Saturday, July 6, 2013

சிங்கம் 2.... பைசா வசூல்!!

முதல் நாளே செகண்ட் ஷோ குடும்பத்தோடு போயி பார்த்தாச்சு. கடந்த ஒரு மாசமா இந்தப் படம் பற்றி வந்த ப்ரொமோ விளம்பரங்கள், டிரெயிலர் எல்லாம் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போயிருந்தேன். ஆனால் நேற்று காலையிலிருந்தே நம்ம அமெரிக்க வாழ் இணைய தோழர்களின் இந்தப்படம் பற்றிய விமர்சனங்கள், உடனடியாக இந்தப்படத்தைப் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டன.

நிச்சயமா இது ஹரிக்கு இன்னொரு சாமி தான். ஆனா இதுல ரெண்டு தப்பு பண்ணியிருக்கார். ஒன்னு, இசையமைப்பாளர் தேர்வு மற்றொன்று, ரெண்டு ஹீரோயினிக்களை போட்டு, யாருக்கு முக்கியத்துவம் தர்றதுன்னு புரியாம அவரும் குழம்பி ரசிகர்களையும் பரிதவிக்க விட்டது. இது ரெண்டும் தான் எனக்கு பெரியதாக தெரிந்த குறைகள்.

மற்றபடி, ஒரு சராசரி சினிமா ரசிகனான எனக்கு முழு திருப்தியை தந்திருக்கிறது படம். ரெண்டே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு நிமிடம் கூட குறையாமல் படம் ஓடுகிறது. இருந்தாலும் இன்னும் ஐந்து பத்து நிமிடம் சேர்த்து எடுத்து முழுசா சிங்கத்தோட கல்யாணம், அவருக்கு அரசு விருது கொடுத்து பாராட்டுவது இப்டீன்னெல்லாம் காமிச்சிருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்ன்னு தான் எழுந்து வரும் போது தோனிச்சி!

இதுவே இந்த படத்தோட பெரிய வெற்றின்னு தான் சொல்லனும். நிச்சயமா இதுல இயக்குனர் ஹரி தான் பாராட்டுக்குறியவர். டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிற வகையில் சூர்யாவையும் பாராட்டலாம். ஆனா இதை விஜய் அல்லது அஜீத் பண்ணியிருந்தா, படம் சந்திரமுகி வசூலை பின்னுக்குத் தள்ளியிருக்கும்.

அவ்ளோ வெயிட்டான கேரக்டர், ஒரு சீனைக் கூட உப்புக்குச்சப்பாணியா இருக்கட்டுமேன்னு படத்துல வைக்கல. பாட்டெல்லாம் கூட சீக்கிரமாவே முடிஞ்சி சீன் வந்துடுற மாதிரியே தோனுது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் கூட அடுத்த நிமிடம் தொடர்ந்தால் கொஞ்சம் சாய்ந்து உட்காரலாம்ன்னு நினைக்கும் போது முடிவுக்கு வந்து அடுத்த பரபர சீன் ஆரம்பிச்சிடுது.

எவ்ளோ நாழி தான் சீட்டுல சாயாமயே உட்காருவது? இடுப்பெல்லாம் வலி எடுத்து தான் சாய்ந்து உட்கார்ந்து பார்க்கும் நினைவே வருகிறது. படத்துல டெக்னிகலா ஆயிரம் குறை சொல்லலாம், அதெல்லாம் என்னைய மாதிரி வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு கண்ணுலயே தெரியாது. தெரிஞ்சிக்கவும் நாங்க விரும்பல.

கோவத்தை கோவமா காட்டியிருக்கான், பாசத்தை பாசமா காட்டியிருக்கான். அவ்ளோ தான். நான் செய்யனும், பேசனும்ன்னு நினைக்கறத எல்லாம் திரயில வர்றவங்களும் செய்யறாங்க, பேசறாங்க. அது போதும் எனக்கு. ஹீரோ உண்மையிலேயே நல்ல புத்திமதி சொல்றார், ஸாரி செஞ்சு காமிக்கிறார். ஒரு இளைஞன் கூட இதப்பார்த்து கெட்டுப்போக மாட்டான்.

எங்க ஊரின் மிக இளம் போலீஸ் ஆஃபீஸர் தன் மனைவியோட குதூகலாமா படம் பார்க்க வந்திருந்தார். கண்டிப்பா இன்னும் ஒரு மாசத்துக்காவது, அவர் இதே விரைப்போட மக்களுக்கு நல்லது செய்ய முனைவார். கெட்டவங்கள நசுக்க தயங்க மாட்டார்ன்னு நம்பறேன்.ஏன்னா படத்தின் தாக்கம் அந்த அளவுக்கு இருக்கு!

டைரக்டர் மேல எனக்கு இனோரு வருத்தம் என்னான்னா? நம்ம அஞ்சலியக்காவ முழுசா காமிக்காம சதி பண்ணிட்டார். அதான். அந்தப் பாட்டுலயும் கூட சூர்யா ஆடுவதையும், எதிரிகளை நோட்டம் விடுவதையும் காமிச்சி, கொஞ்சம் ஏக்கப்பட வச்சிட்டார். ஆனா இத மாதிரி ஒவ்வொருத்தர் விருப்பத்தையும் அவர் பூர்த்தி பண்ணனும்ன்னா படம் அஞ்சு மணி நேரத்து ஓட வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு சீனையும் அவசர அவசரமா முடிச்சி, வசனம் பேசுறவங்களை கூட வேக வேகமா பேசவச்சி, ரெண்டே முக்கால் மணி நேரத்துக்குள்ள படத்தை முடிச்சிக் கொடுத்திருக்கார் ஹரி. அதுனால தான் ரொம்ப தூக்கத்தோட படத்துக்குப் போனாலும், கொட்டாவி கூட விடாம ஃப்ரெஷ்ஷா படம முடிந்தவுடன் வெளியே வர முடியுது.

இப்படியெல்லாம் படம் எடுத்தாத்தான், பணம் போட்டவனும் கொஞ்சம் காசை கண்ணுல பார்க்க முடியும். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அங்கு வேலை செய்யறவங்க, சைக்கிள் ஸ்டாண்டு, கேண்டீன் நடத்துபவர்கள் உட்பட அனைவருமே நாலு காசு பார்க்க முடியும். இதெல்லாம் நடந்தாத்தான் இந்த சினிமா தொழிலே வளமா இருக்க முடியும்.

இது எல்லாத்துக்கும் மேல, உழைச்ச காச கொடுத்து டிக்கெட் வாங்கி சந்தோஷத்துக்காக சினிமா பார்க்க போறவங்க எல்லாருக்கும், ஒரு மூணு மணி நேரத்துக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டத்துக்கு 100% கேரண்டி. குடும்பத்தோட போயி எந்த சஞ்சலமும் இல்லாம படம் பார்த்துட்டு வரலாம்.

10 comments:

பினாத்தல் சுரேஷ் said...

exactly.

ரொம்ப யோசிக்கக்கூடாது.

அந்த சீன்ல ஏன் ப்ளூ கலர் டாமினண்டா இருக்கு? பின்னாடி சிலுவை வடிவுல மரக்கட்டையைப்போட்டு டைரக்டர் என்ன சொல்லவரார்?ன்னு எல்லாம் யோசிக்க கேப் விடாததால சீரிய விமர்சகர்களுக்குப் பிடிக்கலை போல :-)

கொக்கரக்கோ..!!! said...

உண்மை தான் சுரேஷ். சினிமாவை ரசிக்கறதுக்காக போனா, இது நல்ல படமாத்தான் தெரியும் ))

முரளிகண்ணன் said...

\\இது எல்லாத்துக்கும் மேல, உழைச்ச காச கொடுத்து டிக்கெட் வாங்கி சந்தோஷத்துக்காக சினிமா பார்க்க போறவங்க எல்லாருக்கும், ஒரு மூணு மணி நேரத்துக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டத்துக்கு 100% கேரண்டி. குடும்பத்தோட போயி எந்த சஞ்சலமும் இல்லாம படம் பார்த்துட்டு வரலாம். \\

செம.

Unknown said...

தமிழ் சினிமாவை பழைய மாதிரி மசாலாகுல்ல இழுத்து விட்டுட்டார்

கொக்கரக்கோ..!!! said...

வேடிக்கையான புலம்பல் உங்களது சக்கரைக்கட்டி!

சினிமா என்பது லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய பெரிய தொழிற்சாலை. அது கோடிக்கணக்கானோருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் பொழுது போக்கு சாதனம். இதை சில ஆயிரம் பேரின் விருப்பத்திற்காக பலியிட முடியாது. அது கூடவும் கூடாது.

Jayadev Das said...

thanks

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

படம் அருமை அதை விட உங்களது விமர்சனம் அருமை கொடுத்த காசுக்கு மோசமில்லா படம்

M.G.ரவிக்குமார்™..., said...

//இதை விஜய் அல்லது அஜீத் பண்ணியிருந்தா, படம் சந்திரமுகி வசூலை பின்னுக்குத் தள்ளியிருக்கும்.//மன்னிக்கவும்!இதில் முரண்படுகிறேன்!அவர்கள் இருவரும் நடித்திருந்தால் கதை இப்படியிருந்திருக்காது!1008 மாற்றங்கள் சொல்லி கந்தலாக்கியிருப்பார்கள்!

Unknown said...

எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. என்ன வில்லன்களை வெறும் சிறையில் மட்டும் அடைத்து வைத்ததை பார்க்கும்போது சிங்கம் 3 வர வாய்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம். இந்த படத்தில் வெறும் நிச்சயா தார்த்தம் மட்டும் தான் முடிந்திருக்கிறது. ஒருவேளை சிங்கம் 3 கல்யாணம் நடக்கலாம்

Unknown said...

எனக்கும் படம் பிடித்திருந்தது. வில்லன்களை வெறும் சிறையில் மட்டும் அடைத்து வைத்ததன் காரணம் சிங்கம் 3 வர வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறன்