Thursday, December 19, 2013

மத்திய ஆளுங்கட்சியாக திமுக சாதித்தது என்ன?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தோழர் ஒருவர், திமுகவை கிண்டல் செய்யும் விதமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் மத்திய அரசில் ஆளுங்கட்சியாக திமுக இருந்திருக்கின்றது என்று நிலைத்தகவல் இட்டிருந்தார்....

உண்மை தான் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு பெரிய கட்சியின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும், அதன்பிறகு காங்கிரஸ் தலைமையில் நேருவின் குடும்ப வாரிசு இல்லாத பிரதமரைக் கொண்டு பத்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்து இந்த ஆட்சிகளில் ஆளுங்கட்சி அந்தஸ்த்தோடு திமுக பங்கேற்றிருந்ததில் மாற்றுக் கருத்து இல்லை... மேலும் இதில் கிண்டல் கேலிக்கும் அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பாக அதுவரை கிடைத்திராத பல முன்னேற்றங்கள் இந்த பதினைந்து ஆண்டு காலத்திற்குள் தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கின்றது என்பது... இன்றைக்கு முப்பந்தைந்து வயதிற்கு உள்ளாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலோ அல்லது புரிந்துகொள்ள முடியாமலோ இருக்கலாம்.....

ஆனால் நாற்பது வயதினைக் கடந்தவர்களுக்கு 98க்கு முந்தைய தமிழகத்தின் நிலையும் அதன் பிறகான இன்றைய தமிழகத்தின் வளர்ச்சி பெற்ற நிலையினையும் ஒப்பிட்டு கண்டிப்பாக இந்த பதினைந்து ஆண்டுகளில் அதற்கு முந்தி கிடைத்திருக்காத எண்ணற்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு வாய்க்கப்பெற்று பெறு வளர்ச்சியை இந்த குறுகிய காலகட்டத்தில் தமிழகம் அடைந்திருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியும்!

உட்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கொண்டாலே அதற்கு முன் குண்டும் குழியுமான ஒற்றைப்பாதை மாநில நெடுஞ்சாலைகளாக இருந்த நிலை மாறி இன்றைக்கு கிராம இணைப்புச் சாலைகள் கூட அற்புதமான அகல சாலைகளாக காட்சியளிக்கின்றன. குக்கிராமங்கள் முதல் முட்டுச் சந்துகள் வரை காங்க்ரீட் சாலைகளும், லட்சக்கணக்கான சிறு, குறு, பெரும் பாலங்களும், அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உயர்நிலை நீர் தேக்கத் தொட்டிகளும், இந்த பதினைந்து வருடங்களில் மட்டுமே தமிழகத்தின் 90 சதவிகித ரயில்வே பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டதும், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 100 சதவிகிதம் அதிக ரயில்கள் தமிழகத்தில் ஓடுவதும், பாதாள சாக்கடைத் திட்டங்கள் முதற்கொண்டு அனைத்து உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டங்களும் மத்திய அரசின் நிதியினை தாராளமாகப் பெற்று தமிழகத்தின் சாதாரண நகரங்கள், கிராமங்கள் கூட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. 

98 இல் பதினைந்து வயதிற்குள்ளாக இருந்த இளைஞர்களால் ஒரு வேளை இந்த மாற்றங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்க இயலாமல் போயிருக்கலாம். அதேசமயம் பத்து வயதிற்கு குறைவாக இருந்திருந்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....!

வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, 98க்கு முன்பாக தமிழகத்தில் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த அன்றைய இளைஞர்களுக்கு இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு நிலை எந்த அளவிற்கு கற்பனைக்கு எட்டாத அளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும். ஏனெனில் சுத்ந்திர இந்தியாவில் முதல் அரை நூற்றாண்டில் தமிழகத்தில் வந்திருந்த பெரிய தொழிற்சாலைகளை விட கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல நூறு சதவிகிதம், அதாவது பல மடங்கு அதிக தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்திருப்பதை யாரும் மறுக்கவே முடியாது. 

96இல் வெறும் மூவாயிரம் சம்பளம் உள்ள வேலை ஒன்றுக்கு கிட்டத்தட்ட முன்னூறு பேர் விண்ணப்பித்து நேர்காணலுக்கு செல்லும் நிலை இருந்ததை இன்றைக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அன்றைக்கு நம் தமிழக இளைஞர்கள் மும்பை போன்ற வட இந்திய மாநிலங்களுக்கு கூலி வேலை செய்யச் செல்லும் நிலை மாறி, இன்றைக்கு ஆந்திரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், பீகார், நேப்பால் போன்ற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வரும் அளவிற்கு மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றப்படும் உட்கட்டமைப்பு வேலை வாய்ப்புகள் உருவாகியிக்கின்றன. தொழில் துறையும் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.....

இது மட்டுமல்லாது, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 89 இல் இருந்து இரண்டாண்டுகளுக்கு மத்திய ஆளுங்கட்சியாக திமுக பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தான் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும் சாத்தியமாக்கப்பட்டதும், அதனால் இன்று வரை பயனடைந்த பல லட்சம் தமிழர்களும் மத்திய ஆளுங்கட்சியாக திமுக இருந்ததற்கான அடையாள கிரீடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள்....!!!!

திமுகவின் வளர்ச்சியின் மேல் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் செய்த அவதூறான பிரச்சாரம் தான், திமுக பசை உள்ள துறைகளாக மத்திய அரசில் வாதாடிப் பெற்றுக் கொள்கின்றது என்பது! 

தேசியக் கட்சிகளின் தமிழக பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் எப்பவாவது விபத்து போல கிடைத்தாலும் அது அலங்காரப் பதவியாகவே இருந்து வந்த நிலையில், மத்திய ஆளுங்கட்சியாக பங்கேற்று தங்கள் பிராந்தியத்திற்கான உரிமையை அழுத்தமாகக் கேட்டுப் பெற்று தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக ஓட வைத்திருப்பதில் திமுகவின் பங்கை இப்படிப்பட்ட கேவலமான விமர்சனங்கள் மூலம் நீற்றுப்போக வைத்து, மீண்டும் தமிழகத்தை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்க வைக்கத்தான் இந்த மாதிரியான விமர்சனங்கள் வழி வகுக்கும்.

வளமான துறை கேட்டு பிரதமரை காண டெல்லி சென்ற கலைஞர், சிறையில் இருந்த தன் மகளைக் காண டெல்லி சென்ற போது பிரதமரையோ, அதிகார மையத்தையோ காணச் செல்லவில்லை என்பதையாவது இந்த அவதூறுப் பேர்வழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக மாற்றியதில் திமுகவின் பங்கு தான் மிக முக்கியமானது, இதனால் பாதிக்கப்பட்ட வ்டமாநில லாபிகள் திமுகவுக்கு எதிராக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அந்த அவதூறுகளை நம்பி நம் தமிழக இளைஞர்களே ஆட்டு மந்தைக் கூட்டம் போல் தலையாட்டுவது தான் வேதனையான விடயம். இளைஞர்களே இந்த மாற்றத்தின் வித்தியாசம் உங்களுக்கு அனுபவ ரீதியாக உணர வாய்ப்பில்லை என்றால் உண்மையான வரலாற்றை தெளிவாகப் படித்து அல்லது கேட்டு ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள்.... நியாயமாக இந்த தேடலில் நீங்கள் இறங்கினால் தமிழக வளர்ச்சியில் திமுகவின் அரும் பணி உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் விழுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு வாக்காகவே அமையும் என்பதை இப்பொழுது இங்கே அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன் - கொக்கரக்கோ சௌம்யன்

Monday, December 9, 2013

திமுக - இனி என்ன செய்ய வேண்டும்?!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில், இனி மத்திய அளவிலோ அல்லது தமிழக அளவிலோ அரசியல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றியெல்லாம் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பாக திமுகழகத்தைப் பொறுத்தவரை தற்பொழுதைய பலம் என்ன? இனி அது தன்னை தக்கவைத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் என்ன? என்பதைப் பற்றிய ஒரு சிறு அலசல் மட்டுமே இது......


கடந்த 2011 சட்டமன்ற பொது தேர்தலில் ஏற்காட்டில் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி மாறன் பெற்ற வாக்குகள் வெறும் இரண்டாயிரத்திற்கும் குறைவானதே.....

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடந்த தேர்தலில் திமுகவோடு கூட்டணியில் இருந்த, அந்த தொகுதியில் (35 சதவிகித வன்னிய வாக்காளர்கள்) கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் பாமகவும், காங்கிரஸும் இப்பொழுது அந்தக் கூட்டணியில் இல்லை. அதோடு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் கலைஞர் மற்ற எந்த கட்சியும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மக்களுக்கு ஊர்ஜிதம் செய்து விட்டிருக்கின்றார்.

இப்படிப்பட்ட நிலையில் திமுக தனியாக மக்களை மட்டுமே நம்பி மக்களோடு மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டுடன் களம் இறங்கி ஆளுங்கட்சியின் மிகப் பெரிய அத்து மீறல்களுக்கு மத்தியிலும், பதிவான வாக்குகளில் 30 சதவிகிதத்தைப் பெற்றிருக்கின்றது என்றால் அது அரசியல் ரீதியாக திமுகவின் மிகப் பலமான வளர்ச்சியையும் வலுவான அடித்தளத்தையுமே காட்டுகிறது. 

தமிழகத்தின் மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்களைக் கொண்ட ஓரு சில தொகுதிகளில் ஒன்றான ஏற்காட்டில் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் என்பதெல்லாம் மட்டுமல்லாமல் மாதக் கணக்காக தினம் நூறு, இரநூறு, பிரியாணி என்பதெல்லாம் கூட மிகப் பெரிய விஷயம். இந்த காரணங்களுக்காகவும் மட்டுமல்லாமல், அவர்களுக்கு வாக்களிக்காவிட்டால் இந்தம்மா நம் தொகுதியை பழி வாங்கிவிடுவார் என்ற அச்சத்தினாலும் அதிமுகவுக்கு அதிகப்படியாக விழுந்திருக்கின்ற வாக்குகளையும் எண்ணி அகமகிழ்ந்து இது அப்படியே வரும் பாராளுமன்ற பொது தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று யாராவது எண்ணினால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும்.

பொதுத் தேர்தலில் எல்லாமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருக்கும், தேர்தல் கமிஷன் கூட பயந்தறிந்து தான் செயல்பட வேண்டியிருக்கும். இவ்வளவு பெரிய பணம் விளையாட முடியாது, இது எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற கட்சிகளான காங்கிரஸ், பாஜக், தேமுதிக, மதிமுக, பாமக மற்ற பிற ஜாதிக் கட்சிகள் என்று அனைத்துமே ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலையோ அல்லது தனி அணியாகவோ களம் காணும் நிலையோ தான் இருக்கும்.

ஆகையால் அதிமுக கோட்டையிலேயே மிகப் பலமாக 30 சதவித வாக்கு வங்கியை மிகக் கடுமையான ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்திற்கு நடுவிலும் வைத்திருக்கும் திமுக அமைக்கும் கூட்டணியே வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!!!

ஆனால் திமுக கூட்டணி அமைப்பதில் மிகத் தெளிவான ஒரு பார்வையுடன் செயல்பட வேண்டும். பொதுவாக நாடு முழுவ்தும் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது ஒரு அலையாக இருப்பதை உணர முடிகின்றது. காங்கிரஸின் தோல்விக்கு அது தான் காரணம். அதே சமயம், ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தை ருசித்த அல்லது ருசித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை பெருமளவில் குறைந்திருக்கின்றது. ஆகையால் வாய்ப்புள்ள இடங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடிய புதிய மாற்றுக் கட்சிகளை தேர்ந்தெடுக்க மக்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணம் தான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி.

ஆகவே இந்த இரண்டு விடயங்களையும் மனதில் கொண்டு காங்கிரஸை எந்த ரூபத்திலும் கூட்டணியில் சேர்க்காமல் திமுக களம் காண வேண்டும். இரண்டாவது ஒரு வித புத்தம் புதிய பொலிவுடன் புத்துணர்ச்சி பெற்றதாக, மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை நிறைவேற்றத் தகுதியான கட்சி என்று மக்கள் நம்பும் வகையில் திமுக தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும்.

