Saturday, August 29, 2015

லயோலா கருத்துக்கணிப்பு - ஒரு பார்வை..


நேற்றைக்கு வைக்கோ திமுகவோடு கூட்டணி இல்லைன்னு அறிவித்த உடனேயே எனக்கு அடி மனதில் ஒருசந்தோஷம். ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகுதுன்னு...!!

இன்னிக்கு லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வந்து அதை உறுதிப்படுத்திவிட்டது..!

இதே லயோலா கல்லூரியின் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில்....   44 சதவிகிதம் மக்கள் ஆதரவு பெற்றிருந்த அதிமுக... இன்று வந்த கணிப்பில் 10 சதவிகித மக்களின் ஆதரவை இழந்து 34.6 சதவிகிதமாக சுறுங்கியிருக்கின்றது...!

அதே சமயம் கடந்த ஆண்டு (2014) கருத்துக்கணிப்பில் 26 சதவிகித மக்கள் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த திமுக... இன்றைய கணிப்பில்,  6 சதவிகித மக்களின் அமோக ஆதரவைப் பெற்று...  32,1 சதவிகிதமாக பிரம்மாண்டம் காட்டியுள்ளது.

இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு கருத்துக்கணிப்பு. அதாவது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வங்கி சதவிகிதம் தற்பொழுது வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே...!

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஒரு ஆளும் கட்சியால் தனது வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது கிட்டத்தட்ட இயலாத ஒரு காரியம். அதே சமயம், எதிர்க்கட்சிக்கு, தங்கள் வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்வது சிறிது சுலபமான காரியமும் கூட..!!

அந்த வகையில் இந்த 1.5 சதவிகித வாக்கு வங்கியை திமுக திட்டமிட்டு செயலாற்றினால் வெகு இலகுவாக இட்டு நிறப்பி...  இன்னும் கூடுதல் வாக்குகள் பெற்று நிச்சயம், ஆட்சியைப் பிடிக்கும்...!!

இந்த கருத்துக்கணிப்பில் வந்திருக்கும் இன்னொரு முக்கிய விஷயம்....

யார் அடுத்த முதல்வராக வர விருப்பம் என்ற கேள்விக்கு...

ஜெயலலிதாவுக்கு 31 சதவிகித ஆதரவும்...

திமுகவின் தலைவருக்கு 23.5 சதவிகித ஆதரவும்...

திமுகவின் பொருளாளருக்கு 28 சதவிகித ஆதரவையும்...

மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதை திமுகவினர் கொண்டாட வேண்டும்...! ஏனெனில் திமுக சார்பான முதல்வர் வேட்பாளருக்கு தமிழக மக்களில் 50 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்...!!

திமுகவுக்கு அடுத்த படியாக அதிமுக சார்பு முதல்வர் வேட்பாளருக்கு வெறும் 31 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்...!!

அதாவது திமுக முதல்வருக்கும் அதிமுக முதல்வருக்கும் 19 சதவிகிதம் வித்தியாசம் இருக்கின்றது..!!

ஆகவே திமுகவை நெருங்க வேண்டுமானால் அதிமுக தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்து சிறிய கட்சிகளோடும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே சாத்தியம்..!!

போயஸ் தோட்ட தூதுவர்கள் கோயம்பேடு, தாயகம், தைலாபுரம், கமலாலயம் என்று படையெடுக்க வேண்டியிருக்கும்...! விரைவில் அந்தக் காட்சிகள் அரங்கேறலாம்...!!!


Friday, August 28, 2015

இரும்பு மனிதர்களால் தகர்க்கப்படும் மோடியின் கோட்டை..!


நாற்பது சதவிகிதத்திற்கும் சற்று அதிகமான குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்.., ஏழு கேபினட் அமைச்சர்கள்..., ஒரு முதல்வர்...
இவை அனைத்தும், குஜராத் மக்கள் தொகையில் 15 லிருந்து 20 சதவிகிதம் மட்டுமே இருக்கும் பட்டேல்களுக்கு பாஜக கொடுத்திருக்கும் பரிசு..!! இதைத் தவிர்த்து வல்ல்பபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை...  அவர் பெயரில் அகமதாபாத் பன்ன்னாட்டு விமான நிலையம்..., இத்தியாதிகள்...
இப்படியாகவெல்லாம், ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி, கேஸ்ட் போலரைசேஷன் அரசியல் மூலம் குஜராத்தில் கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய பாஜகவுக்கு... அங்கே மூடு விழா ஆரம்பமாகிவிட்டது போலத்தான் தோன்றுகிறது.... இன்றைக்கு ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அனைத்தையும் மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் குஜராத் அரசை பார்க்கும் பொழுது..!!
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த பொழுதும், வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த பொழுதும்....
இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக பொங்கி போராட்டம் நடத்திய வட இந்திய மாணவர்களில்... பட்டேல் சமூகத்தினரின் பங்களிப்பு தான் பிரதானமானது..!!
ஆனால் இன்றைக்கு அதே பட்டேல்கள், ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில், தங்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதி தீவிர போராட்டத்தை முன்னெடுத்து, ஒட்டுமொத்த குஜராத்தையே இன்றைக்கு ராணுவத்தைக் குவித்து ஊரடங்குச் சட்டம் போடுமளவிற்கு முடக்கிப் போட்டிருப்பது தான் வேடிக்கை..!!


இட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவானவர் காங்கிரஸ்... எதிர்ப்பாளர் பாஜக என்ற அடிப்படையில் தான், கால் நூற்றாண்டுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த பட்டேல்கள், பாஜக பக்கமாக தங்கள் ஆதரவு கூடாரங்களை மாற்றும் படி வலை விரித்து பலனும் கண்டது பாஜக.!
இட ஒதுக்கீடு கூடாது என்று தங்கள் அரசியல் களத்தையே மாற்றிக்கொண்ட, குஜராத்தின் செல்வந்தர்களாகவும், பெரு வியாபாரிகளாகவும், அதிகாரபலம் கொண்டவர்களாகவும் விளங்கிய அந்த பட்டேல்கள்... இன்றைக்கு தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது??
பெரும் தொழில் வளர்ச்சி என்று காட்சியமைக்கப்பட்ட குஜராத்தின், தொழில்கள்... குறிப்பாக பட்டேல்கள் வசமிருந்த வைரம் மற்றும் இன்னபிற தொழில்கள் பெருமளவில் சமீபகாலத்தில் காற்று வெளியேற்றப்பட்ட பலூன் போன்று முடங்கிப் போனதன் விளைவே...
...இனி தொழில் செய்து பிழைப்பதை விட, இது வரை நமக்குத் தேவையில்லை என்று தட்டிக்கழித்த அரசு வேலை வாய்ப்புக்களில் நுழைந்தால் தான் தங்கள் வருங்கால சந்ததிகள் தப்பிக்க முடியும் என்ற ஐயத்தினால் தான், பட்டேல்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று களமிறங்கிவிட்டார்கள்..!!
இதில் பாஜக இரு வெவ்வேறு பாடங்களை படிக்க வேண்டியிருக்கின்றது. ஒன்று: ஜாதிகளை மையப்படுத்தி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்பது... இரண்டாவது: எதார்த்தத்திற்கு மீறிய மாய பிம்ப வளர்ச்சியை மக்கள் முன்னே நிறுத்தி, ஆட்சியைப் பிடிப்பது..!
இவை இரண்டுமே வெறும் குறுகிய கால பலன்களை மட்டுமே தரும் என்பதை இனியாவது பாஜக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இரு வாரங்கள் முன்பு மதுரையில் மையம் கொண்ட அமித்ஷா தேவேந்திர குல வேளாளர்களைக் கொண்டு, ஒரு பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்ததைச் சொல்லலாம்..!!

இதில் இன்னொரு கருத்தும் பலமாக முன் வைக்கப்படுகின்றது. மேல் ஜாதிக்காரர்களையும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வைப்பதன் மூலம்...  படிப்படியாக இடஒதுக்கீட்டை நிர்த்துப்போக வைக்கும் ஒரு சூழ்ச்சியாகவும் கூட இது பார்க்கப்படுகின்றது. 

ஒரு வேளை பாஜக அப்படியான முயற்சியில் இறங்கியிருந்தால், ஜோடிக்கப்பட்ட போராட்டம் இத்தனை உணர்வுப்பூர்வமாக கொந்தளித்திருக்க முடியாது என்பதும், அதில் பட்டேல்களைத் தவிர வேறு யாரும் பாதிக்கபடவில்லை (உயிரிழப்பு) என்பதும், கருத்தில் கொள்ளப்பட்டு, பாஜக நிலைமையின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.!

ஜாதி, மதம், வெற்று விளம்பரம், இந்தி, சமஸ்கிருதம், மனு தர்மம் இதையெல்லாம் விட்டொழித்து... மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான எண்ணத்துடன் செயல்பட்டால் மட்டுமே இனி பாஜக பிழைக்கும்...!!


Thursday, August 27, 2015

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! பாகம்-1


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! 1

கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் இன்றைக்கு பத்து கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்து, தென் சென்னையில் வசிக்கின்ற 15 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்...!!!

இதேப் போன்று ஏதாவது ஒரே ஒரு திட்டம் கடந்த நான்காண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றதா???


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #2

கடந்த திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன்களை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்ததன் மூலம் 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு கடனில்லா பெருவாழ்வு வாழும் பேரிண்பத்தைக் கொடுத்தது அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட வைத்தது போன்று....
கடந்த நான்காண்டு அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் ஒரே ஒரு திட்டமாவது நடந்தேறியிருக்கின்றதா?!


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #3

கடந்த திமுக ஆட்சியில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகிய மூன்று நதிகளை இணைத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த 125 கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும் அற்புதமான திட்டத்தை ரூ. 369 கோடியில் தீட்டி, அதன் இரண்டு கட்ட பணிகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில்....

வெறும் பத்து சதவிகித பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த நான்காண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும்... அதிமுக ஜெயலலிதா ஆட்சியை அதை நிறைவேற்றக் கோரி நெல்லை மாவட்ட விவசாயிகள் கலக்டர் குறை தீர்க்கும் கூட்டங்களில் முறையீடு மேல் முறையீடாக வைத்துக் கொண்டிருக்கின்றார்களே????!!!!

தானாக ஒரு மக்கள் நலத் திட்டத்தைத் தான் கொண்டு வர முடியவில்லை, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை இந்த அதிமுக ஆட்சியில் ஒன்றையாவது கொண்டு வர முடிந்ததா????!!!!

