Thursday, June 9, 2016

விவசாய கடன் தள்ளுபடியும்... ஒரு பெப்பேவும்...!பக்கத்துல இருக்குற பஞ்சாயத்துலேர்ந்து எலக்ட்ரிகல் வேலைக்கு அப்பப்ப வருவான் அந்த தம்பி..!! அவனிடம் அரசியல் பத்தி வாயை கிளறினாலே, அது சாக்கடைஅண்ணே, நான் சோத்துக்கட்சி, நாம உழைச்சாத்தான் நமக்கு காசு... இப்படியான டயலாக்குகளை மாற்றி மாற்றி நேரத்திற்கு தகுந்தாற் போல எடுத்து விட்டுட்டு ஒதுங்கிடுவான்.
சென்ற மாதம் அவனே வலுவிக்க வந்து..,

அண்ணே இந்த தபா திமுக ஆட்சிக்கு வந்துடுமாண்ணே??

உன்னைய மாதிரி ஆளுங்க எல்லாம் திமுகவுக்கு ஓட்டுப்போட்டா வந்திடும்டா தம்பி...

இந்த தபா என் ஓட்டு திமுகவுக்கு தான்னே....

ஏண்டா அப்படி முடிவெடுத்திருக்க??

விவசாய கடனை எல்லாம் ரத்து பண்ணுவேன்னு நீங்க வச்சிருக்குற புத்தகத்துல (திமுக தேர்தல் அறிக்கை) தான் கலைஞர் சொல்லியிருக்காருல்ல. ஏற்கனவே அப்புடித்தான் செஞ்சிருக்கார். இந்த தடவ விவசாயத்துக்கு அடமானம் வச்ச நகையை அறுப்பு முடிஞ்சோடுன மீட்கலண்ணே... 22 ஆயிரத்துக்கு அப்புடியே பேங்க்ல இருக்கு.

ஏண்டா மீட்கல?

தங்கச்சி வளைகாப்பு.., பிரசவம்ன்னு இருந்ததால.. அப்புடியே விட்டுட்டேண்ணே... இப்பத்தான் கலைஞர் சொல்லிட்டாருல்ல... தள்ளுபடி பண்ணிடுவேன்னு..! அதுனால தான் சூரியனுக்கு ஓட்டு போடலாம்ன்னு குடும்பத்தோட முடிவு பண்ணிட்டோம்ண்ணே...!!

சூப்பர்டா தம்பி... சூப்பர்...!! தோ பார்... இந்த மேட்டர இன்னும் நிறையா பேருட்ட சொல்லு... திமுக ஜெயிச்சாத்தான் கடன் தள்ளுபடியாகும் புரியுதா?

எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குண்ணே...!

தேர்தல் முடிஞ்ச மறு நாள் அந்த தம்பி... கைமாத்தா 500 கேட்டு வந்திருந்தான்.

ஏண்டா தம்பி கரெக்ட்டா சூரியனுக்கு போட்டுட்டியா?

இல்லண்ணே... எலக்கி தான் போட்டேன்...!

ஷாக்காகி.... ஏண்ண்டாஆஆஆ...?!

இல்லண்ணே... முந்தா நாள் ராத்திரி வந்து 250 ரூவா கொடுத்து எலக்கி ஓட்டு போடணும்னானுவோ.... அதாண்ணே....!!

அட போடா.... நகைக் கடனெல்லாம் இருக்குண்ணியேடா... திமுக வந்தா தானடா அதையெல்லாம் ரத்து பண்ணுவாங்க? இப்புடி பண்ணிட்டியே...!

கவல படாதீங்கண்ணே... மத்தவிங்க எல்லாம் சூரியனுக்கு தான் போட்டுருக்காங்க..!! அத நான் உறுத்திப்படுத்திக்கிட்டு தாண்ணே... வாங்குன காசுக்கு நேர்மையா எலக்கி ஓட்டு போட்டேன். மத்தவங்க போட்டதால திமுகவும் கெலிச்சிடும்... எனக்கு நகையும் கிடைச்சியும்... நான் ஒருத்தன் மட்டும் காச வாங்கி ஏமாத்தாம நாணயமா நடந்துக்கிட்ட பேரும் கிடைக்கும்...!! எப்பூடி? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சேனா??!

அட போடாஆஆஆங்....

அப்புறம் அவனை பார்க்க வாய்ப்பில்லை.... இன்னிக்கு காலைல தான் அந்த தம்பி வந்திச்சி...!! மூஞ்சி எல்லாம் வீங்குன மாதிரி இருந்துச்சி..
.
ஏண்டா இப்ப சந்தோஷமா??

போங்கண்ணே.... சொசைட்டில வாங்குன லோனுக்கு தான் தள்ளுபடியாம்ண்ணே... இந்தம்மா சொல்லிடிச்சி...

சரி சரி கவலை படாத.... அதுக்கு போயி அழுதியா? மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு....

நீங்க வேற ஒன்னுண்ணே....

எம் பொண்டாட்டி.....

பொண்டாட்டீஈஈ???

வெளக்குமாத்தால.....

வெளக்குமாத்தால?????

அட போங்கண்ணே....!!!

ஸோ... தளபதியின் நமக்கு நாமே... உழைப்பு..., திட்டமிடல்... தேர்தல் அறிக்கை இதிலெல்லாம் எந்த குறைபாடும் இல்லை..! அதிமுக கடைசியாக எடுத்த ஆயுதத்திற்கு முன்னால் திமுகவினர் நிராயுத பாணியாக நின்றது மட்டுமே திமுகவின் வெற்றி நூலிழையில் கை நழுவ காரணம்..! டாட்..!


1 comment:

carthickeyan said...

முடியல்ல கருணாநிதி வந்தாலும் சொஸைட்டில வாங்குன கடனதான் தள்ளுபடி பண்ணமுடியும்

தம்பி உசாரா உங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டான்