அப்படிச் செயல்படுவதற்கு திமுகவின் முன்னால் இருக்கும் ஒரே ஆயுதம் தளபதி ஸ்டாலின் மட்டுமே! அவரை மட்டும் முன்னிலைப் படுத்தி மற்ற வாரிசுகள் அனைவரையும் கட்சி, அரசியல், ஆட்சி, தேர்தல் போன்ற களங்களிலிருந்து முற்றிலுமாக புறம் தள்ளி விட்டு தளபதியின் க்ளீன் இமேஜ் எனப்படும் கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காரர், சிறந்த நிர்வாகி என்ற அந்த ஊக்க மருந்தை திமுக உட்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்திருப்பதை யாரும் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது.


மிக அதிக எண்ணிக்கையில் பெருகி வரும் நடுத்தர மக்களின் மன நிலை என்ன என்பதை திமுக உணர்வதற்கு முற்பட வேண்டும். ஏனெனில் திமுகவின் பலமே நடுத்தர வர்க்கம் தான். அதிமுகவின் பலம் படிப்பறிவில்லாத அடித்தட்டு மக்கள். எம் ஜி ஆர் அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தார். கலைஞர் அதை எதிர்த்ததன் மூலம் நடுத்தர வாக்கு வங்கி திமுகவிட்ம் பதின் மூன்று வருடங்கள் ஆனாலும் சேதாரம் இல்லாமல் இருந்து மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

ஆனால் என்றைக்கு கலைஞர் எம் ஜி ஆர் வேடம் போட ஆரம்பித்தாரோ அன்றைக்கே நடுத்தர வாக்கு வங்கி திமுகவிடமிருந்து விலகி வேறொரு மாற்றை தேட ஆரம்பித்து விட்டது. ஆனால் அடித்தட்டு வர்க்கமும் திமுகவை மனதார ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு எம் ஜி ஆர் இல்லை என்றால் விஜயகாந்த் தான் மாற்றாகத் தெரிகிறார்....

ஆகவே திமுக அதனுடைய களத்தில் தான் பலமாக கால் ஊன்ற வேண்டும். அந்த களத்திற்கு தளபதி ஸ்டாலின் அவர்களே சரியான தேர்வு. இதை திமுக உடனடியாக செய்யத் தவறினால் சீமான்களும், தமிழருவி மணியன்களும், உதயகுமாரன்களும் இங்கே ஆம் ஆத்மிக்களாக மாறும் வாய்ப்பை நாம் காண வேண்டியதிருக்கும். தமிழகத்தில் உருவாகும் ஆம் ஆத்மி திமுகவுக்கான மாற்று என்பதையாவது திமுக தலைமை உடனடியாக உணர வேண்டும்!

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் அதீத இலவசங்கள் தான் நாட்டை சீரழிக்கின்றன என்று பலமாக நம்புகின்றார்கள். ஊழலை அடியோடு வெறுக்கின்றார்கள். அடாவடி அரசியலை புறம் தள்ளுகின்றார்கள், வளவள பேச்சை விட செயல்வீரர்களையே விரும்புகின்றார்கள். ஓட்டரசியலை மனதில் வைத்து பேசுவதையும் செயல்படுவதையும் முன்பு ராஜதந்திரம் என்று சொன்னவர்கள் இப்பொழுது அதையே அரசியல் மொள்ளமாறித்தனம் என்று நம்புகின்றார்கள்......!!


உடனடியாக சிலர் பொங்கி எழுந்து ஸ்டாலின் மட்டும் வாரிசு அரசியலின் உதாரணம் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர கட்சித் தொண்டராக இன்று வரையிலும் நாள்தோரும் கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் அவரை திமுகவினர் மட்டுமல்லாது, தமிழக பொது மக்களே கூட இவரை கலைஞரின் வாரிசு என்ற வகைப்படுத்துததில் வைக்கவில்லை என்பது தான் உண்மை



தலைவர் கலைஞர் மாற்றங்களை எளிதாக கணிக்கக் கூடியவர்.....

நல்ல முடிவெடுப்பார்....! திமுக வெகுண்டு எழும்...!



Saturday, November 30, 2013

தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது...! இப்படிக்கு ஜெ.!

கிராமத்து வயல்வெளிகளில் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் போர் செட்டுகள் மின்சாரம் இல்லாததால் அமைதியாகக் கிடக்கின்றன..!

லட்சக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் மின்சாரம் இன்றி பல நாட்கள் மூடப்பட்டிருப்பதால் அந்த சத்தங்கள் இன்றி தமிழகம் அமைதியாகவே இருக்கின்றது!



மின்சாரம் இல்லாமையால் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும் டீவி சீரியல் சத்தங்கள் கேட்காமல் ஊரே அமைதியாக இருக்கின்றது..!

காலையில் மிக்ஸி, கிரண்டர் ஓடாததால் அந்த கரகர கூச்சலும் இன்றி அமைதியாக இருக்கின்றது தமிழகம்!

கால்நடை மருத்துவர்களால் இதுவரையிலும் சரியான மருந்து கொடுக்க முடியாத மர்ம நோயினால் ஆங்காங்கே ஆடுகளும், மாடுகளும் செத்து விழுவதால் அவற்றின் குரல்கள் கூட கேட்காமல் அமைதியாகத்தான் இருக்கிறது தமிழகம்!

மணல், சிமெண்ட், கம்பி களின் அதீத விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கட்டுமானத்தொழிலில் ஆங்காங்கே கான்க்ரீட் போடும் சத்தம் கூட கேட்காமல் தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் திகழ்ந்து கொண்டிருக்கின்றது!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அடிக்கடி மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கேட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குரல்கள் கூட அறவே ஓய்ந்து போய் தமிழகம் அமைதியாகத்தான் இருக்கின்றது!

தங்கள் சொந்தத் துறை சார்ந்த பிரச்சினைகளையும் தாண்டி தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் தான் அதாரிடி என்று மாதத்திற்கு ஒரு போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் எல்லாம், சிவாஜி சிலையை அகற்றும் முடிவுக்கு கூட வாய் திறக்காமல் மௌன விரதம் இருந்து தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வராமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்..!

கம்யூனிஸ்டுகளின் உண்டியல் சத்தம் கூட வர வர த்மிழகத்தில் கேட்கவே இல்லாமல் அமைதி காத்துக்கொண்டிருக்கின்றது!!

வறுமையின் காரணமாக அடிக்கடி சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் கூட, செருப்பு போட்டு நடந்தால் சத்தம் கேட்குமே என்று அதைக் கூட கழட்டி வைத்து விட்டுத்தான் நடந்து சென்று தமிழகத்தின் அமைதியை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்...!

#####ஆகவே மக்களே! முதல்வர் அம்மாவை யாரும் குறை சொல்ல வேண்டாம், அவர்கள் சொன்னது உண்மை தான்...! “தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கின்றது!!!”


மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்..... இன்னும் இரண்டே வருடங்கள் மட்டும் தானே என்று!!!!!



Monday, November 25, 2013

சீரியஸான அரசியல் பதிவு எழுதனும் பாஸ்...!

சீரியஸ் அரசியல் பதிவுகளை எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். கடந்த திமுக ஆட்சியின் இதேப் போன்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் என் மனசாட்சிப் படியான நடுநிலையுடன் அரசியல் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்த நான், திமுக தேர்தலில் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நாளில் தான் திமுகவுக்கு மிகத் தெளிவான ஆணித்தரமான ஆதரவுடன் கூடிய பதிவுகளையும், நிலைத் தகவல்களையும் எழுதத் துவங்கினேன்....

திமுக ஆட்சியிலிருந்த கால கட்டத்தில் நடந்த சில குறைபாடுகளை நேர்மையுடன் விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த நான், அந்த காரணங்கள் எல்லாம் ஆட்சி மாற்றத்திற்கும், குறிப்பாக ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்துவதற்கும் போதுமான காரணங்கள் என்பதை ஒருக்காலும் ஏற்றுக் கொண்டதில்லை.

ஆனால் திமுகவின் இருப்பை குறிப்பாக அதன் சமூக நீதிக் கருத்துக்களில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கும் அதன் தலைவர் கலைஞர் அவர்களின் இருப்பை தங்களுக்கான இழப்பாக ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கும் ஆரிய அடிப்படை வாதிகள்.....

திமுக அரசின் அதாவது ஆட்சியின் பல்வேறுதரப்பட்ட பங்களிப்பார்களின் தவறுகளை எல்லாம் பூதாகரமாக்கி அதை திமுகவுக்கும், கலைஞருக்கும் எதிராக முழுமையாக ஃபோகஸ் செய்து புத்தம் புதிய இளைய தலைமுறையினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மனங்களில் அழுத்தமாக பதிய வைக்கும் வேலையை கன கச்சிதமாக செய்து முடித்து விட்டிருந்தனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றெல்லாம் கூட சீரியஸாக நம்பும் அளவிற்கு நம்ம இளைய தலைமுறையினரின் அரசியல் அறிவை தமக்கு ஏற்றவாறு வடிவமைத்து மூளைச் சலவை செய்து வைத்திருந்தன இந்த ஆரிய சக்திகள்!

தாங்கள் சொல்வதையெல்லாம் இவ்ளோ முட்டாள் தனமாகக் கூட நம்புவார்களா என்று அவர்களுக்கே சந்தேகம் இருந்த நிலையில், தங்கள் சிந்தனைகளை எல்லாம் அடமானப் பத்திரம் எழுதி கை நாட்டு வைத்து அவர்கள் காலில் வைத்துவிட்டு நின்ற நம் மக்களைப் பார்த்து அந்த ஆரிய சக்திகள் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளாத குறையாக ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு நம்ம மக்களின் பர்ஃபார்மென்ஸ் அவ்ளோ பக்காவாக இருந்தது!

இந்த அளவிற்கு தம்மை நம்பி வந்திருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று அந்த சக்திகள் அடுத்தடுத்து எடுத்து விட்ட அஸ்திரங்கள் தான் அபாரம். அதாவது இன்றைக்கு சாதி, சமய அரசியல் என்பது எல்லாம் ஒரு வித புனிதமான விடயங்கள் மாதிரியாக உருவகப்படுத்தப்பட்டு அவை முன்னெடுக்கப்படுவதும், அவற்றையும் சில இளைஞர்கள் நம்பி களம் இறங்குவதும் தான் வேதனையான விடயமாக இருக்கின்றது....

இதற்குத் தோதாக இன்றைய இந்தியாவின் பிரதான பிரச்சினையே சாதி, மத அடிப்படை வாதங்களை விட ஊழல் தான் என்று இளைஞர்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படுவதை ஒரு ஆதாரமாகச் சொல்லலாம்.

அப்படியானால் ஊழல் என்பது அவ்வளவு முக்கியமான பிரச்சினை இல்லையா? என்று சிலர் முஷ்டியை உயர்த்திக்கொண்டு வரலாம்.  அது ஒரு முக்கிய பிரச்சினை தான் என்றாலும் அது எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படலாம் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் கஜானாவுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதும், அல்லது மீண்டும் இது போன்று நடக்காமல் தடுக்கப்படலாம் என்பதும் தான் இந்த “ஊழல்” என்ற பிரச்சினையில் நமக்கு சாதகமான விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் சாதி, மத ரீதியிலான பிரிவினை வாதம் என்பது ஒரு நாட்டையோ, ஒரு பிராந்தியத்தையோ, அதனைச் சார்ந்த மக்கள் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கியவர்களாக நிறுத்தி வைத்திருப்பதோடு, யாருக்கும் நிம்மதியற்ற பயந்து பயந்து வாழும் நிலையை மக்களுக்கு பரிசாக வழங்கிவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றது....

உலக அளவில் நமக்கு அருகிலேயே உதாரணம் சொல்ல வேண்டுமானால பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத தீவிரவாதம் கொண்ட நாடுகளும், இந்திய அளவில் ஜாதி அரசியலை மட்டுமே முன்னெடுத்து ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் உத்திரபிரதேசம், பீகார் போன்ற அளவற்ற இயற்கை வளங்கள் கொண்டிருந்தாலும் இன்னமும் வளராமல் மிகப் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாநிலங்களையும் சொல்லலாம்.

இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் ஏதோ, இதை ஒரு திமுக ஆதரவு பதிவு என்ற ரீதியில் முடிவெடுத்து தொடர்வதை விட, இது ஒரு மிக முக்கியமான பொதுப் பிரச்சினை என்ற அளவு கோலில் உற்று நோக்க வேண்டும்.இங்கே திமுக அல்லது அதிமுக என்பதெல்லாம் ஒரு பேசு பொருள் கிடையவே கிடையாது.

சாதி, மத அடிப்படைவாதங்களை தகர்த்தெறிந்து ஓரம் கட்டி அது அதற்கான இடங்களில் நிற்க வைத்து விட்டு பொதுவான சமூக நீதியை நிலை நாட்டுவதன் மூலம், கல்வியும் அதைத் தொடர்ந்ததான உலக அறிவும், முக்கிய வேலை வாய்ப்புகளும், அந்த பிராந்தியத்தில் வசிக்கும் அனைத்துப் பிரிவினருக்கும் சாத்தியப்படக்கூடிய விடயமாக மாற்றியமைக்கப் பட்டதனால் பாதிக்கப் பட்டிருப்பது யார்????

அந்த யாரோ வுக்குத் தான் சமூக நீதி தகர்த்தெறியப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அது தகர்த்தெறியப்பட்டால் தான்....  மீண்டும் சாதி, மதம் என்று அனைவரும் சிறு சிறு பிரிவுகளுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொண்டு தனித்தனிக் குழுக்களாக பிரிந்து கிடக்க முடியும்.... அப்படிப் பிரிந்து கிடந்தால் தான் இவற்றையெல்லாம் ஆதி காலத்திலிருந்தே அரங்கேற்றி மற்ற அனைவரையும் பிரித்துப் பிரித்து, பகுத்துப் பகுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி தான் மட்டும் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டும், அரசன் என்ற ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அவனை பொம்மலாட்ட பதுமை போல ஆட்டி வைத்ததைப் போன்று இப்பொழுது மீண்டும் அரங்கேற்ற முடியும்.

அதற்கு அந்த சக்திகள் செய்த முதல் செயல் திட்டம், இந்த மாதிரியான சமூக நீதி கொள்கைகளில் இன்னமும் பிடிப்புடன் செயல்படும் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும், அடுத்ததாக தங்கள் இனத்துத் தலைமையை ஏற்றிருக்கும் அதிமுகவை அரியணையில் அமர வைக்க வேண்டும்.

இது நடத்தப்பட்டு விட்டது. இந்தச் செயல் திட்டம் ஏற்கனவே பல முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தாலும், அதிமுக தலைமையின் தவறுகளால் மீண்டும் மீண்டும் திமுக ஆட்சிப் பீடத்திற்கு வருவது அவர்களுக்கு பெரும் எரிச்சலைத் தந்திருக்கின்றது. இந்த முறை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அந்த சக்திகள் முழு மூச்சுடன் செயல்படுவது தான் நாம் இங்கே கவலையுடனும், கவனமுடனும் உற்று நோக்கி உணர்ந்து அதற்கு எதிராக நமது கடமையை ஆற்றுவதற்கான அவசியத்தை உருவாக்கியிருக்கின்றது.

இந்த தடவை, திமுக ஆட்சி அகற்றப்பட்டதும், அதிமுக ஆட்சி அமைக்கப்பட்டதும் முதல் படி என்றால் வழக்கம் போல அதிமுகவின் தவறுகளால் மீண்டும் திமுக அரியணை ஏறும் வாய்ப்பை தகர்த்தெறிய வேண்டும். ஆகையால் அதற்காக இப்பொழுது ஒரே கல்லில் திமுக, அதிமுக என்ற இரண்டு காய்களையும் அடித்தெறிய வேண்டும். அந்த இடத்தில் சாதி, மத கூட்டமைப்பை இட்டு நிரப்ப வேண்டும்.....!

இது தான் அஜெண்டா. ஆகவே இந்த சாதிக் கூட்டமைப்பை தள்ளி வைத்து தமிழகத்தை இன்னுமொரு பீகாராகவும், உத்தரப் பிரதேசமாகவும் மாற்றும் முயற்சியை தகர்த்தெறிய வேண்டிய கடமை நம் இளைஞர்களுக்கு இருப்பதை உணர வைக்க வேண்டும்....!

அதனால தான் சொல்றேன் பாஸ்....  இனிமே கொஞ்சம் சீரியஸா அரசியல் பதிவுகளை எழுதப் போறேன்னு....!


Sunday, November 24, 2013

இரண்டாம் உலகமும், முன்னோ பின்னோ (எதோவொரு) நவீனத்துவமும்...!

நேத்திக்கு பையன் கூப்பிடும் போதே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் கிடைத்த அனுபவம் அப்படி! இருந்தாலும் ஒரு மனிதன் தொடர்ந்து தவறு செய்வானா? அதுவும் வேறு யார் யாரோ போட்ட முதலீடு, பலரின் உழைப்பு இதெல்லாமே வீணாகும்படியாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து தவறு செய்வானா? என்றெல்லாம் மனதுக்குள் தர்க்க வாதம் செய்து கொண்டு....

அதுவும் ஒரு சில காமெடி மொக்கைப் படங்களால் தமிழ்ச் சினிமாவின் தரம் சீரழிந்து கொண்டிருக்கின்றது என்ற அறச்சீற்றம் கொப்பளிக்கப் பேசும் ஒரு இயக்குனர், மேலும் பத்திரிகைகளில் வந்தது போன்று ஆறு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு மனசாட்சியைத் தொட்டு தமிழ்ச் சினிமாவை அடுத்ததொரு உச்ச நிலைக்கு கொண்டு செல்லாமலா இவ்ளோ நம்பிக்கை கொப்பளிக்க கொப்பளிக்க பேசிக் கொண்டிருப்பார்......

என்ற நம்பிக்கையில் மனைவி மற்றும் மகனுடன், இரண்டாம ஆட்டத்திற்கு படத்தை முழுமையாக அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு ரிலாக்ஸாக கிளம்பிவிட்டேன்....!

ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்துட்டேன் போலருக்கு அதனால சீட்டில் போய் உட்காரும் போது ஐந்து நிமிட படம் ஓடி விட்டிருந்ததாக பக்கத்து சீட் காரர் சொன்னார்! மகன் முறைக்க, போகட்டும்டா இதெல்லாம் சூப்பர் படமா இருக்கும் ஒரு முறை பார்த்தா பத்தாது, இன்னும் ரெண்டு மூனு தடவை பார்க்க வேண்டியிருக்கும் அப்போ நியூஸ் ரீல் போடும் போதே வந்து உட்கார்ந்து விடுவோம் என்று சமாதானம் சொன்னேன்..!

ஒரு இருபது நிமிடம் கடந்திருக்கும். தியேட்டர்ல கிச்சு கிமார்ன்னு ஒரு சத்தத்தையும் காணோம். திரும்பி பார்த்தால் மனைவி கூட வாயை லேசாக திறந்தபடி திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் ரியாக்‌ஷன் காட்டிக் கொண்டிருந்தார்கள். முன் சீட்டில் ஒருவர் சீட்டு நுனியில் உட்கார்ந்து கொண்டு தலையை திரையில் நுழைத்து விடுவது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார். 

என்னை நானே நொந்து கொண்டே. ச்சே, இந்த மாதிரியான ஒரு பின் நவீனத்துவ இயக்குனர்களின் படங்களில் ஒரு வினாடி காட்சியைக் கூட நாம் தவற விடக் கூடாது. அந்தக் காட்சியில் கூட ஏதாவது ஒரு முக்கிய குறியீட்டை அவர் பதிவு செய்திருப்பார்.....,   அப்படித்தான் இந்தப் படத்திலும் முதல் நான்கைந்து நிமிடங்களுக்குள் இந்தக் கதைக் களம் பற்றிய முக்கிய குறியீட்டை இயக்குனர் பதிவு செய்திருக்கின்றார். அதனால் தான் எல்லோரும் இப்படி ஒரு ஆவலுடன் படத்தைப் பார்க்கின்றார்கள்....

நான் அந்தக் குறியீட்டை பார்க்கத் தவறி விட்டதால் இன்னும் படம் மற்றும் அதன் கதை பற்றி எனக்கொரு சரியான புரிதல் இல்லாமல் விட்டேர்த்தியாகவே இருக்கின்றது. படத்துடன் ஒன்றவே முடியவில்லை, அழுகை கூட வருகின்றது....!  என்று நினைத்துக் கொண்டேன்.

இப்புடிக்கா ஓடி இடைவெளியும் விட்டுவிட்டார்கள். மனதில் ஒரு நம்பிக்கை துளிர்க்க, முதல் ஐந்து நிமிட கதையை தெரிந்து கொண்டால், இதுவரை பார்த்த மற்ற காட்சிகளின் அர்த்தம் கட கடவென மனசிலாகிவிடும் என்ற ஆவலில் பக்கத்து சீட்காரரை திரும்பிப் பார்த்தேன். அவர் கண்களை மூடி தியானத்தில் இருப்பது போல காட்சி தந்தார்...!

அவரை லேசாக அசைத்து விவரத்தைச் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர், நீங்க சொல்ற அந்தக் குறியீட்டை இயக்குனர் க்ளைமாக்ஸில் தான் வைத்திருப்பார் போலருக்கு..... அதுக்காகத்தான் நானும் வெய்ட் பண்ணி பார்த்துட்டிருக்கேன்..., என்று சொன்ன போது, அவர் சீரியஸாத்தான் சொல்கிறாரா? இல்லன்னா என்னைக் கலாய்க்கிறாரா என்றே புரியாமல் போனது...!

முன் சீட்டு திரை துளைத்த தலையரை, அழைத்துக் கேட்க அவர் என்னைக் கோபமாக முறைத்து, போங்க சார் ஆரம்பத்துலேர்ந்து பார்க்குற எனக்கே ஒன்னும் புரியலையாம், அஞ்சு நிமிஷம் லேட்டா வந்துட்டு கதை கேக்குறாரு! என்று பக்கத்து சீட்டுக் காரரிடம் சொல்லிக் கொண்டே இளக்காரமாகத் திரும்பிக் கொண்டார்!

சரி மனைவியிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்வோம், அவர் தான் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாரே என்று நினைத்து அவரை திரும்பிப் பார்த்த போது ரொம்ப டீப்பாக தூங்கிக் கொண்டிருந்தார். விடாமல் எழுப்பிய போது, அரைத் தூக்கத்துலயே, ஏங்க, படம் முடிஞ்சோடுன எழுப்பி விடுங்க. நடுப்புற டிஸ்டர்ப் பண்ணிடாதீங்க. நீங்க ரொம்ப இண்ட்ரஸ்ட்டா பார்க்குறதுனால தான் நான் இருக்கேன், இல்லன்னா நாம வீட்டுக்கே போயி தூங்கிடலாம்ன்னு சொன்ன போது தான் இந்த மர மண்டைக்கு ஏதோ ஒன்று உரைத்தது போல இருந்தது!

யோவ்... உங்க படத்தையெல்லாம் பார்த்து புரிஞ்சிக்கவும், ரசிக்கவும் எனக்கு இப்ப இருக்குறதுக்கு மேல மூளையும், புத்திசாலித்தனமும், முன், பின் நவீனத்துவ சிந்தனை...  இந்த மாதிரி புண்ணாக்கு, எழவு கந்தாயமெல்லாம் இருந்தாத்தான்  முடியும் என்றால், அந்த மண்ணாங்கட்டி மூளை எனக்கு தேவையே இல்லைய்யா!. 

இப்ப என்னால பேச முடியுது, நடக்க முடியுது, பார்க்க முடியுது, கேட்க முடியுது, உணர முடியுது, நல்ல நகைச்சுவைன்னா சிரிக்க முடியுது, சோகம்ன்னா அழ முடியுது, அழகான காட்சின்னா ஆனந்தமா ரசிக்க முடியுது....!