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #4
மார்ச் 25, 1989 - இது தமிழக பெண்கள் அனைவரும் குறித்து வைத்துக் கொண்டு வருடா வருடம் கொண்டாட வேண்டிய ஒரு திருநாள். அன்றைய தினம் திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த, தந்தையின் சொத்துக்களில் பெண் வாரிசுகளுக்கும் ஆண் வாரிசுகளுக்கு சரிக்கு சமமான முழு உரிமைச் சட்டம் தான், கடந்த கால் நூற்றாண்டுகளாக பெண்களுக்கு புகுந்த விட்டில் ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டித்தந்தது. அவர்களுக்கு மனதளவில் தானும் ஆணுக்கு சமமானவள் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. தந்தைக்கு 300 சதுர அடியில் ஒரு சின்ன குடிசை வீடு இருந்தாலும், அதற்கு பாதி பணத்தை பெண்ணிடம் கொடுத்து விட்டுத் தான், அவளது கைய்ப்பத்தைப் பெற்ற பிறகு தான் ஆண் மகன் அதை அனுபவிக்க முடியும் என்ற நிலை உருவாகி,பெண்களை பொருளாதார ரீதியாக தலை நிமிரச் செய்தது அந்தச் சட்டம்...!!!



பெண்களுக்கு உண்மையாகவே தேவையான முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய இப்படியொரு... ஒரே ஒரு சட்டத்தையாவது அதிமுக அரசு நிறைவேற்றியிருக்கின்றதா???!!!

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #5
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித தொகுதிகள் ஒதுக்கீடு, தமிழக அரசு வேலை வாய்ப்புக்களில் 30 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிச்சாலைகளில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமிக்கும் உத்தரவு...! இந்த மூன்றையுமே செய்தது திமுக ஆட்சி தான். இந்த மூன்று முத்தான சட்டங்களும் கடந்த கால் நூற்றாண்டுகளில் பல லட்சக்கணக்கான தமிழக பெண்களை, ஆண்களுக்குச் சமமாக இல்லை, அவர்களை விட தரம் உயர்ந்தவர்களாக நிமிர வைத்திருக்கின்றது. இவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு மற்ற பெண்களும் வேகமாக முன்னேறி வரும் நிலையினையும் தமிழகம் கண்டு வருகிறது. நியாயமாகப் பார்த்தால் ஒவ்வொரு பெண்ணும் இந்த சட்டங்களுக்காகவே திமுகவை முற்றும் முழுதாக ஆதரிக்க வேண்டும்... அதை விடுங்கள்....


இதேப் போன்று, பெண் சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு... ஏதாவது ஒரு... ஒரேயொரு திட்டத்தை அல்லது சட்டத்தையாவது அதிமுக அரசு செய்திருக்கின்றதா?????

Wednesday, August 26, 2015

பங்குச்சந்தை பனால்... ஆப் கி பார் மோடிக்கா சர்க்கார்..!

கடந்த ஒரு ஏழெட்டு பத்து வருஷமா, இந்த பங்குச் சந்தைல காசப் போட்டு பணத்தை அள்ளுற ஒரு குரூப்பு வேகமா பெருக ஆரம்பிச்சிடிச்சி...!!

நம்ம ஹர்ஷத் மேத்தா மேட்டர்ன்னு ஒன்னு வெளில வந்த பின்னாடி தான் நம்ம நாட்டுல நூத்துக்கு 95 பேருக்கு பங்குச் சந்தைன்னு ஒரு சமாச்சாரமே காதுக்குள்ள வந்துச்சி...!

 அது அப்படியே அந்த துறைக்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்து, முதல் கட்டமா, மேல் நடுத்தர வர்க்கம் எல்லாம் அதுல கொஞ்சமா காலை நனைக்க, அதுக்கப்பறம் ஒரிஜினல் நடுத்தரம் எல்லாம் தானும் காலை நனைச்சுக்கறேண்டா பேர்வழின்னு பல பேரு கொதிக்கிற வெந்நீருல காலை விட்டு சூடு வச்சிக்க....

இப்படியாக கனஜோரா வளர்ந்துச்சி நம்ம பங்குச் சந்தை. இந்தியாவுல நம்ம நடுத்தர வர்க்கம் தான் மிகப் பெரிய ஏமாந்த சோனகிரிங்கறத புரிஞ்சிக்கிட்ட கார்ப்பரேட்டுகள் அனைத்தும், ஊடகங்களை கையில போட்டுக்கிட்டு, அவங்களை மூளைச்சலவை செய்ய ஆரம்பிக்க...

ரிஸ்க் இல்லாத இலகுவான வழி ஒன்னு இதுக்கு அவங்க மூலமாவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் மியூட்சுவல் ஃபண்ட். விகடன் குழுமத்துல நாணயம் விகடன்னு ஒரு வார இதழ் இதுக்காகவே துவங்குன மாதிரி நடுத்தர வர்க்கத்தை எல்லாம் அதுல இழுத்துப் போட்டுச்சி.
அதுல கொஞ்சம் துளிர்விட்ட நம்மாளுங்க, தாங்களே நேரடியா (பங்குச்சந்தை என்ற இடைத்தரகர் கமிஷன் இல்லாம) களம் இறங்க, டிரைனிங் கொடுக்கிறேன் என்று எக்கச்சக்க பேர் இதில் காசு பார்த்துவிட்டனர்.
தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊருலயும் இந்த மாதிரி பங்கு வணிக மையங்கள் பல்வேறு நிறுவன பெயர்களில் குறைந்தபட்சம் இருபதாவது இருக்கும். ஒவ்வொன்னுத்திலயும் 50 பேராவது காலைல 10 மணிக்கெல்லாம் டாஸ்மாக் குடிமகன்கள் மாதிரி குத்த வச்சி ஒக்காந்திருப்பாய்ங்க...!!
இதத் தவிரவும் வீட்டுல, ஆஃபீஸ்ல உட்காந்துக்கிட்டு லேப்டாப்ல டிரேடிங் பண்றவங்களும் ஒவ்வொரு ஊருக்கும் சில பல ஆயிரங்கள் தாண்டும்..!!


ஆனா அந்த குருப்பு எல்லாம் எப்பவாவது ஒரு பொது விசேஷம் அல்லது கிளப்புகளில் ஒன்னு சேர்ந்தா, மன்மோகனை திட்டுதிட்டுன்னு திட்டிக்கிட்டு, சிதம்பரத்துக்கு எல்லாம் ஃபினான்ஸ் நாலெட்ஜே கிடையாதுன்னு அலம்பல் விட்டுக்கிட்டு, மோடி வந்தா தான், நம்ம காட்டுல இன்னும் செமையா மழை பெய்யும்ன்னு பேசுவாய்ங்க...!!

சிதம்பரத்தால தான் ரூபாய் மதிப்பு குறைஞ்சி போச்சு, டாலருக்கு நிகரா 63 ஓவா வந்துடிச்சின்னு எல்லாம் பேசுவாங்க...!

என்னைய மாதிரி மாடு மாதிரி உழைச்சு, இவிங்க அளவுக்கு வருமானம் பார்க்காதவிங்க எல்லாம் ஆஆஆன்னு வாயை பிளந்துகிட்டு, இவிங்க பேசுறத வேடிக்கை பார்த்துட்டிருப்பாய்ங்க...!!


நேத்திக்கு, 

ஏஏஏஏழு.... 

லட்சம் 

கோடியாம்...!!


அவ்வளவும் இந்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் பணம் தான்..! ஒக்கே ஒக்க நாள்ல எல்லாம் ஹோகயா...!! நம்மூரு ராமசந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் பணமெல்லாம் கூட கண்டிப்பா அந்த ஏழு லட்சம் கோடில கரைஞ்சு போயிருக்கும்...!!!

இந்த நடுத்தர வர்க்கம் தன்னை திருத்திக்காத வரை இந்த நாடு உருப்படவே உருப்படாது...!!!


Tuesday, August 25, 2015

பாமகவின் நிலைப்பாடு நல்ல பலனைத் தரும்..!!!


ஜனநாயகத்தின் முக்கியமான இரண்டு தூண்களான எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் முக்கியமான பணி என்ன?
ஒரு ஆளும்கட்சி செய்கின்ற தவறுகளை, மக்கள் விரோத செயல்களை, ஊழல்களை தோண்டித் துறுவி எடுத்து அதை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு சென்று பரப்புரை செய்து (ஏனெனில் ஆட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இறுதித் தீர்ப்பை அடுத்த தேர்தலில் எழுதப் போகின்றவர்கள் மக்கள் தானே?).....
அதற்கு மேலும் ஆளுங்கட்சி தன்னை திருத்திக்கொள்ளாத நிலையில், அடுத்த தேர்தல் வரை மக்கள் தீர்ப்புக்காக காத்திருந்தால் நாடு தாங்காது என்ற நிலை வந்தால், அக் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் ஜனநாயகத்தின் மிக முக்கிய இன்னொரு தூணாக விளங்கும் நிதி மன்றத்துக்கும் கொண்டு சென்று...
...ஆளுங்கட்சியை தண்டிக்கச் செய்வது தானே எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் முக்கிய பணி?!
அப்படியிருக்க, அதிமுகவின் கடந்த நான்காண்டுகால கேவலமான ஆட்சியின் ஊழல்களையும், அதன் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் செய்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருக்கும் நிலையில்..., வேறொரு முதல்வர் டம்மியாக நியமிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகவும் முடங்கிப் போய், தமிழகம் கோமா நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில்... உயர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்று, வழக்கு உச்சநீதி மன்றம் சென்றுள்ள நிலையில்..  மீண்டும் இடைத்தேர்தல்..  மீண்டும் முதல்வர்...  என்றிருக்கும் நிலையில்...  அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் கோமாளிக் காட்சிகள் அரசு இயந்திரத்தை முடக்கிப் போட்டிருக்கும் நிலையில்...
இவற்றை எல்லாம் மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும், மத்திய அரசிடமும் (கவர்னர் வாயிலாக) கொண்டு சென்று சேர்க்கின்ற பணியினை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செவ்வனே செய்து வருவதில் என்ன தவறு இருக்கின்றது???
எதிர்க்கட்சிகள் தானே மக்களின் உண்மையான பிரதிநிதிகள்?! எதிர்க்கட்சிகள் தானே மக்களின் மனசாட்சி?!
ஆனால் நாளை நாங்கள் தனித்து நின்று முதல்வராகப் போகிறோம் என்று.... மார்தட்டிக் கொண்டிருக்கும் பாமகவின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி... ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு நடப்பு முதல்வருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டிருக்கும் தமிழகத்தின் பலம் மிக்க முக்கிய எதிர்க்கட்சியின் பொருளாளருக்கு எதிராக.....
அதாவது.... நன்றாக கவனியுங்கள் மக்களே....
ஆளுங்கட்சிக்கு.... அதாவது அதிமுகவுக்கு எதிராக போராடும், மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக.....
பொங்கித் தீர்த்து கடிதங்கள் எழுதுவதும், மேடை தோறும் சவால் விடுவதும்,.... அவற்றை எல்லாம் ஆளுங்கட்சியின் ஆதரவு ஊடகங்கள், பரபரப்பாக முன்னெடுப்பதும் எதைக் காட்டுகிறது???

