மேடை நாகரீகத்தையோ, கட்சித் தொண்டர்களிடமுமான அணுகுமுறையையோ கடைபிடிக்கிறாரா? 

இதே ரீதியில் தனிப் பதிவே போடும் அளவிற்கு, விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதை தவிர்த்து வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்ற விஷயங்களைப் பட்டியலிடலாம்.

ஆகவே... அடுத்த போட்டியாளரான ஸ்டாலினைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்தப் பதிவின் நான்காம் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தாலே பாதி விஷயங்கள் விளங்கிவிடும். அடுத்த 20 வருடங்களுக்கான தகுதியான தமிழக முதல்வர் போட்டியின் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான் என்று! 

இதைப் படிக்கும் பொழுது இது ஒரு 'சார்புநிலை' வாதம் என்று எண்ணுபவர்கள், இந்த இடத்திற்கு தற்பொழுதைய நிலையில் வேறு ஒருவரை பொறுத்தி வாதிட்டால் பதில் கூற நானும் தயாராயிருக்கிறேன்.

 @ எமர்ஜென்ஸிக்கு முன்னதாகவே ஆரம்பித்து, சற்றேரக்குறைய 40 வருட கால முழுநேர அரசியல் அனுபவம்...

@ ஒரு புது கட்சியை ஆரம்பித்து நடத்துவது போல தி.மு.க வின் இளைஞர் அணியை ஆரம்பித்து, கட்டமைத்து, அதற்கென்று தனி அலுவலக கட்டிடம், அணிவகுப்பு, மாநாடு, இத்தியாதி, இத்தியாதி என்றெல்லாம் வளர்த்து, அதன் பொறுப்பாளர்கள் பலரும் ஆட்சிப் பொறுப்பிலும் பங்கேற்கும் நிலையினை ஏற்படுத்தி.... 

சுதந்திர இந்தியாவில் அறுபது ஆண்டுகால பழமையான பிராந்திய கட்சி இன்றைக்கும் மங்காத பொலிவுடன் அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து முக்கியஸ்தர்களின் வாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் மீண்டும் ஒரு முறை புதிதாக கட்டமைத்து.... 

தான் சார்ந்த பேரியக்கம் தொய்வில்லாமல் செயல்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஸ்டாலின் ஈன்றெடுத்து வளர்த்த அந்த இளைஞரணி தான் என்பதை தி.மு.க தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எவரும் மறுப்பதற்கில்லை.

@ கட்சித் தலைவர் கலைஞரின் மகன் என்ற காரணத்தால் தான் இப்படி வளர்ந்தார் என்பவர்களுக்கு, கலைஞரின் மற்ற பிள்ளைகளுக்கு இப்படியொரு பொறுமையும், நிதானமும் இருந்ததில்லை என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு... இப்பொழுது (அடுத்த முதல்வர் போட்டிக்கான) களத்தில் நிற்பவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல இது என்பதும் கூட என் பதில் தான்.

@ சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றிய பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக பரிமளித்தவர் தான் ஸ்டாலின் அவர்கள்.

@ வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டிய ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பதை திட்டவட்டமாக உணர்த்துகின்றது. 

@ 'சிங்காரச் சென்னை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்,.... இப்படியே இன்னும் பல 'லாம்' கள் சேர்ந்து சென்னை சொர்க்கமாக மாறுமா? மாறாதா? என்பதை... ஸ்டாலின் மனோநிலையை நன்கு அறிந்த சென்னை வாசிகளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்! 

ஏனென்றால் கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் 'சோ' அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார். அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது... 

இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதையே காட்டுகிறது.

கலைஞரால் தான் ஸ்டாலின் வளர்ந்தார் என்பது ஒரு கோணத்தில் உண்மை என்றாலும், அதுவே தான் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதையும் மறுப்பதற்கில்லை. கலைஞர் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்பட்டிருக்கின்றார்.

சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வெடித்துக் கிளம்பி முன்னேறிய கலைஞர், உச்சத்தை அடைய சிலபல சமாதானங்களை செய்திருக்கின்றார் என்று வாதம் செய்பவர்கள்...., வசதி வாய்ப்புகளையும், பதவி பந்தாக்களையும், சிறைக் கொடுமைகளையும், தோல்விகளின் தாக்கங்களையும் மாறி மாறி அனுபவித்து வளர்ந்தவரான ஸ்டாலின், அழகான அளவான குடும்பத்தோடும், தான் மட்டுமன்றி தன் குடும்பத்தாரும் எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத வகையிலும் வழி வகை செய்து கொண்டு.....

தான் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் மற்றும் தமிழர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே தன்னை பொறுப்பாளியாக உருவகித்துக்கொண்டு, அதற்கான எந்த மாதிரியான சமரசங்களுக்கும் இடமளிக்காமல் செயல்படுவார் என்பதை அவரது முந்தைய செயல்பாடுகளும் மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. அதேப் போன்று இப்பொழுது எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலையிலும் கூட....

மக்களுக்கோ, கட்சிக்கோ, இயக்கத்திற்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் போது அனைவரையும் ஒருங்கிணைத்து துவண்டுவிழாமல் உற்சாகப்படுத்தி செயல்பட்டு, செயல்பட வைப்பதே....  ஒரு சிறந்த தலைவனுக்கான இலக்கணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

அந்த இலக்கணத்திற்கு உவமானமாய் இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனாக தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரக்கூடிய தகுதி படைத்தவர்....

தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே என்பதில் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது!!!


மேலும் சில மாதங்களுக்கு முன்பாக கலைஞரே, திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் அவர்களை நானே முன்மொழிவேன் என்று பொதுக்குழுவில் அறிவித்திருக்கின்றார்......, எனவே கட்சி மட்டத்திலும் அவருக்கு தடையில்லை.....

ஆதலால் இன்றைய நிலையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமே தமிழக முதல்வருக்கான சிறந்த தேர்வாக இருப்பார்.  ஆகவே இதற்கான முதல் அடியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தான் எடுத்து வைக்க வேண்டும்.... அதாவது திமுகழகத்தின் சாராபாக முதல்வர் வேட்பாளராக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தினால், வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்...!

Saturday, January 17, 2015

ஐ!!!!! பைசா வசூல்...!!!!!

நேற்று ஒரு வழியாக ஐ படம் பார்த்தாச்சு....

என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை நல்ல படம்ன்னு சொல்லனும்ன்னா அதற்கான தகுதியாக என்னைப் போன்ற சினிமா வாழ வேண்டும்...  என்று எண்ணுகிற சினிமா ரசிகனை தியேட்டரில் போய் உட்கார்ந்தது முதல் படம் முடிகிற வரை... நைட் ஷோவிலும் கொட்டாவி கூட விடாமல் வாயை பிளந்து பார்க்க வைக்க வேண்டும்....!!

அந்த வகையில் ஐ என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம்...!!

தியேட்டர்ல செம கூட்டம். ஞாயிற்றுக் கிழமை வரை டிக்கெட் விற்றாகிவிட்டது. டிக்கெட் விலை ரூ. 250.  ஏசி இல்லாமல், சீட்டெல்லாம் உடைந்து கிழிந்து கிடக்கும், துப்புறவு இல்லாத தியேட்டரில் இந்த விலை கொடுத்து இந்தப் படத்தைப் பார்க்க ஐந்து நாட்களுக்கு ஃபுல் என்றால்...   தமிழ் நாட்டில் மட்டுமே இந்நேரம் இந்தப் படம் 150 கோடி வசூலை தாண்டியிருக்கும் என்பது என் சிற்றறிவு சொல்லும் கால்குலேஷன்...!!!  ஆக இந்தப் படம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப் படமே...!!!

டைட்டில் போடும் போதே மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு வரும் அளவிற்கான விசில் சத்தம் ஷங்கர் பெயர் வரும் போது வந்தது ஒரு பெரிய ஆச்சர்யம்.  அந்த விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் படம் நெடுகிலும் படம் முடிந்து எழுந்து வரும் போது வரை வருவது தான் படத்தின் வெற்றி...!!!

எனக்கு உன் சமையல் அறையில் படமும் பிடிக்கும்....   இந்த ஐ படமும் பிடித்திருக்கிறது....!!   நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்...  படிப்பு சரியா வராமல் ஸ்போர்ட்ஸில் கோல்ட் மெடல் வாங்குகிற மாணவனையும் பிடிக்கும்...!!   இவனிடம் விளையாட்டுத் திறன் இல்லை என்று திட்ட மாட்டேன்.... அவனுக்கு படிப்பு வரவில்லை என்று காதைப் பிடித்து திருகவும் மாட்டேன்...!!!  அவரவருக்கான தளத்தில் சிறப்பாகச் செய்கின்றார்களா என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும்...!!!

அந்த வகையில் ஷங்கர் ஏமாற்றவில்லை. தியேட்டருக்கு வந்திருந்த 90 சதவிகிதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தட்டாமல் நிறைவேற்றியிருக்கின்றார்.

முதலில் பி.சி. ஸ்ரீராம்.... எனக்குத் தெரிந்து அவருக்கு இந்தப்படம், ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்...!!! கர்நாடிக்கில் வெளுத்து வாங்கும் ஒரு நபர் வெஸ்டர்னிலும் அடித்து தூள் கிளப்புவதைப் போல தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்திருக்கின்றார்.  சீனா சைக்கிள் சண்டையும், ரயில் சண்டையும் இன்னமும் கண்ணில் அப்பிக்கோண்டேயிருக்கின்றது...!!! சீனத்து இயற்கைக் காட்சிகளும், அந்த அற்புதமான பூக்களூம்.... கிடக்கட்டும்....    சென்னையின் ஹவுசிங் போர்ட் தெருக்களையும், பின்பக்கத்து சாக்கடைகளையும் தியேட்டரில் அப்படியே மணக்க வைத்து விட்டிருக்கிறார்....!!!

ஏ,ஆர், ரஹ்மான இன்றைய இளைஞர்களின் லேட்டஸ்ட் டேஸ்ட்டுக்கு தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு விட்டார்....!!! இனி சம கால இளைஞர்களும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பின்னனி இசையை படத்தின் நான்கு தளங்களிலும் அததற்கானதை கொடுத்து பட்டையைக் கிளப்பி விட்டிருக்கின்றார்...!!  பாடல்களின் இசைக் கோர்வைகள் மற்றும் தாளக்கட்டுக்களில் அராஜகம், அதகளம் பண்ணியிருக்கின்றார். சம கால இசையமைப்பாளர்கள் அதில் நிறையை படிக்க வேண்டும்.

ஷங்கர்....  எல்லோரிடமும் வேலை வாங்குவது தான் அவர் வேலை. அதில் அவர் எப்பொழுதுமே தெளிவாக இருக்கின்றார். சுஜாதா, பாலகுமாரன் இல்லாமல் தவிப்பதாக சிலர் எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படியெல்லாம் எதுவும் புலப்படவில்லை.  ஏனெனில் கதை மற்றும் வசனங்கள் பற்றி அவர் அவ்வளவாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.  காட்சிக்குக் காட்சி படம் பார்ப்பவர்களை குஷிப்படுத்த வேண்டும், பரவசமடைய வைக்க வேண்டும், சொக்க வைக்க வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், பரிதாபப்பட வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்.....  என்ற வரிசைப்படி அடுத்தடுத்து காட்சிகளை வைத்து...., சஸ்பென்ஸ், டிவிஸ்ட் என்றெல்லாம் வைப்பது ஓல்ட் ஸ்டைல் என்றெண்ணி, படத்தின் கதையை முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே மக்களிடம் சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்து பார்க்க வைக்கின்றார்.