இது எல்லாத்தையும் தமிழ்ல வர்ற எத்தனையோ படங்கள் எனக்கு தந்திருக்கு, அந்த மாதிரி படங்களை இனிமே நான் பார்த்துக்குறேன்.... !  போங்கடா நீங்களும் உங்க படைப்பும். தியேட்டர விட்டு வெளில வர்ற நூத்துக்கு தொண்ணூறு பேத்துக்கு இந்தப் படம் புடிக்கல, புரியல, போர் அடிச்சிருக்கு..... போடாங்.....க!  நீயெல்லாம் இனிமே இயக்குனர் படைப்பாளி, பெரிய புடுங்கின்னு சொல்லிக்கிட்டு திறியாத.....

அதோட குடும்பத்தோட தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைத்து ரசித்து சிரித்து, அழ வைத்து, கோபப்பட வைத்து, வெளியில் அனுப்பும் போது திருப்தியா சிரிச்ச மூஞ்சோட பார்வையாளர்களை வெளில அனுப்பற படங்களையும் அதன் இயக்குனர்களையும் குறை சொல்ற வேலைய வச்சிக்கிட்டு திரிஞ்சீங்க.....!  மவனே கொண்டே புடுவேன் ஆமா!!!

பின்ன என்னாங்க? அம்பது கோடிங்கறான், அறுபது கோடிங்கறான்.... ரெண்டாம் நாளே தியேட்டர்ல பாதி தான் ரொம்புது. பணம் போட்டு வட்டிக்கட்டிப் படம் எடுத்தவன், வாங்கி ரிலீஸ் செஞ்சவன், விநியோகம் செய்யறவன், திரையிடுறவன், தியேட்டர்ல சைக்கிள் ஸ்டாண்டு மொதக் கொண்டு கேண்டீன் போட்ருக்குறவன் வரை, இது எல்லாத்துக்கும் மேல வந்து படம் பார்க்குறவன் எவனுக்குமே பிரயோஜனம் இல்லாம் இப்படி ஒரு படம் எடுத்து, இதே மாதிரியே தொடர்ந்து எடுக்குற இந்த மாதிரி ஆளுங்களுக்கு இனிமே தமிழ் படமெல்லாம் எடுக்கக் கூடாதுன்னு ரெட் கார்ட் போடனும்.....!  அப்பத்தான் தமிழ் சினிமாவ கரையேத்த முடியும். 

யோவ்... ஃபேண்டஸி படம்ன்னா எத வேணாலும் எடுக்கலாம்ன்னு நினைச்சிட்டிருக்கீங்களா? ஜுராஸிக் பார்க், அவதார் எல்லாம் போய் பாருங்கய்யா, மொழி தெரியாம பார்க்குறவனுக்கே எவ்ளோ புடிச்சிருக்குன்னு?!  உடனே அவங்க பட்ஜெட் ஜாஸ்தி, அதுனால கிராஃபிக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும்ன்னு எல்லாம் கதை விடாதீங்க....

நம்ம மக்களுக்கு எல்லாம் புரியும். நம்ம லெவல் என்னான்னு நல்லாவே தெரியும். இந்த பட்ஜெட்டுக்கு இவ்ளோ தான் கிரஃபிக்ஸ்ல செய்ய முடியும்ன்னும் புரியும். அதை அப்படியே ஏத்துப்பாங்க. ஆனா படத்துல கதை, களம், அழகியல்ன்னு ஒரு புண்ணாக்கும் இல்லாம, பார்க்குறவனுக்கு புரியலன்னா தான் நம்ம புத்திசாலின்னு நினைப்பாங்கன்னு இங்க சில பேரு கட்டமைச்சு வச்சிருக்குற மாதிரி எடுத்தீங்கன்னா, உங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ரெட் கார்டு போட்டேத்தான்யா ஆகனும்!!

பாஸ்...   யாராச்சும் இந்த மாதிரி ஆளுங்க கிட்டேயிருந்தெல்லாம் தமிழ் சினிமாவ காப்பாத்துங்க பாஸ்....!


Friday, November 22, 2013

ஏ டி எம் கொலை வெறி தாக்குதலும்... மக்களின் எதிர்பார்ப்பும்..!

சமீபத்தில் பெங்களூரில் ஒரு பெண்ணின் மீது நடந்த ஏ டி எம் கொலை முயற்சி கொடூரத் தாக்குதல், அதைப் பற்றி படித்தவர்கள் அனைவரையும் ஒரு வித கலவரத்தில் தான் ஆழ்த்தியிருக்கின்றது. குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நடுத்தர வர்க்க பட்டியலின் கீழ் வருபவர்கள் தான். அவர்கள் அனைவருமே மாதத்தில் குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக பத்து தடவை வரைக்கும் சிறியதோ பெரியதோ அளவிலான தொகையை எடுப்பதற்கு ஏ டி எம் பூத்துகளுக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

அப்படியிருக்கும் போது பொது மக்கள் அனைவருமே மற்ற நித்தியப்படி கொலை, கொள்ளை, விபத்துச் சம்பவங்களைப் போன்று இல்லாமல், இது தங்களுக்கான பிரச்சினை, தாங்களும் இது மாதிரி எந்த நேரத்திலும் தாக்கப்படலாம்  என்ற அளவிலேயே இந்த சம்பவத்தை கவனித்து கவலைப் படுகின்றார்கள்.

இது வங்கிகளுக்கான தனிப்பட்ட பிரச்சினை என்று மட்டும் பார்த்து அரசுகள் ஒதுங்கிக் கொள்ளாமல், ரிசர்வ் வங்கி மத்திய அரசின் சார்பாக இதில் உடனடியாக தலையிட்டு வங்கிகளின் ஏடிஎம் பூத்துகளில் சென்று பணம் எடுப்பவர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் பார்த்த வகையில் இப்பொழுது இருக்கும் காவலாளிகள் 50 வயதிற்கு மேற்பட்ட, சுறுசுறுப்புடனும், சமயோசிதத்துடனும் செயல்பட முடியாதவர்கள் தான் பெரும்பாலான ஏடிஎம் பூத்துகளில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை மிகக் குறைந்த சம்பளத்திற்கு அழைத்து அமர்த்திவிடுகின்றனர். உள்ளேயே ஏசி இருப்பதால், சாப்பிடுவது உட்பட தூங்குவது வரை அனைத்தையும் அவர்கள் ஏடிஎம் பூத்துகளுக்கு உள்ளேயே செய்கின்றனர். போர் அடித்தால் அடுத்தடுத்த கடைகளுக்குச் சென்று உட்கார்ந்து கதையடிக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நான் அனுபவபூர்வமாக பார்த்து எழுதுகின்றேன். 

ஆகையால் இந்த மாதிரி ஏடிஎம் செண்டர்களுக்கு இந்திய அளவிலோ அல்லது உலத் தரத்திலோ தரச்சான்றிதழும் அனுபவமும் கொண்ட செக்யூரிடி நிறுவனங்களுக்கு மட்டுமே காவலர்களை நியமிக்க அனுமதியளிக்கும் உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி அமல்படுத்த வேண்டும். 

வங்கிகள் கம்பெனிகளுக்கு லோன் வழங்கும் போது அவர்களே அந்த லோன் அமௌண்ட்டில் கம்பெனிக்கான பொதுக்காப்பீடும் எடுத்து அதை வருடாவருடம் கம்பெனி செலவிலேயே புதுப்பித்துக் கொள்வதையும் போல, இந்த செக்யூரிடி நிறுவனங்களுக்கும் எடுத்துவிட வேண்டும். இந்த மாதிரியான எந்த அசம்பாவிதம் என்றாலும் அந்த காப்பீட்டுப் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதோடு, அந்த செக்யூரிடி நிறுவனமும் வங்கியும் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாகவும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படி ஒரு சட்டம் வந்தால் எல்லாரும் உஷாராக இருப்பார்கள். நிச்சயமாக ஒரு முழு 24 மணி நேரத்திற்கு மூன்று ஷிப்ட்டுகளுக்கும் தனித்தனியாக காவலர்கள் வர வேண்டும். அந்த காவலர்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கி அவர்கள் எதிரிகளை தடுத்துத் தாக்கும் உடல் தகுதியும் அதற்குத் தேவையான பயிற்சிகளும் ஒரு முறையான பயிற்சி நிலையத்தில் பெற்றவராக இருக்கும் தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு வங்கியும் தனித்தனியாக தங்களுக்கான செக்யூரிடிகளை நியமித்துக் கொள்ளாமல், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் அல்லது இதற்கென தனியான ஒரு துறையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம் களுக்கும் ஒரே நிறுவனமே இந்த சேவையை வழங்குவதற்கு வழி செய்ய வேண்டும். 

இது ஒரு முக்கிய பிரச்சினை...  ஆகையால் இதற்கென ஒரு தர நிர்ணயம் செய்து ஏடிஎம் களை அரசு அல்லது ரிசர்வ் வங்கி பாதுகாத்து மக்களுக்கான அச்ச உணர்வை அகற்றும் தன் கடமையை சிறப்பாகச் செய்ய வேண்டும். அதையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

நாம் பார்த்து உணர்ந்த வரையில் மேற் கூறிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்றாலும், இதற்கு மேலும் எத்தனையோ டெக்னிகல் விடயங்களை வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் செக்யூரிடி நிறுவனங்களோடு இணைந்து ஒரு நிபுணர் குழு அமைத்து ஏடிஎம் களில் ஒரு உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதி செய்து மக்களை பாதுகாக்க வேண்டும்....!!

இதுக்கெல்லாம் எதச்ச்சும் செய்யனும் பாஸ்...!



Thursday, November 14, 2013

பெரியண்ணன் அரசு....!

இணையம்...!


உலக அளவில் இன்றைக்கு எந்த தரப்பாலும் ஒதுக்க இயலாத.... ஏன்? தவிர்க்கவே முடியாத ஒரு தளம் அல்லது களமாக உருவாகி விட்டது. இது போன்ற அறிவியல் வளர்ச்சிகள் இந்தியாவைப் பொறுத்தவரை கொஞ்சம் மெதுவாகத்தான் உள்ளே நுழையும். ஏனெனில் நம் மக்கள்ஒரு புது விடயத்தை அவ்வளவு எளிதில் அண்ட விட மாட்டார்கள். ஆனால் உள்ளே நுழைய அனுமதித்து விட்டால், காட்டுத் தீ போன்று அவ்வளவு விரைவாக நம் மக்களோடு அது ஒன்றிவிடும்!

கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் அமெரிக்கா உட்பட பல்வேறு மேலை நாடுகளில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாகவும், ஒரு சில நாடு தழுவிய புரட்சிகளுக்கு முக்கிய காரணியாகவும் இந்த இணைய தளம் என்கின்ற சமூக வலைத்தளங்கள் இருந்ததை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த இந்தியா, 2010 களில் தொடங்கி இணையத்தை தொழில் முறையாக இதன் பயன்பாடு உள்ளவர்களையும் தாண்டி அனைத்துத் தரப்பினருமே இந்த இணையத்தை ஆரத் தழுவி வரவேற்பது மட்டுமன்றி அதனுடன் ஒன்றி வாழவே ஆரம்பித்து விட்டனர்!

இனி வரும் தேர்தல்களில் இந்திய அளவில் இந்த இணையத்தின் தாக்கம் என்பதை எவராலும் தவிர்த்திட இயலாது. 2011க்கு முன்பு வரை அதிமுக (ஜெயலலிதா சமூகத்து) ஆதரவு மனப்பான்மை கொண்ட மக்களால் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு அல்லது கையாளப்பட்டு வந்த இந்த சமூக வலைத்தளங்கள்...,

“நாம் மக்களுக்குத் தேவையானதை சரியாகத்தானே செய்து கொண்டிருக்கின்றோம்” என்ற நினைப்பில் நின்று கொண்டிருந்த திமுகவினர் கைகளிலிருந்து தட்டிப் பறித்து ஜெயலலிதாவின் கைகளிள் தூக்கிக் கொடுத்த ஆட்சி என்னும் அந்த உயரிய பரிசு திமுகவினர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை தந்திருந்தாலும், இணையத்தில் அப்பொழுதிலிருந்தே புழங்கி வந்து கொண்டிருந்த உடன்பிறப்புக்களுக்கு அது எதிர்பார்த்த ஒரு விடயமாகத்தான் இருந்தது.

ஆனால் திமுக என்பது பெரும்பாலும் அறிவாளிகளை உள்ளடக்கிய ஒரு இயக்கம் என்பதால், தேர்தல் தோல்வியின் காரண காரியங்களை உடனடியாக உணர்ந்து கொண்ட உடன்பிறப்புக்கள், ஆட்சி பறிபோன நிலையிலேயே சுதாரித்துக் கொண்டு, தாங்களாகவே இணையதளம் என்ற களத்தில் இறங்கி, தாங்களாகவே ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பல்லாயிரக் கணக்கானவர்கள் ஒன்றிணைந்து... ஒரு வருட காலத்திற்குள்ளாகவே தமிழக அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை இணைய உலகில் வேறு எவரையும் விட மிகப் பெரிய போர்ப் படையாக உருவாகி உலா வந்தனர்.

ஆனால் இந்த காட்டாற்று வெள்ளத்தை கரையமைத்து கழனிக்கு திருப்பிவிட்டு வெள்ளாமையை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமே....!! இதை யார் செய்வது?

கட்சித் தலைமை தான் செய்ய வேண்டும்! ஆனால் இது ஒரு புத்தம் புதிய களம். இதை எப்படி கட்டமைப்பது? அல்லது வடிவமைப்பது? பிரபஞ்சம் சார்ந்த அளவில் உறுப்பினர்களை கொண்டிருக்கும் இந்த அணிக்கு எப்படி பொறுப்புக்களை பிரித்தளிப்பது என்பது உட்பட எதற்குமே உலக அளவில் எந்த முன்னுதாரணமும் இல்லாத நிலையில், இது பற்றி சிந்தித்து திட்டங்களை வகுத்து அதை தெளிவாகவும் அழுத்தமாகவும் செயல்படுத்திட கட்சித் தலைமைக்கும் சிறிது அவகாசம் தேவைப்படும் தானே?!

ஆமாம் தேவைப் படும் தான்! ஆனால் அது வரை இந்த மாபெரும் எழுச்சியை, சக்தியை விரயமாக்கிக் கொண்டிருக்க முடியுமா? மேலும் மாபெரும் எழுச்சியினால் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கால், சில சமயம் கட்சிக்கே கூட சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விடலாம்!!

கட்சித் தலைமை ஒரு முடிவுக்கு வரும் வரை, இந்த எழுச்சியையும் குன்றிப்போகாமல் பாதுகாத்திட வேண்டும், ஆதரவாளர்கள் எண்ணிக்கையையும் பெருக்கிட வேண்டும், ஒரு சுய கட்டுப்பாட்டுடனும் கட்சிக்கு களங்கம் ஏற்படாமலும் இவர்களை கழகப்பணியாற்றிடச் செய்ய வேண்டும்.......

இதையெல்லாம் யார் செய்வது? இதை யார் முன்னெடுப்பது? என்பது புரியாத புதிராக இருந்த தருணத்தில் தான்......

அவர் எழுந்து நின்றார்!! நான் இருக்கின்றேன்... இங்கே வாருங்கள் என்றழைத்தார்.... தமிழகம் முழுதும் என்று கூட சொல்லக் கூடாது... உலகம் முழுவதிலுமிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைய அணி தோழர்கள் அனைவரும் .......

.....அனைவரும் வந்தால் புதுகை தாங்காது என்பதை புரிந்து கொண்டு, அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் ஓரிருவர், அங்கிருக்கும் மற்ற அனைவரின் ஒப்புதலுடனும் சார்பாகவும் புதுகையில் முற்றுகையிட்டனர்......

அங்கு வர இயலாதவர்கள் உலகம் முழுமைக்கும் இந்த நிகழ்வை நொடிக்கு நொடி எந்த இடைவெளியும் விடாமல் கொண்டு சென்று சேர்த்தனர்.....!!!

அந்த நாள் கழகத்தின் இணைய அணி வரலாற்றில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறிப் போனது. நமது கழகத்தையும் ஒரு நிலையில் இருந்து உலகளாவிய அளவில் அடுத்தக் கட்ட உயர் நிலைக்கு கொண்டு சென்ற முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது, தமிழகம் தாண்டியும் இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளையும் நம் கழகத்தை நோக்கி ஒரு வித பயபக்தியுடன் திரும்பிப் பார்க்க வைத்த நாளாக அமைந்தது...... தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கென்று ஒரு இணைய அணியை அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை அந்த நாள் ஏற்படுத்திவிட்டது!

(அவர்கள் அணியை உருவாக்கலாம், அதில் செயல்படுவதற்கு திறம்படைத்த ஆட்கள் வேணாமா? அதை விடுங்கள்......!)

அன்றைக்கு நம் கழக இணைய அணி தோழர்களிடம் ஏற்பட்ட ஒரு எழுச்சி, வகுத்துக் கொடுக்கப்பட்ட செயல் திட்டங்கள், வழங்கப் பட்ட அறிவுரைகள், அளிக்கப்பட்ட பயிற்சிகள், அறிந்துகொள்ள வைக்கப்பட்ட கழக வரலாறுகள் அனைத்தும் தான்....

அதன்பிறகு ஒரு புது மிடுக்குடனும், புத்திக்கூர்மையுடனும், கட்டுப்பாட்டுடனும், நேர்த்தியான விவாதங்கள் மூலமாகவும்..., நம் கழகத்தையும் அதன் தலைவர்களையும, கழகத்தின் கொள்கைகளையும், இது வரை கலைஞர் ஆட்சியில் செய்திருக்கின்ற சாதனைகளையும் பற்றி, இணையத்தை நோக்கி நாள் தோரும் படையெடுத்து வரும் புத்தம் புது இளைஞர்களிடம் நல்ல முறையில் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

ஒவ்வொரு உடன்பிறப்பும், தத்தமக்கு கைவந்த வகையில் இணையத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் உட்புகுந்து கச்சிதமாக கழக்ப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தேவைப்படும் போது தங்களுக்குள்ளாக ஒன்றிணைந்து கூடிப்பேசி (இணைய வழியாகவே) முடிவெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு கழகத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் தனி நபர்கள் அல்ல. தங்களுக்கு பின்புலமாகவும், உறுதுணையாகவும் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் வரிசைகட்டி நிற்கின்றார்கள். தலைவரும், தளபதியும் நம்முடனேயே இருந்து இணைய களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள், என்கிற தைரியத்தோடு இணையத்தில் தெளிவாக கழகப்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நம் தோழமைகளால் தலைவர் மற்றும் தளபதியின் கரங்கள் இணைய உலகில் மிகப்பெருமளவில் பலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கழகத்தை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற வெறியோடு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.!

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் யார்? அந்த மாமனிதர் யார்? கழகத்தை அதன் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வதற்கான மாபெரும் போர்ப்படையை ஒருங்கிணைத்து கழகத்தின் கைகளில் ஒப்படைத்திருக்கும் அந்த ஒப்பற்ற தொலைநோக்குச் சிந்தனையாளர் யார்????

இன்றைய தினத்தின் பிறந்தநாள் குழந்தையான நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைய அணி தோழமைகள் அனைவரின் பாசத்திற்கும் அன்பிற்கும் பாத்திரமான, புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் Periyannan Arassu தான் அந்த மாமனிதர்!!!

அவர் நினைத்திருந்தால் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த இணைய தோழர்களுக்கு மட்டும் இப்படி ஒரு கூட்டம் நடத்திவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் இணையம் என்பது ஒரு சிறு பகுதிக்குள் அடைத்து விடும் அளவிற்கான பொருள் அல்ல. இது எல்லை கடந்தது. இனி வரும் தேர்தல்களில் இதில் நம்முடைய வீச்சும் நாம் ஏற்படுத்துகின்ற தாக்கமும் தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யப் போகின்றது. அது மட்டுமன்றி நம் கழகத்தின் கொள்கையான “மாநில சுயாட்சி” போன்ற விடயங்களில் அகில இந்திய அளவில் விவாதங்களை உருவாக்கி பெரும்பாலானவர்களை அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்து அது பற்றிய ஒரு புரட்சியை இந்திய அளவில் ஏற்படுத்துவதற்கும் இந்த மாதிரியான எல்லை கடந்த இணைய அணித் தோழர்களால் மட்டுமே சாத்தியப் படும் என்பதையெல்லாம் தொலை நோக்கில் இந்த மனிதர் சிந்தித்ததன் வெளிப்பாடே, அப்படியொரு எல்லை கடந்த திமுகழகத்தின் இணைய பயிற்சிப் பாசறைக் கூட்டத்தைக் கூட்டி... ஒரு மாபெரும் வரலாற்றின் முதல் அத்தியாயத்தை அரங்கேற்றியிருக்கும் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்களின் இந்த செயல்!

இத்தகைய அண்ணன் அவர்களுக்கு நம் இணைய தோழர்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியினையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

On Your Mark.... கும்பகோணம்

ON YOUR MARK.... என்ற அடையாளத்தோடு ரோட்டரி மாவட்டம் 2980வின் 2014 - 15 க்கான “உச்சம் தொடும் வெற்றிப் பயணத்தின்” முதல் படியில் “டீம் பாலா” நேற்று (09.11.2013) ஏறி நின்று முதல் முத்திரையை அழகாக பதித்துள்ளது.... !

அடுத்த ஆண்டிற்கான தன்னுடைய குழுவின் பொறுப்பாளர்களை நியமித்து அவர்களுக்கான தொடர் பயிற்சிகளையும் அளித்து, அவர்கள் மூலமாக அனைத்து ரோட்டரி சங்கங்களையும் அவற்றின் அடுத்த ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலர் தேர்வுகளையும் ஒருங்கிணைத்து அந்தந்த சங்கங்களின் அடுத்த ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் பட்டியலைப் பெறுவது, மற்றும் ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான செயல்வீரர்களை நியமிப்பது வரையிலும் அனைத்து வேலைகளுமே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடந்து கொண்டு கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருந்தாலும்.....

ரோட்டரி மாவட்ட அளவிலான தலைவர் தேர்வுகளுக்கான பயிற்சிப் பட்டறை மலேஷியாவில் நடைபெறுவதற்கு முன்னால் ஒரு வெள்ளோட்டம் விட்டு தனித்தனிப் பகுதிகளாக சோதனை ஓட்டம் நடத்துகிற மாதிரியான "PRE PETS"என்று அழைக்கப்படும் பயிற்சிப் பாசறைக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளை உள்ளடக்கிய பத்து மண்டலங்களைச் சார்ந்த தலைவர் தேர்வுகளுக்கு நேற்று கும்பகோணம் பாரடைஸ் ரிஸார்ட்ஸில் வெற்றிகரமாக அரங்கேறியிருக்கிறது.

அடுத்த ரோட்டரி ஆண்டிற்கான பணிகள் இதுவரை எவ்வளவோ நடந்திருந்தாலும், ரோட்டரி என்ற மாபெரும் உலகமே அதன் ஒவ்வொரு சங்கத்தின் தலைவர்களை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்படும் அளவிற்கு சங்கத் தலைவர்களின் பங்களிப்பே பிரதானமானது என்கிற வகையில்.....

2014 - 15 ஆம் ஆண்டிற்கான ரோட்டரி சங்கத் தலைவர்களாக பொறுப்பேற்கப் போகின்றவர்கள் கலந்து கொள்ளும்“முதல்” நிகழ்வு என்பது நேற்று நடந்த ON YOUR MARK என்கிற PRE PETS தான்!!!

வரும் ஆண்டிற்கான இந்த முழு முதல் நிகழ்வு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்று “டீம் பாலா” ஒரு வித குறுகுறுப்புடனே ஒவ்வொரு செயலையும் தெளிவாக திட்டமிட்டு அதிக அக்கரையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்திருந்தது....!

பத்து மண்டலங்கள் கிட்டத்தட்ட அறுபது சங்கங்கள் அதன் தலைவர்கள்..... ஒவ்வொரு துணை ஆளுநருமே தத்தமது மண்டலத்தைச் சார்ந்த தலைவர் தேர்வுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை தொடர்ந்து உறுதி செய்து கொண்டே வந்து, அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் தாமும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு மாவட்டத்திற்கும் அனுப்பி வைத்ததில் ஆரம்பித்து.....

அவர்கள் அனைவரையும் தம்முடனேயே கும்பகோணம் கூட்ட அரங்கிற்கு கையோடு அழைத்து வரும் பணியையும் கச்சிதமாக நிறைவேற்றியிருந்தனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த துணை ஆளுநர்கள் மூத்தவர் கே.ஆர் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து வைத்திருந்தனர்.