ரொம்ப சிம்ப்பிள்...!

நடப்பு ஆளும் கட்சி... அதாவது ஊழல் மலிந்த அதிமுகவை ... எதிர்க்கட்சிகளின் கணைகளுக்கு எதிராக பாய்ந்து சென்று காப்பாற்றும் முயற்சியாகவே... வெகுவான அரசியல் ஞானம் இல்லாதவர்கள் கூட ஊகித்துவிட முடியும்...!!!
ஆகவே ஊழல் மலிந்து சீண்டுவார் இன்றி தனித்திருக்கும் அதிமுகவின் வலையில் விரும்பிப் போய் பாமக தன்னை அடைக்கலப்படுத்திக் கொண்டுவிட்டதைத்தான் இது அப்பட்டமாக உணர்த்துகிறது.
தமிழகத்தை சீரழித்ததிலேயே திமுகவுக்கு தான் முதலிடம் என்று பிதற்றியிருக்கும் அன்புமணி.... கடந்த திமுக ஆட்சிக்காலம் முழுவதும் திமுகவோடு இணைந்து இருந்த பொழுதே இக் குற்றச்சாட்டினை திமுகவின் மீது சுமத்தி அதன் பிறகு வந்த 2011 தேர்தலில் தனித்து களம் கண்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்...!!
ஆனால் ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியோடு 2011 தேர்தலில் பாமக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்றால் என்ன அர்த்தம்? அந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக பாமக ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம்?!
சரி இதை எல்லாம் விட்டுவிடுவோம்....
இன்றைக்கு நடப்பது அதிமுக ஆட்சி. நான்காண்டுகளாக இந்த ஆட்சியால் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள்ளாக தேர்தல் வரவிருக்கின்றது. இந் நிலையில், அடுத்து ஆட்சி அமைக்க விரும்பும் எந்தவொரு எதிர்க்கட்சியும் நடப்பு ஆளுங்கட்சிக்கு எதிரான புகார்களோடு தானே மக்களை சந்திக்கும்?!
அதை விடுத்து ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை நீர்த்துப் போக வைக்கும் பாமக அன்புமணியின் செயலுக்கு என்ன அர்த்தம்???
இதில் தான் ஜெயலலிதாவின் தந்திரம் இருக்கின்றது. கடந்த தேர்தல்களில் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளையோ, ஈழப்பிரச்சினையையோ, மீனவர் பிரச்சினையையோ வைத்து குற்றம் சாட்டி வாக்குகளை பெரும் தகுதி தனக்கில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த ஜெயலலிதா, பல்வேறு லெட்டர் பேடுகளை அடித்து சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன், சரத்குமார், தனியரசு போன்றோருக்கு கொடுத்து.... அவர்களை பொதுவானவர்களாக மக்களிடம் தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் நம்ப வைத்து... அதன்பிறகு அவர்களது பிரச்சாரங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்து தந்து, அவர்களை விட்டு திமுகவை சரமாறியாக வசைபாட வைத்து, திமுகவுக்கு எதிரான வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி அதை அவர்களை விட்டே கடைசியாக அதிமுக பக்கம் மடை மாற்ற வைத்தார்...!
அந்த லெட்டர் பேடு கட்சிகளின் சாயம் மக்களிடம் கரைந்து போன நிலையில், அதிமுகவும் மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிகியிருக்கின்ற நிலையில்...., அதை எல்லாம் மறந்து விட்டு மக்கள் மீண்டும் திமுகவையே விமர்சிக்க வைக்க வேண்டும் என்ற பணி ஆணையைப் பெற்றே பாமக.... அதிமுக மீது  குற்றம்சாட்டுபவர்களுக்கு.... எதிராக புழுதிவாரி இறைக்கும் பணியினை கச்சிதமாக செய்து வருவதாக எண்ணத் தோன்றுகிறது!!!
திமுகவுக்கு ஆதரவாக விழும் வன்னிய மக்களின் வாக்குகளை... முதல்வர் வேட்பாளர் என்ற அஸ்திரத்தை வீசி... அவர்களை குழப்பி... அந்த வாக்கு வங்கியில் சிறு சேதாரத்தை ஏற்படுத்தும் முயற்சியையே பாமக தற்பொழுது கையில் எடுத்திருக்கின்றது.
தெளிவான அரசியல் பாதையை விடுத்து, சீமான், சரத்குமார், தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கரேஜ் வேலையை தற்பொழுது பாமக கையில் எடுத்திருக்கின்றது.
சீமான் வகையறாக்களின் கதை வேறு.... அவர்களை நம்பி பெரியதாக தொண்டர்கள் யாரும் இல்லை. ஆனால் பாமக அப்படியில்லை. ராமதாஸ் ஜாதி வெறியை தூண்டி வன்னிய இன மக்களின் ஒரு பகுதியினரை இக் கட்சி சார்பாக முழு நேரம் களமிறக்கிவிட்டிருக்கின்றார். தனித்து நின்று தோற்றால் அவர்கள் அத்தனை பேரின் குடும்பமும் தத்தளிக்கும்...!!
பாமக தனித்து நின்ற போதெல்லாம் படுதோல்வியைச் சந்தித்திருப்பது தான் வரலாறு.
தானோ தன் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் வரமாட்டோம்.. அப்படி வந்தால் நடுரோட்டில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று கொக்கரித்த ராமதாஸ்....

...நியாயமாக முதன் முதலாக பாமகவுக்கு ஒரு மத்திய கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் போது.... அதுவும் நோகாமல் கொல்லைப்புரம் வழியாக எம்பி ஆகி கிடைக்கும் வாய்ப்பு வரும் போது....
அந்த வாய்ப்பை... தன்னை புகழேணியின் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்துவதற்காக... வன்னிய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக, குண்டடி பட்டு உயிரிழந்த அந்த 21 பேர் குடும்பத்தைச் சேர்ந்த நபர் யாராவது ஒருவருக்கு தந்திருந்தால்.....
....தமிழ்நாடே அவருக்கு தலை வணங்கியிருக்கும். ஆனால் அதை தன் மகனுக்கே தாரை வார்த்து விட்டு, இன்றைக்கு முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து விட்டு, ஊழல் மலிந்த அதிமுக ஆட்சிக்கு பாதுகாவலர்களாக அப்பாவி பாமகவினரை நிறுத்தியிருப்பதற்கு.... அவர்களிடமே அவர் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்...!

பாமகவின் தற்போதைய நிலைப்பாடு, நிச்சயம் நல்ல பலனைத் தரும்....   ராமதாஸ் குடும்பத்தினருக்கு மட்டும்..!!


Monday, August 24, 2015

என்ன மாதிரியான மனநிலை இது???


இன்றைக்கும் நம் தமிழகத்தின், தமிழர்களின் பெருமையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில், மதுரை நாயக்கர் மஹால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், மாமல்லபுரம் சிற்பங்கள்... இப்படியாக பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்டவைகளை....


அவர்களுக்கு அடுத்தடுத்து வந்த அரசர்கள் அழித்து ஒழித்திருந்தால்....??!!

இவற்றின் பெருமைகளை நாம் இன்று பேசிக்கொண்டிருந்திருக்க முடியுமா? அவற்றின் பலன்களைத்தான் நாம் அனுபவித்திட முடியுமா???!!
ஒருவேளை தஞ்சை பெரிய கோவிலை அடுத்தடுத்து வந்த மராட்டியர்கள் அழித்திருந்தால்... ??
நாம் அவர்களை என்னவெல்லாம் வசைபாடுவோம்??
அதேப் போன்று தானே....


சம காலங்களில்... அதாவது கடந்த இரு நூற்றாண்டுகளில், தமிழகத்தில் நிலைத்து நிற்கக் கூடிய சில சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன... சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம்...
இந்த வரிசையில்... நிச்சயம் உலக அளவில் புகழ்பரப்பக் கூடியதும், ஒட்டுமொத்த தமிழர்களின் கல்விக் களஞ்சியமாக திகழக் கூடியதொரு அற்புதமான, ஆசியாவிலேயே மிகச் சிறந்ததானதொரு நூலகத்தினை கடந்த திமுக ஆட்சி அமைத்துக் கொடுத்தது...!!
அது மாத்திரம் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், இந்நேரம் உலக மக்களின் இந்திய சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கும். ஹிலாரி கிளிண்டனின் வருகையே அதற்கு ஒரு சான்று.
அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை, வெறும் அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக, அதைக் கட்டிய ஆட்சியாளரின் புகழ் நிலைபெற்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.....
அதை கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவதும், அதை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பிப்பதும், அதிலுள்ள அடிப்படை வசதிகள் அனைத்தினையும் சீர்குலையச் செய்து அங்கு வருவோர் எண்ணிக்கையை முற்றிலும் முடக்கிப் போடுவதும்.....
என்று செய்வது எல்லாம் என்ன மாதிரியான ஒரு மனநிலை????????!!!!

இது போன்று ஒரு ஆட்சியாளர் செய்வதை செயல்படுவதைத் தான் இன்றைய உண்மையான நடுநிலை தமிழர்கள் நியாயப்படுத்துகின்றார்களா? இதையெல்லாம் அதிரடி என்றும், எதற்கும் அஞ்சாத வீரம் என்றும் பெருமை கொள்கின்றார்களா??
ஒரு வேளை இதற்கான பதில் ஆம் என்றால், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த கோர மனநிலை, நாளை மக்களுக்கு எதிராகவும் திரும்பும். அப்பொழுது அதை சாமான்ய மக்களால் எதிர்கொள்ள முடியுமா?...!!
ஏற்கனவே, எஸ்மா, டெஸ்மா, பொடா, கஞ்சா கேஸ், இன்னும் பலவற்றை சந்தித்தது தான் இந்த தமிழகம். இது போன்ற பொது விஷயங்களிலாவது தமிழர்கள், அதாவது உண்மையான நடுநிலையாளர்கள் அரசின் இத்தகைய போக்கினை கண்டிக்காவிட்டால், நாளை இது அவர்கள் தலையிலேயே விடியும் என்பதை உணர வேண்டும்..!!
கடந்த ஆட்சியாளர்கள் அதிரடிக்காரர்கள் இல்லை... நிதானம் கொண்டவர்கள்... இந்த அரசின் ஒவ்வொரு தவறுகளுக்கும் சம்ச்சீர் கல்வி தொடங்கி, இந்த நூலகம்... அதாவது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம் வரை சட்டரீதியாக வெற்றி கொண்டுள்ளது..!!
ஆம்... சென்னை உயர்நீதிமன்றம், அந் நூலகத்தை இடமாற்றம் செய்யும் அதிமுக அரசின் ஆணையை ரத்து செய்தும், அதன் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் உள்ளது.

சிந்தியுங்கள் தமிழர்களே...!!


Thursday, August 20, 2015

ஒரே ரத்தம் - மு.க.ஸ்டாலின்

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு தாழ்மையான மற்றும் கடுமையான வேண்டுகோள்.....!