அதனால் தான் படம் முடிந்த பிறகும் ஒரு மூன்று நிமிடங்கள் எண்ட் கார்ட் போடும் போதும் ஒருவர் கூட சீட்டை விட்டு எழுந்திராமல் உட்கார்ந்து விக்ரம் மீண்டும் உருமாறுவதை ஆவலுடனும், ஏக்கத்துடனும் பார்த்துவிட்டு.... கைகளை சந்தோஷத்துடன் தட்டிவிட்டு எழுகின்றனர்....!!  இந்த இடத்தில் தான் டைரக்டர் ஷங்கரின் வெற்றியும், ரசிகர்களின் நாடித்துடிப்பை அவர் பிடித்து வைத்திருப்பதையும் உணர முடிகிறது.!!

எம் என் சி கம்பெனிகளுக்கான விளம்பரங்கள் மட்டுமின்றி பிளாட் புரொமோட்டர்ஸ் விளம்பரம் வரையிலும் அடித்து தூள் கிளப்பியிருக்கும் ஷங்கருக்கு விளம்பரத் துறையிலும் நல்ல எதிர்காலம் இருப்பதை இந்தப்படத்தின் குறியீடாகக் கொள்கிறேன். சில விளம்பரங்கள் நம்மையறியாமல் சபாஷ் போட வைக்கின்றது.... தியேட்டரில் சென்று பார்த்து அனுபவித்தால் தான் புரியும். அவற்றில் பிசி. ஸ்ரீராமும், ரகுமானும், டூ பீஸில் வரும் ஹீரோயினியையும் சேர்த்து வைத்து ஷங்கர் அதகளம் பண்ணியிருக்கின்றார். ராஜீவ் மேனனே கூட ஜெலுஸில் சாப்பிட்டிருப்பார்...!

அடுத்ததாக ஒன் அண்டு ஒன்லி விக்ரம். கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் அவர். மனுஷன் நீண்ட காலம் வாழ வேண்டும். தயவு செய்து, அதி மேதாவித்தனமாக விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவருடைய உழைப்பை யாரும் குறை சொல்லாதீர்கள். நல்ல கலைஞனை காயப்படுத்தும் சமூகம் உறுப்படாது!! விக்ரம் உழைப்பிற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம் என்றிருக்கின்றேன். இந்தப்படத்தில் விக்ரம் நடிப்பு பற்றி எழுத ஆரம்பித்தால் இது மாதிரி இன்னும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டியிருக்கும்.... அது பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டி, ஏமாற்றத்தைக் கூட தரலாம்.... ஆகவே சாதாரணமாக எந்த முன் முடிவும் இன்றி சென்று இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும்......

நிச்சயம் பைசா வசூல்....!!!

Tuesday, January 13, 2015

ஜல்லிக்கட்டுன்னா.... ஏன் மல்லுக்கட்டுறாஆஆஆ??!!


ஒவ்வொரு வருஷமும் ஜல்லிக்கட்டு நடக்கும் போது சொம்ப தூக்கிக்கிட்டு அம்பிகளும் அவா ஆத்து ஆண்ட்டிகளும் வந்து குந்திகிடுறாய்ங்க. டீவில பேப்பர்ல, கோர்ட்லன்னு ஒரே புலம்பல்.... மாடுகளை எல்லாம் கஷ்டப்படுத்துறதா...!!!
எனக்கு நினைவு தெரிஞ்சி, ஜல்லிக்கட்டு நடக்கறச்சே எல்லாம், மாட்டுக்கு அடிபட்டு காயமாயிடிச்சி, மாடு செத்துப்போச்சின்னு வந்த செய்தியை விட, இத்தனை இளைஞர்கள் மாடு முட்டி காயமடைந்தனர், இத்தனை இளைஞர்கள் உயிரிழந்தனர்ன்னு தான் செய்தி வருது....!!!
ஒரு இனம் தன்னுடைய வீரத்தை, மன உறுதியை, தைரியத்தை, மனக்கட்டுப்பாட்டை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும், உலகத்திற்கு எடுத்துக்காட்டவுமான களம் அல்லது தளம் அது...!!!
அதில் இவர்களுக்கு என்ன வந்தது??? எவனும் எங்கேயும் வீரத்தைக் காட்டிடக் கூடாது... ஹிந்தி கத்துண்டா வேலை கிடைக்கும்ன்னு நம்பிட்டிட்டிருக்குற சொம்பைகளாகத் தான் எல்லோரும் மாற வேண்டும்... எல்லோருமே தன் சொந்த ஊரில் இருந்து மாற்றுப் பிரதேசத்தில் இருந்தால், முதலில் மொழியை அடமானம் வைக்கும் போதே தன்மானம், வீரம், போராட்ட குணம் இவை அத்தனையும் கூடவே அடகு போய்விடும் என்பது தான் சூத்திரம்...!!
இந்த அடமானத்திலிருந்து அவற்றையெல்லாம் மீட்க, அவனவன் சொந்த ஊரில் நடக்கும் இது மாதிரியான வீர விளையாட்டுக்களும்,,பாரம்பரிய விழாக்களும் தான் ஒரே உந்துசக்தி!!!
அதையும் அடித்து நொறுக்கிவிட்டால், இவன் காலம் முழுவதும் சொம்பையாகவே இருக்க வேண்டியது தான். ஒரு மூன்று பேர், இவனைப் போன்ற 97 சொம்பைகளை எப்பொழுதும் அடிமையாகவே வைத்து ஆளலாம்...!!!
ஜல்லிக்கட்டை முடக்கியாச்சின்னா, அடுத்தடுத்து, வீரன் பூஜை, முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கிறது, சுடலைமாடனுக்கு படையல் போடுவது, மாரியம்மனுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்துறது.... இப்புடிக்கா போயி பொங்களுக்கு விடுமுறை இல்லன்னு அறிவிக்கிறது வரைக்கும் போயி நின்னு... கடேசில திரும்பிப் பார்த்தா, நம்ம அடையாளமே இல்லாம அம்மணமா நிக்க வேண்டியிருக்கும்...!!!

இது ஒட்டுமொத்த தமிழகத்தின்..., தமிழர்களின் பிரச்சினை...!!

இதெல்லாம் வேண்டும்.... தடைசெய்யக் கூடாதுன்னெல்லாம் போராட்டம் செய்வதை விட... உலகறிய கபடித் திருவிழாவை நடத்திடுவோம்.... தமிழகத்தின் சிறு சிறு கம்பெனிகளில் துவங்கி... படிப்படியாக பெரிய நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஸ் பிடித்து, வருடத்திற்கு ஒரு முறை ஒன்னரை மாதங்களுக்கு கபடி லீக் மேட்ச் நடத்தி, கிரிக்கெட்டை ஓரம் கட்டுவோம், கபடியை மக்கள் மன்றத்தில், இளைஞர்கள் மட்டத்தில், பெண்களை ஈர்க்கும் வகையில் பிரமோட் செய்வோம்...!
கிரிக்கெட் விளையாடி நிறைய பேர் உயிரிழந்திண்டிருக்கா... அதுனால கிரிக்கைடை தடை செய்வோம்ன்னு ஒரு ரிட்டும் போட்டு வைக்கலாம். கிரிக்கெட் அடிவாங்கும் போது அலறித்துடிப்பார்கள்... நம்மை நோண்டுவதை விட்டுவிட்டு, அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்தை திசை திருப்புவார்கள்.

ஒரு கோட்டை சின்னதாக்க அதை அழிக்க வேண்டாம்... அதனருகில் நாம் ஒரு பெரிய கோட்டை போடுவோம்...!

Tuesday, December 30, 2014

போக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா?!


மழையும் விடாம பேயுது, அரசுப் பேருந்துகளும் ஓடவில்லை... மக்கள் நேத்திக்கு காலைலேர்ந்து அல்லாடித்தான் போயிருக்காங்க.
யாருமே எதையுமே கண்டுக்கிட்டது மாதிரி தெரியல. அரசுன்னு ஒன்னு நடக்குதான்னே புரியமாட்டேங்குது. இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து ஒன்னுக்கு ரெண்டு மூனு தபா, எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏத்தியிருக்கு, ஆனா மூனு வருஷத்துக்கு ஒரு தபா ஏத்த வேண்டிய சம்பளத்தை ஏத்தாம இந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போக்கு காமிச்சிட்டிருக்கு...!!
அதாவது கலைஞர் ஆட்சியில இவிங்களுக்கு எல்லாம் ஷெட்யூல்படி மூனு வருஷத்துக்கு ஒரு தபா சம்பளம் ஏத்துனாங்க. அதுக்கப்பறம் நாலரை வருஷமா இன்னும் நயா பைசா ஏத்தல..!! நாலரை வருஷத்துக்கு முன்னாடி நானூறு ரூவா கரண்ட்டு பில்லு கட்டுனவங்க இன்னிக்கு 1000 ரூவா கட்டுறாங்க. அன்னிக்கு மாச மளிகை சாமான் 1200 ரூவாய்க்கு வாங்குனது இன்னிக்கு அதே சாமன்களை 2100 கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. பால் விலையும் அப்படித்தான்...! ஸ்கூல் ஃபீஸ் கேக்கவே வேணாம்...!!
இப்புடி இருக்கறச்சே அவங்க என்ன தான் பண்ணுவாங்க?

நல்லா யோசிச்சி பாருங்க மக்களே.... இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து என்னென்ன பண்ணினாங்கன்னு?! மொதல்ல உள்ளாட்சி தேர்தல் வந்திச்சி... அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது கூட்டுறவு தேர்தல் வந்திச்சி அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது பார்லிமெண்ட் தேர்தல் வந்திச்சி, அதுல எல்லாம் பிஸியானாங்க. இதுல ஒவ்வொரு துறையிலயும் நாலஞ்சு தபா, மந்திரிங்க, அதிகாரிகள் எல்லாம் மாத்துனாங்க. எதிர்க்கட்சிக்காரங்கள ஒடுக்குறது, சினிமாக்காரங்கள கேஸு போட்டு கைக்குள்ள கொண்டு வர்றது, கடந்த ஆட்சியில் போட்ட திட்டங்களை எல்லாம் எப்புடி முடக்குறதுன்னு யோசிச்சி யோசிச்சே கோர்ட்டு கேஸுன்னு அலையுறது..... நடுப்புற அப்பாவி மக்களை ஏமாத்த, அம்மா தண்ணி, அம்மா உப்பு, அம்மா மளிகை, அம்மா உணவகம், அம்மா மெடிக்கல்ஸ்னு திறந்து வெளம்பரம் தேடிக்கிறது...

இப்புடியா போயிட்டிருந்து, கடேசில, சொத்துக்குவிப்பு கேஸுல கடந்த ஏழெட்டு மாசமா இன்வால்வ் ஆகி, ஜெயிலுக்குப் போயி, டம்மி முதல்வர ஒக்கார வச்சி, அவங்க ஆட்சிய போட்டுடக் கூடாதுன்னு மக்கள்ங்கற வரிசைல ஏகப்பட்ட் போஸ்ட்டிங்க போட்டு அதை மெய்ண்டெய்ன் பண்ணி...... மினிஸ்டருங்க எல்லாரையும் பால் குடம், காவடி, தீமிதி, அலகு குத்துதல்ன்னு அலைய விட்டு......

