Thursday, September 5, 2013

கலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...!

கலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது...!

தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்களிடம் சரக்கு இல்லை, அல்லது இருக்கின்ற சரக்கும் கெட்டுப்போய்க் கிடக்கிறது என்கிற போது...... தன் தலைமையின் எதிராளியை சில பொய்யான பரப்புரைகள் மூலம் கேரக்டர் அஸாஸினேஷன் எனப்படும், பிம்பத்தை சிதைத்தல் என்ற கேவலமான செயலைச் சிலர் செய்வது வழக்கம்.

இந்த மாதிரி மலிவான உத்திகளை உபயோகிக்கும் ஒருவரது தரமும் தாழ்ந்து கொண்டிருப்பதை துரதிருஷ்டவசமாக அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அல்லது தன்னை பலியிட்டாவது தன் குலத்தை உயர்த்திட நினைக்கும் செயலாகவும் கூட அது இருக்கலாம். தன் வாழ்வே நாசமாகும், மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே ஒரு அயோக்கியன் மஹாத்மா காந்தியை சுட்டுக்கொள்ளவில்லையா? அது போலத்தான் இதுவும்!

விகடன்களுக்கு ஒன்றே ஒன்றைத்தான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....

நீங்கள் எத்தனை முகம் கொண்டு வந்து கலைஞரையும் அவர் போர்ப்படையையும் அழிக்க நினைத்தாலும் அது உங்களுக்கு கைவரப்போவதில்லை. முப்பதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூறி அதற்கென்று சர்க்காரியா என்ற நீதி விசாரணை கமிஷன் அமைத்து பரப்புரை செய்தீர்கள்.... ஒரே ஒரு குற்றச்சாட்டில் கூட ஒரே ஒரு நாள் கூட அவருக்கு தண்டனை பெற்றுத்தர இயலவில்லை.

அது முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்த நேரத்தில் ஒரு பொய்ப்பரப்புரையை உருவாக்கி மக்கள் மனங்களை அதில் மயங்கியிருக்கச் செய்து, ஆட்சிக் கட்டிலில் இருந்து திமுகவை அகற்றிட வேண்டும் இது தான் உங்கள் ஒரே அஜெண்டா. அது வேண்டுமானால் நிறைவேறியிருக்கலாம். ஆனால் திமுக என்ற பேரியக்கத்தில் ஒரு சிறு சேதாரத்தைக் கூட உங்களால் உருவாக்க முடியவில்லை. இது தான் நிதர்சணம்.

ஆனால் நீங்கள் போற்றிப் பாதுகாக்கும் ஒரு பிம்பம் இன்னமும் வாய்தாதான் வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவிருத்திக்கொள்ளுங்கள்!!!

முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது திமுக மிக வலுவுள்ளதாகவும், வீறு கொண்டதாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து விடுதலப்புலிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் பரப்புரை செய்து அழிக்கப்பார்த்தீர்கள்...

2ஜி என்று கதை அளந்து பார்த்தீர்கள்....

இந்த பொய்ப்பரப்புரைகள் உருவாக்கப்படும் ஒவ்வொரு முறையும் தேர்தலில் வேண்டுமானால் தோல்விகளை திமுக சந்தித்திருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் திமுக தன்னை மிகப்பலமாக உரமேற்றி வளர்ந்து கொண்டிருப்பது தான் வரலாறு.

விகடனாரே இப்பொழுது உங்கள் கட்டுரை எங்களுக்கு இரண்டு உண்மைகளைச் சொல்லியிருக்கிறது. ஆட்சிக்காலத்தின் மையப்பகுதியில் இருக்கும் உங்கள் ஆதரவு பெற்ற தலைமை, மக்கள் செல்வாக்கை இழந்திருக்கிறது என்பது அதில் ஒன்று!!!

இன்னொரு உண்மை, திராவிட முன்னேற்ற கழகம் அதன் வருங்கால தலைவர் எங்கள் தளபதியின் அயராத நேர்மைத்திறன் கொண்ட உழைப்பினால், ஒட்டுமொத்த தமிழகத்தின் எங்கள் கட்சித் தொண்டர்களையும் கடந்து, உண்மையான நடுநிலை எண்ணம் கொண்ட பொது மக்கள் மத்தியிலும் மதிப்பு கூட்டப்பட்ட இயக்கமாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் அது!!!!

ஆகவே தான் உங்கள் தலைவியின் பயனற்ற ஆட்சியைப் பற்றி மக்கள் பேசுவதற்கு இடம் தராமல், எங்கள் தலைவர்களின் பிம்பங்களை உடைத்தெரியும் தரமற்ற முயற்சிகளில் இறங்கியிருக்கின்றீர்கள்!!