உங்களுக்கு பிறந்தநாள் விழா வந்துச்சின்னா, எதுத்தாப்புல இருக்குற நமக்கு ஈக்வலான பெரிய கட்சியில செய்யிற மாதிரி... காவடி தூக்குறது, அலகு குத்திக்கிறது, மண் சோறு திங்கறது, சிலுவைல அறைஞ்சிக்கிறது.... இப்புடி எதையாவது செய்யச் சொல்லியிருந்தீங்கன்னா, அந்த ஆளுங்களை விட சூப்பர் டூப்பரா செஞ்சி உங்கள் அபிமானத்தைப் பெற்றிருப்போம்....!!
ஆனா அதை வுட்டுட்டு, பெண்கள் கல்விக்கு உதவி செய்யச் சொல்லிட்டீங்க, நலிந்த மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்யச்சொலிட்டீங்க..., இதெல்லாம் கூட பரவாயில்லை, செய்யும் போது பெரிய மன திருப்தி கிடைக்குது...., ஆனா ஒரே மாசத்துல ஒரு லட்சம் யூனிட் ரத்த தானம் செய்யச் சொன்னீங்க பாருங்க அங்க தான் பிரச்சினையே ஆரம்பமாச்சு...!!!
உண்மையிலேயே என் மேல பாசம் இருந்திச்சின்னா அதை செய்யறதுல என்னய்யா பிரச்சினைன்னு நீங்க கேக்குறது புரியுது...!!
ரத்தம் கொடுக்குறதுல தொண்டர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அதை எல்லாம் வாங்குறதுக்கும், சேமிச்சி வைக்கிறதுக்கும் நம்ம தமிழ்நாட்டுல முறையான ரத்த வங்கி இருக்காங்குறது தான் பிரச்சினையே....!!!
முக்கியமான மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் மட்டும் தான் ரத்த வங்கி இருக்குது. அதுலயும் பல இடங்கள் வேலை செய்யாமல் பழுதாக இருக்குது. அப்படியே சரியா வேலை செஞ்சாலும், நாற்பது யூனிட், ஐம்பது யூனிட் எடுக்கும் வசதி தான் இருக்குன்னு சொல்றாய்ங்க. அது கூட பரவாயில்லை, அவிங்க, ரத்தத்தை அப்படியே ரத்தமாத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பாங்களாம். அதுக்கு ஒரு மாசம் தான் லைஃபாம்.! ஒரு மாசத்துக்குள்ள யாருக்கும் தேவைப்படலன்னா, தூக்கி வீசிடுவாய்ங்களாம்...!!
என்ன கொடுமை சரவணா இதுன்னு கேக்க தோனுதுல்லா...??!!
திமுக உடன்பிறப்புக்கள் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக ஒவ்வொரு நகரத்திலும், ஒன்றியத்திலும் 100 யூனிட்டுக்கும் மேலாக கொடுக்க தயாரா இருக்காங்க. வந்து கியூ கட்டி நிக்கிறாய்ங்க. அதனால நீங்க சொன்ன டார்கெட்டை ரீச் பண்ண தனியார் ரத்த
வங்கியை அணுக வேண்டிய நிலை. அவர்கள் ரத்தத்தை மூன்றாக பிரித்து நான்கு மாதங்கள் வரை உபயோகிக்கின்றார்கள்.
இப்ப என்ன பிரச்சினைன்னா??? உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இளைஞர்கள் சாரை சாரையாக ரத்ததானம் செய்ய வர்றாங்க. ஆனா தனியார் ரத்த வங்கிகளும் கூட அவ்வளவு யூனிட் எடுக்க திணறுகின்ற நிலையில் தள்ளாடுகின்றார்கள்....!!!!


அதனால தான் தளபதியாரே உங்க கிட்ட ஒரு கோரிக்கையை இங்கே இந்த நேரத்தில் அதாவது இன்றைக்கு தங்கள் திருமண நாளை கொண்டாடும் இந்த நேரத்தில், இந்த இடத்தில் வைக்கின்றேன்...!!

அடுத்ததாக வரும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும், குறைந்தபட்சமாக 1000 யூனிட் ரத்தத்தை சேமிக்கும் ரத்த வங்கிகளை நிறுவி.... அவை அனைத்தும், ரத்தத்தை மூன்றாக அதாவது, பிளாஸ்மா, சிகப்பணுக்கள், பிளேட்லெட்ஸ் என்று பிரித்து, லட்சக்கணக்கானோருக்கு பயன்படும்படியாகவும், 4 மாதங்களுக்கு சேமித்து வைக்கும் படியும்.... அதி நவீன ரத்த வங்கிகளை நிறுவி, அவை அனைத்தும் மிகச் சாமான்ய மக்களுக்கும் இலவசமாக கிடைக்கும்படி செய்ய வேண்டுமாய்.... தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...!!

உங்களுக்கு இது சாத்தியமான ஒன்று தான்.. 

உங்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.


நன்றி... வணக்கம்...!


Wednesday, August 19, 2015

ஜெயலலிதா அரசின் நான்காண்டு கால சாதனைகள் - ரெண்டு சாம்ப்பிள்.


அதிமுக அரசின் நான்காண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும் - அதிமுகவினருக்கு சில தினங்கள் முன்பு ஜெயலலிதா கட்டளை..!
‪#‎டெல்ட்டா‬ மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12இல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை கடந்த நான்கு ஆண்டுகளாக.... அந்த தேதியில் திறக்கபடவேயில்லை...!! அதனால் பொய்த்துப் போனது தான் மிச்சம்..!!
இது தான் அதிமுக அரசின் நான்காண்டுகால ஆட்சிக்கான சாதனைக்கு ஒரு சாம்ப்பிள்..!
2011 ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், அந்த ஆண்டு மட்டும்... மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதிக்குப் பதிலாக முன் கூட்டியே ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதை அனைத்து ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பாராட்டி எழுதித் தீர்த்தன.
ஆனால் அப்படி அணை திறக்கப்பட்டதற்கு காரணம், அந்த ஆண்டில் மே மாதம் வரை ஆட்சியில் இருந்த கலைஞரின் திமுக அரசு, நீர் மேலாண்மையை தெளிவாக திட்டமிட்டு, கர்நாடக அரசில் பேசி வேண்டியவர்களுடன் அழுத்தம் கொடுத்துப் பேசி, அதை அரசியல் ஆக்காமல், தண்ணீரைப் பெற்று ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்கு திறப்பதற்காக 90 அடிக்கு மேல் நீரை சேமித்து வைத்திருந்தது...!!
ஐயா சேமிச்சு வச்சதத்தான் அம்மா ஆட்சிக்கு வந்து பதினைந்து நாட்களில் ஊரான் விட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு திறந்து வைத்து ஜால்ராக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் அதற்கு அடுத்து 2012, 2013, 2014 மற்றும் இந்த ஆண்டான 2015 இல்... அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல், கர்நாடகாவில் இருந்து தண்ணீரையும் பெறாமல், இருப்பதையும் நீர் மேலாண்மை முறையில் சேமிக்காமல், தஞ்சையில் குறுவையை காயவைத்துக் கொண்டிருக்கின்றார்.

திறக்க வேண்டிய ஜூன் 12 க்குப் பதிலாக 60 நாட்கள் கடந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டது இதுவே முதல் முறை..! இது பசுமைப் புரட்சியில் ஒரு சூப்பர் சாதனை..!
இவருக்குத் தான் தஞ்சை விவசாயிகளின் சார்பாக பொன்னியின் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டதாக விழா எடுக்கப்பட்டது..!!
நான்காண்டு சாதனைக்கு இது ஒன்றே சான்று..!
=====================================================
பழைய கழிவறை நிருபர் ஒருவர் இப்படி கேட்கிறான்னு வச்சிப்போம்...
காற்றாலை மின்சாரம் ரூ 3.50 க்கு கிடைக்கும் போது, அதை முழுமையாக வாங்காமல், அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தை ரூ. 7.01 க்கு அதாவது 100 சதவிகிதம் கூடுதலாக உங்க ஆத்தா வாங்க முற்படுவதன் காரணம் என்ன???
இதற்கு ஆயிதிமுகவைச் சார்ந்த பழரசமோ, நன்னாரி சர்பத்தோ, சி.ஆர். பாடாவதியோ பதில் சொல்வதாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார்கள்??!!
அதாவது நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கனும். காற்றாலை மின்சாரம்ங்கறது எப்படி வருது? அதை காற்றிலிருந்து உறிஞ்சி எடுக்குறாங்க. அந்த காத்துல, பூமியிலேர்ந்து வாகனம், தொழிற்சாலை எல்லாம் வெளியிடுற புகைகளால, அளவுக்கு அதிகமா நச்சு கலந்திருக்கு... அதுனால, காத்து கொடுக்குற மின்சாரம் பாதிக்கு பாதி வேஸ்ட்டு...!!
அந்த மின்சாரத்த வச்சி ஃபேனை ஓட்டி பாருங்க, மெதுவாத்தான் சுத்தும்...! லைட்டு கூட மங்கலாத்தான் எரியும்...!! எங்க ஆயா லார்டு லபக்கு தாஸ் ஸ்கூல்ல படிச்சதனால, இந்த விஷயம் எல்லாம் நுணுக்கமா கண்டுபிடிச்சி.... காற்றை விட சூரியன் தான் பவர் ஃபுல்லுன்னு தெரிஞ்சிக்கிட்டு, அதுலேர்ந்து மின்சாரத்தை உறிஞ்சு கொடுக்குற அதானிங்கற ஆள கூட்டிட்டு வந்து உறிய சொல்லியிருக்காங்க.
சூரியனோட வெப்பம் எல்லாத்தையும் பஸ்பமாக்கிடும்ங்கறதுனால, அதுல எந்த நச்சுக் கலப்படமும் இல்லாம, சுத்தமான மின்சாரத்தை உறிய முடியும்... அதுனால அந்த மின்சாரத்துல ஃபேன் ஓட்டுனா நல்லா வேகமா சுத்தி, அதிகமா காத்து கொடுக்கும்ங்கறதுனாலயும், ஒரு ரூமுக்கு மூனு லைட்டுக்கு பதிலா ஒரு லைட்ட போட்டாலே நல்ல வெளிச்சம் கொடுக்கும்ங்கறதுனாலயும்... அதுக்கு கொஞ்சம் கூடுதலா விலை கொடுத்து எங்க ஆத்தா வாங்குறாங்க...!!
இதனிடையே குறுக்கே நுழையும் ஐயா திமுக ஆதரவாளர்...
என்னங்க இது கேனத்தனமா இருக்கு?! ந்னு சொல்லி பேச ஆரம்பிக்க....
கழிவறை நிருபர் தியாகி கொடூரன்... உடனடியாக குறுக்கே நுழைந்து.... ஏதேதோ பேசி இவரை பேச விடாமல், அல்லது பேசுவது வெளியே கேட்காமல் செய்ய.... ஐயா திமுக பேச்சாளர் அநாகரீகமாக நடந்துகொள்வதால்.. ஒரு சிறிய இடைவெளிக்குப் பொறவு ஆட்டம் ஆரம்பமாகும்னு திரை போட்டுவிடுறார்....!!!