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ... இதெல்லாம் செஞ்சிட்டிருந்தா, நாட்டுல உருப்படியான விஷயம் எதத்தான் கவனிக்க முடியும்???
வேற வழியே இல்லாம இந்த போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்குல உட்கார்ந்துட்டாங்க.....!!
அடுத்தடுத்து யாரு யாரெல்லாம் இப்புடி உட்கார போறாங்களோ தெரியல....!! நினைச்சாலே கெதக்குன்னு வருது...! ஏன்னா? இவங்க பண்ணுற தப்பெல்லாம் நம்ம (மக்கள்) தலையில தான வந்து விடியுது...! அதான்!!!
அதனால தான் நான் அடிக்கடி சொல்றேன்.....!
ஓட்டுப்போடும் போது, ஊடகங்கள் சொல்றதை எல்லாம் அப்படியே நம்பி உணர்ச்சிக்கு அடிமையாகி ஓட்டுப்போடாம, யாரு வந்தா, நம்ம அன்றாட வாழ்க்கையும், தொலைநோக்கிலான வளர்ச்சியும் நன்றாக இருக்குமோ அவங்களுக்கு ஓட்டுப்போடுங்கன்னு....!!!


Monday, December 29, 2014

மாதொரு பாகனும்... திராவிட அரசியலும்..!


இத்தனை காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஊன்றி தமிழகத்தில் மட்டும் ஒரு சிறிய ஆளுமையைக் கூட பதிவு செய்ய இயலாமல் இருந்த பாஜக....
இப்பொழுது மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய மிருகபலத்துடன் ஆட்சியைப் பிடித்து அமர்ந்து விட்ட பிறகு... இது தான் தமிழகத்தில் காலூன்ற சரியான தருணம் என்று திட்டமிட்டு, தனக்கிருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி அனைத்துவிதமான உபாயங்களையும் இங்கே இறக்கிவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
அந்த உபாயங்களில் ஒன்று தான் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் இன்னபிற பரப்புரைகளை சாம, பேத, தான, தண்டங்களைக் கொண்டு தடை செய்கின்ற நடவடிக்கைகள்.
அந்த வகையில் பிகே என்ற பகுத்தறிவுப் பாடத்தைச் சொல்லும் திரைப்படத்தை தடை செய்த கையோடு......
நான்காண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட மாதொருபாகன் என்ற நூலை இந்துமத அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டதாகச் சொல்லி, வன்முறை வெறியாட்டங்கள் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தடை செய்ய தமிழக பாஜக தன் கிளைக் கழகங்கள் மூலமாக களமிறங்கியிருக்கின்றது.
அந்தப் புத்தகத்தை படித்தவர்கள் எல்லாம் அப்படியே பாஜகவுக்கு எதிராக வாக்களித்துவிடப் போகின்றார்களா? அல்லது அந்தப் புத்தகம், அப்படி என்ன அவ்வளவு வேகமாக விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆரியத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து இதைவிட மோசமாகவும், நேரிடையாகவும் எழுதப்பட்ட புத்தங்களை வெளி வந்திருக்கத்தான் இல்லையா???
இப்படி ஒரு புத்தகம், அதிலும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களோடு வெளி வந்திருப்பதே, இப்பொழுது பாஜகவின் பலமான எதிர்ப்புக்குப் பிறகு தான் இங்கே பலபேருக்கு தெரியவே வந்திருக்கின்றது...!
மேலும் இதற்கெல்லாம் முன்னதாக, ஆரிய மாயை, கம்பரசம், அர்த்தமற்ற இந்துமதம்...... இப்படியாகவெல்லாம் எண்ணற்ற இந்து மத எதிர்ப்புப் புத்தகங்கள் தமிழகத்தில் வெளி வந்து அவை அனைத்தும் இன்றுவரையிலும் கூட விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டு தான் இருக்கின்றது...!
ஆனால் பாஜக இன்றைக்கு, அந்தப் புத்தங்களை தடை செய்ய முன்வரவில்லையே ஏன்? அதைச் செய்தால், தமிழகத்தில் இன்றளவிலும் பலமாக இருக்கின்ற திராவிட இயக்கங்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அதை வெறுமனே வேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்காது. அதை காரணமாக வைத்தே, தமிழகத்தில் நீர்த்துப் போயிருப்பதாக பாஜகவினரால் நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட இயக்க சித்தாந்தங்கள், வெகு வேகமாக காட்டுத் தீ போன்று இங்கே இளைஞர்கள் மத்தியில் பரவ வைக்கப்பட்டுவிடும்...!
திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை இங்கே நீர்த்துப்போக வைத்தால் தான், தமிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியும் என்ற நிலையில் தான், முன்னதாக தமிழ் தேசியம் மற்றும் ஜாதிக் கட்சிகள் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை தமது ஊடக பலத்தைக் கொண்டு இங்கே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றது பாஜக.

ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தே பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு இங்கே ஒரு நூல் வெளியாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலுமா? அது மட்டுமின்றி, உனக்கு கொடுக்கப்பட்ட வேலை திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை நீர்த்துப்போக வைப்பது மட்டுமேயன்றி, ஆரியத்திற்கு எதிராக உன் துப்பாக்கி முனையை திருப்புவது அல்ல என்பதை அவர்களுக்கு ஆணித்தரமாக புரிய வைக்க வேண்டாமா???
அதைத்தான் இப்பொழுது பாஜக செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
இனி தமிழகத்தில் உள்ள உண்மையான பொது நலனுடன் செயல்படக்கூடிய தமிழ் தேசியவாதிகளும், ஜாதியக் கட்சிகளின் பின்னால் அணி வகுத்திருக்கும் நியாயமான இளைஞர்களும், ஆரியத்தால் போஷாக்கோடு வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் தலைவர்களின் பேச்சை நம்பி ஏமாறாமல், திராவிடத்தின் அணியில் ஒன்றிணைய வேண்டும்.
தனியாக நின்று உங்களால் ஆரிய அடக்குமுறையை நிச்சயமாக தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நம் பங்காளி சண்டைகளை எப்பொழுது வேண்டுமானாலும் தீர்த்துக்கொள்ளலாம், ஆனால் ஆரிய சதியில் சிக்கினால், மீண்டும் அடிமையாக நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து ஓரணியில் திரளுங்கள்.


Monday, December 22, 2014

மகளிர் சுய உதவி குழுக்களும், மதவாத ஆட்சியின் காட்டமும்...!


பொதுவாகவே எந்த மதத்தைச் சார்ந்த மத அடிப்படைவாதிகளானாலும் அவர்களது கண்களை அதிக அளவில் உறுத்துவது, பெண் சுதந்திரம் தான். பெண்களின் மீதான அடக்குமுறை, ஆளுமை போன்றவை என்பது மத அடிப்படைவாதிகளுக்கேயான அடிப்படை விருப்ப குணாதிசயம்.
மத அடிப்படைவாதத்திற்கும், மூடப் பழக்கங்களுக்கு எதிரான கொள்கையோடும் உருவானது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்றால் அதை யாரும் மறுக்க இயலாது.
அந்த வகையில், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதியை இடஒதுக்கீட்டின் மூலமும், பல்வேறு ஆட்சியதிகார சட்டங்களினாலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தலும்.... உண்மையான திராவிடக் கட்சியான திமுகழகம் தனது ஆட்சிக்காலங்களில்... பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சம உரிமை, பெண் சுயசார்பு நிலை.... இப்படியாக பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு பல செயல்திட்டங்களைத் தீட்டி அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கின்றது....!

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.., கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டு... இப்படியாக பெண்களை கடந்த 30 ஆண்டுகளில் ஆண்களுக்கு இணையாக கல்வி, வேலை வாய்ப்பு... சொத்துரிமை இப்படியாக அனைத்து துறைகளிலும் வகைகளிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் உயர்த்திக் கொண்டு வந்திருக்கின்றன.

அந்த வகையில் கிராமப்புற, அடித்தட்டுப் பெண்களையும் பொருளாதார ரீதியிலாக சுயசார்புநிலைக் கொண்ட சுதந்திரப் பெண்மணிகளாக மாற்றும் பொருட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்கான சின்னச் சின்ன குடிசைத் தொழில்களுக்கான நிதி உதவிகளையும் விற்பனை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, அதிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்திற்கு தானே நேரிடையாக ஒவ்வொரு மகளிருக்கும் சுழல்நிதியை வழங்கி, ஊக்கப்படுத்தியதன் மூலம், இன்றைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள், நாள்தோரும், வங்கிகளில் பணம் எடுப்பதும், போடுவதுமாக பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுத் திகழும் நிலையினை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால், கணவன் இறந்தால், தானும் உடன்கட்டை ஏறி உயிர்விடும் நிலையில் இருந்த பெண்களைக் காப்பாற்றி அவர்கள் மறுமணம் செய்துகொள்கின்ற அளவிற்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், இன்றைக்கு மீண்டும் உடன்கட்டையை அறிமுகப்படுத்தத் துடிக்கும் சில மத அடிப்படைவாதிகளின் அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்துக்கொண்டிருக்கும் வேலையில்....
மதவாதக் கட்சியான பாஜகவின் அமைச்சர் ஒருவர்... அதிலும் பெண் அமைச்சர்.... இந்த மகளிர் சுய உதவிக் குழுவை மூடுவதற்கான முஸ்தீபுகளைத் துவங்கி அறிக்கை விடுத்திருக்கின்றர்....!!!

இதோ... திராவிட இயக்கத்துச் சிங்கங்கள்  கலைஞரும்,  எம் கே எஸ் அவர்களும் இந்த அறிவிப்பை எதிர்த்து மிகக் காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கின்றனர். தேவைப்படுமெனில் கடும் போராட்டத்தையும் முன்னெடுக்க தயாராயிருக்கின்றார்கள்...!!!
ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ மகளிர்... அதிலும் கிராமத்தில் இருக்கின்ற பெண்களுக்குத்தானே பிரச்சினை என்று அமைதியாகக் கடந்து செல்ல முற்படுவீர்களேயானால்....
....மதவாதிகளின் அடுத்த அபிலாஷையான சமூக அநீதி முன்னெடுக்கப்படும்... இட ஒதுக்கீடுகள் தவிடுபொடியாகிடும்..., உம்முடைய வாரிசுகள் அனைவரும் இன்னும் பத்தாண்டுகளில் உங்கள் மூதாதையார் பார்த்துக்கொண்டிருந்த குலத்தொழிலைச் செய்யச் செல்ல வேண்டியிருக்கும்....!!!

பார்ப்பனரல்லாத வளர்ந்த தமிழ்ச் சமுதாயமே... இதையெல்லாம் சந்திக்க தயாராகவிருக்கின்றீர்களா????!!!!


Friday, December 19, 2014

இதற்காகவா வாக்களித்தார்கள்... மோடிக்கு?!

