Thursday, October 24, 2013

அடி வாங்கும் அதிமுகவும்..! அலற ஆரம்பிக்கும் அவா ஊடகங்களும்..!!தனக்கு எதிரான எந்த ஒடுக்குமுறையையும் தட்டிக்கேட்க எவருமே இல்லாத நிலையில், அப்படிக் கேட்கின்ற ஒருசிலர் மீதும் அடுக்குமுறையை ஏவி அப்புறப்படுத்தும் போதும் தான்....

ஒரு இனம், தனக்குத் தானே என்பது போல் இயல்பாகவே ஒன்றிணைந்து தனக்கு எதிரான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் முடிவு கட்ட வெகுண்டு எழும். அப்படி எழும் போது அந்த உணர்ச்சியின் வீரியம் அளப்பரியதானதாக இருக்கும். அது தன் குறிக்கோளை அடையாமல் அடங்காது. அதற்குப் பெயர் தான் “புரட்சி”!

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்படி மக்களுக்கு எதிராக, வரலாறு காணாத விலையேற்றம், மின் கட்டண, பஸ் கட்டன உயர்வு என்பதோடு மட்டுமல்லாமல், ஜாதிக் கலவரங்கள், வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள், 144 தடை உத்தரவுகள், சங்கிலிப் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை என்று தொடர்ந்து..., மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட விவசாயம், சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் என்பதுகளில் இருந்தது மாதிரியான மிக மிகப் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் அடித்தட்டு மக்களிடையேயும், கீழ் நடுத்தர வர்க்கத்து மக்களிடையேயும் தலைவிரித்து ஆடுகிறது என்பதில் நீண்டு...., சாலைகள், பாலங்கள், தூர்வாருதல், துப்புறவுப் பணிகள் முதற்கொண்டு கடந்த ஆட்சியில் நடந்து கொண்டிருந்த அனைத்து உட்கட்டமைப்புப் பணிகளும், உள்ளாட்சிப் பணிகளும் பராமரிப்பின்றியும், தொடராமலும் சிதைந்து போயிருப்பதும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை நேரடியாக பாதிக்கும் அனைத்து துறைகளிலும் மிகச் சாதாரணமாக நடக்கும் ஊழகள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் டிரான்ஸ்ஃபர் ஊழல்கள் என்பதை எல்லாம் அதிமுகவின் அதி தீவிர ஏடுகளான ஜூவியும், தினமலருமே பட்டியலிட்டு அலறும் நிலையில்.......

மக்கள் இன்னும் பெரிய ஏற்றம் அல்லது மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்த அதிமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்த அவலங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த ஆட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்க, மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கி சிறப்பித்த விஜயகாந்த் பம்மிப் பதுங்கி விட, ஊடகங்களும் மிரட்டப்பட்டோ அல்லது ரொட்டித்துண்டுகள் போட்டோ முடக்கப்பட...

திமுக மட்டும் வழக்கம் போல் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். சட்டமன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும் அரசின் தவறுகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி திமுக மட்டுமே மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது. தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நிகழ்த்தி உங்களோடு, உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்திருகின்றது. உடகங்கள் கண்ணைப் பொத்தி, வாயை மூடிக்கொண்டிருந்தாலும், வலிமையான இணையதள பிரச்சாரம் மூலம் அக்கட்சியின் தலைவர், தளபதி முதல் அடிமட்டத் தொண்டன் வரை இந்த ஆட்சியின் அவலங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சென்று இந்த அவல ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு மிகப் பெரிய அளவிலான அத்துமீறல்களுக்கு அணை போட்டுக் கொண்டிருக்கின்றது.....!

ஆயினும், தாங்கள் கொடுத்த மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதாலும், அவா தரப்பு ஊடகங்களின் அளப்பறிய ஆசீர்வாதத்தாலும், மற்ற தரப்பு ஊடகங்களின் மண்டியிடலாலும், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து விட்டு, அதிலிருந்து மக்கள் கவனங்களை திசை மாற்ற சாதிச் சங்கங்களின் செயல்பாடுகளை நீர்த்துப் போகாமல் நிலை நிறுத்தி, ஒரு சில கவர்ச்சியான இலவச அல்லது மலிவு விலைத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி, மது குடித்தலை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்து, பணப்புழக்கம் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை வாய்ப்பும் இல்லாமல், எதிர்காலத்தில் அவாளை அண்டிப்பிழைக்கும் அவல நிலைக்கு தாம் தள்ளப்படுவதை மக்கள் தெளிவாக உணர்ந்து பொங்கியெழ ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதன் பொருட்டே மக்களின் இந்த எழுச்சி...., எங்கே “புரட்சியாக” மாறிவிடுமோ என்று பயந்து தான் அவா ஊடகங்களே தற்பொழுது மக்களை நேரடியாக பாதிக்கின்ற அரசுத்துறை ஊழல்கள் பற்றி அரசை விமர்சிக்காமல், எச்சரிக்கும் விதமாக எழுத ஆரம்பித்திருக்கின்றன....!!!

ஆகவே, அதிமுக ஆட்சியாளர்களே! அவா தரப்பு ஊடகங்களே!! இது பழைய காலம் இல்லை, எல்லோரையும் எப்பொழுதுமே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கு! மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், நீங்கள் வீழ்த்தி விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு ஆதரவாக அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு எழுச்சியுடன் களத்தில் நிற்கின்றது......

அடங்கி ஒடுங்கி, ஒழுக்கமான் ஆட்சியை நடத்துகின்ற வழியைப் பாருங்கள்.... இல்லையென்றால் வருங்காலம் உங்களுடையதாக இருக்காது!!!


4 comments:

Anonymous said...

Poda da DMK pundai

கொக்கரக்கோ..!!! said...

முகம் தெரியாமல் முக்காடு போட்டு வந்து இவ்வளவு அநாகரீகமாக திட்டும் அதிமுக ஆதரவாளர்களின் தரத்தை உண்மையான நடுநிலையாளர்கள் உணர வேண்டும் என்று தான் இந்த அனானியாரின் பதிலை அப்படியே பிரசுரித்திருக்கின்றேன்.

ராவணன் said...

கொக்கரக்கோவின் முகம் எங்கே உள்ளது.

…பெயரில்லை....

…வீடு வாசல் அட்ரஸ் என்னவென்று சொல்லிவிட்டு கூவினால்
…மற்றவர்களின் முக்காட்டைக் குறைகூறலாம்.

…மடிப்பாக்கம் நாயுடு பையனை உங்களுக்குத் தெரியுமா?

Anonymous said...

அதை விடுங்க, நீங்க நல்லா உரு போட்டு இருக்கீங்க மண்டபத்திலே எழுதி கொடுத்ததை ஆனாலும் கொஞ்சம் பொருந்த சொல்லேனா வீணா போய்டும். கொஞ்சம் மாயவரம் போய் நம்ம தொல்காப்பியன் கிட்ட ஒரு சின்ன ட்ரெய்னிங் எடுத்திட்டு வந்திடுங்களேன் - புதிய கோணங்கி