Friday, August 14, 2015

ஐ லவ் கமல்..!

 ஆஸ் யூஷுவல் குடும்ப சகிதம் பாபநாசம் போய் நல்ல குளியல் போட்டு வந்தாச்சு..!
யாரும் பயப்பட வேண்டாம் படத்தைப் பற்றி விமர்சனம் எல்லாம் எழுதப் போவது இல்லை.! நான் இதன் மலையாள வர்ஷனான த்ருஷ்யம் பார்க்கவில்லை.
வழக்கம் போல கமல் படம் வருதுன்ன உடனேயே ஏகப்பட்ட விமர்சனங்கள், அறிவுஜீவித்தனமான கருத்துப் பறிமாற்றங்கள், கொஞ்சம் கூட மூளையே இல்லாத கமலுக்கான எக்கச்சக்கசக்க... அறிவுரைகள் என்று இணையம் உட்பட அனைத்து தளங்களும் செம பிஸி.

பொதுவா நம்ம தமிழர்களுக்கு என்று தனிக்குணம் இருப்பதை என்னால் கொஞ்சம் அவதானிக்க முடிகிறது. கலைஞர், கமல், வைரமுத்து மாதிரியான தமிழகத்தைச் சேர்ந்த பல் துறை வித்தகமும், மேம்பட்ட அறிவு நுணுக்கமும், வெளிப்படையான , ஊருக்காக நடிக்காத தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் கொண்ட நபர்களைக் கண்டால் கொஞ்சம் எரிச்சலோ அல்லது நமைச்சலோ ஏற்பட்டு அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நோண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்களைக் கலாய்ப்பார்கள், அவர்கள் மீது அறச்சீற்றம் கொள்வார்கள், தகுதியே இல்லாத நபர்கள் மாதிரி சித்தரிப்பார்கள். அவர்களைப் பொருட்படுத்தாதது மாதிரி நடந்து கொள்வார்கள். ஆனால் சதா சர்வ காலமும் அவர்கள் சிந்தனையிலேயே வாழ்வார்கள். ஆனால் அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அத்தனை பேருக்கும் அத்துப்படி...!!!
இன்னும் ஒரு படி மேலே போய் இவர்களை எரிச்சலூட்டுவதற்காகவோ அல்லது அவமானப்படுத்துவதற்காக,.... தன் துறை சார்ந்த பெரிய திறமையோ, சாதுர்யமோ... வேறு எந்த துறை சார்ந்த பொதுப் புத்தியோ, அறிவு நுணுக்கமோ இல்லாத தமிழரல்லாவதவர்களைக் கூட... உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் எம். ஜி. ஆர், ரஜினி, அஜித்... இப்படியானவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்வது போல பாவனைக் காட்டி கமல் வகையறாக்களை பொறாமைப்பட வைப்பதாக இவர்களே நம்பி சுய இன்பம் காணுவார்கள்..!
ஆனால் ஒன்று நம்மவர்களை எல்லாம் ஒரு வித ஆழ்நிலை தூக்கத்திற்கு கொண்டு சென்று விசாரித்தால், அவர்கள் அடி மனதில் கமல் வகையறாக்களுக்குத் தான் சிம்மாசனம் தந்திருப்பார்கள். தங்கள் சுயம் செய்யும் சிறு தவறுகளைக் கூட கடுமையாகக் கண்டிக்கும் அந்த மனோ நிலைதான் நம்மவர்களுக்கு கமல், கலைஞர் வகையறாக்கள் மீது இருப்பதாக நான் நம்புகிறேன்...!!
ஓக்கே எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டு போயாச்சு. விஷயத்திற்கு வருகின்றேன். பாபநாசம் படம் முழுக்க, சுயம்புலிங்கம்... மன்னிக்கவும் கமல் அந்த குட்டிகுரா பவுடர், காலர் மடிப்பில் கர்ச்சீப் சகிதம் ஜம்முன்னு வாழ்ந்திருக்கின்றார். இதையெல்லாம் இயல்பாக லாலேட்டனும் த்ருஷ்யத்தில் செய்திருக்கலாம்.
ஆனால் கமலுக்கு கொடுக்கப்பட்ட அந்த நான்கு நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் கமல், தான் ஒரு தன்னிகரற்ற கலைஞர் என்பதை நிரூபித்து விட்டார். அந்தப் படத்திற்கும் கமலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது முழுக்க முழுக்க மலையாள டீமுக்கு சொந்தமானது. ஆனால் அதில் கமலுடைய பங்கு என்று ஒன்று இருக்க வேண்டுமே....
..அது தான் அந்த கடைசி நான்கு நிமிடம்... அவனது கழுத்துக்கு மேல் உள்ள அந்த கலைஞனின் ஒவ்வொரு செல்லும் நடிக்கின்றது... தலையில் இருக்கும் முடி கூட நடிக்கின்றது... நடிக்கக் கூட இல்லை... படம் பார்ப்பவர்கள் அனைவருக்குள்ளும் அந்த நபரின் அந்த நேரத்து உணர்வுகளை அட்சரம் பிசகாமல் கடத்துகின்றது. எத்தனை சிறப்பான வசனங்களை அந்த இடத்தில் கோர்த்திருந்தாலும், அந்த மனிதனின் முழு உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதுக்குள் கடத்தியிருக்க முடியாது. நிச்சயமாகச் சொல்கிறேன்... அந்த இடத்தில் கமல் பேசும் வசனங்களை பெரும்பாலானவர்கள் காது கொடுத்துக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை... அதற்கான தேவையை அவர்களுக்கு அந்தக் கலைஞன் கொடுக்கவேயில்லை...!!

ஐ லவ் கமல்..!

2 comments:

SathyaPriyan said...

//
அது தான் அந்த கடைசி நான்கு நிமிடம்... அவனது கழுத்துக்கு மேல் உள்ள அந்த கலைஞனின் ஒவ்வொரு செல்லும் நடிக்கின்றது... தலையில் இருக்கும் முடி கூட நடிக்கின்றது... நடிக்கக் கூட இல்லை... படம் பார்ப்பவர்கள் அனைவருக்குள்ளும் அந்த நபரின் அந்த நேரத்து உணர்வுகளை அட்சரம் பிசகாமல் கடத்துகின்றது. எத்தனை சிறப்பான வசனங்களை அந்த இடத்தில் கோர்த்திருந்தாலும், அந்த மனிதனின் முழு உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதுக்குள் கடத்தியிருக்க முடியாது. நிச்சயமாகச் சொல்கிறேன்... அந்த இடத்தில் கமல் பேசும் வசனங்களை பெரும்பாலானவர்கள் காது கொடுத்துக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை... அதற்கான தேவையை அவர்களுக்கு அந்தக் கலைஞன் கொடுக்கவேயில்லை...!!
//
அட்டகாசமான வரிகள். படம் பார்க்கும் போது எனக்கு தோன்றியதும் இது தான். கமலின் பல பரிமானங்கள் மீது பல விதமான விமர்சனங்கள் இருந்தாலும், நடிகர் என்ற அவரது பரிமானத்தின் மீது வெற்று அன்பு மட்டுமே இருக்க முடியும். இது அவரை வெறுப்பவர்களும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.

Peppin said...

Great review! Kamal, always the best! I too liked Papanasam more than Dhrishyam!