அனைவரும் வந்தாச்சு...., நாலரை மணிக்கெல்லாம் விழா இனிதே துவங்க....

துணை ஆளுநர்கள் சார்பாக மண்டலம் 21ன் துணை ஆளுநர் தேர்வு மருத்துவர் பத்மானந்தம் அவர்கள் இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை இயல்பான நடையில் எடுத்துச் சொல்ல, வந்திருந்த தலைவர் தேர்வுகள் அனைவரும் அது வரையிலும் இருந்த ஒரு வித இருக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தனர்......!!!

ஆளுநர் தேர்வு பாலா அவர்கள், சங்க தலைவர்களின் பொறுப்புகளும், செயல்பாடுகளும் பற்றி கன கச்சிதமாக..., “இவ்ளோ தானா தலைவருக்கான வேலை?” என்று தலைவர் தேர்வுகள் எல்லாம் எண்ணுகின்ற அளவில் பதினைந்தே நிமிடத்தில் அற்புதமாக எடுத்துரைத்தார்.

அதன் பிறகு ரோட்டரியின் ஐந்து முக்கிய களங்களையும் அதை கையாள வேண்டிய விதங்கள் குறித்தும் முன்னால் மாவட்ட அளுநர்கள்..... சிவஞான செல்வன், அழகப்பன், ஜகன்லால், கேதார்நாதன், மருத்துவர் பழனிவேல் மற்றும் 2015 - 16 க்கான ஆளுநர் நியமனம் மருத்துவர் குணசேகரன் ஆகியோர் தலா இருபது நிமிடங்களுக்கு சுறுக்கமான ஒரு விளக்கவுரை ஆற்றி அமர்ந்தனர்.

இடையில் பதினைந்து நிமிடங்கள் தேநீர் இடைவெளி கொடுத்து, கடைசியில் பெட்ஸ் சேர்மன் தர்மேஷ் படேல் மஞ்சா மலேஷியா பற்றிய ஒரு காட்சிப் படத்துடன் தலைவர் தேர்வுகளுக்கு அழைப்பு விடுத்தார்.....!

நிறைவாக மாவட்ட ஆளுநர் தேர்வு பயிற்சிப் பாசறைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் பாலா அவர்களுக்கு துணை ஆளுநர்கள் சார்பில் மண்டலம் 22இன் துணை ஆளுநர் தேர்வு அண்ணன் ராஜகோபால் வாழ்த்துரையோடு வழியனுப்பு வைபவம் அன்போடு நடத்தி வைக்கப்பட்டது...!!!

அதன் பிறகு உற்சாகத்துடன் கூடிய இரவு விருந்து.....

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக நடைபெற்ற நமது ரோட்டரி மாவட்டத்தின் 2014 - 15க்கான இந்த முழு முதல் நிகழ்வு, வந்திருந்த தலைவர் தேர்வு அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும், மிடுக்கையும் கொடுத்து அடுத்த ஆண்டை ரோட்டரி மாவட்டம் 2980வின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சம் தொடும் ஆண்டாக அமைத்துக் கொடுக்கும் நிகழ்வாக வெற்றிகரமாக அமைந்திருந்தது....!

முதல் வெற்றி..... முற்றிலும் வெற்றி.....!

டீம் பாலா உச்சம் தொடும்!!!



இதற்குத்தானா ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி...?!

நேத்து தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” பார்த்தேன். ... 

நல்லாருக்கு..., இந்தப் படத்தை எடுப்பதற்கு, வெளியிடுவதற்கு, திரையிடுவதற்கு என்ற வகையில் முதலீடு செய்திருக்கின்ற எவராக இருந்தாலும் அவர்கள் முழுக்க முழுக்க நன்றி சொல்ல வேண்டியது படத்தின் இயக்குனருக்குத் தான். 

டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டு போடும் வரை அசராமல் தன்னுடைய முத்திரையை சீரான இடைவெளிகளில் தெளிவாக வைத்திருக்கின்றார். பட வியாபாரத்திற்கும், முதல் ஒன்றிரண்டு நாட்கள் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கவுமே விஜய் சேதுபதி பயன்பட்டிருக்கின்றார் அவ்வளவே!

படம் மிகச் சரியாக இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பகுதி இயக்குனரின் ஆத்ம திருப்திக்காக அழகாகவும், சுத்தமாகவும், யதார்த்தமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது என்றால் இன்னொரு பகுதி, வியாபார சமரசங்களுக்காக ஓடும் குதிரை விஜய சேதுபதிக்கான ட்ரெண்ட் என்ற நிர்ப்பந்தத்திற்காக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

ரொம்ப அழுக்கு, அவர்கள் பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் கலீஜாக இருக்கின்றது. இன்னும் ஒரு படம் இதே டெம்ப்ளேட்டில் நடித்தால், விஜய் சேதுபதி சொந்த ஊருக்கு ரயில் ஏறிவிட வேண்டியதிருக்கும்....!

ரசனையே இல்லாத அல்லது ரசிக்கவே முடியாத ஒரு முக பாவனையுடனே எல்லா படங்களிலும் இவர் காட்சியளிப்பது பெரிய அலுப்பை இலக்கியவாதிகள் அல்லாத யதார்த்த மனிதர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இயக்குனரிடம் மட்டும் அவர் தன்னை இயக்குனரின் நடிகராக விட்டுக் கொடுத்திருந்தால், அந்த கேரக்டரை தமிழ் திரையுலகில் சிறப்பாக பேசப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக பார்த்துப் பார்த்து செதுக்கித் தந்திருப்பார் அந்த இயக்குனர்.

எனக்கு சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி மேல் அடுத்த ரஜினி கமல் என்பது மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சிகா இதுவரை சொதப்பவில்லை, ஆனால் விசே தடம் புரண்டு விட்டார். இனியாவது சுதாரித்துக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஓரம் கட்டிவிட்டு, நல்ல நல்ல இயக்குனர்களிடம் பக்குவமான களிமண்ணாக இவர் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்...

அதைச் செய்தால் தமிழ் திரை வரலாற்றில் கமலஹாசனின் கலை வாரிசாக உருவாவதற்கு விஜய் சேதுபதிக்கு நல்ல வாய்ப்பிருக்கு!

கொத்துக்கொத்தாய் செத்து விழும் மாடுகள்....!


நாகை மாவட்டம்.....

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று கேட்டால் இன்னமும் பாட புத்தகங்களில் தஞ்சை என்று தான் சொல்வார்கள். ஆனால் பழைய தஞ்சை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டதில் இருந்து இன்றைய நிலையில் தமிழகத்திற்கு மிக அதிக அளவில் நெல் விளைவித்துத் தருகின்ற மாவட்டம் என்றால் அது நாகை மாவட்டம் தான்.

காவிரியின் அச்சு அசல் டெல்ட்டா என்றால் அது இது தான். காவிரியின் கடை மடை பகுதியும் கூட இந்த மாவட்டத்தில் தான் வருகிறது. தொழில் துறையைப் பொறுத்தவரை மிக மிக பின் தங்கிய மாவட்டமாக இருக்கின்ற இந்த நாகை மாவட்டத்தில், மக்களுக்கான பிரதான வருவாய் என்பது நெல், கரும்பு விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துணை தொழில் அமைப்பான கால்நடை வளர்ப்பும் பராமரிப்பும் தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பகுதியில் காவிரித்தாயின் லீலையில் தாளடி தருவாயில் கூட கடைமடையை காவிரித் தண்ணீர் எட்டிப்பார்க்காத அவலம் பல பகுதிகளில் இருக்கின்ற போதே இந்த பகுதியில் விவசாயம் எந்த அளவிற்கு மக்களின் வருமானத்திற்கு உதவக்கூடியதாய் இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை....!

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இம்மாவட்ட மக்களின் குறிப்பாக கிராமப்புர மக்கள், அடித்தட்டு மக்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த தாய்மார்கள் அனைவருக்குமே வருவாய் ஆதாரமாய் இருந்து கொண்டிருந்த மாடுகளுக்கு ஒரு வித இன்னமும் பெயர் வைக்கப்படாத நோய் தாகுதல் ஏற்பட்டு இதுவரை ஆயிரக்கணக்கான மாடுகள் பொத்து பொத்துன்னு இறந்து விழும் கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.....

தற்சமயம் இந்த நோய் ஆடுகளுக்கும் பரவி அவற்றின் சாவுகளும் மக்களை அதிர வைத்திருக்கின்றது.

இந்தப் பகுதிகளில் ஆடு மாடு வளர்ப்பு என்பது ஒரு சிறு, குறு தொழில் மாதிரியான விடயம். லடசக்கணக்கான மக்கள் இத் தொழிலில் ஈடுபட்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கும், கல்யாணத்திற்கும், மற்ற நல்லது கெட்டதுகளுக்குமான வருவாய் ஆதாரமாய் இந்த தொழில் தான் இருந்து வருகிறது.

இதற்கு முதலுக்கே மோசம் வரும் வகையில் மிகப் பெரும் ஆபத்து தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று வரையிலும் அந்த கால்நடை நோய்க்கு ஒரு பெயர் கூட வைக்க முடியாத நிலையில் தான் தமிழக அரசின் நிர்வாக இயந்திரம் திறம்பட செயல்பட்டு வருகின்றது! ஆட்சி சரியாக செயல்படாத போது அதன் அடுத்தடுத்த தூண்களான அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்துடன் உலா வரும் வீரர்களும், ஊடக விளம்பர பிஸ்கோத்து வாலாட்டிகளும் டெல்லியில் கட்சியை வளர்க்கவும், மோடி பஜனை பாடவுமே நேரம் கிடைகாமல் திண்டாடும் நிலையில்......

இந்த பாதிக்கப்பட்ட பாவப்பட்ட மக்களை யார் தான் கண்டுகொள்வது? குறைந்தபட்சம் அவர்களது பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்வதற்காவது யாராவது வேண்டாமா? அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எம் எல் ஏக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கழுத்தை திருப்பிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் போது, என்ன செய்வது ஏது செய்வது என்று திண்டாடித் திணறிக் கொண்டிருக்கும் வேலையில் தான்....

வழக்கம் போல திமுக தன் கடமையை ஆற்ற களம் இறங்குகின்றது. ஏற்காடு தேர்தலாகட்டும், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலாகட்டும், அனைத்துமே மக்களுக்காகத் தானே என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து செயல்படும் இயக்கமல்லவா? அதனால் தான் அந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நாங்கள் இருக்கின்றோம் உங்களோடு என்று களம் இறங்குகிறது..... மக்களும் தங்களது ஆப்த இயக்கமான திமுகவோடு கண்கள் பனிக்க இணைந்து கொள்கின்றார்கள்....



அதன் ஒரு கட்டமாக இன்றைக்கு மயிலாடுதுறையில் மாவட்டம் தழுவிய அளவில் மாபெரும் அறப்போராட்டத்தை திமுக மாவட்ட கழகம் ஏற்பாடு செய்து திமுக மாவட கழக செயலாளர் அண்ணன் ஏ.கே.எஸ். விஜயன் எம்பி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றது.

இறந்து போன மாடுகளுக்கு முப்பதாயிரம் ரூபாயும், ஆடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த நோய்க்கு சரியான மருந்தை கால் நடைகளுக்கு இலவசமாக வழங்கக் கோரியும், நடமாடும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களை பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்களிலேயே அமைத்து அவற்றைக் காப்பாற்றி மக்களை பெரு நட்டத்திலிருந்து காப்பாற்றவும் கோரிக்கைகளை வைத்து மக்களை திரட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ந்டத்தி, மனுவும் வழங்கப்பட்டிருக்கின்றது.

திமுக மக்களை திரட்டிவிட்டது என்கிற போது இனி அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அலட்சியப் படுத்திட முடியாது. அப்படி அலட்சியப் படுத்தினால் அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் என்று இறங்கி, நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவுகாலம் வந்தே தீரும்.

இலக்கியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், சாதிக்கூட்டமைப்பினர், ஈழப்போராளிகள், பொருளாதாரப் புலிகள்.... இப்படி எத்தனையோ முக மூடிகளோடு வந்து திமுகவை அழிக்கத்துடிக்கும் காகிதப் புலிகளே, நன்றாக கேட்டுக்கொள்ளூங்கள்......

