Tuesday, December 30, 2014

போக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா?!


மழையும் விடாம பேயுது, அரசுப் பேருந்துகளும் ஓடவில்லை... மக்கள் நேத்திக்கு காலைலேர்ந்து அல்லாடித்தான் போயிருக்காங்க.
யாருமே எதையுமே கண்டுக்கிட்டது மாதிரி தெரியல. அரசுன்னு ஒன்னு நடக்குதான்னே புரியமாட்டேங்குது. இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து ஒன்னுக்கு ரெண்டு மூனு தபா, எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏத்தியிருக்கு, ஆனா மூனு வருஷத்துக்கு ஒரு தபா ஏத்த வேண்டிய சம்பளத்தை ஏத்தாம இந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போக்கு காமிச்சிட்டிருக்கு...!!
அதாவது கலைஞர் ஆட்சியில இவிங்களுக்கு எல்லாம் ஷெட்யூல்படி மூனு வருஷத்துக்கு ஒரு தபா சம்பளம் ஏத்துனாங்க. அதுக்கப்பறம் நாலரை வருஷமா இன்னும் நயா பைசா ஏத்தல..!! நாலரை வருஷத்துக்கு முன்னாடி நானூறு ரூவா கரண்ட்டு பில்லு கட்டுனவங்க இன்னிக்கு 1000 ரூவா கட்டுறாங்க. அன்னிக்கு மாச மளிகை சாமான் 1200 ரூவாய்க்கு வாங்குனது இன்னிக்கு அதே சாமன்களை 2100 கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. பால் விலையும் அப்படித்தான்...! ஸ்கூல் ஃபீஸ் கேக்கவே வேணாம்...!!
இப்புடி இருக்கறச்சே அவங்க என்ன தான் பண்ணுவாங்க?

நல்லா யோசிச்சி பாருங்க மக்களே.... இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து என்னென்ன பண்ணினாங்கன்னு?! மொதல்ல உள்ளாட்சி தேர்தல் வந்திச்சி... அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது கூட்டுறவு தேர்தல் வந்திச்சி அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது பார்லிமெண்ட் தேர்தல் வந்திச்சி, அதுல எல்லாம் பிஸியானாங்க. இதுல ஒவ்வொரு துறையிலயும் நாலஞ்சு தபா, மந்திரிங்க, அதிகாரிகள் எல்லாம் மாத்துனாங்க. எதிர்க்கட்சிக்காரங்கள ஒடுக்குறது, சினிமாக்காரங்கள கேஸு போட்டு கைக்குள்ள கொண்டு வர்றது, கடந்த ஆட்சியில் போட்ட திட்டங்களை எல்லாம் எப்புடி முடக்குறதுன்னு யோசிச்சி யோசிச்சே கோர்ட்டு கேஸுன்னு அலையுறது..... நடுப்புற அப்பாவி மக்களை ஏமாத்த, அம்மா தண்ணி, அம்மா உப்பு, அம்மா மளிகை, அம்மா உணவகம், அம்மா மெடிக்கல்ஸ்னு திறந்து வெளம்பரம் தேடிக்கிறது...

இப்புடியா போயிட்டிருந்து, கடேசில, சொத்துக்குவிப்பு கேஸுல கடந்த ஏழெட்டு மாசமா இன்வால்வ் ஆகி, ஜெயிலுக்குப் போயி, டம்மி முதல்வர ஒக்கார வச்சி, அவங்க ஆட்சிய போட்டுடக் கூடாதுன்னு மக்கள்ங்கற வரிசைல ஏகப்பட்ட் போஸ்ட்டிங்க போட்டு அதை மெய்ண்டெய்ன் பண்ணி...... மினிஸ்டருங்க எல்லாரையும் பால் குடம், காவடி, தீமிதி, அலகு குத்துதல்ன்னு அலைய விட்டு......

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ... இதெல்லாம் செஞ்சிட்டிருந்தா, நாட்டுல உருப்படியான விஷயம் எதத்தான் கவனிக்க முடியும்???
வேற வழியே இல்லாம இந்த போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்குல உட்கார்ந்துட்டாங்க.....!!
அடுத்தடுத்து யாரு யாரெல்லாம் இப்புடி உட்கார போறாங்களோ தெரியல....!! நினைச்சாலே கெதக்குன்னு வருது...! ஏன்னா? இவங்க பண்ணுற தப்பெல்லாம் நம்ம (மக்கள்) தலையில தான வந்து விடியுது...! அதான்!!!
அதனால தான் நான் அடிக்கடி சொல்றேன்.....!
ஓட்டுப்போடும் போது, ஊடகங்கள் சொல்றதை எல்லாம் அப்படியே நம்பி உணர்ச்சிக்கு அடிமையாகி ஓட்டுப்போடாம, யாரு வந்தா, நம்ம அன்றாட வாழ்க்கையும், தொலைநோக்கிலான வளர்ச்சியும் நன்றாக இருக்குமோ அவங்களுக்கு ஓட்டுப்போடுங்கன்னு....!!!


5 comments:

Anonymous said...

இப்போதும் கூட இந்த வேலை நிறுத்தம் திமுக வின் சதி என்கிறார்களே தவிர மக்களுக்கும் ,ஊழியர்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அரசுக்கு வரவில்லை !இதன் தாக்கம் அடுத்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் !

கொக்கரக்கோ..!!! said...

உண்மை தான் அனானியாரே... இந்த அரசு திருந்தியதாகத் தெரியவில்லை.

Anonymous said...

poda dmk loosu

கொக்கரக்கோ..!!! said...

தங்கள் நாகரீகமான பாராட்டுக்கு நன்றி திரு/திருமதி அனானி அவர்களே...!

Kumar Veeraraghavan said...

கண்டிப்பாக இந்த அரசு மக்கள் விரோத அரசுதான். ஆனால், நீங்கள் லிங்காவுக்கு செலவழித்த பணத்தை கொஞ்சம் குறைத்திருந்தால், வீட்டு பட்ஜெட்டில் விழும் துண்டை கொஞ்சம் சரிகட்டியிருக்கலாம்.