Thursday, September 26, 2013

மோடி விஜயமும் - கண்கள் பனித்து இதயம் இனித்ததும்!!


மோடி இங்க வந்துட்டு போனதுல பல கோணங்களில் எண்ணற்ற விமர்சனங்கள் அவருக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக இங்கே பகிரப்படுகின்றன......

ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு மோடியை தவிர்க்க எனக்கு இரண்டு முக்கிய காரணங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. 

ஒன்று: மோடி வருகையை ஒட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விடுமுறை கொடுக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டது - இது இதுவரையிலும் தமிழகத்தில் இல்லாத நடைமுறையை புகுத்துவதாக அமைந்திருக்கிறது. 

பாஜகவுக்கு மிக எதிரான எண்ணம் கொண்ட காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் நிலையில், இந்த அபாயகரமான புது பிரிவினை வாத செயலை ஜெயலலிதாவின் தமிழக அரசின் ஆதரவில்லாமல் வேறு யார் செய்திருக்க முடியும்??!!

இது நாம் பெரிய அளவில் கவலைப்படவும், சிந்திக்கவும், கடுமையாக எதிர்க்கவும் வேண்டிய பிரச்சினையாக கருதுகின்றேன்!

இரண்டாவது: வடக்கத்திய தலைவர்கள் தமிழகம் வரும்போது நம் மனநிலையை அறிந்து ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள் கூட எழுதி வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவது தான் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த நடைமுறையை மாற்றி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு, நுணுக்கமாக கவனிக்கத்தக்க மனிதனாக மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் பேசிய அந்த கன்னிப்பேச்சில் மோடி ஹிந்தி மொழியில் பேசியிருப்பது.......!!!

.......தமிழுக்கான தமிழர்களுக்கான மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் கைகளில் ஆட்சிப்பொறுப்பு வருமாயின் தமிழ் உட்பட இந்தியாவின் தொன்மையான மொழிகள் அனைத்தும் வழக்கொழிந்து போகும் அபாயம் இருப்பதை, மோடியின் இந்த அப்பட்டமான சமிக்ஜை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இது சம்பந்தமான மிகப் பெரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டங்களை நம் இணையம் மூலமாகவாவது உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும். 

இதையெல்லாம் மீறி எனக்கு மூன்றாவதாக ஒரு சந்தோஷமான உணர்வு நீண்ட காலத்திற்குப் பிறகு ஊற்றெடுப்பதையும் நன்கு உணர்கிறேன்!

பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், தளங்களைச் சேர்ந்த நம் தமிழ் இளைய சகோதரர்கள், இவ்வளவு நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடந்தவர்கள் மோடியின் பொருட்டு, பெரியார் கொள்கைகளை கைகளில் ஏந்தியபடி ஓரணியில் திரள்வதை இணையத்தில் ஆங்காங்கே காண்கிறேன்.....!!!

சமீப காலமாக தமிழுணர்வாளர்கள் என்ற போர்வையில் உலா வந்து குட்டையை குழப்பிக்கொண்டிருந்தவர்களின்  சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. தமிழருவி மணியன்களும், வைக்கோக்களும் ஆரியக்கரையில் ஒதுங்கி விடுங்கள். இனி திராவிடத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்!!!


இதைக் கண்டு தலைவர் கலைஞர் அவர்களின் வசனம் ஒன்றை கடன் பெற்றுக்கொள்கிறேன்...

”கண்கள் பனிக்கின்றன.... இதயம் இனிக்கின்றது”



2 comments:

Unknown said...

சரியா சொல்லி இருக்கீங்க

vijayan said...

இப்போ என்னவோ தமிழ் இங்கு கொடிகட்டி பறக்கிறமாதிரி மயக்கத்தில் பேசி இருக்கிறீர்கள் .எப்போ உங்க கட்சியில் பட்டை சாராயம் வித்தவன்,black லே சினிமா டிக்கெட் வித்தவன் எல்லாம் பள்ளிக்கூடம்,காலேஜ் நடத்த ஆரம்பிச்சானோ அப்பவே தமிழ் காணாமல் போய் விட்டது.இன்னும் எவ்வளவு காலத்திற்கு தமிழ் பிசினஸ் நடத்துவதாக உத்தேசம்.மாறன் மகனுக்கு இந்தி தெரியும் என்று சொல்லி மந்த்ரி சீட்டு வாங்கியது மறந்து விட்டதா?