வசனகர்த்தா கலைஞர் ....
பிரிந்திருந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணையும் போது........
ஒரு வசனம் வைத்திருக்கிறார் இருவர் உள்ளம் படத்தில்.....
கண்ணே உன்னிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்
குடும்பப் பண்பாடு
வாழ்க்கைப் பண்பாடு
அறிவுப் பண்பாடு
.........................
...........................
எங்கே கண்ணே??
ஒரு ஆனந்தப் பண்.... பாடு
ச்சே...... நீ ஒரு பிறவிக் கலைஞனய்யா....!!!!
அப்பொழுதே ரொம்ப க்யூட்டான குட்டிக் குட்டி வசனங்கள். அத்தனையும் அற்புதம்.
============================================
ஏ.ஆர். ரஹ்மான்...
இசை, இசை நுணுக்கங்கள், இசை ஞானம் இப்படி அனைத்து விதத்திலும் இன்றைக்கு இருப்பதில் தேர்ந்த இசையமைப்பாளர் யார் என்னும் பொழுது யோசிக்கவே செய்யாமல் ஏ.ஆர். ரஹ்மான் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் கிடையாது.....
அதேசமயம் அதிகமான படங்களுக்கு இசையமைத்த காரணத்தினாலும், ஆரம்ப காலங்களில் பற்பல கிராமிய பாடல்களின் மெட்டுக்களை திரையிசையில் லாவகமாக கையாண்ட அனுபவத்தினாலும், பல நல்ல மெட்டுக்களை (ட்யூன்) கொண்ட பாடல்களை இளையராஜா நமக்குத் தந்திருக்கின்றார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த வகையில் விருமாண்டி படத்தில் வரும் உன்னை விட பாடலுக்கு நிகரான (அதே போன்ற சூழலுக்கான பாடலுக்கு) ஒரு மெட்டு இன்னும் ரஹ்மானிடமிருந்து வராமல் இருந்தது எனக்கு பெரும் குறையாகவே இருந்தது.
அந்த நேரத்தில் தான் கடல் படத்தில் வரும் மூங்கில் தோட்டம் பாடல் கேட்க நேர்ந்தது. இதுக்கு நேரம் ஒதுக்கி முழுசா அனுபவிக்கனும்ன்னு முடிவு பண்ணியிருந்தேன். நேற்று முன் தினம் தான் எனக்கு அந்த வாய்ப்பு அமைந்தது. இரண்டு பாடல்களையுமே அடுத்தடுத்து போட்டு, திரும்பத் திரும்பக் கேட்டேன்......
நிச்சயமாக சொல்கிறேன்.... மெட்டமைப்பதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. ஆனால் இசை நுணுக்கம், அதில் ஒரு மேட்டிமைத் தனமான அறிவு... ஞானம் இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டால், ஏஆர் ஆர் தான்..... ச்சான்ஸே இல்லை. ரெண்டு பாட்டையும் கேட்டுட்டு வந்து கும்முங்க மக்கா!
=================================================
சர்வோ பிறந்த நாள் - 25.04.2013
அது வெள்ளிக்கிழமை இரவு. அபுதாபியில் விடுமுறை தினம். பகல் இரவு ஆட்டமாக ஷார்ஜாவில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச். அன்றைக்கு டெண்டூல்கரின் பிறந்த நாள். எல்லாரும் ஸ்டேடியத்துல இருக்கோம். மிகப் பெரிய எதிர்பார்ப்பு. இரண்டு பகுதிகளாக பிரித்து விட்டார்கள். ஒரு பக்கம் பாகிஸ்தானியர்கள், இன்னொரு பக்கம் இந்தியர்கள். யாரும் ஊடுறுவ முடியாது. ஊடுறுவவும் முயற்சிக்க மாட்டார்கள் ஏன்னா தனியா மாட்டிக்கிட்டாபெண்டு கழண்டுடும்.
மேட்ச் பயங்கர விறுவிறுப்பு. வெளியில் மணற் புயல் உள்ளே டெண்டூல்கள் ஃபோர், ஸிக்சர் என்று வானவேடிக்கை நிகழ்த்துகிறார்.....
எனக்குத் தான் முழுமையாக அதை ரசிக்க முடியவில்லை, இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறேன். மேட்ச் முடிந்து அதைப் பற்றி சிலாகித்துக் கொண்டே நண்பர் குடும்பத்தினரோடு அபுதாபி திரும்புகிறோம். வரும் வழியில் கவலைப் படாதீங்கண்ணே, எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு ஐரிஸ் சொல்லிக்கிட்டே வந்தது!
காலை எழுந்து கிளம்பி, வேண்டா வெறுப்பாக அலுவலகம் வந்தாச்சு. அப்பொழுது தான் அங்கே மொபைல் அறிமுகமாகியிருந்த நேரம். இதற்காகவே வாங்கி வைத்திருந்தேன். சரியாக 9.10 இருக்கும் ரிங் அடிக்கிறது. கையெல்லாம் நடுங்க எடுக்கிறேன். வாய் தட்டுத் தடுமாறி ஹலோ என்கிறது. பெரியக்கா தான் பேசுது. தம்பி குட்டி பய பொறந்துருக்காண்டா.....!!!!!
ஆச்சு... அது நடந்து 15 வருடம். எங்கள் வீட்டு செல்லம் இன்று ஸ்வீட் சிக்ஸ்டீனில் அடியெடுத்து வைக்கிறான்.....! உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் வேண்டி!
==========================================
மீன் வேட்டை:

கடந்த
சித்திரை ஒன்னுலேர்ந்து மீன்பிடி தடைகாலம் ஆரம்பமாகிவிட்டது..... இந்த
வாரம் மீனுக்கு என்ன பண்றதுன்னு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி,
நேத்து ராத்திரியிலேருந்தே. காரைக்கால்ல இருக்குற குடும்ப நண்பரிடம் ஃபோன்
பண்ணினால், பெரிய மீன் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது அண்ணா, பக்கத்துல
எல்லா ஊர்லேர்ந்தும் வந்து குவிஞ்சிடுறாங்க, காலைல ஆறு ஏழு மணிக்கெல்லாமே
வித்து தீத்துடுது. ஒன்னு ரெண்டு பெரிய மீன் ஆப்ட்டாலும் கிலோ ஆயிரம்
ரெண்டாயிரம்ன்னு கொஞ்சம் கூட கூசாம சிலதுங்க வாங்கிட்டு போயிடுதுங்கன்னு
சொல்றான்.......
ராத்திரி பூரா விசனம் புடிச்சி உட்கார்ந்து.... ஸாரி படுத்து புரண்டுட்டு, காலைல எழுந்து கர்ம சிரத்தையோடு சன் டீவில மஹாபாரதம் பார்த்துட்டு, அதுல வியாசர் சொல்ற அறிவுரை படி, எல்லாமே விதிப்படி தான் நடக்கும், அதை மாற்ற யாராலும் முடியாதுங்கறத ஸ்டாராங்கா மனசுல ஏத்திக்கிட்டு, முயற்சியைக் கைவிடக்கூடாதுங்கற கடமை உணர்ச்சியோட, மீன் வாங்குறதுக்குன்னே வீட்டு கொல்லைல மாட்டி வச்சிருக்குற பிஞ்சு போன ஒயர் கூடையை மனைவி எடுத்துக் கொள்ள, கிளம்பிவிட்டோம் வேட்டைக்கு....!
மாயவரத்துல எந்தெந்த முக்குட்டுல எல்லாம் பட்டணத்திகள் வந்து மீன் கடை போடுவார்களோ அங்கெல்லாம் சென்று பார்த்துக் கொண்டே, பெரிய மீன் இல்லாததால், கடைசியில் மீன் மார்க்கெட்டுக்கே வண்டியை விட்டோம்.
ஏகப்பட்ட கூட்டம். அதான் மீன்பிடி தடைகாலம் வந்துடிச்சே, இவனுங்க எல்லாம் சிக்கன், மட்டன்னு வாங்கி சாப்பிட்டா என்ன? என்று மனசுலேயே கேள்விய கேட்டுக்கிட்டு, பதைபதைக்கும் மனதோடு உள்ளே நுழைந்தோம்....
எல்லா கடையிலேயுமே செம கூட்டம், எட்டி எட்டி பார்த்துட்டு வந்துட்டே இருந்தோம். ஒரே ஒரு அம்மையாரிடம் அவ்ளோ கூட்டம் இல்லை. நேராக அங்கே நின்றேன்.
என்ன தம்பி?
வஞ்சிரம் இருக்காக்கா?????
அக்காவாஆஆஆஆஆன்னு அந்த அம்மிணியின் பார்வையே கேட்பது அந்த மார்கெட் முழுவதும் லௌடு ஸ்பீக்கர் போட்ட மாதிரியே கேட்டுச்சி!
இரு தம்பின்னு சொல்லிட்டு, பக்கத்து கடைல இருக்குற ஐஸ் பொட்டிய திறந்து 2 கிலோ எடையுள்ள வஞ்சிரம் மீனை எடுத்து வந்தது. கிலோ 700, 2 கிலோ 1400 ஆகும், நீ ஆயிரம் குடு தம்பின்னு சொல்லுச்சி. இல்லாக்க நான் 800 தான் எடுத்துட்டு வந்துருக்கேன்னு சொன்னோடுன, சரி குடுப்பான்ன்னு சொல்லி மீனை எடுத்து கூடைல வச்சிடுச்சி. 800 ரூபாயை குடுத்துட்டு, குழம்புக்கு எதுனாச்சும் பொடி பொட்டு ரெண்டு போடுக்கா என்றவுடன்.....
கை நிறைய அள்ளி செங்காலா குட்டிகளையும், கிழங்கான் குட்டிகளையும் போட்டது......
பெரிய மீன் 23 பீஸு தேறுனுச்சி. அதுலேர்ந்து நாலு பீஸை எடுத்து பொறிச்சி மேலே கொண்டு வந்து விட்டேன்...... 90 எம் எல்ல ரெண்டு ஃப்ரெஞ்சு வேலியும்......
கடவுள் இருக்கான் கொமாரு!!!

No comments:
Post a Comment