Sunday, June 5, 2016

அந்த ஆண்டவன்... ஆள்பவனாக அமர்வான்...!!





எனக்கு நன்றாக நினைவு தெரிந்து பொதுக்கூட்டங்களில் கலைஞரை பார்த்த பொழுது... எனக்கு காட்சியாக அமைந்தது தலைவரின் இந்த மாதிரியான தோற்றம் தான்..!!
தலைவரை என் மனக்கணில் எப்பொழுது கொண்டு வந்தாலும், இந்த வயதொத்த உருவம் மட்டுமே என்னுள் தோன்றும். இது எனக்கு மட்டுமேயான ஒரு அனுபவமா அல்லது மற்றவர்களுக்கும் இப்படித்தானா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை நம்புகிறேன்... தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேருக்கும் ஒவ்வொரு விதமாக தனித்தனியாகத்தான் அவர் காட்சி தருவார் என்றே தோன்றுகிறது...!!
வேதங்கள் பார்ப்பனரல்லாத நம்மையெல்லாம் அசுரர்கள் அல்லது சூத்திரர்கள் என்று தானே வகைப்படுத்தியுள்ளன...?! அந்த வகையினைச் சார்ந்த நம் எல்லோருக்கும் தலைவனானவன் அதாவது அசுரர் குலத்தின் அரசன்... சூத்திரர்களின் சூரியன்... எல்லோருக்கும் எப்படி ஒரே விதமாக காட்சி தருவான்...!?
ஆண்டவனாயிற்றே.... தமிழகத்தை ஆண்டவனாயிற்றே...?! தமிழர்களை ஆண்டவனாயிற்றே....?! அவனுக்கு எப்படி உருவக் கட்டுப்பாடு இருக்க முடியும்?! அல்லது காலமும் தான் அவனைக் கட்டுப்படுத்திடுமா?
முன்பெல்லாம்.... முன்பென்றால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எல்லாம் வசவாளர்கள் அவரது பிறந்த தினத்தில் அவரது இறப்பு குறித்து புலகாகங்கிதமாகப் பேசுவார்கள்... அப்பொழுதெல்லாம் அவர்கள் மீது கடுங்கோபமும்..., அவர்கள் பேசுவது போல நடந்திடுமோ என்ற அச்சமும் எனக்கு ஏற்படுவதுண்டு....
ஆனால் சமீப காலங்களில் எனக்கு அப்படியான எண்ணங்கள் எல்லாம் தலைகீழாக மாறிப்போய் விட்டன. ஏனெனில் வசவாளர்களும்... வசை மொழிகளும் தான் மாறிக்கொண்டிருக்கின்றனவே தவிர... அவர் அப்படியேத்தான் இருக்கிறார்...!!
அதனால் தான் சொல்கிறேன்.... அவர் காலத்தைக் கடந்தவர்...!! காலனையும் கடந்தவர்...!! அவருக்கு இறப்போ, மறைவோ, அஸ்தமனமோ என்று எதுவுமே கிடையாது..!!
அதன் சூட்சுமத்தை நான் புரிந்து கொண்டேன்..! வசவாளர்களின் வசை மொழிகள் தான் அவருக்கான நாமாவளி போற்றிகள்...!! இன்று காலையில் முதல்வேளையாக அவருக்கு வாழ்த்துப் பதிவு போடும் முன்பாக வசவாளர்களின் பக்கங்களைத் தான் முதலில் தேடினேன்...!!
என் மகிழ்ச்சி எல்லை கடந்தது....!! ஆம் வசவாளர்கள் மாறவேயில்லை...!! தலைவருக்கான புகழ் நாமாவளிகள் புத்தம் புதிய கோணங்களில் எல்லாம் இயற்றியிருந்தார்கள்...!!
ஆகையால்... நிச்சயமாகச் சொல்கிறேன்...!


இன்னும் சில நூற்றாண்டுகள் அவர் வாழ்வார்...
இன்னும் கூட சொல்வேன்...

அடுத்தடுத்த ஆண்டுகளில் ....

அவர் எழுந்து நிற்பார்... சூராவளியாய் சுற்றிச் சுழல்வார்...
மேடையில் நின்றவாறே.... இதோ இந்தப் புகைப்படத்தில் தோன்றுவது போல... வீர உரையாற்றுவார்...!!
தோளில் போட்ட துண்டை முறுக்கியவாறே... பேசைக் கேட்போரின் நரம்புகளை முறுக்கேற்றி விடுவார்...!!
அதே பழைய... தெளிவான கர கர குரல் நம்மையெல்லாம் மீண்டும் ஆட்கொள்ளும்...!
மீண்டும் தமிழக அரியாசணத்தில்...
அந்த ஆண்டவன்... ஆள்பவனாக அமர்வான்...!!
வாழ்க கலைஞர்...!!

1 comment:

Anonymous said...

Sir

Get up pl.....your station arrived.