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ.... ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)

மோடியும், பாஜகவும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட தொழில்துறை, மின்சாரம், விவசாயம், தனிநபர்... மற்றும் இன்னபிற வளர்ச்சிகளை சுட்டிக்காட்டித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர். அங்கு நடந்த மதக்கலவரங்களை அடியோடு மறைத்து/மறுத்து, அதற்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்து, தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள், எந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் வாயிலாகவும், ஊடகப் பிரச்சாரங்களின் மூலமும் தலைகீழாக நின்று மக்களிடம் உறுதியளிதே வாக்குக் கேட்டனர்....
மேலும் இதற்கு முன்பு ஆண்ட ஐக்கியமுற்போகுக் கூட்டணி அரசு இந்துக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மக்களிடம் பரப்பவில்லை, கீதை போன்ற இந்து சமய நூல்களை தேசிய நூலாக அறிவிக்கவில்லை...., அதனால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்றெல்லாம் சொல்லி வாக்குக் கேட்கவில்லை....!
மாறாக, முந்தைய ஐ.மு ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கின்றது, கருப்புப் பணத்தை இந்தியா கொண்டுவரவில்லை, விலைவாசி உயர்கிறது, ஊழல் மலிந்து விட்டது, தொழில் வளர்ச்சி இல்லை.... இப்படியெல்லாம் சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சரி செய்வோம் என்று வாக்குக் கொடுத்துத் தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர்...!!!
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்பொழுது, இந்தியை பரப்புவோம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவோம், கீதையை தேசிய நூலாக்குவோம், ராஜபக்‌ஷேவை இந்தியாவின் நண்பனாக அறிவிப்போம், கங்கையை சுத்தப்படுத்துவோம், ரேடியோவைத் திறந்தால், ஹிந்தியில் அரசுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வோம், ரயில் கட்டணங்களை ஏற்றிவிட்டு, காங்கிரஸ் வழியில் செல்கிறோம்......
.... இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாளிகளாக இருந்து விடுவார்கள் என்று நம்பிவிட வேண்டாம் திரு. மோடி அவர்களே. அதானிக்கு நீங்கள் காட்டியிருக்கின்ற சலுகை உங்களுக்கு ஓட்டுப்போட்ட ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கின்றது. நூற்றுக்கு வெறும் 30 பேர் மட்டுமே வாக்களித்து உங்களை அரியணையில் ஏற்றியிருக்கின்றார்கள். அதாவது இந்திய மக்கள் உங்களை வெறும் கயிற்றின் மேல் மட்டுமே நடக்கவிட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு வாக்களிக்காத அந்த 70 பேரின் நம்பிக்கையை பெருவது இருக்கட்டும், உங்களுக்கு ஆதரவளித்த அந்த 30 பேர் மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமானால், முதலில் இந்த காவி கோஷங்களை ஓரம்கட்டி வைத்து விட்டு, சனாதன மனுதர்ம விவகாரங்களில் இருந்து முற்றும் முழுதாக விலகி நின்று, ஒவ்வொரு பிராந்திய மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்ப்பளித்து, சிறுபான்மையின மக்களை சகோதரத்துவத்துடன் நடத்தும் பண்போடு செயல்படத் துவங்குங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது டிரையல் மட்டுமே என்பதை புரிந்து செயல்படுங்கள். உங்களை விட மிருக பலத்துடன் அரியணை ஏறிய ராஜீவ் காந்தியையே தூங்கியெறிந்த மக்கள் தான் இந்தியர்கள் என்ற வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இந்தியா என்பது குஜராத் மட்டுமல்ல. இது ரொம்பப் பெருசு!!!


Thursday, December 18, 2014

மக்கள் முதல்வருக்கு, ஒரு அப்புறாணியின் மனம் திறந்த மடல்..!


மதிப்பிற்குறிய மக்கள் முதல்வர் அவர்களுக்கு.... ஒரு அப்புறானி தமிழக வாக்காளனின் வேண்டுகோள்....!!

மூனறை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு தேர்தல் வந்திச்சி. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆட்சி செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தரோட ஆட்சியில விலைவாசி எல்லாம் எக்கச்சக்கமா ஏறிப்போச்சின்னு நீங்க திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டிருந்தீங்க. உங்க கட்சி ஆளுங்களை எல்லாம் விட்டு முக்குக்கு முக்கு போராட்டம் எல்லாம் நடத்துனீங்க. உங்க ஜெயா டீவிய எப்ப திறந்தாலும் இதே பாட்டு தான் பாடிட்டிருந்திச்சி....

எங்க மக்களும் நீங்க சொல்றத எல்லாம் நம்பி... (நாங்க தான் அப்புறானின்னு ஏற்கனவே சொல்லிட்டேனே!) நீங்க ஆட்சிக்கு வந்தா, விலைவாசிய எல்லாம் குறைச்சிடுவீங்க, அதுனால, நாங்களும் மாசாமாசம் இன்னும் கூடுதலா சேமிச்சி சொந்த வீடு கட்டி சந்தோஷமா வாழலாம்ன்னு நினைச்சி உங்களுக்கு ஓட்ட குத்தி ஆட்சியில உக்கார வச்சோம்...!!!
ஆனா நீங்க வந்ததும் வராங்காட்டியுமா, ஒரே மாசத்துல வணிக வரியில ஐயாயிரத்தி ஐநூறு கோடி ஓவாக்கு வரிய ஏத்திப்புட்டீங்க, அதுனால, வீட்டை விட்டு வெளில போயி எந்த கடைல என்ன பொருள் வாங்கினாலும், 5 பர்செண்ட் விலை ஏறிப்போச்சி...!
அப்பாலிக்கா, மின் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்துனீங்க. அதுல மாசத்துக்கு ஐநூறுலேர்ந்து ஐயாயிரம் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆப்பு விழுந்திச்சி....!!
சரி போவுட்டும்ன்னு சொல்லி, இருக்கச்சே... திடீர்னு பஸ் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்திட்டீங்க. அதுனால என்னா ஆச்சுன்னு கேட்டீங்கன்னா.. எங்கூருலேர்ந்து 36 கிமீ தள்ளியுள்ள ஊருல தான் நான் வேல பார்க்குறேன், அதுக்கு பஸ்ஸு டிக்கெட்டு 10 ஓவா அம்பது காசு, நீங்க வெல ஏத்துனதால 20 ஓவாயா மாத்திட்டானுவோ....! அப்பண்டவுனுக்கு 40 ஓவா... ரோசிச்சி பாருங்க நெதத்துக்கு 19 ஓவா எனக்கு தெண்டம். மாசத்துக்கு 500 ரூவா சொளையா போச்சு... ஆத்தா ஒனக்கு ஓட்டுப்போட்ட தெண்டம்... எனக்கு சேமிப்புங்கற ஒரு விஷயத்தையே இல்லாம பண்ணிட்ட தாயி..!!
அதோட வுட்டியா? அடுத்ததா பால் விலைய ஏத்துன... அதுல மாசத்துக்கு மூன்னூறு ஓவா ஆட்டைய போட்டுட்ட...! நீயி ஏத்திப்புட்ட, அதனால நான் டேரக்ட்டா இழந்தது தான் இந்த தொகை எல்லாம். ஆனா, மின்சாரத்துலேர்ந்து போக்குவரத்து வரைக்கும் விலை ஏறுனதால, எல்லா பொருளும் உற்பத்தி அடக்கம் அதிகமாச்சின்னு சொல்லி இன்னும் கூடுதலா ஏத்திப்புட்டானுவோ....!!!
இந்த நேரத்துல தான் அஞ்சு மாசம் முன்னாடி ஒரு தேர்தல் வந்திச்சி. அப்ப உம்மேல கோவமா இருந்த எங்ககிட்ட நீ என்னா சொன்ன? ....போன தபா ஆட்சி செஞ்சவரு நெம்ப தப்புத்தப்பா செஞ்சிட்டாரு, அதெல்லாத்தையும் சரி பண்ணத்தான் வெலவாசிய நான் இம்புட்டு ஏத்த வேண்டீயதா போச்சி. அப்புடி ஏத்துனா தான் இந்த நாட்ட தூக்கி நிப்பாட்ட முடியும், அல்லாங்காட்டி அல்லாரும் கீழ போய்டுவோம்... அது இதுன்னு புலம்புன... அதுக்கப்பறம் வூடா வூட்டுக்கு வந்து 200 ஓவாய உங்காளுங்க கையில திணிச்சிட்டு, இந்த தபா நீங்க மாத்தி ஓட்டு போட்டாலும் மாநிலத்துல எங்கம்மா தான் முதல்வரா தொடருவாங்க, அதோட இப்ப கெலிச்சி செண்ட்ரலுக்கு போனா தான் இந்த பிரச்சினையை எல்லாம் சரி பண்ணி, வெலவாசிய குறைக்க முடியும்... அப்புடி இப்புடின்னெல்லாம் பேசுனாங்க...!!
அப்ப நாங்க கொஞ்சம் ரோசிச்சி பாத்தப்ப, இப்ப ஓட்ட மாத்தி குத்துனாலும், இந்தம்மா தான் இங்க ஆளப்போவுது. இதுக்கு ஓட்டுப்போடாம செண்டரல்ல இதுக்கு பலம் இல்லாம போச்சுன்னா, திரும்பயும் அதயே காரணம் காட்டி வெலைய ஏத்தும்ன்னு முடிவு பண்ணி, உனக்கு எம்பிக்கள் நிறையா கொடுத்தா, அங்க போயி பேசி கீசி, வெலவாசிய குறைப்பியோன்னு ஒரு நப்பாசைல, அப்பவும் உனக்கே ஓட்டப்போட்டோம்....!!!
40க்கு 37 மார்க்கு வாங்கின ஒடனே, உனக்கு மாநில முதல்வர் பதவியை விட உயர்வா மக்கள் முதல்வர்ன்னு ஒரு பதவி கிடைச்சிருக்குறதா, உங்க ஆளுங்களும், டீவியும் சொல்லிக்கிட்டு திரியறாய்ங்க. நீங்க இருந்த எடத்துக்கு ஒரு அட்டு பீஸ நீங்களே வச்சி, உங்க டைரக்‌ஷன் படியே ஆட்சி நடக்குறதா உங்க ஆளுங்களே ஒங்க டீவி பொட்டிய தொறந்தாலே, காது கிழியிற மாதிரி கத்துறாய்ங்க. நடுவால கொஞ்ச நாளு வழக்கமா போற கொடநாட்டுக்கு பதிலா, நீங்க பொறந்த ஊருக்கு பக்கத்துல இருக்குற ஒரு அக்கிரஹாரத்துக்கு போயிட்டு வந்ததா, பெரிய வரவேற்பு எல்லாம் கொடுத்து, அத எல்லா டீவி காரய்ங்களூம் லைவ் ரிலே எல்லாம் போட்டு காமிச்சாய்ங்க!!!
அத்த வுடுங்க..! ஆன இப்ப என்னடான்னா? பழைய குருடி கதவ தெறடிங்கற கதையா..., திரும்பவும் பால் கட்டணத்தை ஏத்திட்டு, அடுத்ததா இப்ப மின் கட்டணத்தையும் ஏத்திட்டீங்க....!! இதுக்கே மாசத்துக்கு இப்ப ஆயிரம் ஓவா எக்ஸ்ட்ரா துண்டு விழுது!! இதுக்கு நடுவுல இப்பத்தான் சில பத்திரிக்கை காரனுங்க, பருப்பு வாங்குறதுல ஊழல், பால் வாங்குறதுல ஊழல், முட்டை வாங்குறதுல ஊழல், எல்லாத்துக்கும் கமிஷன்,.... இதெல்லாம் பத்தாதுன்னு உங்க மினிஸ்டருங்க, ஊருல இருக்குறவன் பொண்டாட்டிய எல்லாம் தள்ளிட்டு போயிடுறான்னு வேற எழுதறாங்க....!!!
இந்த மூனறை வருஷத்துல எங்க பசங்க பல லட்சம் பேரு படிச்சி முடிச்சி, குடும்ப பாரத்தை சுமக்க வந்து நிக்கறாங்க, அவங்களுக்கு எல்லாம் வேலை கொடுக்குற மாதிரி ஒரே ஒரு தொழிற்சாலையை கூட நீங்க ஆரம்பிக்கவே இல்லை. இதுல இருக்குற தொழிற்சாலை எல்லாம் மூடிட்டு வேற மாநிலத்துக்கு ஓடுறான்... ! ஏன் ஓடுறான்? நீங்க ஏன் அவனை எல்லாம் தடுத்து நிப்பாட்ட மாட்டேங்கறீங்கன்னும் புரிய மாட்டேங்குது...!!!
மூனறை வருஷத்துக்கு முன்னாடி அப்பல்லாம் அந்த அப்புறாணி பழைய முதல்வர், துணை முதல்வர் ஆட்சியில வெலவாசியே ஏறாததனால, மாசாமாசம் கொஞ்சம் மிச்சம் புடிச்சி ஒரு அமௌண்ட் சேர்த்து வச்சிருந்தேன். அப்பவே வீடு கட்டலாம்ன்னு நினைச்ச போது, எங்க பக்கத்து வூட்டு மன்னாரு, ஏய்.., முட்டாப்பயலே, இப்ப கட்டாதடா, இந்தம்மா ஆட்சிக்கு வந்துச்சினா எல்லா வெலவாசியையும் இன்னும் குறைக்கப் போறதா சொல்லிக்கிட்டிருக்கு. இது ஆட்சிக்கு வந்தோடுன கட்டினீன்னா... சிமெண்ட்டு, கம்பி, மணலு, ஜல்லி எல்லாம் சல்லிசா கிடைக்கும்டா, இப்ப நீயி கட்டுறத விட மூனு லட்ச ஓவா மிச்சம் புடிக்கலாம்டான்னு சொன்னான்!!!
அவன் பேச்சைக் கேட்டு நானும் வெயிட் பண்ணினேன். இப்ப ஒரு மேஸ்திரிய கூப்பிட்டு, அந்தப் பணத்துக்கு ஆயிரம் சதுர அடியில வீடு கட்டித்தர சொன்னா... அந்தாளு என்னையப் பார்த்து வாயை மூடிக்கிட்டே சிரிச்சிட்டு சொல்றான்.....
......சார் இது என்ன கலைஞர் ஆட்சின்னு நினைச்சீங்களா நீங்க கொடுக்குற பணத்துக்கு ஆயிரம் சதுர அடிக்கு வீடு கட்ட?!! இப்ப நடக்குறது மக்கள் முதல்வர் ஆட்சி சார்... மக்கள் முதல்வர் ஆட்சி...!!! இந்தப் பணத்துக்கு 500 சதுர அடிக்கு வேனா வீடு கட்டித்தர்றேங்கறான்....!!!!
இப்ப சொல்லுங்க மக்கள் முதல்வரே... இதெல்லாம் நியாயமா??? என்னைய மாதிரி அப்புறாணி மக்களை எல்லாம் நம்ப வச்சி கழுத்தறுத்திட்டீங்களே...!! இது நியாயமா??!!!