திமுக என்றைக்குமே மக்களோடு மக்களாக புழங்குகின்ற இயக்கம். நீங்கள் எத்தனை முயன்றாலும் மக்கள் திமுகவை விட்டுக்கொடுக்க மாட்டவே மாட்டார்கள்.....

வரும் தேர்தல்களில் இது உங்களுக்கு நன்றாகவே புரியும்.... அதுவரையிலும் நீங்கள் இந்துவிலும், ஆவிகளிலும் கட்டுரை எழுதி காசு பார்த்துக்கொண்டிருங்கள்..... நாங்கள் மக்களை கவனித்துக் கொள்கிறோம்....!!!

மாயவரம் முழுக்குக்கு வர்றீயளா.....?!


எங்க மாயவரத்து மக்களுக்கெல்லாம், ஐப்பசி மாசம் பொறந்துச்சின்னாவே ஒரு குஷி பிறந்திடும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முழுமை பெற்ற பிரதான அடையாளமே மாயவரம் என்று சொல்லலாம். விவசாயம், ஆன்மீகம், காவிரி, திருத்தலங்கள், தமிழ் பதிகங்கள், சைவ மடங்கள், தெளிவான உலகம், பொது, அரசியல் அறிவு நிறைந்த மக்கள், பழமையை மாற்றிக்கொள்ள விரும்பாத கலாச்சார ப்ரியர்கள், நீண்ட அகலமான வீதிகள், ஊரை இரண்டாக பிளந்து கொண்டு நகரின் பிரதான கடைத்தெருவிலேயே ஓடிக் கொண்டிருக்கும் காவிரி, அற்புதமான ஃபில்டர் காஃபி, அதிகாலை பொங்கல், வாசம் வீசும் ரவா தோசை, அதிகம் ஆசைப்படாத மக்கள், எங்கு சென்றாலும் ஊர்ப்பாசம் விடாத மண்ணின் மைந்தர்கள்.....



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  ஊர் முழுவதிலும் அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆயிரம் வருடங்களுக்கும் மேலான தொன்மை வாய்ந்த கற்றளிக் கோவில்கள் இருந்தாலும், ஊரைச் சரிபாதியாகப் பிரித்து நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியின் தென் பகுதியில் இருக்கும் மாயூரநாத ஸ்வாமி திருக்கோவிலும், காவிரியின் வடகரையில் இருக்கும் வதான்யேஸ்வரர் திருக்கோவிலும் ஆன்மீகத்தை வளர்த்ததை விட தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொய்வில்லாமல் வளர்த்து வந்திருக்கின்றன.

எனக்குத் தெரிந்து தமிழ்க்குறவர்கள் நால்வர் அணியின் தேவார, திருவாசக பதிகங்கள் எங்கள் மாயவரத்து மக்கள் வாயிலும் மனதிலும் அன்றாடம் புகுந்து புறப்பட்டு வருவதைப் போன்று வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. 

ஐப்பசி மாதம் வந்தால் இங்கே முப்பது நாட்களும் விசேஷம் தான். ஐப்பசி முதல் தேதியில் இருந்தே மேற்சொன்ன இரண்டு கோவில்களில் இருந்தும், குடும்பத்தலைவர், தன்னுடைய மனைவி, பிள்ளைகள், சேனாதிபதிகள், நண்பர்கள் புடை சூழ ரொம்ப ரிலாக்ஸ்டா காவிரிக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

மாயூரநாதர் ரஜினின்னா, வதான்யேஸ்வரர் கமல்ஹாசன். ரெண்டு பேருமே நண்பர்கள் தான் என்றாலும், இருவரும் இரு கரைகளிலும் தீர்த்தமாடும் போது, அவர்களது ஆதரவாளர்கள் இடையே முட்டிக்கொள்வது போன்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த வாக்குவாதங்கள் ஒன்னாங்கிளாஸ் முதல் பன்னெண்டாம் கிளாஸ் மாணவ, மாணவிகள் வரை தீவிரமாக நடைபெரும்!

பகலில் காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வரும் குடும்பம், மதியம் கொஞ்சம் கண்ணயர்ந்த பிறகு மாலையில் திரும்பவும் கிளம்பி கடைத்தெரு வழியாக காவிரிக்கரையில் இருக்கின்ற மண்டபங்களில் அமர்ந்து அங்கிருக்கும் நண்பர்களுடன் அளவலாவிவிட்டு, மீண்டும் இரவு முக்கிய வீதிகளின் வழியாக ஒவ்வொரு வீட்டாரையும் குசலம் விசாரித்துக்கொண்டே..  தம் இருப்பிடமான திருக்கோவிலை வந்தடைவர்.

போகும் போது பட்டமங்களம் வழியாகச் சென்றால் வரும் போது மகாதானம் வழியாக வருவார்கள். எல்லா நாட்களிலும் நான்கு முக்கிய வீதிகளிலும் பிரயாணம் உண்டு என்றாலும் சில குறிப்பிட்ட நாட்களில் மாடவீதிகள், திருமஞ்சன வீதிகளில் எல்லாமும் உள்ளே புகுந்து அங்கிருக்கும் மக்களையும் சமாதானப்படுத்தி விடுவார்கள்....!

இப்படியே இருபது நாட்கள் கடந்த நிலையில் 21 ஆம் நாளில் இருந்து விசேஷம் மிகக் கடுமையாக சூடு பிடித்துவிடும். இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு விசேஷ வைபவங்கள் அரங்கேறும். சப்பரத்தில் வீதி உலா, சூர சம்ஹாரம், மயிலம்மன் பூசை, வேல் வாங்குதல், திருக்கல்யாணம், பிரம்மாண்ட தேர் உலா என்று நீண்டு முப்பதாம் நாள் “முழுக்கு” என்று அழைக்கப்படும் கடைமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும், அதற்கு அடுத்தநாள் “கடை முழுக்கு” என்று அழைக்கப்படும் முடமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும் மிகச் சிறப்பாக நடைபெற்று, மாயவரத்தின் ஒட்டுமொத்த மக்களும் காவிரிக்கு வந்து இறையோடு நீராடிவிட்டுச் செல்வார்கள்....!

இந்த முப்பது நாள் விழாவிற்கும், அதிலும் ஒவ்வொரு நாளின் தனித்தனி நிகழ்வுகளையும் பிரித்தெடுத்து அவற்றுக்கான செலவுகளை சமாளிக்க ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள், பெரிய குடும்பத்தினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், குழுவாக இணைந்து சாமான்யர்கள்...  என்று அனைத்து தரப்பினரும் போட்டி போட்டு ஸ்பான்ஸர் செய்துவிடுவார்கள்....

எங்க ஊர் முழுக்கு கடை ரொம்ப பிரசித்தம். முன்னெல்லாம் சின்னக்கடைத்தெருவில் ஆரம்பித்து காவிரிக்கரை வரை மகாதானத்தெருவின் இரண்டு பக்கமும் போடப்பட்டிருக்கும் கடைகள், சமீபகாலமாக நகராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் பெரிய மைதானத்தில் போடப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இந்தக் கடைகள் விரிக்கப்பட்டிருக்கும். இங்கே விற்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் ஊரில் உள்ள அனைவருமே குடும்பத்துடன் முழுக்கு கடைக்கு சென்று வருவது தவிர்க்க முடியாத ஒரு அஜெண்டா. 

ஒவ்வொரு வீட்டிலும் பசங்களுக்கு முழுக்கு காசு கொடுப்பது இங்கே பிரஸித்தம். 

இந்த அற்புத திருவிழா தற்பொழுது எங்கள் மாயவரத்தில் களைகட்டி உச்சம் தொடும் தருவாயில் இருக்கின்றது.  நேற்று திருக்கல்யாணம் முடிஞ்சாச்சு, நாளை தேர், நாளை மறுநாள் முழுக்கு........

இன்றைக்கு எட்டாம் நாள் திருவிழா, நலுங்கு உற்சவம்... இந்தியா முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து மாதத்தில் ஏதோ ஒரு நாள் இங்கே காவிரியில் நீராடிவிட்டுச் செல்கின்றனர். முப்பது நாட்களும் காலையில் சென்று காவிரியில் நீராடிவிட்டு சொட்டச் சொட்ட வரும் வயது முதிர்ந்த ஆண்களையும் பெண்களையும் சாரை சாரையாக இன்றைக்கும் காணலாம்....

நீங்களும் ஒரு எட்டு எங்க மாயவரம் முழுக்குக்கு வந்துட்டுப் போங்க மக்கா.....!

Thursday, October 24, 2013

அடி வாங்கும் அதிமுகவும்..! அலற ஆரம்பிக்கும் அவா ஊடகங்களும்..!!



தனக்கு எதிரான எந்த ஒடுக்குமுறையையும் தட்டிக்கேட்க எவருமே இல்லாத நிலையில், அப்படிக் கேட்கின்ற ஒருசிலர் மீதும் அடுக்குமுறையை ஏவி அப்புறப்படுத்தும் போதும் தான்....

ஒரு இனம், தனக்குத் தானே என்பது போல் இயல்பாகவே ஒன்றிணைந்து தனக்கு எதிரான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் முடிவு கட்ட வெகுண்டு எழும். அப்படி எழும் போது அந்த உணர்ச்சியின் வீரியம் அளப்பரியதானதாக இருக்கும். அது தன் குறிக்கோளை அடையாமல் அடங்காது. அதற்குப் பெயர் தான் “புரட்சி”!

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்படி மக்களுக்கு எதிராக, வரலாறு காணாத விலையேற்றம், மின் கட்டண, பஸ் கட்டன உயர்வு என்பதோடு மட்டுமல்லாமல், ஜாதிக் கலவரங்கள், வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள், 144 தடை உத்தரவுகள், சங்கிலிப் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை என்று தொடர்ந்து..., மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட விவசாயம், சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் என்பதுகளில் இருந்தது மாதிரியான மிக மிகப் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் அடித்தட்டு மக்களிடையேயும், கீழ் நடுத்தர வர்க்கத்து மக்களிடையேயும் தலைவிரித்து ஆடுகிறது என்பதில் நீண்டு...., சாலைகள், பாலங்கள், தூர்வாருதல், துப்புறவுப் பணிகள் முதற்கொண்டு கடந்த ஆட்சியில் நடந்து கொண்டிருந்த அனைத்து உட்கட்டமைப்புப் பணிகளும், உள்ளாட்சிப் பணிகளும் பராமரிப்பின்றியும், தொடராமலும் சிதைந்து போயிருப்பதும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை நேரடியாக பாதிக்கும் அனைத்து துறைகளிலும் மிகச் சாதாரணமாக நடக்கும் ஊழகள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் டிரான்ஸ்ஃபர் ஊழல்கள் என்பதை எல்லாம் அதிமுகவின் அதி தீவிர ஏடுகளான ஜூவியும், தினமலருமே பட்டியலிட்டு அலறும் நிலையில்.......

மக்கள் இன்னும் பெரிய ஏற்றம் அல்லது மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்த அதிமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்த அவலங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த ஆட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்க, மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கி சிறப்பித்த விஜயகாந்த் பம்மிப் பதுங்கி விட, ஊடகங்களும் மிரட்டப்பட்டோ அல்லது ரொட்டித்துண்டுகள் போட்டோ முடக்கப்பட...

திமுக மட்டும் வழக்கம் போல் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். சட்டமன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும் அரசின் தவறுகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி திமுக மட்டுமே மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது. தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நிகழ்த்தி உங்களோடு, உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்திருகின்றது. உடகங்கள் கண்ணைப் பொத்தி, வாயை மூடிக்கொண்டிருந்தாலும், வலிமையான இணையதள பிரச்சாரம் மூலம் அக்கட்சியின் தலைவர், தளபதி முதல் அடிமட்டத் தொண்டன் வரை இந்த ஆட்சியின் அவலங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சென்று இந்த அவல ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு மிகப் பெரிய அளவிலான அத்துமீறல்களுக்கு அணை போட்டுக் கொண்டிருக்கின்றது.....!

