Friday, February 8, 2013

கடல் பா(தி)ர்த்த விமர்சனம்

ப்பேஏஏஏ....   படமாய்யா அது?!

நேற்று முன் தினம் நைட் ஷோ தியேட்டருக்கு போனவுடனேயே பக்குன்னு ஆயிடிச்சி! நாங்க குடும்ப சகிதமா பத்து பேர் போயிருந்தோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா? நாங்க பத்து பேர் மட்டும் தான் தியேட்டருக்கே போயிருந்தோம்ங்கிறது தான்! அது தெரிஞ்சோடுனதான் கெதக்குன்னு ஆயிப் போச்சு!

எங்களை விட தியேட்டர் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமா இருந்தது அவிங்களுக்கே கொஞ்சம் வெட்கமா உணர்ந்த மாதிரி தான் தெரிஞ்சிது. ஒரு வழியா மனச தேத்திக்கிட்டு உள்ள போய் உட்கார்ந்துட்டோம்.

படம் போட்டாங்க. மொதோ சீன் கொஞ்சம் மெறட்டலாத்தான் இருந்திச்ச்சி. நீண்ட நாளைக்கப்பறம் அரவிந்த் சாமியை பார்க்குற சந்தோஷத்தை ஓவர் டேக் செய்றா மாதிரி அர்ஜூனோட கெட்டப்பும், நடிப்பும் ஆஆ...ன்னு வாயப் பொளந்து பார்க்க வச்சிடிச்சி!

ச்சீ நம்ம மக்கள் எல்லாம் எழுதனமாதிரி படம் மோசமால்லாம் இருக்காதுன்னு தெம்போட நிமிந்து உட்கார்ந்தா, அடுத்ததடுத்த சீன்ல படம் அதளபாதாளத்துக்கு கீழ போக ஆரம்பிச்சிடிச்சி! ஒரு கட்டத்துக்கு மேல, இத நம்மாள ஃபாலோ பண்ண முடியாதுன்னு, ஒவ்வொருத்தரா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க!

எங்க குழுவுல ஒரு புது மண ஜோடியும் வந்திருந்தாங்க. கல்யாணம் ஆகி நாலு நாள் தான் ஆகியிருந்தது. கல்யாணத்துக்கு அப்பறம் பாக்குற மொதோ படம். பொண்ணு ஆந்திரா, தமிழ் சுத்தமா தெரியாது. இருந்தாலும் மணிரத்னம் படம்ன்னு ஆவலா வந்திருந்துச்சி.....

மாப்ள எங்க அக்கா பையன். சுகமா தூங்க ஆரம்பிச்சிட்டான். பொண்ணு மட்டும் கொட்ட கொட்ட விழிச்சி பார்த்துட்டிருந்துச்சு. இடைவேளையின் போது, என்னம்மா படம் புரியுதா? இவ்ளோ ஆர்வமா பார்க்கிறியேன்னு கேட்டதுக்கு....

சீன்லாம் நல்லா இருக்கு, தமிழ் தெரிஞ்சிருந்தா புரிஞ்சிருக்கும்ன்னு சொன்னுச்சி! அப்ப ஏன் தமிழ் தெரிஞ்ச எங்களுக்கும் புரியலன்னு....

...கேகணும்ன்னு தோனிச்சி, ஆனா ஜெமோவ பத்திய புரிதல் எனக்கு இருந்ததால, அப்படி கேட்காமலேயே ஙே... என விழிச்சதோட நிறுத்திக்கிட்டேன்.

சாதாரணமா, மணி சார், பாடல் காட்சிகளை அற்புதமா எடுப்பார், ஜெமோ அதுல கூட மூக்கை நுழைச்சிருப்பார் போலருக்கு. பாடல் வெளியீட்டு விழாவுல சுஹாசினி தான் ஓவரா ஸ்டேஜு பர்ஃபார்மன்ஸ் கொடுத்தாங்க. அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்.

அர்விந்த் சாமிய பேக் பண்ணி அனுப்பியதுல அந்தம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் மீண்டும் தெளிஞ்சவுடனே அழச்சுட்டு வந்து செமையா மாத்து கொடுத்துருக்காங்க! நானெல்லாம் இன்னும் அந்த இந்திரா பட கிலியிலேர்ந்து மீளவே இல்லை, அத மெள்ள மறந்துக்கிட்டிருந்தப்ப இந்தப் படம் மூலமா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியிருக்காங்க.

நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவா நம்பறேன் ஒன்னு அந்த இந்திரா படத்தை மணி டைரக்ட் பண்ணிருக்கனும், இல்லன்னா இந்த கடல் படத்தை சுஹாசினி டைரக்ட் பண்ணியிருக்கனும்!

சாதாரணமா எப்பவுமே ஏ.ஆர். ரஹ்மான் வெளி நாட்டுல போயி ரூம் போட்டு மெட்டமைப்பார், ஆனா இந்தப் படத்தைப் பார்த்து தன்னோட பாட்டெல்லாம் பட்ட பாட்டைப் பார்த்து வெளி நாடு போய் ரூம் போட்டு அழுதிருப்பாருன்னு நினைக்கிறேன்.

ஆரம்பத்துல அவரும் அபாரமா தான் ரீரெக்கார்டிங்ல ஆரம்பிச்சாரு, அதுக்கப்பறம் கிளீனரை உட்கார வச்சிட்டு எழுந்து போய்ட்டாரு போலருக்கு. ஆனா ராஜீவ் மேனனால அப்படி போக முடியல. வேற வழியில்லாம கடேசி வரைக்கும் பிரமாதமா சுட்டுத் தள்ளியிருக்கார். அவர் சீன் பை சீனாத்தான பார்த்திருப்பார், அதனால தப்பிச்சிட்டாருன்னு நினைக்கிறேன்.

இந்த ராதா பொண்ணைப் பத்தி சொல்லியே ஆகணும். என்னா பல்லுய்யா அது? ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸுக்கு. இதையெல்லாம் ஹீரோயினாப் போட்டு படம் எடுத்து பார்க்கறவங்கள படுத்தியெடுக்கணும்ன்னு என்ன நெருக்கடி வந்தது இந்த மணிரத்தினத்துக்கு? கார்த்திக் பையன் கூட துறுதுறுன்னு நல்லா இருகார். 

எனக்கு இதெல்லாம் பிரச்சினை இல்ல. இந்தப் படம் ஓடாததுனால மணி ரத்தினத்தின் சொத்து மதிப்பு ஒரு ரூபாய் கூட குறையப் போறதில்லை. ஆனா டிஸ்ட்ரிபியூட்டர்ல தொடங்கி தியேட்டர் ஓனருங்க, சைக்கில் ஸ்டேண்டு ஏலம் எடுத்தவன் முதற்கொண்டு தமிழகம் முழுக்க ஆயிரத்துக்கும் அதிகமானவங்க தங்கள் சொத்து மதிப்பில் பல லட்சங்களை இழந்தோ அல்லது, பல லட்சங்களுக்கு கடன்காரர்களாக மாறியோ இருப்பார்களே, அவர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.

நாங்க பார்த்த அந்த தியேட்டர் ஓனருக்கு அன்றைய ஒரு நாள் நிர்வாகச் செலவு மட்டுமே இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நட்டமாகியிருக்கும். எவ்வளவு பணம் கொடுத்து படப் பொட்டியை வாங்கினாரோ தெரியவில்லை. அந்த நட்டக்கணக்கு தனி!

மணி சார், உங்களை மாதிரி ஆளுங்களால தான் இந்த சினிமா தொழிலே அழிந்து கொண்டிருக்கிறது. உங்கள் போதைக்கெல்லாம் எத்தனை பேரை ஊருகாய் ஆக்கியிருக்கின்றீர்கள் என்று ஒரு கள ஆய்வு செய்து பாருங்கள். அந்த சப்ஜெக்டை வைத்தே கூட குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை தரலாம்!

6 comments:

DiaryAtoZ.com said...

Same Blood.

மலரின் நினைவுகள் said...

படம் ரிலீசான மொத மூணு நாளும் படத்துல நடிச்சவங்க எல்லா டிவிலயும் வந்து,
"இந்த இடத்துல மணி சார் இப்படி செய்தாரு",
"அந்த எடத்துல மணி சார் அப்படி பண்ணாரு"ன்னு
பண்ண பில்ட்-அப் இருக்கே...!!

Anonymous said...

//மணி சார்//

மணி சரி, சார் எதுக்கு?

நம்மை நாமே அடிமைகள் ஆக்கிக் கொண்டு துரத்தித் துரத்து வெளுப்பவர்களைக் குற்றம் கூறுவதேன்?

சேலம் தேவா said...

//சாதாரணமா எப்பவுமே ஏ.ஆர். ரஹ்மான் வெளி நாட்டுல போயி ரூம் போட்டு மெட்டமைப்பார், ஆனா இந்தப் படத்தைப் பார்த்து தன்னோட பாட்டெல்லாம் பட்ட பாட்டைப் பார்த்து வெளி நாடு போய் ரூம் போட்டு அழுதிருப்பாருன்னு நினைக்கிறேன்.//

ஹா..ஹா...இந்த சமயத்தில் ராமநாராயணன் அவர்களின் திறமையைக்கண்டு வியக்கேன்... :)

மாதேவி said...

ஹா...ஹா...

அபி அப்பா said...

அப்பாடா, நான் திட்ட நினைச்சதிலே ஒரு 80 சதம் இங்க பார்த்ததிலே என் மனசு பாரமே இறங்கிடுச்சு. ஜெமோவால் இன்னும் எத்தனை பேர் பைத்தியம் பிடிச்சு அலைய போறாங்களோ.. ஏசப்பா நீ தான் காப்பாத்தனும்!