சொல்லுங்க மக்கள் முதல்வரே... சொல்லுங்க...!!!!!

Wednesday, December 17, 2014

லிங்கா... படம் பார்த்த அனுபவம்..!

வழக்கம் போல பிரபல்யமான படங்களை தட்டாமல் பார்க்கின்ற அஜெண்டாவில் லிங்காவும் வருவதால், 13ஆம் தேதியே அதாவது சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு மனைவியுடன் ஆஜர் ஆகிவிட்டேன்.

மாயவரம் விஜயா தியேட்டர், பால்கனி, ஒரு டிக்கெட் 250 ரூபாய். ரஜினி படம் பொதுவாக திங்கள் கிழமை ரிலீஸ் என்றாலே அந்த வாரத்தில் எந்தக் கிழமை சென்றாலும் திருவிழாக்கூட்டம் தான் இருக்கும். ஆனால் இரவு 9.35க்கே எந்த சிரமமும் இன்றி காரை தியேட்டர் உள்ளே கொண்டு சென்று ஃப்ரீயாக நிறுத்த முடிந்தபோதே, கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போச்சு!

200 பேர் வரை கியூவில் அமைதியாக நின்று டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என் சீட்டுக்கு அடுத்து நான்கு இருக்கைகள் படம் முடியும் வரை காலியாகவே தான் இருந்தது. 

இடைவேளை விட்ட பொழுது, சுற்றும் முற்றும் பார்த்ததில், எல்லோருமே பெரிதாக சோம்பல் முறித்தபடியே, தூக்கத்தை விரட்ட ஏதாவது கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாமா என்ற தோரணையில் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

ரஜினி படம் என்றாலே இருக்கின்ற அந்த விறுவிறுப்பும், ஸ்டைலும், நகைச்சுவையும், இதிலே டோடலாக மிஸ் ஆகியிருந்தது. படம் துவங்கும் போதே, கர்நாடகாவின் சீஃப் மினிஸ்டரிலிருந்து பியூன் வரைக்கும் போட்ட நன்றி கார்டே, ஒரு கன்னட பட ஃபீலிங்கை உருவாக்கிவிட்டிருந்தது. அதே மாதிரியே படமும், அந்தக்காலத்தில் கிழவர்களான பின்பும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, ராஜ்குமார் படங்களைப் போன்றே இருந்தது.  ஆனால் தெலுங்கர்கள், கன்னடர்கள் மாதிரி நம் தமிழர்கள் கிடையாது என்பதை இப்பொழுது ரஜினி வகையறாக்கள் புரிந்துகொண்டிருக்கும். 

அந்தக்காலத்தில் இங்கே ரஜினிக்கு எஸ்.பி. முத்துராமன் மாதிரி தெலுங்கில் சிரஞ்சீவிக்கு கோதண்டராம ரெட்டி என்ற இயக்குனர் இருந்தார். இந்தப்படமும் அவரது படம் மாதிரியே இருந்து ஒருவித டப்பிங் சினிமா பார்த்த எஃபக்ட்டை கொடுத்தது தான் கொடுமையின் உச்சம்.

இளமையாகக் காட்ட ரஜியை படுத்தியிருக்கும் பாடு....  முகம் எல்லாம் வீங்கி தொங்குகின்றது...  தலைமுடி விக், கேவலத்தின் உச்சம்...  ரஜினியின் மனசு அவர் குடும்பத்தினரைப் பார்த்து விடுங்கடா பாவிங்களான்னு கூவியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

படம் வந்து இன்னும் ஒருவாரம் கூட ஆகவில்லை, காலை காட்சி விஜயா தியேட்டர் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றது.  ரஜினியின் தோல்விப்படங்கள் கூட பத்து நாட்கள் நான்கு காட்சியும் ஃபுல் ஆகும் என்பது தான் வரலாறு. குசேலனுக்குப் பிறகு அந்த வரலாறுகள் மாற ஆரம்பித்திருப்பது தான் யதார்த்தம்.

ஜஸ்டிஸ் கோபினாத், படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் சிவாஜி தன் வயதுக்கு ஏற்றவாறு கேரக்டர் எடுத்துக்கொண்டு, இன்னொரு வளரும் நடிகரோடு நடித்தது மாதிரியான படங்களை தேர்வு செய்வது தான் இனி ரஜினிக்கு வெற்றி ஃபார்முலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லை... நான் தான் ஒன் அண்டு ஒன்லி ஹீரோவாக அதிலும் இளமை ததும்பிடும் ஹீரோவாக நடிப்பேன் என்று இன்னமும் அடம்பிடித்தால், ரஜினி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அவரே தரைமட்டமாக்கிவிட்டுச் செல்லும் நிலை தான் ஏற்படும்!!!

சொல்லுங்கள் மக்களே சொல்லுங்கள்.! இப்படிக்கு மாக்களின் முதல்வர் மனசாட்சி..!!

கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக மக்கள் தலையில் பேரிடியாய் வந்து விழுந்திருக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு முற்றும் முழுதாக, ஆதி முதல் அந்தம் வரையான காரணம் என்றால் அது கடந்த காலங்களில் நடைபெற்ற திரவிட முன்னேற்ற கழக ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகள் தான்...!!! 
இப்படிக்கு மாக்களின் முதல்வர் மற்றும் திராவிட இயக்க சித்தாந்தங்களை எதிர்க்கும் கூட்டமைப்புகளின் மைண்ட் வாய்ஸ்கள்...!!!
======================================================================
மக்களே இதை உங்களுக்கு புரிய வைக்க, கொஞ்சம் தெளிவாக, விளக்கமாக, எழுத வேண்டியுள்ளதால், பொறுமையாக முழுமையாக படித்து எங்கள் பக்கத்து நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள்....!!!  இப்படிக்கும்... அதே கூட்டமைப்புக்களின் மைண்ட் வாய்ஸ்கள்...!