நல்ல தம்பி..!

என் தம்பி R Muthu Kumar, இவன் என் முகநூல் நட்பு வட்டத்தில் தற்பொழுது இல்லை என்றாலும், என் தலைவர் கலைஞர் கரங்களால் சிறந்த எழுத்தாளர் என்று குறிப்பிடப்பட்டு அவன் எழுதிய கட்டுரையை இன்றைய அவரது வாதத்திற்கு ஆதரவான உதாரணமாக திமுகவின் கெஸட், முரசொலியில் பதிவு செய்திருப்பதைப் படித்த பொழுது, நிசமாலுமே என் கண்கள் குளமாகிவிட்டன.!
அவன் எம்.சி.ஏ படித்த காலங்களில் மயிலாடுதுறை நகர வீதிகளில் நானும் அவனும் நடந்தே அரசியல் பேசிக்கொண்டு சென்றதும், ஒரு தீபாவளியின் முன்மாலைப் பொழுதில் நடந்து நடந்து கால் வலிக்க மகாதானத்தெருவில் ஒரு வீட்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்து கொஞ்சம் கூட அலுக்காமல் மணிக்கணக்காய் அரசியல் பேசியதும், என் நினைவுகளில் நிழலாடுகிறது.
நானும், அண்ணன் அபியப்பாவும் அதி தீவிர கலைஞர் விசுவாசிகள். எது எப்படியிருந்தாலும் கலைஞரை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் அதி தீவிரமாக எழுதுவோம். அதற்குக் காரணம் எங்கள் சித்தப்பா தான். அதாவது முத்துவின் தந்தை!
 எங்கள் சித்தப்பாதான் சிறுவயதுகளில் எனக்கும் என் அண்ணனுக்கும் சினிமா, அரசியல் என்று வெளி உலகத்தை காட்டியது. நான் சிறு பிள்ளையாய் இருந்த பொழுது ஒரு நாள், மதியவேளையில் வீட்டு வாசல் படிக்கட்டில் அமர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்த போது சித்தப்பா மிக வேகமாக சைக்கிளில் வந்து அதை ஸ்டாண்ட் கூட போடாமல் கிழே போட்டுவிட்டு திடுதிவென வீட்டில் நுழைந்தது, நான் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்த போதே....
எங்கள் வீட்டில் மாட்டியிருந்த (திமுக தலைவர்கள் வரிசையில்) எம்.ஜி.ஆர் படத்தை மட்டும் பிடித்து இழுத்து அறுத்து கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு உடைத்தது..!
இந்நிகழ்வு ஒரு கனவு போல் என் மனதில் இருக்கிறது. அதன்பிறகு எங்களுக்கு (எனக்கும் அபிஅப்பாவுக்கும்) எம்.ஜி.ஆர் என்றாலே நம்பியார் ரேஞ்சுக்கு ஆகிவிட்டார்! அரசியல் ரீதியாக எங்கள் சித்தப்பா எங்கள் மேல் தொடுத்த அந்த தாக்குதலில் இருந்து நானும் அபிஅப்பாவும் இன்னமும் மீளவில்லை.
ஆனால் எங்கள் தம்பி முத்துவோ, அனைத்தையும் உள்வாங்கி, ஒரு நடுநிலையான எழுத்தாளராக பரிமளித்ததன் விளைவே... இன்றைக்கு கலைஞர் வாயாலேயே அவனுக்குக் கிடைத்திருக்கும் இந்த புகழ்!
இப்பொழுதும் கூட என் மனம் என் தலைவனையே தூக்கிப் பிடிக்கிறது. தன்னை எப்பொழுதுமே புகழ்ந்து கொண்டிருப்பவனை விட, வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தன்னை இடித்துரைப்பவரைத் தான் அதிகம் நேசிக்கிறான். அவ்வாறு இடித்துரைக்கும் உண்மையான நடுநிலையாளர்களை, ஊக்குவித்து, தன்னையறியாமலேயே தான் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட அவர்கள் மூலம் அறித்து அதைக் களைந்து களைந்து.... தன்னை மேலும் மேலும் பட்டை தீட்டிக் கொண்டு இன்னமும் ஜொளித்துக்கொண்டிருக்கின்றான்...!!

அப்படிப்பட்ட தலைவன் வாயால் புகழ் பெற்ற தம்பி முத்து, நீ மேலும் பல சிறப்புக்கள் அடைய வாழ்த்துக்கள்

உன்னுடைய இந்த உயர்வுக்கு காரணம், உன்னுடைய உண்மையான, நேர்மையான நடுநிலை தவறாத எழுத்துத் தான். அந்த நடு நிலையை என்றும் வழுவாமல் கெட்டியாக பிடித்துக்கொள்.


Tuesday, August 18, 2015

என்.... தலைவன்.!!!!!

ஐயா, சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் இருக்காருங்கள்லய்யா..... இப்படித்தான் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் சகோதரர் தங்கம் தென்னரசு ஆரம்பித்தார்....
சரேலென தலையை நிமிர்த்தி மலர்ச்சியான புன்னகையுடன்... கூடிய ஒரு எள்ளல், ஒரு நக்கல், ஒருவித நகைச்சுவையுடன் கூடிய கரகர குரலில்....
“அவர் எங்கய்யா இருக்காரு?... இருந்தாரு...!! இப்ப நான் தான் இருக்கேன்...!”

என்று அந்த மனிதர்... இல்லையில்ல, மாமனிதர்... ம்ஹூம், அதுவும் இல்லை.., மகான்... ம்ம்ம்... போதவில்லை, அந்த சித்தர், மகரிஷி..... ம்ஹூம் எதுவுமே திருப்திப்படவில்லை.....
...நம் கலைஞர்...! அப்பாடி அவரை இப்படி விளிக்கும் பொழுது தான் தொண்டை நனைய தண்ணீர் குடித்த சுகம் கிட்டுகிறது....!!
நம் கலைஞர் சொல்லவும் அங்கே அந்த சிறிய அறையில் அவரைத் தவிர்த்து நின்றிருந்த ஐந்தாறு நபர்களுக்குமே, ஒரு கணம் அவரவரது மூளை உறைந்து போய்த்தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தது...!!
92 வயது என்கிறார்கள், நடக்க முடியவில்லை என்கிறார்கள், இன்னும் என்னென்னவோ சொல்கின்றார்கள்.... ஆனால் ஒரு சின்ன விஷயத்தைக் கூட, அதை வெளிப்படுத்துவதில் உள்ள இலக்கண, இலக்கிய பிழைகளைக் கூட உன்னிப்பாக கவனித்து அந்த நொடியே, அதை சின்ன நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டி, அதைத் திருத்தி, அத்தோடு நான் தான் இருக்கேன் என்ற வாக்கியத்தைச் செறுகியதன் மூலம், இன்னும் பல்வேறு கோணங்களிலான தனது கருத்துக்களை அங்கிருப்பவர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கு....
...நிச்சயமாகச் சொல்கிறேன்... வேறு எவருக்கும் வாய்த்திருக்காத ஒரு அற்புதமான படைப்புத்தான் அவர் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது..!
நானும், பெருமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் அவர்களும், சரபோஜியும், கத்தார் திமுக நடத்திய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய வருங்கால பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்று விட்டு, தலைவரை வேறொரு முக்கிய காரணத்திற்காக சந்திக்க இருந்தபோது, அமைச்சர் அவர்கள், தலைவருக்கு கேடயத்தையும், நிதியையும் நான் தர வேண்டும், நானே அழைத்துச் செல்கிறேன் வாருங்கள் என்று அழைக்க....
பழம் நழுவி பாலில் விழுந்தால் வேண்டாம் என்றா சொல்வோம்... அடுத்த பத்தாவது நிமிடத்தில் கோபாலபுரம் கோவில் வாசலில் பிரசன்னமானோம்..!
என்னுடைய தோழர்கள் பலர் பேச கேட்டிருக்கிறேன்..! இந்தக் கோவிலுக்குப் போனால் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும், அந்தக் கோவிலுக்குப் போனால் உச்சி மண்டையை பிய்த்துக்கொண்டு செல்வது போல தியானத்தில் மிதக்கலாம்... என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் நான் அங்கே போன போதெல்லாம்,... அது வேண்டாம் விடுங்கள்..!
அந்த நண்பர்கள் சொன்ன அத்தனை விதமான உணர்ச்சிகளுமே, நான் கோபாலபுர எங்கள் கோவில் வாசலை மிதித்த மாத்திரத்திலேயே ஏற்பட்டுவிட்டது..!! இதற்கு முன் இதே மாதிரி நிலை எனக்கு நான்கு முறை அதே இடத்தில் ஏற்பட்டதுண்டு...!
தியான நிலையில் ஒரு வித அரை மயக்கம் கலந்த, உடலெல்லாம் அந்த வைப்ரேஷன் எனப்படும் அத்தனை நாடி நரம்புகளும் மிஸ்ரசாப்பு தாளத்தில் அற்புதமான கோர்வை ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க....
வாங்க சௌம்யன் என்று சமச்சீர் நாயகன் அழைக்கும் ஒலியும்.. சென்று அவர் அருகில் அமர, அவர் ஏதேதோ கேட்க, நான் ஏதேதோ உளர, அந்தப்பக்கத்தில் அண்ணன் ஆ.ராசா, ஐயா சுப.வீ, இந்தப்பக்கம் அமைச்சர் பொன்முடி... இன்னும் பிற முக்கிய ஆளுமைகள் எல்லாம் அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்க...
...இதையெல்லாம் கடந்த ஏதோவொரு பேரின்பத்திற்காக மனது இன்னும், இன்னும் உள்ளே நுழைந்து, அந்த மகா சக்தியை ஒருநிலைப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போதே, அந்த மகா சக்தியின் உற்சவ மூர்த்தி மேலிருந்து கீழே இறங்கி வர... அணிச்சையாக எழுந்து வணக்கம் தெரிவிக்க, அதுவும் என்னைப் பார்த்து தலையசைத்தவாறே, சகோதரர் தங்கம் தென்னரசுவிடம் ஏதோ சொல்ல, அவர் மேலே சென்று விட்டு, ஒரு நிமிடம் கழித்து எங்களை மேலே அழைக்கின்றார்...!
அந்தப் படிக்கட்டுகளில் ஏறுகின்றேன்... ஒரு பழங்காலத்து சாதாரண வீட்டுப் படிக்கட்டுகள் தான் அவை. இந்திய அளவில்... ஏன்? உலக அளவில் பிரசித்தபெற்ற எத்தனையோ மேதைகள், தலைவர்கள் எல்லாம் கடந்து வந்த படிக்கட்டுகள் தான் அவை... அவற்றில் ஏறி...
..மகா சக்தியின் தரிசனம் கிட்டுமா என்று அந்த அறையை பார்த்தால், அங்கே அது இல்லை..!! அடுத்துள்ள படுக்கையறையில் இருப்பதாக வரச்சொன்னார்கள்...!
உள்ளே நுழைந்தால், அதுவும் ஒரு சின்ன அறை தான், அதில் சின்னதாக ஒரு கட்டில் அதில் மெத்தை...! அதன் அருகே ஒரு நாற்காலி, அதில் தான் அந்த சக்தி.... ஆம் இது வரை என் மனதில் நான் இறுக்கிப் பிடிக்க தியானித்து வந்த அந்த மகாசக்த்தி அமர்ந்திருந்தது...!!
முக்தி பெற்றவனின் குண்டலினி உச்சந்தலையை பிளந்து வெளியேறும் என்று சொல்வார்களே... அதெல்லாம் அந்தக் கணத்தில் அனுபவித்தேன், தலைக்கனம் குறைந்ததால், தலை குனிந்து உடல் வளைந்து அவ்விரு பாதங்களையும் நிதானமாக என் இரு கரங்களால் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள...
...ஒரு வித புத்துணர்ச்சி, புது வேகம், புல்லரிப்பு, உற்சாகம், மின்சாரம் எல்லாம் என் உடலில் பரவி, மூளை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது...!!

