Monday, August 24, 2015

என்ன மாதிரியான மனநிலை இது???


இன்றைக்கும் நம் தமிழகத்தின், தமிழர்களின் பெருமையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில், மதுரை நாயக்கர் மஹால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், மாமல்லபுரம் சிற்பங்கள்... இப்படியாக பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்டவைகளை....


அவர்களுக்கு அடுத்தடுத்து வந்த அரசர்கள் அழித்து ஒழித்திருந்தால்....??!!

இவற்றின் பெருமைகளை நாம் இன்று பேசிக்கொண்டிருந்திருக்க முடியுமா? அவற்றின் பலன்களைத்தான் நாம் அனுபவித்திட முடியுமா???!!
ஒருவேளை தஞ்சை பெரிய கோவிலை அடுத்தடுத்து வந்த மராட்டியர்கள் அழித்திருந்தால்... ??
நாம் அவர்களை என்னவெல்லாம் வசைபாடுவோம்??
அதேப் போன்று தானே....


சம காலங்களில்... அதாவது கடந்த இரு நூற்றாண்டுகளில், தமிழகத்தில் நிலைத்து நிற்கக் கூடிய சில சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன... சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம்...
இந்த வரிசையில்... நிச்சயம் உலக அளவில் புகழ்பரப்பக் கூடியதும், ஒட்டுமொத்த தமிழர்களின் கல்விக் களஞ்சியமாக திகழக் கூடியதொரு அற்புதமான, ஆசியாவிலேயே மிகச் சிறந்ததானதொரு நூலகத்தினை கடந்த திமுக ஆட்சி அமைத்துக் கொடுத்தது...!!
அது மாத்திரம் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், இந்நேரம் உலக மக்களின் இந்திய சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கும். ஹிலாரி கிளிண்டனின் வருகையே அதற்கு ஒரு சான்று.
அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை, வெறும் அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களுக்காக, அதைக் கட்டிய ஆட்சியாளரின் புகழ் நிலைபெற்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.....
அதை கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவதும், அதை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பிப்பதும், அதிலுள்ள அடிப்படை வசதிகள் அனைத்தினையும் சீர்குலையச் செய்து அங்கு வருவோர் எண்ணிக்கையை முற்றிலும் முடக்கிப் போடுவதும்.....
என்று செய்வது எல்லாம் என்ன மாதிரியான ஒரு மனநிலை????????!!!!

இது போன்று ஒரு ஆட்சியாளர் செய்வதை செயல்படுவதைத் தான் இன்றைய உண்மையான நடுநிலை தமிழர்கள் நியாயப்படுத்துகின்றார்களா? இதையெல்லாம் அதிரடி என்றும், எதற்கும் அஞ்சாத வீரம் என்றும் பெருமை கொள்கின்றார்களா??
ஒரு வேளை இதற்கான பதில் ஆம் என்றால், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்த கோர மனநிலை, நாளை மக்களுக்கு எதிராகவும் திரும்பும். அப்பொழுது அதை சாமான்ய மக்களால் எதிர்கொள்ள முடியுமா?...!!
ஏற்கனவே, எஸ்மா, டெஸ்மா, பொடா, கஞ்சா கேஸ், இன்னும் பலவற்றை சந்தித்தது தான் இந்த தமிழகம். இது போன்ற பொது விஷயங்களிலாவது தமிழர்கள், அதாவது உண்மையான நடுநிலையாளர்கள் அரசின் இத்தகைய போக்கினை கண்டிக்காவிட்டால், நாளை இது அவர்கள் தலையிலேயே விடியும் என்பதை உணர வேண்டும்..!!
கடந்த ஆட்சியாளர்கள் அதிரடிக்காரர்கள் இல்லை... நிதானம் கொண்டவர்கள்... இந்த அரசின் ஒவ்வொரு தவறுகளுக்கும் சம்ச்சீர் கல்வி தொடங்கி, இந்த நூலகம்... அதாவது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம் வரை சட்டரீதியாக வெற்றி கொண்டுள்ளது..!!
ஆம்... சென்னை உயர்நீதிமன்றம், அந் நூலகத்தை இடமாற்றம் செய்யும் அதிமுக அரசின் ஆணையை ரத்து செய்தும், அதன் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் உள்ளது.

சிந்தியுங்கள் தமிழர்களே...!!


2 comments:

Anonymous said...

அண்ணா நூலகம் கட்டியுள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா இருந்தார். அதை சின்னப் புத்தியுடன் செயல்பட்டு நூலகத்தைக் கட்டியது யாரு? தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தண்ணித் தொட்டி கட்டிடத்தை கட்டியது யாரு? கருணாநிதி என்ற ஆளுக்கு மட்டுமே இதுபோன்ற புத்தி செல்லும். கருணாநிதி கும்பலுக்கு அறிவு இருந்தால் பதில் சொல்லவும்.

கொக்கரக்கோ..!!! said...

முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு வந்து கருத்துச் சொல்லியிருக்கும் அனானியாரே... உங்கள் வார்த்தைகளே போதும், உங்கள் கட்சியின் தரத்தை மக்களிடம் அதாவது உண்மையான நடுநிலை மக்களிடம் எடுத்துச்சொல்ல!!