திமுக என்ற கட்சி முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழகத்தில் பார்ப்பரனல்லாத மற்றும் உயர்நிலை சாதிக்காரர்கள் தவிர்த்து கிட்டத்தட்ட 65 சதவிகித பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே, பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை அனுபவிப்பது கிட்டத்தட்ட 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகத்தான் இருந்தது. அவரவர் தத்தமது குலத்தொழிலையோ அல்லது கூலி வேலை செய்வதையோ தான் தொழிலாக கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரியாக ஒன்றிரண்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே நான்கைந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலையில் இருந்தது. மற்றபடி அரசு அலுவலக பணியாளர்களைத் தவிர வேறொரு வேலை வாய்ப்பிற்கான வசதியும் இல்லாத நிலையில்.... டிகிரி முடிக்கும் சொற்ப நபர்களும் வேலைக்காக மும்பை, டெல்லி, கொல்கத்தா என்று தான் செல்ல வேண்டியிருந்தது.
ஆகவே தமிழகத்தைச் சார்ந்த கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள், சராசரிக்கும் மிகக் கீழான அடித்தட்டு வாழ்க்கை நிலையினையே பெற்றிருந்த நிலையில்... அவர்களது இல்லங்களில், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், டீவி, டிவிடி, வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், தண்ணி மோட்டார், டியூப் லைட், செல்ஃபோன் ரீசார்ஜர்ஸ், ரேடியோ.... இப்படியாக எந்த மின் உபயோகப் பொருட்களுமே கிட்டத்தட்ட எந்த வீட்டிலும் கிடையவே கிடையாது....!!
வீதிகளில் கூட எங்காவது ஒரு மூலையில் வெறும் குண்டு பல்பு மட்டுமே எரியும், கிராமங்களில் அதுவும் கிடையாது. விவசாயிகளுக்கு போர்செட் வசதியும் கிடையாது.
ஆகவே தொழிற்சாலைகள் கிடையாது, பள்ளி, கல்லூரிகள் மிக மிக குறைவு, விவசாயத்திற்கும் மின்சாரம் கிடையாது, 70 சதவிகித வீடுகளில் மின் இணைப்பே கூட கிடையாது, இருப்பவர்களும் மாததிற்கு 50 யூனிட் அளவுக்கு கூட பயன்படுத்த முடியாத உபகரணங்கள் தான் வைத்திருந்தார்கள்.... இக்காரணங்களால், ஒட்டுமொத்த தமிழக மின் தேவையே இப்பொழுது இருப்பதில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இருந்தது....!!!
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களின் நிம்மதியைக் குறைக்கும் வண்ணமாக முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர ஆரம்பித்த காலத்தில் இருந்து தான், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து, அவர்கள் பள்ளி, கல்லூரி, அரசு வேலைகள் என்று நுழைய ஆரம்பித்தனர், ஒரு கட்டத்தில் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித்தார்கள். தேவைக்கேற்ப அவர்களது அரசு இன்னும் புதிது புதிதாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்க ஆரம்பித்தது. அதுவும் போதாமல் தனியாருக்கும் பள்ளி, கல்லூரி திறக்க அனுமதி அளித்தனர். இன்னும் நிறைய பேரை ஊக்கப்படுத்த, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்விக்கட்டண சலுகை, பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு உதவி... படித்த இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க, மத்திய அரசோடு கூட்டணி அமைத்து மத்திய ஆட்சிகளில் பங்கெடுத்து, அதனைப் பயன்படுத்தி, எக்கச்சக்கமான வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது.... இன்னமும் படிக்காமல், கூலி வேலை செய்யும் பாட்டாளி பெருமக்களுக்கு இங்கேயே அதிக சம்பளத்தில் வேலை கொடுப்பதற்கு, அரசு அலுவலகங்கள், சாலைகள், பாலங்கள், கிராமங்கள் தோறும் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள்... இப்படியான மக்களுக்குத் தேவையான தொலைநோக்குத்திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவதன் மூலம், இந்த பாட்டாளி பெருங்குடி மக்களுக்கும் அதிக சம்பளத்துடன் வருடம் முழுக்க வேலைவாய்ப்பை வழங்கியும், விவசாயம் பொய்த்துப்போகாமல் காப்பாற்ற, விவசாயிகள் போர்செட்டுக்களுக்கு இலவச மின்சாரம் அளித்து இன்றுவரையிலும் தமிழக விவசாயத்தைக் காப்பாற்றி வருவது, போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கி ஒரே நாளில் பல லட்சம் தமிழர்களை அரசு ஊழியர்களாக்கியது.... அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, அவர்கள் வாழ்க்கை நிலையை தரம் உயர்த்தியது.... இப்படியாக இன்னும் எழுத எழுத வந்து கொண்டிருக்கும் அளவிற்கு இன்றைய நிலையில் தமிழகத்தின் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அனைத்து மக்களின் மிகக் குறைந்த அளவிலான ஒரு நாளைய ஊதியமே 250 ரூபாய் என்ற அளவிற்கு வந்துள்ள நிலையில்....
....வந்துள்ள நிலையில்.... (கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க மக்கா)
இன்றைக்கு, மின் இணைப்பு இல்லாதே வீடே தமிழகத்தில் இல்லை, டியூப் லைட், ஃபேன் இல்லாத வீடும் இல்லை, டீவி, மிக்ஸி, கிரண்டர், அயர்ன் பாக்ஸ் இல்லாத வீடும் இல்லை, இதைத் தவிர்த்து தண்ணி மோட்டார், ஏஸி என்று பெரும்பாலான வீடுகளில் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புதிது புதிதாக வீடு கட்டுகின்றனர், குக்கிராமங்கள் வரை டியூப் லைட்டுக்களால் வீதிகள் மிளிர்கின்றன, எண்ணற்ற பெரும் தொழிற்சாலைகள், லட்சக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள்.... கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மக்களுக்குமான வேலை வாய்ப்பு இங்கேயே உறுதி செய்யப்பட்டிருக்கின்றது......
நடுவில் எம்.ஜி.அர், அவ்வப்பொழுது ஜெயலலிதா என்று வந்து இந்த வளர்ச்சிகளை ஃப்ரீஸ் பண்ணி வைத்தாலும், இந்த பாழாய்ப்போன தமிழர்கள் மீண்டும் மீண்டும் தூக்கம் கலைந்து திமுகவை ஆட்சிக்கு வரவழைத்து, இந்த வளமைகளை மீண்டும் தொடர வைத்து தமதாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்....!!!
திராவிட ஆட்சி முதன் முதலாக 1967இல் துவங்குவதற்கு முன்னால் கூட காங்கிரஸுக்கு பெரிய பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் உண்மையான திராவிட ஆட்சிக்குப் பிறகு ஒவ்வொரு தடவையும் வருகின்ற எங்களது இந்த அ திராவிட ஆட்சி, அந்த வளர்ச்சியின் வேகங்களைக் குறைப்பதற்கும், அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து செயலாற்ற முடியாமலும், எவ்வளவு சிரமப்பட்டு தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதை பொது மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!!
அவர்கள் நிறைய பள்ளிக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று திறந்து வைத்து விட்டார்கள் அதற்கு எவன் மின்சாரம் தருவது? அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டார்கள் அதற்கு யார் பணம் கட்டுவது? அவர்கள் தனி நபர் வருமானத்தை உயர்த்தி விட்டதால் அவனவன் சொந்த வீடு கட்ட ஆரம்பித்து விட்டான், அதற்கெல்லாம் அதிகப்படியான மின்சாரத்தை நாங்கள் எப்படி தரமுடியும்? அவர்கள் நிறைய சம்பாதிக்கும் நபர்கள் எண்ணிக்கையை பெருக்கி விட்டதால் ஏஸி, பெரிய பெரிய டீவி இதெல்லாம் வச்சிக்கிட்டு மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தினால் நாங்கள் என்ன செய்ய முடியும்????
மின் கட்டணத்தை உயர்த்தி, மின் பயன்பாட்ட குறைக்க வைக்கும் வழியைத்தான் எங்களால் செய்ய முடியும். இந்தப் பிரச்சினையை எல்லாம் தீர்க்க அவர்கள் எட்டு மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7600 மெகாவாட் மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவை அனைத்தும் 2011லேயே முக்கால், பாதி, கால் கிணறு தாண்டிய நிலையில் இருக்கின்றது என்று சொன்னார்கள்....
ஆனால் அதை எல்லாம் தொடர்ந்து செய்து முடித்திட திறமையான அமைச்சரோ அதிகாரிகளோ எங்களிம் இல்லை என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை? அதிகாரிகளை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கும் எங்கள் நிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் மக்களே...!! விலையில்லா ஆடு, மாடு, லேப்டாப், அரை பவும் தாலித்தங்கம், அம்மா உணவகம், ஸ்கூல் பேக், செறுப்பு, பல்பொடி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்... இப்படி உங்களிடம் ஓட்டு அறுவடை செய்ய வாரி இறைத்திருக்கும் இலவசங்களுக்கே எங்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்கும் போது, இந்த மின் உற்பத்தி திட்டங்களுக்கு எல்லாம் எப்படி எங்களால் பணம் செலவு செய்ய முடியும் என்று சொல்லுங்கள் மக்களே...!! அதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறோம்... அந்த கூடுதல் செலவை உங்கள் தலையில் கட்டண உயர்வாக வைத்துத்தானே... ஈடுகட்ட முடியும்???!!!
வெளி மாநிலத்தில் இல்லாமல் இங்கேயே குறைந்த விலைக்கு வாங்கலாமே என்கிறார் கடந்த ஆட்சியாளர், உங்களிடம் ஓட்டு வாங்க ஓட்டுக்கு 200. 500 ந்னு அவர் கொடுத்திருந்தால், இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்....!!!!
இப்பொழுது சொல்லுங்கள் மக்களே.... இந்த மின் கட்டண உயர்வுக்கு எல்லாம், நாங்கள் காரணமா? அல்லது முந்தைய திமுக ஆட்சியாளர்களின்.... அடித்தட்டு மக்களை எல்லாம் அல்ட்ரா மாடர்னாக மாற்றிய திட்டங்கள் காரணமா????

சொல்லுங்கள் மக்களே... சொல்லுங்கள்...!!!!


Tuesday, December 16, 2014

தள்ளாடுகின்றனவா.... திராவிடக் கட்சிகள்...?!

திராவிட சித்தாந்தம் இனியும் தேவையா?  திராவிட இயக்க கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கின்றதா??....

இப்படியான வாதப் பிரதிவாதங்களை, சமீபகாலமாக ஆரிய அடிவருடி ஊடகங்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வர ஆரம்பித்திருக்கின்றன.  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இலகுவாக எதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி காலூன்ற முடிகின்ற பாஜகவால், தமிழகத்தில் மட்டும் அப்படி இலகுவாக ஒரு சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்திட முடியவில்லை.

ஊழல், தனி நபர் புகழ் கெடுத்தல், மயக்கும் விளம்பரங்கள்... இப்படி எந்த மாயாஜாலங்களும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற உதவிடவில்லை....!!

இதற்கான காரணங்களை பாஜக ஆராயும் போது தான், தமிழக மக்கள் ஒரு சித்தாந்தத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் வாக்களிக்கும் முறை என்பது அந்த சித்தாந்தத்தின் வாயிலாக ஸ்கேன் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுவதும் புலப்பட்டிருக்க வேண்டும்.

அது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்ற போதிலும், அதை உடனடியாக ஆரியத்திற்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சாளர பார்வையில் மட்டுமே கணிப்பதும் மிகத் தவறானதாகும் என்பதை இப்பொழுது தான் பாஜக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அந்த சித்தாந்தத்தின் இன்னொரு பரிமாணம் அல்லது முக்கியமான பரிமாணம் என்பது ஆரியத்தின் கபடத்தில் இருந்து இங்கிருக்கும் மற்ற அனைவரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்தி பாதுகாப்பதுவே... என்பதை மிகச் சமீபத்தில் தான் புரிந்து கொண்டிருக்கின்றது!

அப்படியான திராவிட சித்தாந்தத்தின் பாதுகாப்பில், ஒட்டுமொத்த தமிழக தமிழர்களும் கடந்த அரை நூற்றாண்டில் அடைந்திருக்கின்ற பலன்கள் என்பது அளவிடற்கறியது.

அரை நூற்றாண்டுக்கு முன்னதாக பார்ப்பனரல்லாத அனைத்து தமிழக தமிழர்களின் வாழ்க்கைத் தரமும் இன்றைக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருக்கின்ற கற்பனைக்கெட்டாத வளர்ச்சியையும், ஒவ்வொரு தமிழக இளைஞரும் 50 வயதினைக் கடந்த தங்கள் வீட்டுப் பெரியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அளவில் மற்ற மாநிலங்களோடு நம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உற்று நோக்கிட வேண்டும்.  கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை கூலி வேலைக்காக் கூட வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த தமிழக தமிழர்களின் நிலை...  இன்றைக்கு தங்கள் வேலைகளுக்கு வெளிமாநில இந்தியர்களை இங்கே கூலி வேலைக்கு அமர்த்தக்கூடிய அளவிற்கு உயர்ந்திருப்பதையும் எண்ணிப்பார்த்திட வேண்டும். உடல்சார் வேலைகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இன்றைக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அறிவுசார் வேலைகளுக்காக பெருமளவில் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையினையும், உணர வேண்டும்.

ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரை நூற்றாண்டுகால ஆட்சியானது, தவறானதாக இருந்திருக்குமேயானால், இப்படியொரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்கள் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. 

இதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டிருக்கின்ற பாஜக, ஆரியத்தின் அடிவேர்களான தாங்களே இதை எதிர்த்தால் இங்கே வேலைக்காகாது என்று தான், இங்கிருக்கும் சில சில்லரைகளை கட்சிகள் என்ற பெயரில் துவங்க வைத்து, அவை எல்லாம், திராவிட இயக்கங்களுக்கான மாற்று என்ற கோஷத்தை முன் வைத்து, திராவிட இயக்கங்களை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.

பாமக, தமாக, தமிழ்தேசியக் கட்சிகள் மற்றும் இன்னபிற சாதிக்கட்சிகள் தான் பாஜகவின் இந்த வலையில் வீழ்ந்து அவர்களுக்காக இங்கே கூலி வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று புதிய தலைமுறை டீவியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் திராவிடக் கட்சிகள் தளர்ந்து போய்விட்டன என்ற பாமகவின் பாலுவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்கு பதில் சொல்ல இயலாமல், 2ஜி ஊழலை கையில் எடுத்து பாமக பாலு பேசத் துவங்கியவுடன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஊழலைப் பற்றிப் பேசும் தகுதி பாமகவுக்கு கிடையவே கிடையாது என்று அன்புமணி சம்பந்தப்பட்ட ஊழல்களையும், பாமகவின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளையும் அப்பட்டமாக பேசிப் பொறிந்துதள்ளிவிட்டார்.