அதன் பிறகு கத்தார் திமுகவினர் கொடுத்த கேடயத்தையும், நிதியையும் மகாசக்தியிடம் அமைச்சர் அவர்கள் கொடுக்க, அதை உன்னிப்பாக படித்துப் பார்த்து, அது பற்றிய விவரங்களை கேட்க, அமைச்சர் அவர்கள், தெளிவாக அது பற்றி விளக்கினார்... பிறகு அந்த கேடயத்தை கேமெரா பக்கம் திருப்பி வைக்கச் சொல்லி, எங்களையும் நிறுத்தி புகைப்படம் எடுக்க கட்டளையிட்டார்...!


பிறகு நாங்கள் மூவரும் தேர்தல் நிதி கொடுத்து,.. வந்த விவரங்களைச் சொல்ல... அது பற்றி அவரும் சிரித்தவாறே சில கருத்துக்களைச் சொல்ல, அந்த அறையே கலகலப்பானது. அந்த நேரத்தில் தான் உறவுமுறை பற்றிய பேச்சு எழ... சிதம்பரம் ஜெயராமன் பற்றிய செய்தி வர.... அதை சற்று விளக்கமாக சொல்லுமாறு தலைவர் பணிக்க... அப்பொழுது தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் சொன்ன அந்த சம்பாஷணை நடந்து... அந்த இடத்தை ஒரு வித சந்தோஷ நிலைக்கு உயர்த்தியது...!!

தலைவர் கலைஞரை பார்த்து விட்டு வந்த பிறகு, கடந்த மூன்று நாட்களாக, அவரை கட்டுமரம் என்றும், இன்னும் பிறவாக மிகக் கேவலமாக விமர்சித்து பதிவிடுபவர்களையும், பெரும் ஊழல் செய்துவிட்டார் என்று புலம்புபவர்களையும் பார்த்தால் முன்பு மாதிரியெல்லாம் கோபமே வருவதில்லை...!!

காரணம், ஒருவரைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு தகவலை ஒருவன் பேசினால், ஒன்று அவனுக்கு அவரைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் கேட்பார் பேச்சைக் கேட்டு விமர்சிக்கும் முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது அப்படிப் புரிந்திருந்தும் விமர்சித்தால் அந்த நபர் மீது ஏதோ ஒரு காரணத்தால், பொறாமை, பொச்செரிப்பு, காழ்ப்புணர்ச்சி... அல்லது ஏதோ ஒரு கந்தாயம் இருந்து தொலைத்திருக்க வேண்டும்.
பொதுவான கூற்று அல்லது நியதிப் படி முட்டாள்களும், பொறாமைக்காரர்களும் உருப்பட்டதே இல்லை என்பதால், வசவாளர்களைப் பார்த்து நாம் ஏன் கோபப்பட வேண்டும்?

சாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..!

1972 -

-தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு நேரடி அரசு வேலையும்..., இந்தியாவிலேயே மிகக் குறைவான கட்டணத்தில் பேருந்து சேவையும், தமிழகத்தின் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணத்திற்கும் வழி வகை செய்தார்...!!
1981 -

-1973 முதல் 8 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி, தமிழகத்தில் மீண்டும் மது விற்பனையை துவக்கி வைத்தார்.... அன்றைய முதல்வர் எம்.ஜி. ஆர்..!
1983 -

- தமிழகத்தில் இருந்த அனைத்து தனியார் மது மொத்த விற்பனையாளர்களையும் தடை செய்து.... முதன் முதலாக மது மொத்த விற்பனையையை முற்றிலும் அரசுடமை ஆக்கினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்...! அவர் அந்த விற்பனைக்காக நிறுவிய நிறுவனம் தான், இன்றைக்கு அனைவரும் தடை செய்யக் கோரி போராடிக் கொண்டிருக்கும் அந்த “டாஸ்மாக்” !!
2003 -

- தமிழகத்தில் முதன் முறையாக தனியாரிடம் இருந்த அனைத்து மது விற்பனை கடைகளையும் அரசுடமை ஆக்கினார்... அன்றைய முதல்வர் ஜெயலலிதா..!! டாஸ்மாக் நிறுவனம் மூலம் தன் குருநாதர் மொத்த விற்பனையை மட்டும் மேற்கொண்ட நிலையில்... சீடரான ஜெயலலிதா, அதே டாஸ்மாக் நிறுவனம் மூலம் சில்லறை வணிகத்தினையும் அரசுடமையாக்கி திட்டத்தை விரிவுபடுத்தினார்...!!!
சுறுங்கச் சொல்ல வேண்டுமானால்.....

- பேருந்துகள் அரசுடமை = கலைஞர்!
- சாராய மொத்தவிற்பனை அரசுடமை = எம்.ஜி.ஆர்.!
- சாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..!

Monday, August 17, 2015

திமுகவின் மதுவிலக்கு பிரகடனமும், அதன் அரசியல் பார்வையும்..!

2016 இல் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.... டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, தலைவர் - திராவிட முன்னேற்ற கழகம்..!
திமுக தலைவர் கலைஞரின் இந்த அறிவிபும், அதைத் தொடர்ந்தான அக் கட்சியின் பொருளாளரும், முதல்வர் வேட்பாளருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்களுடைய, திமுக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்கானது என்ற பிரகடனமும் வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில் இது வரையிலும் மதுவிலக்குக்காக குரல் கொடுத்து வந்த பாமக, தமிழருவி மணியன், நெடுமாறன் போன்ற சிறிய கட்சித் தலைவர்கள் அனைவருமே, தமிழகத்தில் ஆட்சிக்கு வர தகுதியுள்ள ஒரு கட்சியான திமுகவின் இவ்வாக்குறுதியை அரசியல் கடந்த வரவேற்றிருந்தால்...  அதில் ஒரு நியாயம் அல்லது நேர்மை இருந்திருக்கும். ஆனால் அதை விடுத்து இவர்கள் பதபதைத்து, இதை திமுக செய்யாது என்றும், செய்ய முடியாது என்றும், கலைஞர் தான் தமிழகத்திலேயே சாரயத்தை ஆறாக ஒடவிட்டவர் என்பது போலவும்....   அறிக்கைகள் கொடுத்து, எப்படியாவது ஜெயலலிதா மது விலக்கை அறிவித்து அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்யும் பதட்டத்தோடு செயல்படுகின்றனர்.

இவர்கள் நேர்மையான அரசியல் தலைவர்களாக இருந்தால், அதிமுகவையும், திமுகவையும் ஒரே தட்டில் வைத்துத் தான் நிறை குறைகளை அணுகியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் நோக்கம் எல்லாம் எப்படியாவது திமுகவை பலவீனப்படுத்தி, மக்கள் மனதில் அக் கட்சியைப் பற்றிய தவறான எண்ணங்களை தவறாமல் விதைத்துக்கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வருவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி இவர்கள் அரசியல் செய்வதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதையே மதுவிலக்கு பற்றிய திமுகவின் அறிக்கைக்கு எதிரான இவர்களது வாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் அப்படி திமுகவை இதில் குறை கூற என்னதான் இருக்கின்றது என்று, மது சம்பந்தமான உண்மையான, யாராலும் மறுக்க முடியாத, ஆதாரப்பூர்வமான வரலாற்றை நாம் சற்று தெளிவாக உற்று நோக்கினால்....    இதோ கீழே அந்த வரலாறு இருக்கிறது. இதில் திமுகவின் மேல் என்ன குற்றம் இருக்கின்றது? என்பதை உங்கள் முடிவுகளுக்கே விட்டுவிடுகின்றேன். 
1971 க்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள தமிழர்கள் யாரும் மதுவே அருந்தவில்லை, வெறும் பால் மட்டும் குடித்துக்கொண்டு விரல் சூப்பிக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் சிலர் இங்கே பரப்புரை செய்து கொண்டிருப்பது அபத்தத்தின் உச்சம்.
அன்றைக்கும் கள் குடித்தும், கள்ளச்சாராயம் குடித்தும், தமிழகத்தின் எல்லைப்புற மாநிலங்களான பாண்டி, கேரளா, ஆந்திரா என்று அனைத்திலிருந்தும் இங்கே மதுக் கடத்தல் தாராளமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததும்... அதனால் பலர் உயிரிழந்ததும், பலர் மேல் அவ்வப்பொழுது வழக்குகள் போடப்பட்டுக் கொண்டிருந்ததும்....

..இதெல்லாம் எதற்கு? காந்தி சொன்னதைக் கேட்டு, தென்னை மரம் இருந்தால் தானே கள் இறக்கிக் குடிப்பார்கள் என்று தன் தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெரியாரின் செயல் கூட தமிழகத்தில் மது விற்பனை பற்றிய புரிதலை நன்கு எடுத்துக்காட்டிய செயலாகும்..!!
அப்படி இருக்க, 1971 இல் கள், கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தல் என்று பல்வேறு வகையில் தமிழக தமிழர்கள் மது அருந்துவதை கவனித்த கலைஞர், இதில் இருந்து வரும் வருமானத்தை தமிழக அரசே பயன்படுத்தினால் என்னவென்று முடிவெடுத்துத் தான் மது விலக்கை நீக்கினார்.
ஆனால் பல தரப்பு உயர் மனிதர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு, மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தில் மீண்டும் பூரண மது விலக்கை அமல்படுத்தி... அதே கலைஞர் உத்தரவிட்டார்.

இத்தோடு அந்த அத்தியாயம் முடிந்து விட்டது. ஒரு விஷயத்தில் ஒரு முடிவை ஒரு அரசு எடுத்து அமல்படுத்துவதும், அதன் பிறகு அதில் உள்ள சாதக பாதகங்களை நடைமுறையில் கண்டுணர்ந்து அதை மாற்றி அமைப்பதோ அல்லது முற்றிலும் கை விடுவதோ என்பது தான் ஒரு நல்ல ஆட்சியாளருக்கான சிறந்த உதாரணம். அந்த அடிப்படையில் தான் கலைஞர் அவர்கள் மது விலக்கை நீக்கியும்... மீண்டும் மூன்றே ஆண்டுகளில் அதை அமல் படுத்தியும் உத்தரவிட்டார்.
ஆனால் அந்த அத்தியாயத்தை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து 1983இல் மீண்டும் துவங்கியது யார்? சாட்சாத் அன்றைய அதிமுக முதல்வர் எம் ஜி ஆர் தான்....!
இந்த இடத்தில் தான் சிலர் லாவகமாக கலைஞரை குறை சொல்வார்கள். ஆனால் வெறும் மூன்றே ஆண்டுகள் இருந்த மதுவிலக்குத் தடை.... அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து நடை முறைக்கு வருவதற்கு நிச்சயம் காரணமாக இருந்து விட முடியாது. மேலும் கலைஞர் தலைமையிலான திமுக அரசு மதுவை விற்பனை செய்யவில்லை. மதுவிலக்கை தடை மட்டுமே செய்தது.
ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுவை தமிழகத்தில் கொண்டு வந்த எம் ஜி ஆர்... அவர் அறிவித்த பல்வேறு இலவச திட்டங்களுக்கான நிதிக்காக மதுவிலக்குத் தடையோடு.... மதுவை அரசே விற்பனை செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தையும் அமைத்து... தமிழகத்தில் முற்றிலும் புத்தம் புதிய விஷமத்தனமான மது விற்பனையைத் துவக்கினார்.
அப்பொழுது எல்லாம் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் என்பது அப்பனுக்கு சாராயம்.. பிள்ளைக்கு சத்துணவு...! என்பதாகத்தான் இருந்தது. மாலையில் அப்பன் காசை ஒயின் ஷாப்பில் கறந்துவிட்டு காலையில் பிள்ளைக்கு சாப்பாடு போடுவது தான் இந்த ஃபார்முலா...!!

இது தான் தமிழக மக்கள் இலவசங்களுக்கும், மதுவுக்கும் அடிமையானதற்கான புதிய ஃபார்முலா. அல்லது பிள்ளையார் சுழி...! அதன்பிறகு இலவசங்களை நிறுத்தினால் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையில் மது விலக்கும், அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் தடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இலவசத்தை அனுபவித்தவர்களுக்கு கூடுதல் இலவசம் கொடுத்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையும் வர, டாஸ்மாக் பல்வேறு பரிமாணங்களை எட்டி இன்றைக்கு, இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்யும் அளவிற்கும், ஊருக்குள்ளேயே பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே விற்பனை மையத்தை திறக்கும் அளவிற்கும் வளர்ந்து நிற்கின்றது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள கட்சிகளில் ஒன்றான திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள்  அறிவித்திருக்கும்.... தாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திட்டவட்டமான அறிக்கை......... தமிழகத்தை முழுமையான வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கான அற்புதமான நடவடிக்கையாகவே தோன்றுகிறது...!!
மது விலக்கை அமல் படுத்தினால் மட்டும் போதாது, தேவையற்ற இலவசங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். ஆனால் இதற்கான அறிவிப்பைச் செய்தால் ஓட்டு விழாது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகாவது அதைச் செய்தால் தான் உண்மையான வளர்ச்சியை நோக்கி தமிழகம் நகரும்.

இன்றைக்கு அரசே ஏற்று விற்பனை செய்யும் இந்த மதுவால் தமிழக இளைஞர்களும், பெண்களும் கூட அடிமையாகி வருவதை உணர்ந்த திமுக தலைமை, வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றது. இதற்கு மேல் திமுகவால் இப்பிரச்சினையில் இருந்து பின் வாங்க முடியாது. ஒரு ரூபாய்க்கு அரசி தர முடியாது என்ற விமர்சனங்களை தகர்த்து அதை சாதித்துக்காட்டியது தான் திமுக. அதேப் போன்று தான் மது விலக்கையும் தான் ஆட்சிக்கு வரும் போது சாதித்துக் காட்டும்..!

Friday, August 14, 2015

ஐ லவ் கமல்..!

 ஆஸ் யூஷுவல் குடும்ப சகிதம் பாபநாசம் போய் நல்ல குளியல் போட்டு வந்தாச்சு..!
யாரும் பயப்பட வேண்டாம் படத்தைப் பற்றி விமர்சனம் எல்லாம் எழுதப் போவது இல்லை.! நான் இதன் மலையாள வர்ஷனான த்ருஷ்யம் பார்க்கவில்லை.
வழக்கம் போல கமல் படம் வருதுன்ன உடனேயே ஏகப்பட்ட விமர்சனங்கள், அறிவுஜீவித்தனமான கருத்துப் பறிமாற்றங்கள், கொஞ்சம் கூட மூளையே இல்லாத கமலுக்கான எக்கச்சக்கசக்க... அறிவுரைகள் என்று இணையம் உட்பட அனைத்து தளங்களும் செம பிஸி.

பொதுவா நம்ம தமிழர்களுக்கு என்று தனிக்குணம் இருப்பதை என்னால் கொஞ்சம் அவதானிக்க முடிகிறது. கலைஞர், கமல், வைரமுத்து மாதிரியான தமிழகத்தைச் சேர்ந்த பல் துறை வித்தகமும், மேம்பட்ட அறிவு நுணுக்கமும், வெளிப்படையான , ஊருக்காக நடிக்காத தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் கொண்ட நபர்களைக் கண்டால் கொஞ்சம் எரிச்சலோ அல்லது நமைச்சலோ ஏற்பட்டு அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நோண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்களைக் கலாய்ப்பார்கள், அவர்கள் மீது அறச்சீற்றம் கொள்வார்கள், தகுதியே இல்லாத நபர்கள் மாதிரி சித்தரிப்பார்கள். அவர்களைப் பொருட்படுத்தாதது மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் சதா சர்வ காலமும் அவர்கள் சிந்தனையிலேயே வாழ்வார்கள். ஆனால் அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அத்தனை பேருக்கும் அத்துப்படி...!!!
இன்னும் ஒரு படி மேலே போய் இவர்களை எரிச்சலூட்டுவதற்காகவோ அல்லது அவமானப்படுத்துவதற்காக,.... தன் துறை சார்ந்த பெரிய திறமையோ, சாதுர்யமோ... வேறு எந்த துறை சார்ந்த பொதுப் புத்தியோ, அறிவு நுணுக்கமோ இல்லாத தமிழரல்லாவதவர்களைக் கூட... உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் எம். ஜி. ஆர், ரஜினி, அஜித்... இப்படியானவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்வது போல பாவனைக் காட்டி கமல் வகையறாக்களை பொறாமைப்பட வைப்பதாக இவர்களே நம்பி சுய இன்பம் காணுவார்கள்..!
ஆனால் ஒன்று நம்மவர்களை எல்லாம் ஒரு வித ஆழ்நிலை தூக்கத்திற்கு கொண்டு சென்று விசாரித்தால், அவர்கள் அடி மனதில் கமல் வகையறாக்களுக்குத் தான் சிம்மாசனம் தந்திருப்பார்கள். தங்கள் சுயம் செய்யும் சிறு தவறுகளைக் கூட கடுமையாகக் கண்டிக்கும் அந்த மனோ நிலைதான் நம்மவர்களுக்கு கமல், கலைஞர் வகையறாக்கள் மீது இருப்பதாக நான் நம்புகிறேன்...!!
ஓக்கே எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டு போயாச்சு. விஷயத்திற்கு வருகின்றேன். பாபநாசம் படம் முழுக்க, சுயம்புலிங்கம்... மன்னிக்கவும் கமல் அந்த குட்டிகுரா பவுடர், காலர் மடிப்பில் கர்ச்சீப் சகிதம் ஜம்முன்னு வாழ்ந்திருக்கின்றார். இதையெல்லாம் இயல்பாக லாலேட்டனும் த்ருஷ்யத்தில் செய்திருக்கலாம்.
ஆனால் கமலுக்கு கொடுக்கப்பட்ட அந்த நான்கு நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் கமல், தான் ஒரு தன்னிகரற்ற கலைஞர் என்பதை நிரூபித்து விட்டார். அந்தப் படத்திற்கும் கமலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது முழுக்க முழுக்க மலையாள டீமுக்கு சொந்தமானது. ஆனால் அதில் கமலுடைய பங்கு என்று ஒன்று இருக்க வேண்டுமே....
..அது தான் அந்த கடைசி நான்கு நிமிடம்... அவனது கழுத்துக்கு மேல் உள்ள அந்த கலைஞனின் ஒவ்வொரு செல்லும் நடிக்கின்றது... தலையில் இருக்கும் முடி கூட நடிக்கின்றது... நடிக்கக் கூட இல்லை... படம் பார்ப்பவர்கள் அனைவருக்குள்ளும் அந்த நபரின் அந்த நேரத்து உணர்வுகளை அட்சரம் பிசகாமல் கடத்துகின்றது. எத்தனை சிறப்பான வசனங்களை அந்த இடத்தில் கோர்த்திருந்தாலும், அந்த மனிதனின் முழு உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதுக்குள் கடத்தியிருக்க முடியாது. நிச்சயமாகச் சொல்கிறேன்... அந்த இடத்தில் கமல் பேசும் வசனங்களை பெரும்பாலானவர்கள் காது கொடுத்துக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை... அதற்கான தேவையை அவர்களுக்கு அந்தக் கலைஞன் கொடுக்கவேயில்லை...!!

ஐ லவ் கமல்..!

திமுக.... கொஞ்சம் மாத்தி யோசிக்கனும்..!

