Thursday, July 11, 2013

மன்னிக்கவும் உதயகுமாரன்(கள்) !!

எனக்கு எப்பவுமே இந்த சுப. உதயகுமாரன் மேல் பெரிய மதிப்பு எல்லாம் இருந்ததில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் நான் அறிவியல் சார்ந்த வளர்ச்சிகளுக்கு எப்பவுமே ஆதரவான மனநிலை கொண்டவன் என்பதால் தான்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான வசதி வாய்புகளை உறுதி செய்யும் பொருட்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் உதவியுடன் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு நன்மை விளையும் பொருட்டு உருவாக்கப்படும் திட்டங்கள், குறிப்பிட்ட சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் கொஞ்சம் இடைஞ்சலாகவும் இருக்க வாய்பிருக்கிறது.

ஆனால் அந்த சிலருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு சில மாற்று ஏற்பாடுகளை அவர்களுக்கு செய்து கொடுத்து விட்டு பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை. ஒரு வேளை ஆட்சியாளர்கள் அதைச் செய்யத் தவறும் போது, அந்தச் சிறு கூட்டத்திற்கு ஆதரவாக போராடுபவர்கள், அந்த புதிய திட்டத்தால் பாதிப்படைபவர்களுக்காக...., அவர்களின் வாழ்க்கை நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அரசு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாட்டினை கோரித்தான் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது தான சரியான வழிமுறை என்பது என் கருத்து.

ஒரு பெரிய திட்டம், அதனால் பொதுமக்களுக்கு நல்ல பலன்கள் வரும் என்கிற போது அதை ஒரு சிறு கூட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாலேயோ பெருவாரியானவர்கள் பலன் பெறப்போகும் ஒரு திட்டத்தை, அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரக்கூடிய ஒரு திட்டத்தையே முடக்க நினைத்து, அதற்கு ஆதரவாக, பல தரப்பினரையும் தூண்டிவிட்டு பயமுறுத்தி செய்யப்படும் போராட்டம் நிச்சயமாக சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும்.

இந்த மாதிரியான உதயகுமாரன்களுக்காக அந்தக்காலத்து ஆட்சியாளர்கள் அடிபணிந்து போயிருந்தால், இன்றைகு மேட்டூர் அணையும், வைகை அணையும், முல்லைப்பெரியாறு அணையும், நெய்வேலி அனல் மின் நிலையங்களும்.......  இன்னும் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு பலன் தரும் வகையில் வந்தே இருக்காது. இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கான தேவைகள் எதுவுமே பூர்த்தி செய்யப்படாமல் நாடோடி வாழ்க்கை தான் நாம் வாழ வேண்டியிருந்திருக்கும்.

நாற்கர சாலைகள் அமைப்பது கூட சிலருக்கு இடையூராகத்தான் இருந்திருக்கும். அதற்காக இந்த உதயகுமாரன்கள் இப்பொழுது அந்த நாற்கர சாலைகளை பயன்படுத்தாமல் பழைய குறுக்குப் பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்களா? என் எல் சி நிறுவனம் உருவாகும் போது எழாத எதிர்ப்பா? இப்போ அங்கிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, அல்லது அது போன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட அணைகளிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை இந்த உதகுமாரன்கள் பயன்படுத்தாமல் இன்னமும் சிம்னி விளக்கில் தான் குடும்பம் நடத்துகின்றார்களா?

இவர் வக்காலத்து வாங்குவதாக சொல்லிக்கொள்ளும் அப்பாவி மீனவ மக்கள் அனைவரும் இன்றைக்கு துடுப்பு போடும் தோனியில் சென்று தான் மீன் பிடித்து வருகின்றார்களா? அந்த மீனவர்கள் பயன்படுத்தும் லாஞ்சர் போட்டை இயக்க பயன்படும் டீசல், ஏதோ ஒரு கடல் பகுதியை பெருமளவில் மாசுபடுத்தி, அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணையிலிருந்து தானே தயாரிக்கப்படுகிறது. அந்தக் கடல்பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தினால் இவர்கள் எல்லாம் தோனியில் சென்று தான் மீன் பிடிக்க வேண்டியிருக்கும் என்பதை அந்த மீனவ தோழர்களுக்கு இந்த உதய்குமாரன்கள் சொல்வதில்லை.