ஆரியம் தற்பொழுது திராவிடத்திற்கு எதிரான மிகப் பெரிய சூழ்ச்சியுடன் களமிறங்கியிருக்கின்ற வேளையில், ஆரியத்திற்கு துணை போகின்ற கோடரிக்காம்புகளான பாமக, தமாக, தமிழ்தேசியம் போன்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இனிமேல் திமுகவும் அதன் தலைமையும் மிகப் பலமாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களிடம் மென்மையான எதிர்வினைகள் ஆற்றுவது என்பது திமுகவுக்கு வரும் தேர்தலில் மிகப் பெரும் சேதாரத்தை அளிப்பதோடு, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் சமாதி கட்டுகின்ற சூழலையும் தமிழகத்தில் உருவாகிவிடும்.

திமுகவுக்கு தன்னுடைய எதிரிகள் யார் என்று தெரியும்....   ஆனால் துரோகிகளை உடனடியாக கருவறுக்க வேண்டிய அவசர நிலையில் அது இருப்பதை திமுக தலைமை உணர வேண்டும்!!! 

Wednesday, December 3, 2014

முட்டை கொள்முதலும்.. கூமுட்டை மணியும்..!

பர்சேஸ் மணி வந்து கேண்டீன் ரோக்கா கொடுத்துவிட்டு நின்றான்...

நான் அதை மேய்ந்தவாரே...  என்னய்யா இது, ஒரு முட்டை ரெண்டு முட்டை வாங்கினாலே நாலு ரூபாய்க்கு கடைல கிடைக்குது, நீ 100 முட்டை வாங்கினதுக்கு 3.90 கொடுத்து வாங்கிருக்கியே? மொத்தமா 100 முட்டையா வாங்கினாலும் வெறும் பத்து காசு தான் குறைப்பாங்களா??

அட போங்க சார், கொஞ்சங் கூட வெவரம் இல்லாமலேயே பேசுறீங்களே...?!  இப்பல்லாம் முட்டைய மொத்தமா வாங்கினால் சில்லரை விலையை விட காசு கூடுதல் சார்...   நானா இருக்கங்காட்டி அடிச்சி புடிச்சி பத்து காசு கம்மியா வாங்கியிருக்கேன் சார்...!!

யோவ்... என்னையா? என்னை லூஸுன்னு நினைச்சியா?

நீங்க லூஸு இல்லன்னா, ஐ ஏ எஸ் அதிகாரிங்க, அமைச்சருங்க, முதலமைச்சரு, மக்கள் முதல்வர் இவிங்க எல்லாம் லூஸா சார்?

என்னய்யா ஆச்சு உனக்கு? சம்பந்தமே இல்லாம மாத்தி மாத்திப் பேசி குழப்பற?

பின்ன  என்னா சார்....  100 முட்டை வாங்கினதுக்கே, நான் பத்து பைசா கம்மியா வாங்கியிருக்கேன், ஆனா ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை வாங்க 51 காசு அதிகமா கொடுத்து வாங்கியிருக்காங்க சார்....   !!!!!

அடங்கொன்னியா.....   என்னாய்யா சொல்ற?

ஆமா சார்...  நான் உங்க கிட்ட வேலை பார்க்குறதுக்கு பதிலா என்னைய மாத்திரம் அரசாங்கத்துல இந்த முட்டை வாங்குற வேலைக்கு சேர்த்தாங்கன்னா, வருஷத்துக்கு நம்ம தமிழக அரசுக்கு இருநூறு கோடி ரூபாய்க்கு மேல மிச்சம் பண்ணிக் கொடுப்பேன் சார்...!!

அது என்னய்யா 200 கோடி ரூவா கணக்கு????!!!

தமிழ்நாட்டுல ஒரு நாளைக்கு ஒன்னாங்கிளாஸ்ல இருந்து பத்தாங்கிளாஸ் வரைக்கும் 48 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுறதா தினகரன் பேப்பர்ல போட்டிருக்காங்க சார்...!!

48 லட்சம் பேருக்கும் வாரத்துல 5 நாள் முட்டை போடுறாங்களா?  அப்புடீன்னா வாரத்துக்கு எத்தினி லட்சம் முட்டை சொல்லுங்க??

2 கோடியே 40 லட்சம் முட்டை....!

ஒரு வருஷத்துக்கு எத்தினி வாரம் சார்....?

52 வாரம் வரும்யா...

அப்டீன்னா வருஷத்துக்கு எத்தினி முட்டை சார்...?

124 கோடியே 80 லட்சம் முட்டை வருதுய்யாஆஆஆ...!!!

ஒரு வருஷத்துக்கு 125 கோடி முட்டை எல்லாம் வாங்குறதுன்னா, அத சில்லரை கடை விலையை விட கூடுதலா குடுத்து வாங்க நான் ஒன்னும் கூமுட்டை இல்ல சார்...!!!

உற்பத்தியாளர்கிட்டயிருந்து ஒரு லாபம் வச்சி ஹோல் சேல் வியாபாரிக்கிட்ட வந்து, அவங்க கிட்ட இருந்து ஒரு லாபம் வச்சி, ஒவ்வொரு ஊரு டீலருக்கும் வந்து சேர்ந்து, அவங்க ஒரு லாபம் வச்சி சில்லரை கடை காரங்களுக்கு கொடுத்து, அவங்க ஒரு லாபம் வச்சி நமக்கு தரும் போதே 4 ரூபாய்க்கு தர முடியுதுன்னாஆஆஆஆஆஆஆஆஆஆ....

அந்தந்த மாவட்டத்துல ரெண்டு முட்டை உற்பத்தியாளரை புடிச்சி,  இந்தந்த பள்ளிக்கு இவ்ளோ இவ்ளோ முட்டை தினம் ஃப்ரீ டெலிவரியா இறக்கனும்ன்னு டீல் போட்டாலே போதும் சார், வெறும் 3 ரூபாய்க்கே கூட கொண்டு வந்து கொடுத்து தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டுட்டு போவாங்க சார்...!!!

அவர் ஒன்னும் விலையை குறைச்சு கூட தர வேண்டாம் சார். நடுவுல இருக்குற ஹோல் சேல் வியாபாரி, டீலருங்க, கடைக்காரர் இவங்க மூனு பேரோட லாபத்தை நமக்கு தள்ளிவிட்டாலே போதும், நான் சொல்ற ரேட்டுக்கு ஜம்முன்னு கொடுக்கலாம்...!

அப்புடி பார்க்கும் போது வருஷத்துக்கு 125 கோடி முட்டைக்கு 1.50 மிச்சம்னா எவ்ளோ மொத்த லாபம்ன்னு சொல்லுங்க சார்???

187 கோடி ரூபாய்யா............!

அப்புடி இருந்தாலும் நீ சொன்ன 200 கோடில 13 கோடி ஷார்ட்டேஜ் வருதேய்யா???

அட போங்க சார்....!  பர்ச்சேஸுக்கு பத்து பர்செண்ட் கமிஷன் வாங்கினா கூட அதுல 13 கோடிய கவர்மெண்ட்டுக்கு கொடுத்துட்டு பாக்கிய எங்க வீட்டுக்கு வெள்ளை அடிக்க வச்சிக்குவேன் சார்....!!

என்னைய மட்டும் அந்த டிபார்ட்மெண்ட்டுக்கு அமைச்சரா ஆக்கினா முட்டைல மட்டுமே நம்ம தமிழ்நாட்டுக்கு 200 கோடி ரூவா லாபம் சம்பாதிச்சி கொடுப்பேன்....   இப்ப அந்த பணம் எல்லாம் யார் யாருக்கு பங்கா போயிட்டிருக்கோ தெரியல....!!!!

டிஸ்கி: போன திமுக ஆட்சியில மாசா மாசம் டெண்டர் விட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகமே, அங்கங்கே பர்சேஸ் பண்ண வழி செஞ்சி ஊழல் இல்லாம சந்தை விலையை விட குறைவா வாங்கின முட்டையை, இந்த ஆட்சியில் வருடத்திற்கு ஒரு டெண்டர் என்று மட்டுமே விட்டு, அதையும், மாநில அளவில் இரண்டே நிறுவனங்கள் மட்டுமே சப்ளை பண்ணும்படி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுனால தான் இவ்ளோ ஊழல்...

மக்களே இப்போ சொல்லுங்க...

திமுக ஆட்சி பெஸ்ட்டா?   அதிமுக ஆட்சி பெஸ்ட்டா?

Tuesday, December 2, 2014

மோடியின் பொருளாதாரமும்.... மு.க. ஸ்டாலின் விமர்சனமும்..!

ஸ்டாலினுக்கு பொருளாதாரம் தெரியுமா? - சுனா சாமி!!!

மோடி ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்ற நிலையில் பொருளாதாரம் சார்ந்த அவர் அரசின் செயல்பாடுகள் பணக்காரர்களுக்கு மட்டுமே பலனும் ஊக்கமும் அளிப்பதாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கின்றார்.



இதற்குத் தான் சுனா சாமி மேலே உள்ளது மாதிரியான அபத்தத்தை வாந்தியாக எடுத்திருக்கின்றார். ஒரு அரசின் செயல்பாடுகள், ஏழைபாழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பலனுள்ளதாக அமையவில்லை என்பதைச் சொல்ல ஒருவர் பெரிய பொருளாதாரப் புலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அவர் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அவர்களில் ஒருவராக இணைந்து நெருங்கி பழகினாலே..., வாழ்ந்தாலே போதும்!!

ஒரு கல்விக்கடன் வாங்கவே இங்கே அவனவன் சிங்கி அடித்துக்கொண்டிருக்கும் போது, ஸ்டேட் பேங்க்ல நம்ம பணத்தைக் கொடுத்து டிடி எடுக்கவே நாள் கணக்குல காத்து நிற்க வேண்டியிருக்கும் நிலையில், அந்த வங்கித் தலைவரையும், ஒரு ஃபெயிலியர் ப்ராஜெக்ட்டை கையில் வைத்திருக்கும் தன் தொழிலதிபர் நண்பரையும் கையோடு ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று 6000 கோடி கடன் கொடுக்க வைப்பது, அதிலும் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க கடன் கொடுக்கும் போதே.... தெரியவில்லையா? மோடி அரசின் பொருளாதார செயல்பாடுகள் யாருக்கு பலனளிக்கும் என்பதை..!!!??

அதேப் போன்று இந்தியாவின் மிகப் பெரிய அரசுத் துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவது என்று முடிவெடுத்திருப்பது கூட யாருக்கு பலன் அளிக்கும்?

டியூவுக்கு ஆட்டோ, வேன் வாங்கி ஓட்டுறவனும், முக்குக்கு முக்கு லேத்து பட்டறை வைத்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டுகின்றவர்களுக்குமா, அந்த வாய்ப்பு வரப்போகிறது???  அம்பானிகளுக்கும், டாட்டா பிர்லாக்களுக்கும், இந்துஜா, பஜாஜ் போன்ற குழுமங்களுக்கும் தானே அது பயன்படப்போகிறது?!

ஒரு தொழிலில் லாபம் இல்லை என்றால் எந்த தனியார் நிறுவன முதலாளியாவது அதில் முதலீடு செய்வானா?! இதோ சில குறிப்பிட்ட வழித்தடங்கள் மட்டும் முதலில் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமாம்.