ஆயினும், தாங்கள் கொடுத்த மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதாலும், அவா தரப்பு ஊடகங்களின் அளப்பறிய ஆசீர்வாதத்தாலும், மற்ற தரப்பு ஊடகங்களின் மண்டியிடலாலும், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து விட்டு, அதிலிருந்து மக்கள் கவனங்களை திசை மாற்ற சாதிச் சங்கங்களின் செயல்பாடுகளை நீர்த்துப் போகாமல் நிலை நிறுத்தி, ஒரு சில கவர்ச்சியான இலவச அல்லது மலிவு விலைத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி, மது குடித்தலை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்து, பணப்புழக்கம் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை வாய்ப்பும் இல்லாமல், எதிர்காலத்தில் அவாளை அண்டிப்பிழைக்கும் அவல நிலைக்கு தாம் தள்ளப்படுவதை மக்கள் தெளிவாக உணர்ந்து பொங்கியெழ ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதன் பொருட்டே மக்களின் இந்த எழுச்சி...., எங்கே “புரட்சியாக” மாறிவிடுமோ என்று பயந்து தான் அவா ஊடகங்களே தற்பொழுது மக்களை நேரடியாக பாதிக்கின்ற அரசுத்துறை ஊழல்கள் பற்றி அரசை விமர்சிக்காமல், எச்சரிக்கும் விதமாக எழுத ஆரம்பித்திருக்கின்றன....!!!

ஆகவே, அதிமுக ஆட்சியாளர்களே! அவா தரப்பு ஊடகங்களே!! இது பழைய காலம் இல்லை, எல்லோரையும் எப்பொழுதுமே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கு! மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், நீங்கள் வீழ்த்தி விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு ஆதரவாக அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு எழுச்சியுடன் களத்தில் நிற்கின்றது......

அடங்கி ஒடுங்கி, ஒழுக்கமான் ஆட்சியை நடத்துகின்ற வழியைப் பாருங்கள்.... இல்லையென்றால் வருங்காலம் உங்களுடையதாக இருக்காது!!!


Monday, October 21, 2013

திராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...!

கடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பிரச்சாரம் என்பது ஐந்து தலைபிலானதாக இருந்தது. 1. இலங்கைப் பிரச்சினை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குறுநில மன்னர்கள், 4. அளவுக்கதிகமான இலவசமும் அதனால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வும், 5. மின்வெட்டு!!

இதில் “குறுநில மன்னர்கள்” தலைப்பில் அவர்கள் செய்த பரப்புரையில் மிக அதிக அளவில் வறுத்தெடுக்கப்பட்டது நமது சேலத்துச் சிங்கம் ஐயா வீரபாண்டியார் அவர்கள் தான்....

இந்த ஃப்ளாஷ்பேக்ல கட் பண்ணி இப்பத்திக்கி சீனுக்கு வாங்க மக்கா...!


                    

கடந்த வாரம் சேலம் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் மாளிகையில் உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடைபெற்ற கழக மாணவரணியின் மாநிலம் தழுவிய அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் நானும் கலந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிட்டியது.

அங்கே வந்திருந்த அனைவருக்கும் நல்ல புத்தகம் ஒன்றை உள்ளே நுழையும் போதே பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கலைஞர் ஆட்சிக் காலங்களில் தமிழ்கத்திற்குச் செய்த சாதனைகளின் பட்டியல்.... இது தான் அந்த நூலின் உள்ளடக்கம். ஒரு கட்சி அதன் தலைவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள், அந்த நாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், நிலைநாட்டிய சமூகநீதி சட்டங்கள், உருவாக்கிய வேலை வாய்ப்புகள், ஏற்படுத்திய தொழிற் புரட்சிகள், நிறைவேற்றிய தொலை நோக்குத் திட்டங்கள், நிறுவிய வரலாற்றுச் சின்னங்கள்... என்ற பட்டியலை புத்தகமாக வெளியிடும் அளவிற்கான எண்ணிக்கை கொண்டது என்பதான வரலாறு இந்த இந்திய அளவில் வேறு எவருக்காவது சாத்தியமா? என்பதை மோடி மஸ்தான்களின் மகுடிக்கு மயங்கிக் கிடக்கும் மிடில் கிளாஸ் மாதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது போகட்டும்! அந்த புத்தகத்தில் ஐயா வீரபாண்டியார் சேலம் மாநகருக்கும், ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்திற்கும் செய்திட்ட நலப்பணிகளை சுறுக்கமாக பட்டியலிட்டிருந்தனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கையே ஐம்பத்தி ஒன்று என்ற அளவில் இருந்தது. அந்தப் பட்டியலில் பத்து பேருக்கு சைக்கிள் கொடுப்பது, நூறு பேருக்கு தையல் மெஷின் கொடுப்பது, ஆயிரம் பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்தது போன்ற நற்பணிமன்ற பணிகளை எல்லாம் சேர்த்து ஒப்பேற்றியிருக்கவில்லை.

இன்னும் ரத்தினச் சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஐயா வீரபாண்டியார் போராடிப் பெற்று தம் மாவட்டத்திற்கு செய்திட்ட அந்த ஐம்பத்தியொன்று நலத்திட்டங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் சேலம் என்பது ஆந்திரா, ஒடிசா அல்லது பீகாரில் இருக்கின்ற ஒரு கிராமத்தைப் போன்றதாகத்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் புலனாகியிருக்கும்.

எத்தனையெத்தனை புதிய அரசுப் பள்ளிகள், எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன, அற்புதமான அரசு நூலகம், மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை, உருக்காலை இரண்டாம் நிலை, உள்ளாட்சியிலிருந்து மாநில நெடுஞ்சாலையாகவும், மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு மாவட்டம் முழுவதும் தரம்மிக்க சாலைகளால் இணைத்திருக்கின்றார், அதன் விளைவாக எத்தனையெத்தனை மேம்பாலங்கள், விவசாயத்துறையில் இருந்ததால் அது சம்பந்தப்பட்ட உயரிய ஆராய்ச்சிக் கூடங்கள், எத்தனையெத்தனை குடியிருப்புகள்......

இப்படியாக மாவட்டத்திற்கும், மக்களுக்கும் தொலைநோக்கிலும் சமகால வாழ்வாதாரத்திற்கும், அடிப்படை மற்றும் கிராமப்புர கல்விச் சேவையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றார்.

இவ்வளவையும் ஒரு மாவட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையிடம், உரிமையோடு போராடிப் பெறக்கூடிய அளவிலான சக்திமிக்க இந்த மாதிரியான குறுநில மன்னார்களாலேயே சாத்தியப்படும்! சாமான்யர்களால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இவ்வளவு பெரிய திட்டங்களை குறுகிய கால அளவில் சாத்தியமாக்கியிருக்கவே முடியாது.

வீரபாண்டியார் என்று மட்டுமல்ல, திமுகவின் குறுநில மன்னர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேருமே தன் தலைமையிடம் போராடி பிரம்மாண்டமான எண்ணற்ற நலத்திட்டங்களை தத்தமது பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள்.

அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகமானது உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட வேலைவாய்ப்பு வரை இன்றைய தேதியில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருகின்றது.

மோடியின் குஜராத் அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என்று புலகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தையும் இன்றைய தமிழகத்தையும் படம் பிடித்துப் பார்த்தால், இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதுவும் இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் மந்திரித்துவிடப்பட்டிருப்பவர்கள் எல்லாம் கவனிக்க வேண்டும்.

திமுகவின் குறுநில மன்னர்களைப் பற்றி ஆயிரம் குறைகள் கூறி கூத்தடித்த ஊடகங்கள் மோடியின் மதவாத அராஜகங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. அதே சமயம், குஜராத் வளர்ச்சியைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பவர்கள், தமிழகத்தின் கடந்த இருபது ஆண்டுகால வளர்ச்சியையும் அதற்காகப் போராடிய இந்த குறுநில மன்னர்களையும், அவற்றுக்கெல்லாம் அனுமதியளித்த சக்கரவர்த்தி கலைஞரையும் பற்றி கண்டுகொள்வதே இல்லை!!

ஊடகங்களைப் பற்றிப் புலம்புவதால் இனி நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கலைஞர் கொண்டு வந்த நமக்கு நாமே திட்டம் போன்று நாமே நம் சாதனைகளை மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்களின் வாயிலாகவும், இணையதளங்களின் வாயிலாகவும் பட்டியலிட்டு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு கடந்தகால மற்றும் நிகழ்கால தமிழகத்தை ஒப்பிட்டுக்காட்டி அந்த வளர்ச்சிக்குக் காரணமான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் குறுநில மன்னர்களையும், அதன் சக்கரவர்த்தியையும் பற்றி புரிய வைக்க வேண்டும். அதுவே நமது கடமை. இதைச் செவ்வனே செய்து வந்தாலே எதிர்காலம் நம் கைகளில்!!!

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்...!

வளர்க அதன் குறுநில மன்னர்களும், சக்கரவர்த்தியும்....!!




Thursday, September 26, 2013

மோடி விஜயமும் - கண்கள் பனித்து இதயம் இனித்ததும்!!


மோடி இங்க வந்துட்டு போனதுல பல கோணங்களில் எண்ணற்ற விமர்சனங்கள் அவருக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக இங்கே பகிரப்படுகின்றன......

ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு மோடியை தவிர்க்க எனக்கு இரண்டு முக்கிய காரணங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. 

ஒன்று: மோடி வருகையை ஒட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விடுமுறை கொடுக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டது - இது இதுவரையிலும் தமிழகத்தில் இல்லாத நடைமுறையை புகுத்துவதாக அமைந்திருக்கிறது. 

பாஜகவுக்கு மிக எதிரான எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் நிலையில், இந்த அபாயகரமான புது பிரிவினை வாத செயலை ஜெயலலிதாவின் தமிழக அரசின் ஆதரவில்லாமல் வேறு யார் செய்திருக்க முடியும்??!!

இது நாம் பெரிய அளவில் கவலைப்படவும், சிந்திக்கவும், கடுமையாக எதிர்க்கவும் வேண்டிய பிரச்சினையாக கருதுகின்றேன்!

இரண்டாவது: வடக்கத்திய தலைவர்கள் தமிழகம் வரும்போது நம் மனநிலையை அறிந்து ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள் கூட எழுதி வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவது தான் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த நடைமுறையை மாற்றி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு, நுணுக்கமாக கவனிக்கத்தக்க மனிதனாக மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் பேசிய அந்த கன்னிப்பேச்சில் மோடி ஹிந்தி மொழியில் பேசியிருப்பது.......!!!

.......தமிழுக்கான தமிழர்களுக்கான மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் கைகளில் ஆட்சிப்பொறுப்பு வருமாயின் தமிழ் உட்பட இந்தியாவின் தொன்மையான மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்து போகும் அபாயம் இருப்பதை, மோடியின் இந்த அப்பட்டமான சமிக்ஜை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இது சம்பந்தமான மிகப் பெரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டங்களை நம் இணையம் மூலமாகவாவது உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும். 

இதையெல்லாம் மீறி எனக்கு மூன்றாவதாக ஒரு சந்தோஷமான உணர்வு நீண்ட காலத்திற்குப் பிறகு ஊற்றெடுப்பதையும் நன்கு உணர்கிறேன்!

பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், தளங்களைச் சேர்ந்த நம் தமிழ் இளைய சகோதரர்கள், இவ்வளவு நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தவர்கள் மோடியின் பொருட்டு, பெரியார் கொள்கைகளை கைகளில் ஏந்தியபடி ஓரணியில் திரள்வதை இணையத்தில் ஆங்காங்கே காண்கிறேன்.....!!!

சமீப காலமாக தமிழுணர்வாளர்கள் என்ற போர்வையில் உலா வந்து குட்டையை குழப்பிக்கொண்டிருந்தவர்களின்  சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. தமிழருவி மணியன்களும், வைக்கோக்களும் ஆரியக்கரையில் ஒதுங்கி விடுங்கள். இனி திராவிடத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்!!!


இதைக் கண்டு தலைவர் கலைஞர் அவர்களின் வசனம் ஒன்றை கடன் பெற்றுக்கொள்கிறேன்...

”கண்கள் பனிக்கின்றன.... இதயம் இனிக்கின்றது”