ஆனால் இந்த முறை உங்களின் இந்த எண்ணம் ஈடேறாது. உங்கள் முகத்திரை உடனுக்குடன் இங்கே கிழித்து தொங்கவிடப்படும். உண்மையான நடுநிலையாளர்கள் உண்மையை உணர்ந்துகொள்ளும் வழிமுறைகளை இந்த முறை எங்கள் இயக்கம் மிகத்தெளிவாகச் செய்யும்.

இனி....

திமுக வெல்லும்..! திமுக மட்டுமே வெல்லும்..!!

 

12 comments:

Anonymous said...

Don't you bother about Kalainger corruptions. If you say, he did not do any corruption, There is no meaning for your 6th sense.

சேக்காளி said...

//நீங்கள் எத்தனை முகம் கொண்டு வந்து கலைஞரையும் அவர் போர்ப்படையையும் அழிக்க நினைத்தாலும் அது உங்களுக்கு கைவரப்போவதில்லை//
காரணம் அவர்களே அதை செய்து கொண்டிருக்கிறார்கள்

Anonymous said...

poda pundai...

VELUMANI Du said...

ரோட்டுல ரெண்டு பேர் சண்டை போடும்போது, பாயிண்ட் உள்லவன் தனது பக்க நியாயத்தை சொல்வான். நியாமோ, கருத்தோ இல்லாத வெட்டிப்பயல் என்னா பண்னுவான். ஒண்ணு வீணாப் பொழம்புவான் அல்லது கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டத்தொடங்குவான்.

அதான் இப்ப விகடன் பண்ணுது. நல்லபடியா சொல்ல ஒண்ணும் இல்லை. அதனால் வேறு ஆயுதம் எடுக்கிறார்கள்.

இது அவர்களையே வேரறுக்கும் என்பதில் ஐயமில்லை.

கொக்கரக்கோ..!!! said...

@சேக்காளி, திமுகவை அவர்களே அழிப்பதாக நம்புகின்றீர்களே... பின்ன எதுக்கு விகடன்களும், ஆரிய ஊடகங்களும் கலைஞரையும் திமுகவையும் இந்த அளவு விமர்சிக்க வேண்டும்?

@அனானிஸ்......

திமுக காரன் திட்டுறதா இருந்தாலும் நேரடியா வந்து தான் செய்வான். ஏன் பொட்டைத்தனமா முக மூடியெல்லாம் போடுறீங்க?

vijayan said...

சர்காரியா கமிஷன் விசாரணை முடிவு வெளிவராமல் இருப்பதற்காக ,எமர்ஜென்சி என்ற பெயரில் திமுககாரனைஎல்லாம் மிதி மிதி என மிதித்த இந்திராவின் காலில் விழுந்த புறநானுற்று வீரர் கருணாநிதி.

ராவணன் said...

கலிஞரா...எந்த கலிஞர்? நாதஸ் ஊதும் கலிஞரா? இல்லை மோளம் அடிக்கும் கலிஞரா?

ஓ....ஓ... இத்தாலி சோனியாவின் காலடியில் விழுந்து கிடக்கும் கலிஞரா?

மானங்கெட்ட அந்த ஆளைப் பற்றி பேச என்ன இருக்கு?

ராவணன் said...

கலிஞர் டிவிக்கு 200 கோடி வந்த கதையும் தெரியும்....

தயாளு சிறை செல்லாமல் இருக்க சோனியா காலில் விழுந்து புரண்ட கதையும் தெரியும்.

ராசாத்திக்கு அந்தக் காலத்தில் வீடு வாங்கிக்கொடுத்த கதையும் தெரியும்.

கலிஞரின் பரம்பரை பத்தியும் தெரியும்.

ராவணன் said...

நான் ரெடி...நீங்க ரெடியா?

கலிஞர் குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது?

விகடனும் கலிஞரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்தானே?

கலிஞரின் குடும்பத்தில் பிராமணர்கள்தான் அதிகம்.

கொக்கரக்கோ..!!! said...

தம்பி ராவணன், மிக்க சந்தோஷம். இன்னும் கொஞ்சம் பெட்டரா உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம். உன்னுடைய இந்த கமெண்ட்டுக்கள் மட்டுமல்ல, பழைய கமெண்ட்டுகளும் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டது. உன்னுடைய கமெண்ட்டுகளை பிரசுரிப்பதன் காரணம் உன் லட்சணம் வெளியில் தெரிய வேண்டும். இதுவே திமுகவுக்கு அதன் எதிரிகளைப் பற்றிய நல்ல பரப்புரையாக அமையும். நன்றி!

Anonymous said...

manimekalai per vaiatha mahan,kevalamana jenmam

Anonymous said...

கொக்கரகோ ...
கலைஞர் டிவியில் விநாயகர் சதுர்த்தி நிகழ்சிகளுக்கு ரெடி ஆகுங்க ....

நமக்கு இல்லாத பகுத்தறிவு அந்த ஆளுகளுக்கு இல்லை.

அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவை மதுரை