முதலில் அவர்கள் அதில் பணத்தைப் போட்டு, நல்ல பல வசதிகளை இப்பொழுது இருக்கின்ற கட்டணத்திலேயே பயணிகளுக்கு வழங்குவார்கள். நல்ல வேகமான சேவையையும் வழங்குவார்கள். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதன் மூலம் மட்டுமே ஈடுகட்டி விடுவார்கள். இதை மக்களுக்கு காட்டி விளம்பரப்படுத்தியே, மொத்த ரயில்வேயும் ஐந்து ஆண்டுகளுக்குள் இவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுவிடும். மொத்தமாக தனியார் கைகளுக்கு ரயில்வே வரும் பொழுது அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணமாக இருக்கும்! மக்களுக்கும் அப்பொழுது தான் புரியும்..!!

இந்த இடத்தில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கேட்டிற்கு காரணமே மிக அதிக ஊதியம் பெறும் பொறுப்பற்ற ஊழியர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதற்கு மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்கள்!!

இந்த இரண்டு விஷயங்களையும் ஒரு நல்ல அரசானது இரும்புக்கரம் கொண்டு சரிசெய்தாலே, அரசுத் துறை நிறுவனங்கள் தனியாரை விட குறைந்த கட்டணத்தில் மிக அதிக சேவைகளை வழங்கிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் இவர் செய்வார் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக, நிர்வாகத்தை சீர் செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பேன் என்பது யாருக்கு லாபமான பொருளாதாரக் கொள்கை என்று சொல்வதற்கு பெரிய பொருளாதாரப் புலியாகவெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை புரோக்கர்களே....!!

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் நலனில் உண்மையான அக்கரை இருந்தாலே போதும்...!!

அன்றைக்கு தமிழக பேருந்துகளை ஓரிரவில் அரசுடைமை ஆக்கினாரே தலைவர் கலைஞர்.....  அதன் காரணமாகத்தான் இன்றைக்கும் இந்திய அளவில் தமிழகத்தின் பேருந்துக் கட்டணமானது மிகக் குறைவாக இருக்கின்றது. அது மட்டுமின்றி, மிகக் குறைந்த மக்கள் வசிக்கின்ற குக்கிராமங்களுக்கும், பயணிகள் அதிகம் வராத இரவு மற்றும் அதிகாலை வேளையிலும் கூட நட்டத்தைப் பொருட்படுத்தாமல் அது சேவை என்பதாக தமிழக அரசு போக்குவரத்துத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மோடியின் அடியாட்கள் போன்று செயல்படும் சில நபர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கருத்துக்கு நக்கலாக பதில் சொன்னாலும், நேற்றைய புதிய தலைமுறை வாசகர் வாக்கெடுப்பில் தமிழக மக்கள் நச் என்று தளபதியின் கருத்தை ஆதரித்திருக்கின்றார்கள்.

ஆகவே இனி....

தளபதியின் வழியே...   தமிழகத்தின் வழி...!

Saturday, September 6, 2014

விஜய் டீவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி... தேவராகம்

விஜய் டீவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி... அதில் நடக்கின்ற பாரபட்சங்கள் பற்றிய ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவ்வப்பொழுது அதில் கிடைக்கின்ற அற்புதமான இசை விருந்துக்காக அதை தொடர்ந்து பார்ப்பதுண்டு....
அந்த நிகழ்ச்சி பற்றிய ஆயிரம் குறைகளில் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு உரிய அங்கீகாரமோ, அவரது பாடல்களை வெகுவாக புறக்கணிப்பது போலவோ எனக்கு பெரிய வருத்தம் இருக்கும். நேற்று அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டிருக்கின்றார்கள்.


தேவராகம் என்ற தலைப்பிலேயே தேவா அவர்களை வரவழைத்து அவர் முன்னாலேயே அவரது அற்புதமான சில பாடல்களை போட்டியாளர்கள் பாடும் நிகழ்வு அது. மனிதன் ரொம்ப யதார்த்தவாதியாகவும், நான் தான் பிரம்மா, நான் தான் கடவுள், நான் தான் புனிதவான்... லொட்டு லொசுக்குன்னெல்லாம் எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையா, எல்லோருக்கும் சமமானவராய் அந்த இடத்தில் அவர் செயல்பட்டது, அவரது பாடல்கள் மேலான மரியாதையை இன்னும் கூட்டியது.
அவரது பாடல்களில் சில மிகுந்த நுணுக்கமானதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் போன்று பாடகர்களுக்கு சவால் விடக் கூடியதாகவும் ஆச்சர்யப்படுத்தும். அந்த வகைப் பாடல்களில் கடோற்கஜா பாடல் எத்தனை முறை கேட்டாலும் என்னை ஆயாசப்பட வைத்திருக்கின்றது. அதை ஒரு சின்னப் பெண் திக்கித் திணறி... தட்டுத்தடுமாறி பாடி முடித்தது...
இன்னொரு குட்டிப்பெண், நேருக்கு நேர் பட ஆஷா போன்ஸ்லே பாடலை அட்டகாசமாக பாடி முடித்த போது அரங்கமே ஆர்ப்பரித்தது. வார்த்தைக்கு வார்த்தை எத்தனை சங்கதிகள், எத்தனையெத்தனை பிருகாக்களை அநாயாசமாக புகுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறார் மனுஷன்?!
நேருக்கு நேர் படப் பாடல்கள் எல்லாம் அப்போ வெகு பிரபலம். இளையராஜாவை ஏ.ஆர்.ஆர் தான் ரீப்ளேஸ் செய்தார் என்று இன்றைய இளைஞர்கள்
எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். அது ஓரளவிற்கு உண்மை எனினும், அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டுக்கொடுத்தது தேவா தான். என்பதுகளின் கடைசியில் வந்த..., இளையராஜா பெரிய அளவில் ஸ்கோர் செய்த ராமராஜனின் படங்களுக்கே தேவா உள்ளே நுழைந்து அதே இசை விருந்தை மக்களுக்கு படைக்க ஆரம்பித்து விட்டார்....
அதன்பிறகு அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் படங்களுக்கே கூட ஒரு கட்டத்தில் ஆஸ்தான இசையமைப்பாளராக தேவா மாறிப்போனார். ஏ.ஆர்.ஆர் உச்சம் தொட்ட நிலையில் கூட கமலின் அவ்வை ஷண்முகியில் அவர் போட்ட மெலடியை ரஹ்மான மிகவும் ரசித்ததாகச் சொல்லியிருக்கின்றார்.
நம் தமிழர்களிடம்... குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திடம் தான் என்று எண்ணுகிறேன்... யாரையாவது எதற்காவது பிடித்து விட்டால், மற்றவர்களை உதாசீணப்படுத்துவதும், புறக்கணிப்பதும், அவமதிப்பதுமான செயகளிலேயே ஈடுபடுவது எனக்கு விநோதமான பழக்கமாக தெரிகிறது. இளையராஜாவை பிடித்திருந்தால், தேவாவை காப்பி பேஸ்ட் என்று கிண்டல் செய்வது, ரஹ்மானை கேவலமாக பேசுவது என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சிறைக்குள் அமர்ந்துகொள்கின்றார்கள்.
ஒரு நல்ல இசை ரசிகன், கலை ரசிகன் என்பவன், நிச்சயமாக நல் இசை எங்கிருந்தாலும் அதைத் தேடிப்போய் ஆராதிப்பான், தன் சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்வான். நமக்கு காரியம் தான் முக்கியம்... அதாவது நல் இசை தான் முக்கியம். அதற்காக காரணத்தை அதாவது... இசையமைப்பாளர்களை பிடித்துக்கொண்டு மற்ற இசையமைப்பாளர்களின் நல் இசையை எல்லாம் புறக்கணிப்பதால் நட்டம் நமக்குத் தான்.
தமிழகத்தைச் சார்ந்த தமிழ் இசையமைப்பாளர் எவரிடமிருந்து எந்தவொரு நல்ல பாடல் நமக்குக் கிடைத்தாலும் நாம் அதை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். இசையமைப்பாளர்களுக்குள் நல்ல போட்டியை ரசிகர்களான நாம் தான் ஏற்படுத்த வேண்டும். அந்தப் போட்டியின் வெளிப்பாடு நிச்சயமாக மேலும் மேலும் சிறந்த இசையாகத்தான் இருக்கும்.
நமக்கென்று ஒரு கூட்டம், அவர்கள் நாம் எதைக் கொடுத்தாலும் புகழ்வார்கள் என்றால் அவர்களிடம் புதுப்புது இசைக் கோர்வைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நம் தமிழ் இசைப் பிரியர்கள் இனி இசையமைப்பாளர்களை பிடித்துக் கொண்டிராமல், இசையை மட்டும் பிடித்துக்கொள்வோம். அவர்களிடம் நல்ல போட்டியை உருவாக்கி இன்னும் பல நல்ல பாடல்களை உலகத்திற்கு நம் தமிழகத்தின் பரிசாக வழங்குவோம்...!

Wednesday, August 6, 2014

அது வேற வாய்! அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு!



இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது...!!!



தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோகம் இழைத்து விட்டது என்று இது போன்ற சந்தர்ப்பவாத..., மானம் கெட்ட...., கூலிக்கு மாரடிக்கும்..., சில பிரபலங்கள் உணர்ச்சி பொங்க பேசுவதை எல்லாம் கேட்டு திமுகவுக்கு எதிராக வாக்களித்த, பொங்கித் தீர்த்த, வசை பாடிய.....



உண்மையான நடுநிலை தமிழர்களும், இளைஞர்களும்....    கவிஞர் தாமரையின் இந்த இரட்டை நாக்குப் பேச்சை ஒரு ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவிட்டு கேட்டு உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.



ஏதோ ஒரு வகையில்... குறிப்பாக சினிமாத்துறையாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டர்....  அதில் வளர்ந்து ஓரளவிற்கு பிரபலமாகியிருப்பவரை... அவருக்கு குறைந்த அல்லது சீரான வருமானம் மட்டுமே வந்து கொண்டிருக்கின்ற நிலையில்.... அவர்களைப் பிடித்து, ஏதோ ஒரு வகையில் வலையில் விழ வைத்து... ஏதாவது ஒரு பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக உணர்ச்சி பொங்க பேச வைப்பது...,  அவர்கள் பேச்சுக்களை நம்புகின்ற உண்மையான நடுநிலை வாக்காளர்கள், திமுகவுக்கு எதிராக வாக்களிப்பது போல மடை மாற்றுவது மட்டுமே இவர்கள் நோக்கம்....



இப்படி சில உதாரணங்கள் சொல்ல வேண்டுமானால், இந்த கவிஞர் தாமரை, சில சினிமா டைரக்டர்கள் (பாரதிராஜா உட்பட), தமிழருவி மணியன், வைக்கோ, சீமான், சரத்குமார், பழ கருப்பையா, நெடுமாறன்,... இப்படியாக பலரை பேச வைத்து உண்மையான நடுநிலையாளர்களையும், எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய இளைஞர்களையும் திமுகவுக்கு எதிரக திருப்புவது....



இது தான் சமீப காலமாக தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியில் செய்யப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் தான் இன்றைக்கு தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான் இரட்டை நாக்கு வேடதாரிகளிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்....



இதுவரை தமிழகத்தில்....



கலைஞர் ஆட்சியே நல்லாட்சி...!!



இனி வருங்காலத்தில்....



தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!