Thursday, August 27, 2015

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! பாகம்-1


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! 1

கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் இன்றைக்கு பத்து கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கச் செய்து, தென் சென்னையில் வசிக்கின்ற 15 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்...!!!

இதேப் போன்று ஏதாவது ஒரே ஒரு திட்டம் கடந்த நான்காண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றதா???


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #2

கடந்த திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன்களை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்ததன் மூலம் 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு கடனில்லா பெருவாழ்வு வாழும் பேரிண்பத்தைக் கொடுத்தது அவர்கள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட வைத்தது போன்று....
கடந்த நான்காண்டு அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் ஒரே ஒரு திட்டமாவது நடந்தேறியிருக்கின்றதா?!


ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #3

கடந்த திமுக ஆட்சியில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகிய மூன்று நதிகளை இணைத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த 125 கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும் அற்புதமான திட்டத்தை ரூ. 369 கோடியில் தீட்டி, அதன் இரண்டு கட்ட பணிகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில்....

வெறும் பத்து சதவிகித பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த நான்காண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும்... அதிமுக ஜெயலலிதா ஆட்சியை அதை நிறைவேற்றக் கோரி நெல்லை மாவட்ட விவசாயிகள் கலக்டர் குறை தீர்க்கும் கூட்டங்களில் முறையீடு மேல் முறையீடாக வைத்துக் கொண்டிருக்கின்றார்களே????!!!!

தானாக ஒரு மக்கள் நலத் திட்டத்தைத் தான் கொண்டு வர முடியவில்லை, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை இந்த அதிமுக ஆட்சியில் ஒன்றையாவது கொண்டு வர முடிந்ததா????!!!!

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #4
மார்ச் 25, 1989 - இது தமிழக பெண்கள் அனைவரும் குறித்து வைத்துக் கொண்டு வருடா வருடம் கொண்டாட வேண்டிய ஒரு திருநாள். அன்றைய தினம் திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த, தந்தையின் சொத்துக்களில் பெண் வாரிசுகளுக்கும் ஆண் வாரிசுகளுக்கு சரிக்கு சமமான முழு உரிமைச் சட்டம் தான், கடந்த கால் நூற்றாண்டுகளாக பெண்களுக்கு புகுந்த விட்டில் ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டித்தந்தது. அவர்களுக்கு மனதளவில் தானும் ஆணுக்கு சமமானவள் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. தந்தைக்கு 300 சதுர அடியில் ஒரு சின்ன குடிசை வீடு இருந்தாலும், அதற்கு பாதி பணத்தை பெண்ணிடம் கொடுத்து விட்டுத் தான், அவளது கைய்ப்பத்தைப் பெற்ற பிறகு தான் ஆண் மகன் அதை அனுபவிக்க முடியும் என்ற நிலை உருவாகி,பெண்களை பொருளாதார ரீதியாக தலை நிமிரச் செய்தது அந்தச் சட்டம்...!!!



பெண்களுக்கு உண்மையாகவே தேவையான முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய இப்படியொரு... ஒரே ஒரு சட்டத்தையாவது அதிமுக அரசு நிறைவேற்றியிருக்கின்றதா???!!!

ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி?! #5
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித தொகுதிகள் ஒதுக்கீடு, தமிழக அரசு வேலை வாய்ப்புக்களில் 30 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிச்சாலைகளில் பெண்களை மட்டுமே ஆசிரியராக நியமிக்கும் உத்தரவு...! இந்த மூன்றையுமே செய்தது திமுக ஆட்சி தான். இந்த மூன்று முத்தான சட்டங்களும் கடந்த கால் நூற்றாண்டுகளில் பல லட்சக்கணக்கான தமிழக பெண்களை, ஆண்களுக்குச் சமமாக இல்லை, அவர்களை விட தரம் உயர்ந்தவர்களாக நிமிர வைத்திருக்கின்றது. இவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு மற்ற பெண்களும் வேகமாக முன்னேறி வரும் நிலையினையும் தமிழகம் கண்டு வருகிறது. நியாயமாகப் பார்த்தால் ஒவ்வொரு பெண்ணும் இந்த சட்டங்களுக்காகவே திமுகவை முற்றும் முழுதாக ஆதரிக்க வேண்டும்... அதை விடுங்கள்....


இதேப் போன்று, பெண் சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு... ஏதாவது ஒரு... ஒரேயொரு திட்டத்தை அல்லது சட்டத்தையாவது அதிமுக அரசு செய்திருக்கின்றதா?????

4 comments:

Anonymous said...

poda loosu kanavukanathada

Anonymous said...

நல்ல காமெடி. நாளைக்கு சரிக்கறேன் பின்வழியா.

rajamelaiyur said...

ஆனா எந்த கட்சியும் சட்டமன்ற தேர்தலில் 33% பெண்களுக்கு கொடுபதில்லை ....

கொக்கரக்கோ..!!! said...

@ராஜபாட்டை ராஜா,

உங்கள் கருத்து உண்மை தான். ஆனால் எப்பொழுது சட்டம் என்ற ஒன்று வருகின்றது? ஒரு கொள்கையை இயல்பாக பெரும்பான்மையினரால் அல்லது பலம் பொருந்தியவரால் ஏற்றுக்கொள்ளாமல் போகும் போது தான் அதை சட்டம் என்ற அதிகாரத்தைப் பயன் படுத்தி நிர்ப்பந்திக்க வேண்டியிருக்கின்றது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளாட்சித் துறையில் திமுக சட்டமியற்றிவிட்டது. சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீட்டுக்கு பாராளுமன்றத்தில் திமுக போராடிக்கொண்டிருக்கின்றது.