Thursday, November 14, 2013

கொத்துக்கொத்தாய் செத்து விழும் மாடுகள்....!


நாகை மாவட்டம்.....

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று கேட்டால் இன்னமும் பாட புத்தகங்களில் தஞ்சை என்று தான் சொல்வார்கள். ஆனால் பழைய தஞ்சை மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டதில் இருந்து இன்றைய நிலையில் தமிழகத்திற்கு மிக அதிக அளவில் நெல் விளைவித்துத் தருகின்ற மாவட்டம் என்றால் அது நாகை மாவட்டம் தான்.

காவிரியின் அச்சு அசல் டெல்ட்டா என்றால் அது இது தான். காவிரியின் கடை மடை பகுதியும் கூட இந்த மாவட்டத்தில் தான் வருகிறது. தொழில் துறையைப் பொறுத்தவரை மிக மிக பின் தங்கிய மாவட்டமாக இருக்கின்ற இந்த நாகை மாவட்டத்தில், மக்களுக்கான பிரதான வருவாய் என்பது நெல், கரும்பு விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துணை தொழில் அமைப்பான கால்நடை வளர்ப்பும் பராமரிப்பும் தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பகுதியில் காவிரித்தாயின் லீலையில் தாளடி தருவாயில் கூட கடைமடையை காவிரித் தண்ணீர் எட்டிப்பார்க்காத அவலம் பல பகுதிகளில் இருக்கின்ற போதே இந்த பகுதியில் விவசாயம் எந்த அளவிற்கு மக்களின் வருமானத்திற்கு உதவக்கூடியதாய் இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை....!

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இம்மாவட்ட மக்களின் குறிப்பாக கிராமப்புர மக்கள், அடித்தட்டு மக்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த தாய்மார்கள் அனைவருக்குமே வருவாய் ஆதாரமாய் இருந்து கொண்டிருந்த மாடுகளுக்கு ஒரு வித இன்னமும் பெயர் வைக்கப்படாத நோய் தாகுதல் ஏற்பட்டு இதுவரை ஆயிரக்கணக்கான மாடுகள் பொத்து பொத்துன்னு இறந்து விழும் கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.....

தற்சமயம் இந்த நோய் ஆடுகளுக்கும் பரவி அவற்றின் சாவுகளும் மக்களை அதிர வைத்திருக்கின்றது.

இந்தப் பகுதிகளில் ஆடு மாடு வளர்ப்பு என்பது ஒரு சிறு, குறு தொழில் மாதிரியான விடயம். லடசக்கணக்கான மக்கள் இத் தொழிலில் ஈடுபட்டு தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கும், கல்யாணத்திற்கும், மற்ற நல்லது கெட்டதுகளுக்குமான வருவாய் ஆதாரமாய் இந்த தொழில் தான் இருந்து வருகிறது.

இதற்கு முதலுக்கே மோசம் வரும் வகையில் மிகப் பெரும் ஆபத்து தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று வரையிலும் அந்த கால்நடை நோய்க்கு ஒரு பெயர் கூட வைக்க முடியாத நிலையில் தான் தமிழக அரசின் நிர்வாக இயந்திரம் திறம்பட செயல்பட்டு வருகின்றது! ஆட்சி சரியாக செயல்படாத போது அதன் அடுத்தடுத்த தூண்களான அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்துடன் உலா வரும் வீரர்களும், ஊடக விளம்பர பிஸ்கோத்து வாலாட்டிகளும் டெல்லியில் கட்சியை வளர்க்கவும், மோடி பஜனை பாடவுமே நேரம் கிடைகாமல் திண்டாடும் நிலையில்......

இந்த பாதிக்கப்பட்ட பாவப்பட்ட மக்களை யார் தான் கண்டுகொள்வது? குறைந்தபட்சம் அவர்களது பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்வதற்காவது யாராவது வேண்டாமா? அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எம் எல் ஏக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கழுத்தை திருப்பிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் போது, என்ன செய்வது ஏது செய்வது என்று திண்டாடித் திணறிக் கொண்டிருக்கும் வேலையில் தான்....

வழக்கம் போல திமுக தன் கடமையை ஆற்ற களம் இறங்குகின்றது. ஏற்காடு தேர்தலாகட்டும், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலாகட்டும், அனைத்துமே மக்களுக்காகத் தானே என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து செயல்படும் இயக்கமல்லவா? அதனால் தான் அந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நாங்கள் இருக்கின்றோம் உங்களோடு என்று களம் இறங்குகிறது..... மக்களும் தங்களது ஆப்த இயக்கமான திமுகவோடு கண்கள் பனிக்க இணைந்து கொள்கின்றார்கள்....அதன் ஒரு கட்டமாக இன்றைக்கு மயிலாடுதுறையில் மாவட்டம் தழுவிய அளவில் மாபெரும் அறப்போராட்டத்தை திமுக மாவட்ட கழகம் ஏற்பாடு செய்து திமுக மாவட கழக செயலாளர் அண்ணன் ஏ.கே.எஸ். விஜயன் எம்பி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றது.

இறந்து போன மாடுகளுக்கு முப்பதாயிரம் ரூபாயும், ஆடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கக் கோரியும் இந்த நோய்க்கு சரியான மருந்தை கால் நடைகளுக்கு இலவசமாக வழங்கக் கோரியும், நடமாடும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களை பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்களிலேயே அமைத்து அவற்றைக் காப்பாற்றி மக்களை பெரு நட்டத்திலிருந்து காப்பாற்றவும் கோரிக்கைகளை வைத்து மக்களை திரட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ந்டத்தி, மனுவும் வழங்கப்பட்டிருக்கின்றது.

திமுக மக்களை திரட்டிவிட்டது என்கிற போது இனி அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அலட்சியப் படுத்திட முடியாது. அப்படி அலட்சியப் படுத்தினால் அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் என்று இறங்கி, நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவுகாலம் வந்தே தீரும்.

இலக்கியவாதிகள், தமிழ்தேசியவாதிகள், சாதிக்கூட்டமைப்பினர், ஈழப்போராளிகள், பொருளாதாரப் புலிகள்.... இப்படி எத்தனையோ முக மூடிகளோடு வந்து திமுகவை அழிக்கத்துடிக்கும் காகிதப் புலிகளே, நன்றாக கேட்டுக்கொள்ளூங்கள்......

திமுக என்றைக்குமே மக்களோடு மக்களாக புழங்குகின்ற இயக்கம். நீங்கள் எத்தனை முயன்றாலும் மக்கள் திமுகவை விட்டுக்கொடுக்க மாட்டவே மாட்டார்கள்.....

வரும் தேர்தல்களில் இது உங்களுக்கு நன்றாகவே புரியும்.... அதுவரையிலும் நீங்கள் இந்துவிலும், ஆவிகளிலும் கட்டுரை எழுதி காசு பார்த்துக்கொண்டிருங்கள்..... நாங்கள் மக்களை கவனித்துக் கொள்கிறோம்....!!!

No comments: