Wednesday, August 6, 2014

அது வேற வாய்! அன்றும் இன்றும் - கவிஞர் தாமரையின் பேச்சு!



இதெல்லாம் ஒரு பொழப்புன்னு இந்த தாமரை பேசுது...!!!



தமிழ் ஈழ விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் துரோகம் இழைத்து விட்டது என்று இது போன்ற சந்தர்ப்பவாத..., மானம் கெட்ட...., கூலிக்கு மாரடிக்கும்..., சில பிரபலங்கள் உணர்ச்சி பொங்க பேசுவதை எல்லாம் கேட்டு திமுகவுக்கு எதிராக வாக்களித்த, பொங்கித் தீர்த்த, வசை பாடிய.....



உண்மையான நடுநிலை தமிழர்களும், இளைஞர்களும்....    கவிஞர் தாமரையின் இந்த இரட்டை நாக்குப் பேச்சை ஒரு ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவிட்டு கேட்டு உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.



ஏதோ ஒரு வகையில்... குறிப்பாக சினிமாத்துறையாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டர்....  அதில் வளர்ந்து ஓரளவிற்கு பிரபலமாகியிருப்பவரை... அவருக்கு குறைந்த அல்லது சீரான வருமானம் மட்டுமே வந்து கொண்டிருக்கின்ற நிலையில்.... அவர்களைப் பிடித்து, ஏதோ ஒரு வகையில் வலையில் விழ வைத்து... ஏதாவது ஒரு பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக உணர்ச்சி பொங்க பேச வைப்பது...,  அவர்கள் பேச்சுக்களை நம்புகின்ற உண்மையான நடுநிலை வாக்காளர்கள், திமுகவுக்கு எதிராக வாக்களிப்பது போல மடை மாற்றுவது மட்டுமே இவர்கள் நோக்கம்....



இப்படி சில உதாரணங்கள் சொல்ல வேண்டுமானால், இந்த கவிஞர் தாமரை, சில சினிமா டைரக்டர்கள் (பாரதிராஜா உட்பட), தமிழருவி மணியன், வைக்கோ, சீமான், சரத்குமார், பழ கருப்பையா, நெடுமாறன்,... இப்படியாக பலரை பேச வைத்து உண்மையான நடுநிலையாளர்களையும், எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய இளைஞர்களையும் திமுகவுக்கு எதிரக திருப்புவது....



இது தான் சமீப காலமாக தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியில் செய்யப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் தான் இன்றைக்கு தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மாதிரியான் இரட்டை நாக்கு வேடதாரிகளிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்....



இதுவரை தமிழகத்தில்....



கலைஞர் ஆட்சியே நல்லாட்சி...!!



இனி வருங்காலத்தில்....



தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!





4 comments:

vijayan said...

நினைப்புதான் பொழப்பை கெடுக்கிறது.இன்னும் நீங்கள் திராவிட நாடு,மூணுபடி காலத்திலிருந்து வெளியே வரவில்லை.ஏதோ கொள்ளை அடித்த காசைவைத்து நீங்களும் பொண்டு பிள்ளைகளும் காலத்தை ஓட்டுங்க,சினிமாகாரன் அடிபட்ட போஸ்டரை பார்த்து ஒட்டுபோடற ஜனமெல்லாம் இப்ப இல்லை.

thenali said...

அந்த பொம்பளைக்கு உண்மையிலேயே நாறவாய்தான். இலங்கைக்காரன் இணையதளத்தில் போட்ட அசிங்கத்திற்கும் இந்த அம்மாள் சுஷ்மாசுவராஜை பற்றி சுந்தரத் தமிழில் பாடிய கவிக்கும் என்ன வித்தியாசமோ தெரியவில்லை! இதே திமுக அதிமுகவாக இருந்தால் இவர் வீட்டில் கல்லெறிந்து இருப்பார்கள். பிஜேபி தமிழ்நாட்டில் வளராத சவளை என்பதினால் உளறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இவரையெல்லாம் புரட்சியாளராக நினைப்பது தமிழின் சாபம்... எம்ஜியாரையே பொரட்சிதலைவராக ஆக்கிய எதையும் தாங்கும் இதயமுடைவனல்லவா தமிழன்!

Anonymous said...

"சினிமாகாரன் அடிபட்ட போஸ்டரை பார்த்து ஒட்டுபோடற ஜனமெல்லாம் இப்ப இல்லை"

இங்க பாருங்கப்பா, இப்ப நம்ம தமிழ்நாட்டை ஆளுறது சினிமாக்காரனுக கெடையாதாம். விசயன் அய்யா சொல்லுறாராம். நாங்கல்லாம் நம்பணுமாம்.

Anonymous said...

"சினிமாகாரன் அடிபட்ட போஸ்டரை பார்த்து ஒட்டுபோடற ஜனமெல்லாம் இப்ப இல்லை"

இங்க பாருங்கப்பா, இப்ப நம்ம தமிழ்நாட்டை ஆளுறது சினிமாக்காரனுக கெடையாதாம். விசயன் அய்யா சொல்லுறாராம். நாங்கல்லாம் நம்பணுமாம்.