திடீர்ன்னு கலைஞர் ஊழல் பண்ணிட்டாருன்னு முப்பது, நாற்பது புகார் அடங்கிய பட்டியலை கொடுப்பாங்க. அதை ரேடியோல, பேப்பர்ல ஃப்ளாஷ் பண்ணுவாங்க. அதுக்கெல்லாம், அடிப்படை, ஆதாரம், லொட்டு, லொசுக்குனு எந்த கந்தாயமும் இருக்காது. அதை விசாரிக்கிறதுக்கு சர்க்காரியான்னு ஒரு கமிஷனை அமைத்து தினம் தினம் அந்த செய்திகள் பேப்பர்ல வர்ற மாதிரி பார்த்துப்பாங்க.
மக்களும் அதை வாய பொளந்து பார்த்துக்கிட்டே இடையில் வருகின்ற பொதுத் தேர்தல்ல கலைஞரை தோற்கடிச்சிடுவாங்க. கலைஞரும் ஒவ்வொரு புகாருக்கும் விளக்கத்துக்கு மேல விளக்கம் கொடுத்து அசராம அடிச்சு ஆடுவாரு. அதுக்கப்பறமா அந்த புகர்ல ஒன்னுத்துக்கு கூட ஆதாரமோ, முகாந்திரமோ இல்லன்னு தூக்கி கடாசிட்டு போயிட்டே இருப்பாங்க. ஆனா இடைப்பட்ட காலத்துல கலைஞர் ஆட்சியை இழந்திருப்பார்.
திரும்பி போராடி கீராடி அவர் ஆட்சியை பிடிச்சார்ன்னா...., விடுதலைப் புலிகளை வச்சி ராஜீவ் காந்திய கலைஞர் கொன்னுட்டாருன்னு ஜஸ்ட் லைக் தட் புகார் வாசிப்பாங்க... வழக்கம் போல மக்கள் வாய பொளக்குறதும், கலைஞர் ஆட்சியை இழக்குறதும்... கடேசில, கலைஞருக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைன்னு தீர்ப்பு வர்றதும் நடக்கும்...!!
மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவார்... இப்ப யாருமே நம்ப முடியாத அளவுக்கு ஒரு தொகையை, ஒன்னே முக்கால் லட்சம் கோடி கலைஞரோட மந்திரி ஊழல் பண்ணிட்டதா சொல்லி நியூஸை பரப்புவாங்க... மீண்டும் மக்கள் வாயை பிளப்பாங்க.... ஆட்சி பறிபோகும்... கேஸு கிட்டத்தட்ட ஊத்திக்கிற நிலைக்கும் வந்து விட்டது....
அதாவது அவிங்க பாட்டுக்கும்... அவதூறை அள்ளி வீசி மீடியால ஃப்ளாஷ் பண்ணிடுவாங்க. கலஞரும் திமுக தரப்பும் அதை பொய்யின்னு சொல்லி ப்ரூஃப் பண்ணிட்டு வெளில வர்றத்துக்குள்ள் ஆட்சி போயி அவிங்க வந்து உட்கார்ந்திடுவாங்க....!
இதே டிரெண்டைத்தான், தளபதியிடமும் அவாள்லாம் அப்ளை பண்ணியிருக்கா...!! இவர் கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்ன்னு தெரியும். அதனால ஊழல் புகர் சொல்றது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு முடிவு பண்ணி, இவர் மக்களோட மக்களா பழகுறதுனால தான இவரோட இமேஜ் கூடுதுன்னு....
அதுக்கு ஆப்பு வக்கிற மாதிரி மெட்ரோ பளார்ன்னு ஒரு டிரெண்டிங்கை உருவாக்கினாங்க. அதுக்கு தளபதியே விளக்கம் கொடுத்து, சம்பந்தப்பட்ட நபரே மறுத்தவுடன், விவகாரம் முடிவுக்கு வந்தாலும், தளபதி தொண்டரை கன்னத்தில் அடித்தாரா? என்ற விவாதத்தை மக்களிடம் முன்னெடுக்க வைத்ததில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
இதற்கு மேலும் இப்படிப்பட்ட விஷயங்களை திமுக வழக்கம் போல கடந்து செல்வது நல்லதல்ல. இது போன்ற விஷயங்களை முன்னெடுப்பவர்கள் மீது அவதூறு வழக்கை முன்னெடுத்து, இன்னும் பலமாக தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வேண்டும். இதற்கு மேலும் டிஃபன்ஸ் ஆடிக் கொண்டிருப்பது திமுகவுக்கு பலனளிக்காது. எதிரிகளை டிஃபன்ஸ் ஆட வைக்க வேண்டும்.
இது போன்ற டீவி விவாதங்களில் திமுக சார்பாக யாரும் கலந்து கொள்ளக் கூடாது. அதை கடுமையான அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி விட்டு... இந்த மாதிரியான அவதூறு விவாதங்களுக்கு சட்ட ரீதியாக தடை வாங்கவும் வேண்டும். பலமாக எதிர்க்கும் போது தான் மக்களும் திமுகவை நம்புவார்கள்.

திமுக.... கொஞ்சம் மாத்தி யோசிக்கனும்..!

Thursday, August 13, 2015

மோடியும் லேடியும் ஒன்னு.. அறியாதார் வாயிலே மண்ணு...

வருமானவரித்துறை வழக்கு, சொத்துக்குவிப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பு... இவற்றுக்கு முன்னால் மத்திய அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள அருண்ஜெட்லி வந்து பார்த்ததையும்...
சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற பொழுது, பிரதமரே நேரில் வந்து பார்ப்பது பற்றியும்....
இந்த ஜுஜுபி மேட்டர்க்கு எல்லாம் தாம் இந்த சந்திப்புகள் நடந்ததாக யாராவது நினைத்தால்... அவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதிகூற முடியும்...
லேடியும், மோடியும் ஒன்னு... இதை அறியாதவர்கள் வாயில் பன்னு..!! என்பது தான் அது!!
வேற என்ன தான் மேட்டர் என்கின்றீர்களா?!
பாஜக எத்தனை மோடி மஸ்தான் வேலையைப் போட்டாலும், தமிழகத்தில் 4 சதவிகித வாக்குகளுக்கு மேல் அது எந்தக் காலத்திலும் வாங்க முடியாது என்பது அவர்களுக்கே தெளிவாகப் புரிந்து தான் போயிருக்கிறது.
இங்கே கொஞ்சமாவது, ஃபிலிம் காட்ட வேண்டுமென்றால் கூட..., அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி அமைப்பது மட்டுமே ஒரே வழி..! இதில் பாஜகவின் லகான் அதி தீவிர இந்துத்துவா முகம் கொண்ட மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி வசம் இருக்கும் வரை பாஜகவால் திமுகவை நெருங்கவே முடியாது என்பது தான் யதார்த்தம்.
அடுத்து இருக்கும் ஒரே ஆப்ஷன், அதிமுக தான். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால், பாஜக ஆட்சியைப் பிடிப்போமா இல்லையா என்று எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில்..., ஜெயலலிதாவும் பிரதமர் கனவோடு தேசிய அளவில் மூன்றாம் அணி.. அது இது என்று ஜம்பம் காட்டிய நிலையில், அதிமுகவோடு கூட்டணி பற்றி பேசும் தைரியும் பாஜகவுக்கு நிச்சயமாக இருந்திருக்கவில்லை.
ஆனாலும் திமுகவும், திகவும் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கியோ... அதே மாதிரி தான் அதிமுகவும், ஆர் எஸ் எஸ்ஸின் பிள்ளையான பாஜகவும் என்பது ஊரறிந்த விஷயம் தான். அதனால் தான் அவர்களுக்கிடையேயான மனோ ரீதியிலான ஒத்த கருத்தில், ஒருவேளை பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு பலம் கிடைக்காவிட்டால், ஜெயலலிதா ஆதரவில் ஆட்சி அமைக்கும் திட்டமும், ஒருவேளை எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருந்து பாஜக பெரிய அள்வில் சோபிக்கவில்லை என்றால், மூன்றாவது அணி என்ற ஃபார்முலாவில் மற்ற கட்சிகளின் கூட்டணியோடு, ஜெயலலிதாவை பிரதமராக்கிவிட்டு, அது கவிழாமல் இருக்க பாஜக வெளியிலிருந்து முட்டுக்கட்டை கொடுக்கும் அடுத்த ஆப்ஷனையும் ஆர் எஸ் எஸ் வகுத்திருக்கும்..!
ஆர் எஸ் எஸ்ஸைப் பொறுத்தவரை, ஒத்த கருத்துடைய தம் பிள்ளைகளில் ஒன்றான மோடி வந்தால் என்ன? ஜெயலலிதா வந்தால் என்ன? இரண்டும் ஒன்று தானே?! இருவருடைய ஆட்சியும் ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கைப்படித்தானே இருக்கும்?!
ஆகவே தான் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் வெற்றியை மிக இலகுவானதாக அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் ஆர் எஸ் எஸுக்கு வந்து விட்டது. ஏற்கனவே இரண்டரை வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு நிச்சயம் எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பது இருக்கும். அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள், ஒருமுகப்படுத்தப்பட்டு சிதறாமல் திமுகவுக்கு வந்தால், நிச்சயம் அதிமுக மண்ணைக் கவ்வும்...!
இந்த நிலையில் தான் அதிமுகவை வெற்றிபெற வைக்கும் ஃபார்முலாவை கையிலெடுத்தது பாஜக. அது வகுத்த திட்டப்படி அதிதீவிரமாக செயல்பட்டு, தான் குறைந்த இடங்களை வைத்துக் கொண்டு, திமுக தவிர தமிழகத்தின் அனைத்து சில்லறை எதிர்க்கட்சிகளையும், தமிழருவி மணியன், சோ, தா. பாண்டியன் போன்ற பல்வேறு புரோக்கர்களைக் கொண்டு, அக் கட்சிகள் கொடுத்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு, மெகா கூட்டணி என்ற ஒரு பிம்பத்தை மக்கள் முன்னே வைத்தது.
குழம்பிப் போன உண்மையான நடுநிலையாளர்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க, ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்திற்கு நல்லது தானே என்ற நப்பாசையில் பல அப்பாவி நடுநிலைவாதிகள் அதிமுகவுக்கு வாக்களிக்க.... அதிமுக அமோக வெற்றி பெற்றது..!!
மற்ற மாநிலங்களில் பாஜக மோடி அலையில் வெற்றியைக் குவிக்க, அறுதிப் பெரும்பான்மையோடு பாஜகவே ஆட்சி அமைத்து விட்டது.
இப்பொழுது தான் பாஜகவின் தமிழக கால்கோள் நிகழ்வுக்கான இரண்டாம் கட்ட திட்டம் அரங்கேற ஆரம்பமாகியிருக்கின்றது. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தற்பொழுது பாஜக இருப்பதால், அதன் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைக்கக் கூடிய பல்வேறு உதவிகளும்... அந்த உதவிகள் கிடைக்காவிட்டால் ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்பதும்... தமிழகம் முழுவதும் தற்பொழுது அதிமுகவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருப்பதும்....
...ஆக இவை அனைத்தும் ஜெயலலிதா முன்னால் காட்சியாக விரிக்கப்பட, அதிமுக கூட்டணியில் பாஜக ஒரு கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் சூழலும் உருவாகியிருப்பதைத் தான் நேற்றைய ஜெயலலிதா இல்லத்திற்கான மோடி விஜயம் எனக்கு உணர்த்திக் காட்டுகிறது.
ஆகவே வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழகத்தின் ஒரு பக்க கூட்டணி கிட்டத்தட்ட தயார்...!!
இன்னொரு பக்கமான, திமுகவின் கூட்டணி வியூகம் பற்றி அடுத்த கட்டுரையில் கொஞ்சம் அலசுவோம்...!!