இவரைப் போன்றவர்களின் நோக்கம், அப்பாவி மக்களை பயமுறுத்தி இவர்கள் அதில் பலனடைய வேண்டும் அவ்வளவே. 

சரி, இவர் உணமையிலேயே சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட உண்மையான இயற்கை போராளி என்றே வைத்துக்கொள்வோம். இவரது தாக்குதல்கள் அந்த புதிய திட்டங்களை செயல்படுத்த முனைவோர் அனைவருக்கும் எதிராக ஒரே தொனியில் மிகச் சமமானதாகத்தானே இருக்க வேண்டும்?! அப்படித்தான் இருக்கின்றதா உதயகுமாரனின் நடவடிக்கைகள்?!

இன்றைய தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கின்றதா? ஜெயலலிதா நினைத்தால் அந்த திட்டத்திற்கு மிகத் தெளிவான தடையை மாநில அரசின் மூலமாக போட முடியுமே! அதைச் செய்யாமல் போராட்டக்காரங்களை அடக்கி அந்த திட்டம் உடனடியாக செயல்படும் செயலைத்தானே முடுக்கி விட்டிருக்கின்றார்?

கலைஞருக்கு எதிராக நீள்வது போன்று இவரது நாக்கும், பேனாவும் அவ்வளவு நீளமாக ஜெயலலிதாவுக்கு எதிராக எப்பொழுதாவது நீண்டிருக்கிறதா? இப்பொழுது கூடங்குளம் பிரச்சினையில் கலைஞரை குறை சொல்ல முடியாமல் கை அரித்துப் போன நிலையில், ஜெயலலிதாவை லேசாக குறை கூறினாலே காயடிக்கப்பட்டுவிடுவோம் என்பதை உணர்ந்து கொண்டு, தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள சேது சமுத்திர திட்டத்திற்காக போராடும் கலைஞருக்கு எதிராக தனது அரிப்பை வெளிக்காட்டியிருக்கின்றார்.

எழுபதுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கலைஞரை எதிர்த்துஅரசியல் செய்தால், ஊடக வெளிச்சம் நன்றாகக் கிடைக்கும், சில சமயங்களில் ஆட்சியாளும் யோகமும் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட உதயகுமாரன்கள், கலைஞருக்கு மானசீகமாக நன்றியை சொல்லிவிட்டு(?!) அவருக்கு எதிரான ஆயுதங்களை கையில் எடுத்து வீதிக்கு வந்து விடுகின்றார்கள்......!

இந்த மாதிரி நூற்றுக்கணக்கான உதயகுமாரன்கள் இன்றைக்கு ஊர் பேர் தெரியாமல் சுறுண்டுகிடக்கின்றார்கள் என்பது இவரால் அந்த ஊடக வெளிச்ச மயக்கத்திலிருந்து வெளிவரும் போது தான் புரிந்துகொள்ளப்படும். அந்த ஆட்சியாளும் யோகமும் ஆரியர்களுக்கோ அல்லது உண்மையான ஆரிய அடிவருடிகளுக்கோ மட்டுமே சாத்தியமாகும் என்ற உண்மையும் அப்பொழுது தான் அவர்களுக்குப் புரியவரும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுகவும் அதன் தலைவர் கலைஞரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் வேலையில், சமூக ஆர்வலரான உதயகுமாரன் அந்த திட்டத்திற்கு எதிரான உண்மையான மனநிலையோடு இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?

அந்தத் திட்டத்தினால் ஏற்படும் அபாயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டி, புள்ளி விவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டு, கலைஞருக்கே கூட இந்த திட்டத்தை செயற்படுத்த முனைய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கலாம். அல்லது இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனால் பாதிப்படைபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை நிலை தாழாமல் இருக்க வேறு என்ன மாதிரியான மாற்று ஏற்பாடுகளை நீங்கள் முன் வைக்கின்றீர்கள்? என்று கலைஞரிடமே வினா எழுப்பி இருக்கலாம்.


ஆனால் அதையெல்லாம் விடுத்து, கலைஞரையும் அவர் குடும்பத்தினரையும் திமுகவினரையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கொண்டு தனி நபர் விமர்சனம் செய்யும் போதே, நீ பெரிய போராளி அல்ல வெறும் பேமானி என்று புரிந்து போகிறது. உன்னுடைய திட்டம் எந்த அடித்தட்டு மக்களுக்காகவும் போராடுவது அல்ல, கலைஞரை எதிர்த்து ஊடக வெளிச்சத்தைப் பெறுவதும், ஆட்சியாளர்களுக்கு கால் கழுவி விடுவதும் தான் என்று புரிந்து போகின்றது.

அந்த திட்டத்தில் நீங்கள் சொல்வது போல ஊழல் நடந்திருந்தால், அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றம் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரலாம். அல்லது ஊழல் நடைபெறா வண்ணம் அந்த திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கலாம். அதையெல்லாம் விடுத்து ஒரு நான்காம தர மேடைப்பேச்சாளர் போன்று கலைஞர் மீது தனிநபர் தாக்குதல் நடத்தியிருப்பதிலிருந்து, உங்கள் மேல் இதுவரை இருந்த ஒரு எதிர்நிலை கொள்கை கொண்ட போராளி என்ற பிம்பம் உடைந்து, பேட்டை ரவுடி என்ற எண்ணம் தான் உண்மையான நடுநிலையாளர்களுக்கு மேலோங்குகிறது.


5 comments:

rams said...

அந்த பொறம்போக்கு வாழ்கையில் பொருளாதார ரீதியாக நல்ல இடத்தில் இருக்கிறான்

எனவே அவன் குடும்பத்தை பற்றி கவலை கொள்ளாமல் அடுத்தவன் குடும்பத்தை நாசம் செய்கிற வேலையை செய்கிறான்

ஆனால் அவன் பின்னால் நிற்பவர்களின் கதி பொருளாதார ரீதியாக அதோ கதியாக உள்ளது

இது புரியாத மடந்தை கூட்டத்தை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது

kkk said...

Kokarakko said:
பெருவாரியானவர்கள் பலன் பெறப்போகும் ஒரு திட்டத்தை, அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரக்கூடிய ஒரு திட்டத்தையே,
and
இன்றைகு மேட்டூர் அணையும், வைகை அணையும், முல்லைப்பெரியாறு அணையும், நெய்வேலி அனல் மின் நிலையங்களும்....... இன்னும் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு பலன் தரும் வகையில் வந்தே இருக்காது

Atomic power is not at all a viable solution.Comparing atomic power with dams is not correct. I feel.

Kokarakko said:
அதையெல்லாம் விடுத்து, கலைஞரையும் அவர் குடும்பத்தினரையும் திமுகவினரையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கொண்டு தனி நபர் விமர்சனம் செய்யும் போதே, நீ பெரிய போராளி அல்ல வெறும் பேமானி என்று புரிந்து போகிறது.

A perfect statement.100% true.
போராளி என்ற பிம்பம் உடைந்து, பேட்டை ரவுடி என்ற எண்ணம் தான் உண்மையான நடுநிலையாளர்களுக்கு மேலோங்குகிறது.
TRUE to the core statement.

Anonymous said...

ஆமாம், கலைஞரும் ஜெயாவும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்.

இந்த நல்லவர்களின் நல்ல நல்ல திட்டத்திற்கு கண்டிப்பாக நாம் கண்ணை மூடிக் கொண்டு, காதையும் ஆசனவாயையும் பொத்திக் கொண்டு ஆதரவு கொடுக்க வேண்டும்.

கொக்கரக்கோ..!!! said...

//Atomic power is not at all a viable solution.Comparing atomic power with dams is not correct. I feel.//

kkk அவர்களே உங்களது இந்த நிலைப்பாட்டில் கொஞ்சம் லாஜிக் இருப்பதை நாங்களும் உணர்ந்ததால் தான் கூடங்குளம் பிரச்சினையில் உதயகுமாரன் போராட்டத்தை எந்த விமர்சனமும் செய்யவில்லை.

ஆனால் சேது சமுத்திர திட்டம் ஒன்றும் அணுசக்தி சம்பந்தப்பட்ட விஷயம் இல்லியே. இதில் அவர் மூக்கை நுழைத்து கலைஞரை தரக்குறைவாக திட்டுவதால் தான், இவர் கூலிக்கு மாரடிப்பவர் என்பது நிரூபணமாகிவிட்டிருப்பதை விமர்சிப்பதற்காக இவரது முகமூடியை கிழிக்க வேண்டியிருக்கிறது.

கொக்கரக்கோ..!!! said...

அனானி ஐயா, கலைஞரும், ஜெயலலிதாவும் நல்லவர்கள் இல்லை என்பதால் உதயகுமாரின் எந்த முட்டாள்தனத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்கின்றீர்களா?