Saturday, June 18, 2016

மு.க.ஸ்டாலின் கார் வேணாம்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?!


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசால் தமக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரையும் இரு ஓட்டுனர்களையும் வேண்டாம் என்று மறுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
இதில் என்ன தவறு இருக்கிறது?!
நடுநிலை நக்ஸ் எல்லாம் சொம்பை தூக்கிக்கிட்டு வீக் எண்ட் அக்கப்போருக்கு கெளம்பிட்டாய்ங்க...!!
அது எப்படி... இப்படி சொல்லலாம். அரசை அவமதிப்பது போல் அல்ல்வா இருக்கிறது??!!
இவர் வசதியானவர் என்றால் இவர் வசதிக்கு அரசு பெரிய பெரிய கார் எல்லாம் கொடுக்க முடியுமா??!!
கார் விஷயத்தில் கூட அரசுக்கு இணக்கமாக இல்லாதவர் எப்படி ஒரு நல்ல எதிக்கட்சித் தலைவராக நாணயமாக செயல்படுவார் என்று நம்புவது??!!
இப்டிக்காஆஆஆஆ.... இன்னும் நிறைய ஆட்டுப் புழுக்கை மாதிரி எழுதி் போட்டுக்கிட்டே போயிட்டிருக்காங்க, இந்த நல்லவிங்க எல்லாம்...!!
ஏம்பா நல்லவிங்களா... உங்களுக்கு எல்லாம் நாட்டுல நடக்குற பிரச்சினை வேற எதுவுமே கண்ணுக்கு தெரியலையா?!
ஒரே வாரத்துல மூனு தடவை பெட்ரோல், டீசல் விலைய ஏத்தியிருக்காரே மோடி அதெல்லாம் தெரியலையா?
ஜெயலலிதா டெல்லி விசிட், பிரதமர் சந்திப்பு பத்தியெல்லாம் எதுவுமே புரியவில்லையா?
500 டாஸ்மாக் கடையை உனடியா மூடுவேன்னு சொல்லிட்டு இன்னமும் இழுத்துக்கிட்டிருக்காங்களே... அதெல்லாம் தெரியலையா?
தமிழகம் முழுக்க அறிவிக்கப்படாத மின் வெட்டு தினம் 4 மணி நேரம் இருக்கே அது கூட தெரியலையா?
இந்த மாச மின் கட்டணம் கொஞ்சம் ஜாஸ்த்தியா வந்துருக்கே அதெல்லாம் தெரியலையா?
சென்னைல சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிதே அதெல்லாம் தெரியலையா?
பருப்பு விலை, தக்காளி விலை எல்லாம் மூனு மடங்கு உயர்ந்திருக்கே அதெல்லாம் தெரியாதா?
இந்தியாவிலேயே மூத்த சட்டமன்ற வாதியும், உலக அளவில் சட்டமன்ற அனுபவத்தில் வேறு எவரையும் விட நீண்ட அனுபவம் கொண்டவருமான கலைஞருக்கு அவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உரிய இடத்தை சட்டமன்றத்தில் அளிக்காமல், நொள்ளை நொட்டை காரணங்களை, விதிமுறைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் அதிமுகவினர் பற்றி தெரியவேயில்லையா?
சபாநாயகர் இருக்கையிலேயே விதியை மீறி சசிகலாவை அமர வைத்த விதி மீறலுக்குச் சொந்தக்காரர்கள் இதற்கு மட்டும் விதியை துணைக்கு அழைப்பதைப் பற்றி புரிந்துகொள்ள இயலவில்லையா?
தமிழக அரசுக்கு முன்னால் இருக்கின்ற மிக மோசமான நிதி நெருக்கடி பிரச்சினை பற்றி கண்ணே தெரியவில்லையா?
இன்னும் இது மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் விட்டுவிட்டு.... ஸ்டாலின் அரசு வாகனத்தை வேண்டாம் என்று மறுத்தது தான் இப்போ உங்களுக்கு பெரிய பிரச்சினையா தெரியுதா?!
தனக்கென்று சொந்தமாக ஒரு வாகனம் இருக்கின்றது அதற்கான எரிபொருளுக்கும், மற்ற செலவினங்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் செலவு செய்ய தனக்கு போதிய வருமானம் இருக்கின்றது.....! இந்த நிலையில், தேவையில்லாமல் அரசு பணத்தை தான் ஏன் விரயம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்..., அந்த பணத்தை வேறு நல்ல மக்கள் நல திட்டங்களுக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற சமூக சிந்தனையோடு அதை அவர் மறுத்தால்....
அதற்கெல்லாம் கூடவா வியாக்கியானம் பேசுவீர்கள்?!
அரசு வாகனம் கூடவா வேண்டாம் என்றார்?!
தனது வாகனத்தில் சைரன் விளக்கு கூட வேண்டாம் என்று தானே சொல்லிவிட்டார்...!! பாண்டிச்சேரியில் இனி சைரன் கார் கிடையாது என்று கிரண்பேடி சொன்னவுடன் ஆஹோ... ஓஹோ... பேஷ் பேஷ் என்று உச்சா கொட்டினவன் எல்லாம் இதுக்கு மட்டும் ஏன் ரிவர்ஸ் கியர் போட்டு பம்மாத்து காட்டுகின்றீர்கள்?!
உங்களுக்கு எல்லாம் என்ன தான் பிரச்சினை?!
தமிழ்நாடு உருப்படவே கூடாது. இன்னும் கொஞ்சம் சிம்ப்பிளாக சொல்லணும்ன்னா, கண்டதுக்கு எல்லாம் ஜெயலலிதாவை தூக்கிப் பிடித்தது போக, எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் நல்ல காரியத்தைக் கூட விஷமத்தனமாக விமர்சித்து, ஜெயலலிதாவை நல்லவராக காட்ட முயற்சித்து.... அந்த ஜெயலலிதவை திருந்தவே விட மாட்டீர்களா?!
எந்த ஆங்கிள்ல போனாலும் அந்த அம்மாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து, அவருக்கு எதிரானவர்களை கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதைப் பார்த்தால்....
அந்தம்மாவை தன் தவறுகளில் இருந்து மீளவே முடியாத புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது...!!
இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்திருக்கும் அதிமுகவை... இனி எந்தத் தவறானாலும் கடந்த ஆட்சியின் குறைபாடு என்று சொல்லி தப்பிக்க வைக்க முடியாத நிலையில்...., இப்படி அற்ப விஷயங்களை... அதிலும் ஆரோக்கியமாக பார்க்க வேண்டிய நல்ல விஷயங்களை... அவதூறாக பேசுவதன் மூலம் ஈடு கட்டிவிடலாம் என்று நினைத்தால்..... உங்கள் முட்டாள் தனத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!

No comments: